வியாழன், ஏப்ரல் 24, 2014

கண்ணாடி மணி தோரணம் - கிராஃப்ட்

இப்ப முழு ஆண்டு பரிட்சை லீவு விட்டாச்சு. அப்பு கிளம்பி பாட்டி வீட்டுக்குப் போய்ட்டான். இனியாதான் பாவம். துணைக்கு தூயாவும், சண்டை போட அப்புவும் இல்லாம விடுமுறைல தனியாய் தவிக்குறா. அதனால, கொஞ்சம் கண்ணாடி மணிகள் வாங்கிக் கொடுத்து எதாவது கிராஃப்ட் செய்ன்னு சொல்லி, எப்படி செய்யலாம்ன்னு ஐடியாவும், பதிவு தேத்த கேமராவையும் கொடுத்துட்டேன். இரண்டு அறைகளுகிடையில் இருக்கும் ஆர்ச்ன்னு சொல்ற இடத்துல அழகா ஒரு தோரணம் செஞ்சு அசத்திட்டா. இப்ப வீட்டுக்கு வர்றவங்க கண்ணுலாம் அது மேலதான். எங்க வாங்கினீங்க!? எவ்வளவ்ன்னு கேள்விகளோடு....,

இங்க இருக்கும் பொருட்கள்லாம் வெறும் மாதிரிக்குதான். இதுப்போல நிறைய வடிவத்துல, வண்ணத்துல கிடைக்குது. உங்களுக்குப் பிடிச்சதை வாங்கி பிடிச்ச மாதிரி செஞ்சு வீட்டை அழகாக்கிக்கோங்க.

தேவையானப் பொருட்கள்:
வெவ்வேறு கலர் மீடியம் சைஸ் உருண்டை வடிவ கண்ணாடி மணிகள்,
சின்ன சைஸ் கலர் முத்து
குஞ்சலம் போல தொங்க விட எதாவது ஒரு வடிவத்துல கண்ணாடி மணி(என் பொண்ணுக்கு பிடிச்சது கதாயுதம் வடிவத்துல இருக்கும் மணி)
கத்தரிக்கோல்
நரம்பு இல்ல திக்கான நூல்

எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க.

முதல்ல கதாயுதம் வடிவத்துல இருக்கும் மணியை கோர்த்து முடிப் போட்டுக்கிட்டா.
அதுக்கடுத்து அவ அக்காக்குப் பிடிச்ச கலரான கத்திரிப்பூ கலர் சின்ன சைஸ் முத்தைக் கோர்த்துக்கிட்டா.

அதுக்கடுத்து தனக்குப் பிடிச்ச கலரான ஸ்கைப்ளூ கலர் மணியை கோர்த்துக்கிட்டா. இப்படியே தனக்குப் பிடிச்ச மாதிரி மணிகளைக் கோர்த்துக்கிட்டா.


இடையிடையே கோல்டன் கலர் திலக வடிவ மணிகளையும் கோர்த்துக்கிட்டா.

எல்லாத்தையும் கோர்த்து ஒரு சரத்தை ரெடி பண்ணிக்கிட்டா.

நடுவில் சின்ன சரம். அதுக்கடுத்து கொஞ்சம் பெரிய சரம், அதுக்கடுத்து இன்னும் கொஞ்சம் பெரிய சரம்ன்னு அழகா கோர்த்து அவளே ஆணி அடிச்சு மாட்டியும் விட்டுட்டா.

அழகான  தோரணத்தை செஞ்சு, அம்மா பதிவுப் போட படமும் எடுத்தாச்சு.  இப்பதான் இந்த இடமே சூப்பரா இருக்கும்மான்னு அவ அப்பாக்கிட்ட ஒரு சர்டிஃபிக்கேட்டும் வாங்கியாச்சு. இப்ப அவ அம்மாவோட சகோஸ்கள் கமெண்டுக்காக காத்திருக்கா!? 

சீக்கிரம் சொல்லிடுங்கப்பா! குழந்தையை ரொம்ப காக்க வைக்காதீங்க!!

இன்னிக்கு தேர்தல். அதனால பொது விடுமுறையை அரசாங்கம் விட்டிருக்கு. இன்னிக்கே இந்த மணிலாம் வாங்கி பசங்கக்கிட்ட கொடுக்கலாம்ன்னு நினைச்சு கிளம்பிடாதீங்க. எங்கப் போறதா இருந்தாலும் ஓட்டுப் போட்டுட்டுப் போங்க. நான் ஓட்டுப் போட்டாச்சு!! அப்போ நீங்க!?

27 கருத்துகள்:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 2. ஓட்டுப் போட்டுட்டு வந்து ரசித்த முதல் பதிவு உங்களது தான் சகோ... [கதாயுதம் வடிவத்துல] அலங்காரம் ஜோர்... பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா!

   நீக்கு
 3. சனநாயக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் மெய்சிலிர்க்கும் அளவுக்கு என்ன இருக்குண்ணே!?

   நீக்கு
 4. வணக்கம்

  அலங்கார வேலைப்பாடு பற்றிய விளக்கம் நன்று...... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நனி ரூபன்

   நீக்கு
 5. மணிமாலை அலங்காரம் வெகு ஜோர்! நாங்களும் ஓட்டு போட்டாச்சு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் ஓட்டுப் போட்டதற்கும் நன்றி சகோ!

   நீக்கு
 6. இனியா இனிமையா செஞ்சுட்டாளே ..அழகா இருக்கு. அவளுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கிரேஸ்

   நீக்கு
 7. இனியாவுக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க சகோ.

  பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. இதைப் பார்த்த ஓவியா, இதே மாதிரி செஞ்சு நம்ம வீட்டுல மாட்டுங்கன்னு சொல்கிறார். வீடியோவை எங்கே என்று கேட்கிறார். அதனால் இனிமேல் செய்முறை விளக்கத்தை வீடியோ எடுத்து போடவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபோட்டோ பதிவு போடுறதுக்கே நம்மாளுங்க என்னை தாளிக்குறாங்க. இன்னும் வீடியோவும் போட்டுட்டா!!?

   நீக்கு
 8. அழகா இருக்கு. இனியாவுக்கு வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களை சொல்லிடுறேனுங்க சகோ!

   நீக்கு
 9. "மணி "ன்னாலே அழகு தான்!ஹ!ஹ!!ஹா!!!வாழ்த்துக்கள் இனியா வுக்கு!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ! நீங்க அப்படி வர்றீங்களா!? ரைட்டு!

   நீக்கு
 10. அழகாய் செய்திருக்கிறாள்.
  இனியாவிற்கு என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனியாவிற்கு உங்க வாழ்த்துக்களை சொல்லிடுறேன் அருணா!

   நீக்கு
 11. இனியா வின் கைவண்ணம் அருமை.
  பொறுமையாய் நேர்த்தியா செய்த இனியா விற்கு என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. கண்ணாடி மணி தோரணம் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 13. தோரணம் அழகா இருக்கு..... பாராட்டுகள் - இனியா.

  பதிலளிநீக்கு