பொங்கல் அன்னிக்கு ஓடி ஓடி போட்டோ எடுத்தியே பொங்கல் முடிஞ்சு இம்புட்டு நாளாச்சு அடுத்த பொங்கலே வரப்போகுதே நீ இன்னும் அதையெல்லாம் பதிவா போடலியே எப்போதான் போடப்போறேன்னு என் பொண்ணு தூயா என்னை கேட்டுக்கிட்டதால இம்புட்டு சீக்கிரமா இந்த பதிவு...,
(இதுவும் என் கைங்கர்யம்தான்....)
(இதுவும் நானே...... கலர் கொடுக்க பசங்க ஹெல்ப் பண்ணாங்க...,)
அதிகாலையில் எழுந்து குளிச்சு, ”ப” வடிவில களிமண்ணால வீடு கட்டி, பசு மாட்டின் சாணத்தில் பிள்ளையார் பிடிச்சு வைப்போம் அதுக்கு “ பிள்ளையார் மன”ன்னு பேர். காய்கறிகள், கரும்புலாம் வெச்சு பெரியவங்க நாங்க சாமி கும்புடுவோம். பொடுசுங்கலாம் எப்படா சாமி கும்பிட்டு முடிப்பாங்க. கரும்பு எப்போ திங்கலாம்ன்னு காத்து கிடப்பாங்க.
இதுதான் பிள்ளையார் மனை....,.
பொங்கல் அன்று வீடு வாசல்லாம் மொழுகி, குளிச்சு சுத்த பத்தமா ஒரு தட்டில் ஊற வெச்ச பச்சரிசி, பச்சரிசி மாவு, வெல்லம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், பூ, பானகம் என்று சொல்லப்படுகின்ற வெல்லம் தண்ணி ஒரு டம்ப்ளர், மஞ்சள் தண்ணி ஒரு டம்ப்ளர் எல்லாம் எடுத்துக்கிட்டு ஆண்கள், சின்ன பிள்ளைகள்லாம் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு வருவாங்க. அதுக்கு ,” பச்சை வைக்குறது”னு பேர்.
பச்சை வைக்க கோவில்ல தட்டு ரெடி....,
பங்காளிகள்ன்னு சொல்லப்படுகின்ற பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி லாம் சேர்ந்து கோயிலுக்கு போய் பச்சை வச்சுக்கிட்டு வருவாங்க. .
கோயிலுக்கு போனவங்க வருவதற்குள் வீட்டில் இருக்கும் பெண்கள் வீடில் வாசல் இருக்குறவங்க வாசல்லயும், வாசல் இல்லாதவங்க மாடிலயும், மஞ்சள் தண்ணி தெளிச்ச்சு, தரையில் கோலம் போட்டு செங்கல் அடுக்கி, அதற்கு மேல் களிமண் உருண்டை வச்சு, ஈர மஞ்சளை கோர்த்து, அடுப்பு மேல வச்சு ரெடியா இருப்போம்.
அடுப்பு ரெடி, பொங்க பானை ரெடி...,
கோயில்ல இருந்து வந்ததும் கற்பூரம் ஏத்தி அதை பொங்கல் வைக்க போற அடுப்புல போட்டு துவரை மிளாறை எரிய வைப்போம். பொங்கல் பானை காய்ந்ததும் முதலில் விதை நெல் போடுவோம்.
கற்பூரம் போட்டு அடுப்பை பத்த வைக்குறாங்க...,
அது பொறிந்ததும், பால் ஊற்றி பால் பொங்கியதும் தண்ணி ஊத்தி பொங்கி வரும்போது , பொங்கலோ பொங்கல்ன்னு சொல்வோம். பொங்கி வந்ததும் கடைக்கு போய் உப்பு வாங்கி வருவோம் (பொங்கல் பொங்கியதும் முதல்ல உப்பு வாங்கனும்ன்னு ஐதீகம்.) கரும்பை வெட்டி துடுப்பாக்கி அதால கிளறுவோம். உப்பு போட்டு பொங்கி இறக்கி வைப்போம்.
பொங்கல் பொங்கி வருது..., பொங்கலோ பொங்கல்ன்னு நாங்க கூவியது மட்டும் மிஸ்ஸிங்க்... ....
