Monday, December 05, 2011

உன்னை ஒன்று கேட்பேன்..., ராமா! உண்மை சொல்ல வேண்டும்...,



என் தவம் முடிந்தது.....
என் கவலை தீர்ந்தது.....
இன்று என் மணாளனோடு நான் வாழ
அவரை சேரும் அந்த தருணம்
அதற்காகவே இன்னும் தொடருது என் பயணம்......

வந்தது அந்த இனிய நிமிடம்.....
அவர் அருகில் நான் இருக்க
பக்கத்தில் இருக்கும் சபை எனக்கு தெரியவில்லை....
அவர் அருகாமையில் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்தேன்......

சபையில் சலசலப்பு.....
சிலருக்கு சந்தேகம்.
எனக்குள் ஒரு தவிப்பு,
ஆனாலும் நான் திடமாய்
என் ராமன், என்னை சந்தேகிப்பாரா.....
அவருக்கு தெரியும், சீதையை பற்றி....
என் முகம் அவர் முகத்தை ஏறிட,
என்ன உள்ளது அவரது எண்ணத்தில்
 !?என்று தேட..
காத்திருந்தேன் அவர் வார்த்தைகளுக்காக....

என் சீதை, களங்கமற்றவள்....
அவளை நான் அறிவேன்....
இப்படி சொல்வார் என்று நினைத்தேன் .

உங்கள் திருப்திக்காக என்று சொல்லி
என்னை தீக்குளிக்க வைத்துவிட்டார்.
ஒடிந்து போனேன்...
நான் மனம் நொறுங்கி போனேன்....

அன்று ராவணனிடம்
சண்டை போட இருந்த பலம்
இன்று என் மனதில் ஏன் இல்லை!?
சந்தேக தீ உன்னையும் சுட்டதா, ஏ ராமா!
என்று கத்தவென்றும் போல் ஓர் எண்ணம்

உடனே மாற்றிக் கொண்டேன்
கத்தி என்ன பிரயோஜனம்....
சந்தேகம் என்ற தீ வந்த பின்னே,
அதை அணைக்காமல் விட்டால்
அஃது என் காதலையும் சேர்த்து அல்லவா எரித்து விடும்....

காதல் இல்லாமல் வாடும் பூவாய் வாழ
மனமில்லால்
அந்த மனதை கொன்று கொண்டேன்....
அவன் சந்தேகத்தை தீர்த்துக் கொடுத்தேன்....
நான் தீயினில் இறங்கினேன்.....


ஒரு நொடி, ஒரே ஒரு நொடி,,,
ஏ ராமா, நான் காட்டினில் இருந்தேன்
நீ நாட்டினில் இருந்தாய்...
ஏன் நான் களங்க பட்ட  மாதிரி
நீயும் களங்க படலாம் அல்லவா.....

உன்னால் நிரூபிக்க முடியுமா?
என்று கேட்டிருந்தால்......
எப்படி தீர்த்து வைத்திருப்பாராம்..
என் சந்தேகத்தை????

டிஸ்கி: சீதையின் உள்ளம் பேசி கொண்ட மாதிரி எனக்கு நேற்று ஒரு கனவு.... அந்த கனவை தான் இங்கே சொல்ல நினைத்தேன்.... இதில் எந்த மதத்தையும் நான் அவமதிக்க விரும்பவில்லை .

14 comments:

  1. அக்கணத்தில் சீதையின் மனதில் என்ன இருந்தோ... யாரறிவார்? அழகாக கற்பனையில் சீதைக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்துள்ளீர்கள். பிரமாதம்!

    ReplyDelete
  2. கனவில் கூட கவிதையா .. கலக்கல்

    ReplyDelete
  3. சந்தேகத்தை தீர்த்துக் கொடுத்தேன்....
    நான் தீயினில் இறங்கினேன்.....

    தீயும் தீண்டாப் பெரு நெருப்பு

    கற்பின் கனலி

    தீயையே சுட்ட சீதை

    அருமையான பகிர்வு!

    ReplyDelete
  4. உன்னை ஒன்று கேட்பேன்..., ராமா! உண்மை சொல்ல வேண்டும்...,"

    களங்கம் இருவரிடமும் இல்லை..

    எல்லாம் நாடகமே!

    ReplyDelete
  5. ராமனையும் தீக்குள் தள்ளி செக் பண்ணி இருக்கலாமோ..?

    ReplyDelete
  6. நல்ல மாற்று சிந்தனை...

    ReplyDelete
  7. அய்யோ ராமா! அது கலங்கம் இல்லீங்கோ களங்கம்

    ReplyDelete
  8. time machine la poi ramarai questuon kaettirukkeenga pola

    ReplyDelete
  9. நல்ல கனவு அது கவிதையாக சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  10. கனவில் கூட கவிதையா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. Nalla kelvi kettirgal. Karpu enpathu iru baalarukkum pothuvaanathe.
    Vaalthukkal.
    TM 8.

    ReplyDelete
  12. சரி!அந்த சீதா பிராட்டி உலகத்தோர் சந்தேகம் தீர்க்க என்று தானே தீயில் இறங்கினார்?அந்த உலகத்தோருடன் இராமபிரான் சேர்த்தியில்லையா?அதற்கு அப்புறமும்,சீதாபிராட்டி இராமபிரானுடன் சேர்ந்து வாழ்ந்தாரா?அப்படிச் சேர்ந்து வாழ சீதா மனது இடம் கொடுக்குமா,கொடுத்ததா என்று சொல்லவேயில்லையே?கம்பரின் இராமாயண காவியத்தில் இந்த "மனமொத்த"தம்பதியருக்கு,லவன்,குசன் என்று இரண்டு புதல்வர்கள் இருப்பதாகப் படித்த நியாபகம்!

    ReplyDelete