பணம் சம்பாதிக்க
கற்றுக்கொள்ளுங்கள்
மௌனமான நேரங்களில் கூட ..
பணம் பேசும் ……
கடவுளே உனக்கு ஒரு
அன்பு கட்டளையிடுகிறேன் ..
ஆயிரம் கஷ்டங்களை கொடு ..
பல்லாயிரம் சோதனைகளை கொடு ..
ஆண் பிள்ளையாய் பிறந்த என்னை
அழவைத்து விடாதே ..!
ஏனென்றால், கல்லை விட
கடினமான என் மனது ..
ஒரு பூவை விட மென்மையாகிவிட்டது..
சிறு கஷ்டங்களை கூட ..
தாங்க முடியவில்லை ..
ஏனோ கண்கள் கலங்கி கொண்டே ..
இருக்கிறது ..
பணம் ஒரு பொருட்டல்ல
என்பதை என்னை சுற்றி
இருப்பவர்கள் உணரும் வரை ..
நான் உயர்வாய் வரவேண்டும் ..
ஒன்று மட்டும் உண்மை ..!
வாழ்க்கை பாதையில் ,
கஷ்டங்களால் வரும் கண்ணீரை விட,
காதலால் வரும் கண்ணீரே அதிகம்!?
கண்ணீர் என தெரிந்தும் , ஏனோ
அதை சுகமாய் ஏற்றுக்கொள்கிறேன் …
ஒரு ஆண் மகனின் கதறல் கவிதையாக, அருமை....!!!
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஒரு ஆண் மகனின் கதறல் கவிதையாக, அருமை....!!!
>>
நன்றி அண்ணா. தங்களது முதல் வருகைக்கும், பாராட்டிற்கும்
எதனைக் கண்டான்... பணந்தனைப் படைத்தான்? என்று கவிஞனையே புலம்ப வைத்த பணம் என்னையும் பாடாய்ப்படுத்தித்தான் வருகிறது. லோகாதாயமான உலகில் அது தேவையாக இருக்கும் சூழலில் கடைசிப் பாராவில் உள்ள வரிகள் என் மன ஓட்டத்துக்கும் ஏற்றதே. ஆண்களுக்காகவும் கவி பாடிய தங்காய்! வாழி நலம் சூழி!
ReplyDeleteவறுமையும், காதலும் மட்டுமே ஒரு ஆண் மகனை அழவைக்கும் இரண்டு துருவங்கள்....
ReplyDeleteதாங்கள் ஒரு ஆணின் மனநிலையில் இருந்து கவிதை ஆக்கியிருப்பது மிகவும் சிறப்பு....
வாழ்த்துக்கள்...
//கண்ணீர் என தெரிந்தும் , ஏனோஅதை சுகமாய் ஏற்றுக்கொள்கிறேன் …//
ReplyDeleteஅருமை ராஜி..ஒரு ஆணின் மனநிலையை அழகாக பிரதிபலித்திருக்கீங்க உங்க கவிதையில.
பணம் பற்றி ஆரம்பிச்சு காதல்ல முடிச்சிருக்கீங்க./ குட்
ReplyDeleteபணம் ஃபோட்டோ செம
கண்ணீiரைச் சுகமாய் ஏற்கவும் ஒரு மனம் வேண்டும் சகோதரி. நல்ல வரிகள். வாழ்த்தகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அழகு கவிதை.. எல்லா ஆணும் விரும்புவதும் அதுவே..
ReplyDeleteபணம் ஒரு பொருட்டல்லஎன்பதை என்னை சுற்றிஇருப்பவர்கள் உணரும் வரை ..நான் உயர்வாய் வரவேண்டும் .
ReplyDeleteவித்தியாசமான அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6
ஒரு ஆண் மகனின் கதறல் கவிதையாகவறுமையும், காதலும் மட்டுமே ஒரு ஆண் மகனை அழவைக்கும் இரண்டு துருவங்களஎன்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான கவிவரிகள் பணம் பற்றிய படம் சூப்பர்
ReplyDeleteஒரு ஆண்மகனின் உள்ளக் குமுறல்களை
ReplyDeleteஅற்புதமாய் சொல்லியிருகீங்க சகோதரி....
சுற்றியிருக்கும் சில்வண்டுகள்
பணமெனும் மணமில்லை எனில்
சுனக்கமாய் சென்று விடும் ...
என்னை ஒரு பணம்விளையும் மரமாய் பார்க்காது
மனித இனமாய் காணும் வரை..
எத்தனை எத்தனை பொருள் உரைக்கிறது கவிதை.
கண்ணீர் வடிப்பதற்கு எந்த ஒரு ஆண்மகனும்
தயாராக இல்லை என்பதை நச்சுனு சொன்னது அருமை..
அப்படியே வடித்தாலும் காதலெனும் அன்புக்காகத்தான் ..
வாழ்த்துக்கள் சகோதரி..
அருமையான கவிதை.
ReplyDeleteகடைசி இரு வரிகள் மிக அருமை.
பகிர்விற்கு நன்றி சகோதரி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
ஒரு மனதின் அலறல் கேட்கிறது வரிகளில் !
ReplyDelete