பொங்கல் இறக்கியதும் அதே அடுப்புல பொங்கல் குழம்பு, வெந்தயக்கீரை மசியல் பிடி கருணை காரக்குழம்பு வைப்போம். சமையல் முடிந்ததும், பிள்ளையார் மனைலயும், பொங்கல் அடுப்புக்கும் செங்கல் பொடியால கோலம் போட்டு பூசணி இலையில் பொங்கல், பொங்கல் குழம்பு, கீரை மசியல்லாம் வச்சு சாமி கும்புடுவோம்.
பிள்ளையார் மனைல படையல் ரெடி...,பிள்ளைங்கலாம் பசியோடு காத்திருக்குதுங்க...,
அடுப்பு எதிரில் படையல்...
சொந்தம் பந்தம்லாம் கூடி கதிரவனை கும்புடுறோம்.......
டிஸ்கி: இது பொங்கல் அன்று கொண்டாட்டம். மாட்டு பொங்கல், காணும் பொங்கல் அன்றைய கொண்டாட்டங்கள் அடுத்த பதிவில் மொக்கை தாங்கதவங்க மன்னிச்சூ.

பொங்கல் கொண்டாடியதைப் பார்த்து ரசித்தேன். படங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. (யார் எடுத்தது?) பார்க்கவே சந்தோஷமா இருந்ததும்மா.
ReplyDeleteஅருமையான பொங்கல் கொண்டாட்டம். படங்கள் எல்லாம் அழகாக இருக்கு.கோலம் எல்லாம் நீங்க போட்டதா? சிறப்பாக இருக்கு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பகிர்வு ....
ReplyDeleteஉங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி போட்ட கோலங்கள் சூப்பர் ஹி ஹி
ReplyDeleteம்..பொங்கல் கொண்டாட்டம் அருமை..படங்கள் சிறப்பு..பொங்கல் கொண்டாட்டம் மறந்துபோன மக்களுக்கிடையில் அதை கொண்டாடி எங்களுக்கு எடுத்துக்காட்டியதற்கு வாழ்த்துகள் சகோதரி..
ReplyDeleteநீ யாரெனத் தெரியவில்லை
உங்க கைங்கர்யத்தில் போடப்பட்ட இதே பொங்கப் பானை
ReplyDeleteகோலம் தான் என் வீட்டு முற்றத்திலும் என் மனைவியால் போடப்பட்டது.
கிராமத்தில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவது ஒரு
தனி சுகம் சகோதரி.
வாழ்க வளமுடன்.
வணக்கம் அக்கா
ReplyDeleteஉங்கள் பொங்கல் கொண்டாட்டங்களை படங்களுடன் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
சிறப்பாக உள்ளது.நன்றி.
ReplyDeleteஉறவுகள் ஒன்று சேர்ந்தாலே சந்தோஷம்தான்..
ReplyDeleteபொங்கலோ பொங்கல்.அடுத்த பொங்கல்வரை மனதை நிறைத்து இனிக்க வைக்கும் பதிவு அழகான கோலங்களுடனும் உறவுகளுடனும் !
ReplyDelete///
ReplyDeleteபொங்கல் பொங்கி வருது..., பொங்கலோ பொங்கல்ன்னு நாங்க கூவியது மட்டும் மிஸ்ஸிங்க்... ///
பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்
எல்லாரும் ஓடியாடி வேலை செஞ்சிருக்காங்க..
ReplyDeleteநீங்க மட்டும் போட்டோ புடிக்கிறேன்னு
கேமராவை வெச்சி ஓப்பி அடிச்சி இருக்கீங்கன்னு
நல்லா விளங்கிடுச்சி...
பல புதிய செய்திகள் அறிந்து கொண்டேன்.பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சி ததும்பும் பதிவு.
ReplyDeleteஉங்கள் வீட்டு பொங்கல் பற்றிய நல்ல கட்டுரை... புகைப்படங்களும் நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
பொங்கல் செமையான பொங்கல் போல - வாழ்த்துக்கள்
ReplyDeleteதாமத வருகைக்கு மன்னிக்கவும் சகோ. கணினி மற்றும இணையதள பிரச்சினையினால் கடந்த ஒரு வாரமாக வலைத்தளம் பக்கம் வர இயலவில்லை. பதிவும் இட முடியவில்லை. பொங்கல் எப்படி விட வேண்டும் என்று டியூசன் எடுத்தது போல் இருக்கிறது தங்களின் பதிவு. படங்களெல்லாம் அருமை. ஸ்டுடியோ கேமரா வைத்து எடுத்ததுபோல் இருக்கிறதே. யார் எடுத்தது சகோ? அழகு அத்தனையும். அப்புறம் மத்த பொங்கலெல்லாம் பத்தியும் போடப் போறீங்களா? ..ம்..ம்... போடுங்க...போடுங்க.. ஹி...ஹி....
ReplyDeleteகோலத்தை பத்தி சொல்ல மறந்துட்டேன் சகோ. அத்தனையும் அருமை.
ReplyDeleteதம ஓட்டு 11.
ReplyDeleteபொங்கல் வைப்பதற்கு இத்தனை வழிமுறைகளா...?! இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி சகோதரி.
ReplyDeleteஅருமையான பொங்கல்!அதைப் பதிவு செய்த விதம் அதை விட அருமை.
ReplyDeleteஉங்க வீட்டு பொங்கலை போட்டோ புடிச்சு, பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றிங்க...! :)
ReplyDelete-இப்படிக்கு அனீஷ் ஜெ...
யாருங்க சொன்னது கோலம் நல்லா இல்லைன்னு மிக அழகாக இருக்கு.... ஒருவேளை நீங்க இதை விட நல்லா போடுவீங்களோ என்னாவோ.... மிக அழகான பதிவு....
ReplyDelete//துவரை மிளாறை எரிய வைப்போம//
ReplyDeleteஅப்படின்னா எது... துவரை கொடியா??
படங்களும் பதிவும்
ReplyDeleteபொங்கல் விழாவை அப்படியே கண் முன் நிறுத்திப் போயின
அருமையான பகிர்வு
எதை செய்தாலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும்
செய்து போகும் உங்களுக்கு கூடுதல் சிறப்பு வாழ்த்துக்கள்
நம்முடைய பண்பாட்டுப் பதிவுகள் இவை. எப்போதும் இனிமையானவை. நம்முடைய வாழ்தல் அடையாளமே இவைதானே. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொங்கல் பண்டிகையைக் கொண்டாடியதை உங்கள் பதிவில் (எழுத்து வடிவில்) படம் பிடித்துக் கானண்பித்திருக்கிறீர்கள். இதற்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன புகைப்படங்கள்
ReplyDeleteவிரிவான பகிர்வுக்கு மிக நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteஉங்க பொங்கல் அருமை! புதுமையா இருந்துச்சு எனக்கு! இனிய பாராட்டுகள்.
ReplyDeleteஒரே ஒரு சந்தேகம் இருக்குதுங்க.விதை நெல் பொரிஞ்சதும் அதுலேயே பாலை ஊத்திப் பொங்கல் வைப்பீங்களா?
நெல்லுன்னா உமியோடுதானே இருக்கும்???? பின்னே.....
Pongalo Pongal..
ReplyDeleteதுளசி கோபால் கூறியது...
ReplyDeleteஉங்க பொங்கல் அருமை! புதுமையா இருந்துச்சு எனக்கு! இனிய பாராட்டுகள்.
ஒரே ஒரு சந்தேகம் இருக்குதுங்க.விதை நெல் பொரிஞ்சதும் அதுலேயே பாலை ஊத்திப் பொங்கல் வைப்பீங்களா?
நெல்லுன்னா உமியோடுதானே இருக்கும்???? பின்னே.....
>>>
நெல் பொறிந்ததும், அதுலயேதான் பால் ஊற்றி பொங்க வைப்பாங்க. நிறைய நெல்மணிகள் போட மாட்டோம். சுமார் பத்து நெல்மணிகள் தான் போடுவோம். சாப்பிடும்போது, பொங்கல்ல அங்கங்கு அது தட்டுப்படும்தான்.
ராஜி உங்கள் பொங்கல் கொண்டாட்டத்தை ரொம்பவுமே ரசித்தேன்.
ReplyDeleteபொங்கல் பதிவு செய்த விதம் அருமை...வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்கள் அருமை! நல்ல பதிவு ! நன்றி !
ReplyDeleteகோலத்தில் மிளிர்கிறது மண்வாசனை! சுவையான பொங்கல்தான், வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்தத் தடவை பொங்கலுக்கு ஊரில் இல்லேங்க.பொங்கலை ரொம்ப பிட்டு பிட்டு வச்சிடீங்க ரசித்தேன் மனம் நிறைவாய்..
ReplyDeleteபொங்கல் கொண்டாட்டத்திற்கான பகிர்வு அருமை....
ReplyDeleteஅதிலும் புகைப்படங்கள் பகிர்வு உங்கள் கொண்டாட்டத்தின் சிறப்பைக் காட்டுகிறது.....