வியாழன், ஜனவரி 05, 2012

என்னோடு நீ மட்டுமே..,

 எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!??

சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!
 

23 கருத்துகள்:

  1. நம்மை முழுவதுமாய்ப் புரிந்துகொண்ட நட்பு கிடைப்பது ஒரு வரம். அத்தகைய அற்புத நட்பைப் போற்றும் கவிதைக்கு என் வணக்கம். பாராட்டுகள் ராஜி.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த நட்புக் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதனை கூறும் உங்கள் வரிகளுக்குப் பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. நட்பைத் தாண்டி இவ்வுலகத்தில் சிறப்பானதொன்று இருந்திட முடியுமா என்ன..பாராட்டுகள்..

    http://writermadhumathi.blogspot.com/2012/01/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  4. நட்பிற்கு இணை எதுவுமில்ல நன்றி அருமை

    பதிலளிநீக்கு
  5. எத்தனை எத்தனையோ சந்தர்ப்பங்களில் உறவுகளை விட நட்புகளே எனக்கு கை கொடுத்திருக்கின்றன. நல்ல புரிதல் உள்ள நட்புகள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். இந்த நட்புக் கவிதையும் மிக ரசிக்கிறேன். (என் மேல கோபம் இன்னும் இருக்காம்மா...)

    பதிலளிநீக்கு
  6. உன் நட்பும்உன் நட்பின் பாதிப்பும்வாழ்நாள் முழுதும்என்னோடு நடை போடும் !!!//

    நட்பின் ஆழம் புரிய வைக்கும் வரிகள் அற்புதம்....!!!

    பதிலளிநீக்கு
  7. நல்லா இருக்கு அக்கா...யாரு அந்த பாக்கியசாலி ஃப்ரென்ட்? :)))))

    பதிலளிநீக்கு
  8. இன்று என் மயிலிறகில்...எழுதக்கூடாத பதிவு....
    இது என் வலையின் விளம்பரத்திற்கான இணைப்பு அல்ல..இந்த ஒரு கருத்து நண்பர்கள் பலருக்கு கட்டாயம் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தின் வழியே இது..

    பதிலளிநீக்கு
  9. நல்ல நட்பின் பெருமை சொல்லும் கவிதை.நன்று.

    பதிலளிநீக்கு
  10. // உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
    உனையே நாடும் என் மனம் !!?? //

    அருமையான வரிகள். நல்ல கவிதை. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. உண்மையான நட்பொன்று கிடைத்திருக்கிறது ராஜி உங்களுக்கு.என்றும் தொடர வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  12. >>உன் நட்பும்
    உன் நட்பின் பாதிப்பும்
    வாழ்நாள் முழுதும்
    என்னோடு நடை போடும் !!!

    ரொம்ப ஒவரா வாக்கிங்க் போனா உடம்பு இளைச்சுடும், அந்த மாதிரி நட்பும் இளைச்சிடப்போகுது

    பதிலளிநீக்கு
  13. தோள் கொடுப்பன் தோழன் னு சும்மாவா சொன்னாங்க.....
    நட்பிற்கு இணை இவ்வுலகில் உறவேது......

    பதிலளிநீக்கு
  14. 'வாழ்நாள் முழுதும் நடைபோடும் நட்பு' தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு