புதன், டிசம்பர் 21, 2011

ஊமைப்பெண்


                                                       

உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை...

சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை....,
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை!?

ஏக்கம், கவலை, இயலாமை,
வெறுப்பு, விரக்தி, வேதனை என
நிறைந்து வழிகின்றன...,
ஆனால்,
நான் ஊமையில்லை.

என்னால் நன்றாக பேசமுடியும்...,
இருந்தும் என்னால் பேச முடியவில்லை!?.
ஏன்?
நான் பூரணமடையாதவளா?
இல்லை குறைபாடு உடையவளா?

என்னுள் மட்டுமே
என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.
அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.
ஆனாலும்,
பேசுகின்றேன்....
நிறையவே பேசுகின்றேன்...,
வாய் இருந்தும் ஊமையாய்!!!???


24 கருத்துகள்:

 1. போலியான உலகில் உண்மையென்றும் ஊமைதான்
  தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
  பொய்யே அடுக்கு மொழியும் ஆர்ப்பாட்டமும்
  ஆரவாரமும் செய்யும்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 2. மௌன மொழி புரிந்தவர்கள், இந்த பேசும் ஊமையின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் .கவிதை நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 3. சமூகத்தில், வாயிருந்தும்,மொழியிருந்தும் பேச மறுக்கப்பட்ட சமுதாயம் பற்றிய அழகான கவிதை..

  பதிலளிநீக்கு
 4. சமூகத்தில், வாயிருந்தும்,மொழியிருந்தும் பேச மறுக்கப்பட்ட சமுதாயம் பற்றிய அழகான கவிதை..

  பதிலளிநீக்கு
 5. நிரந்தரமில்லாத போலியான உலகில் நாமும் போலியாகவே வாழ வேண்டியுள்ளது ஊமையாகவே இல்லையா...!!!

  பதிலளிநீக்கு
 6. உண்மையை பேச இயலாத ஏக்கம் உங்கள் கவிதையில் இருக்கு தங்கச்சி...!!!

  பதிலளிநீக்கு
 7. ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் .. தொடரவும்

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் அக்கா
  யதார்த்த மான கவிவரிகள் யாதர்த்தத்தை சொல்லி நிற்கின்றன

  பதிலளிநீக்கு
 9. அட்டகாசமா கவிதை.. பகிர்வுக்கு நன்றி


  வாங்க வாழ்த்துங்க

  செல்லக் குட்டி பிறந்தநாள்

  பதிலளிநீக்கு
 10. வாய் இருந்தும் ஊமையாய்.....அருமை.

  பதிலளிநீக்கு
 11. எங்களின்...பெண்களின் பலஹீனம் இதுதான்.பேசினால் பல பிரச்சனைகள் தீரும்.நல்லதொரு கவிதை ராஜி !

  பதிலளிநீக்கு
 12. //சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றைசொல்லவே முடியவில்லை..//

  அருமையான கவிதை .

  பதிலளிநீக்கு
 13. தளத்திற்கு வந்திருந்தீர்கள்...நானும் உங்களைப் பற்றி அறிய முடிந்தது அக்கா.. நன்றி..

  பதிலளிநீக்கு
 14. உண்மையும் ஓர் ஊமையும்...கவிதை அழகு அக்கா..

  பதிலளிநீக்கு
 15. சிலவற்றைச் சில நேரங்களில் கூற இயலாத நிலையும் உண்டு தானே! இங்கு மௌனம் தானே பேசும்! வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 16. சிலவற்றைச் சில நேரங்களில் கூற இயலாத நிலையும் உண்டு தானே! இங்கு மௌனம் தானே பேசும்! வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு