பொதுவா கல்யாணம்ன்னாலே செஞ்சுக்குறவங்களுக்கும், அதை பார்க்குறவங்களுக்கும் ரொம்ப சந்தோசம். ஆனா, நடத்துறவங்களுக்குதான் டென்சன், வருத்தம்லாம். ஒரு கல்யாணத்தை பார்த்தால் புண்ணியமாம். அறுபதாம் கல்யாண வைபோகத்தை பார்த்தா 12 கும்பாபிஷேகம் பார்த்த புண்ணியமாம்.. சதாபிஷேகம்ன்ற நூறாவது திருமணத்தை பார்த்தால் அத்தனை புண்ணிய தீர்த்தத்துலயும் நீராடிய பலனாம். சாதாரண மனிதர் திருமணத்துக்கே இத்தனை புண்ணியம்ன்னா கடவுளோட திருமணத்தை பார்த்தா?! சகல ஐஸ்வர்யத்தோடு முக்தியும் கிடைக்கும்.
தேவாதி தேவர்களை வதம் செய்து தங்களை அடிமைத்தளத்திலிருந்து மீட்டெடுத்த முருகனுக்கு கைமாறு செய்ய நினைத்த இந்திரன், தன் மகளான தெய்வானையை மணந்துக்கொள்ள வேண்டினான். முருகப்பெருமானும் சம்மதித்தான். இந்திரன் உடனே இந்திரலோகம் சென்று, இந்திராணியிடமும், மகள் தெய்வயானையிடமும் முருகன் அரக்கர்களை அழித்த விவரம் கூறி, தெய்வயானை-திருமுருகன் திருமணம் பற்றி எடுத்துரைக்க எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்தநாளே திருமணம்ன்னு குறிச்சதனால எல்லாரும் திருமணத்திற்கான வேலைகளை பார்த்துக்கிட்டிருந்தாங்க. சகலருக்கும் திருமணச் செய்தி அனுப்பப்பட்டது. பிரம்மா முகூர்த்த நேரம் நிச்சயிக்க, பார்வதி பரமேசுவரனும், விஷ்ணு தன் மனைவியான மகாலட்சுமியுடனும், மற்ற தேவாதி தேவர்களும் சீர்கொண்டு வந்தனர்.
மங்கல வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் மகள் தெய்வயானையைக் கன்னிகாதானம் செய்து வைத்தான். மகளுக்கு சீதனமாய் அச்சம், மடம், நாணம், பயிர்ப்போடு கற்பையும் சீதனமாய் தந்து முருகனிடம் தன் மகளை ஒப்படைத்தான்.
சாஸ்திரப்படி திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்து அருந்ததி காணல் போன்ற சகல வைபவமும் சிறப்பாக நடந்தேறின. மணமக்கள் தாய் தந்தையரை வணங்கி ஆசிபெற்றனர். மணம் முடிந்து அனைவரும் தத்தம் இருப்பிடம் சென்றனர். அடுத்து முருகப்பெருமான் விசுவகர்மாவை அழைத்து அமராவதி நகரை நேர்த்தியாக உருவாக்கித் தரப் பணித்தார். அவ்வாறே நகரம் புதுப்பொலிவு பெற்றுவிட்டது. முருகப்பெருமான் பிரம்மனிடம் இந்திரனுக்கு முடிசூட்டு விழா நடத்தக் கூறினார். இந்திரன் இந்திராணியரை அரியாசனத்தில் அமரச்செய்து பிரம்மா பட்டாபிஷேகம் செய்துவைத்தார். தேவலோகத்தில் சிலகாலம் தெய்வானையுடன் தங்கி இருந்து பின் வள்ளியை மணந்தார்.
முருகன், தெய்வானையை மணந்த தலம் திருப்பரங்குன்றமாகும். இது அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகும். 247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று. நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி இருக்காங்க. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காண முடியாது.
திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர்மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இங்குதான் சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குவார். இங்கு மட்டும்தான் முருகன் அமர்ந்த கோலத்தில் இருக்கார். மற்ற வீடுகளில் நின்ற கோலத்தில் அருளுகிறார். இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அருளுகிறார். அருகில் நாரதர், இந்திரன் ஆகியோர் இருக்காங்க. பிரம்மா, நின்றகோலத்திலும், வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் இருக்காங்க. சூரியன், சந்திரன், கீழே முருகனின் வாகனமான மயில் மற்றும் ஆடும் இருக்கு. இதுலாம் மற்ற முருகன் தலங்களில் காணக் கிடைக்காத அபூர்வக் காட்சி ஆகும். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள்லாம் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதாக ஐதீகம்.
சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக இருக்கிறார். இங்கு மூலவர். விழாக்காலங்களில் இவருக்குதான் கொடி ஏற்றப்படுகிறது. இருப்பினும் முருகனே சிவபெருமானின் அம்சம் என்பதால் அவரே வீதி உலா வருகிறார் . மகாவிஷ்ணுவின் வாகனமான கருடாழ்வார், எல்லா கோவில்களிலும் அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனா, இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருக்குறதால, கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு பக்கத்துல வடக்கு நோக்கி இருக்கிறார். இங்கு சிவபெருமானுக்கு எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சிவனுக்கு எதிரே நந்தி இல்லை, பெருமாளுக்கு எதிரே கருடன் இல்லை. மாறாக சிவனும் பெருமாளும் எதிர் எதிரே உள்ளனர். ஆகவே இதனை மால்விடை கோவில் என்று அழைப்பர். இந்த பவளக்கனிவாய்ப்பெருமாள்தான் மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் அன்று சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்கப் போவார்.
முன்னலாம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்னாடி இருக்கும் தென்பரங்குன்றம் குடவறைக் கோயில்தான் பிரதானமாக இருந்திருக்கு. அக்கோவில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்" என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியது. அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுரை பெருமாளே என்றுதான் பாடுகிறார். இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை "சத்தியகிரீஸ்வரர்" என்று அழைக்கின்றனர்.
முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுது. முருகன் குடைவரை மூர்த்தியாக இருப்பதால் இந்த ஏற்பாடு.
புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இங்கு மட்டுமே. வேலுக்கு முக்கியத்துவம் ஏன் என்றால் சூரனை ஆட்கொண்டு வெற்றிவேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததே ஆகும்.
காதல் கொடுத்தாலும், பெற்றாலும் சுகம். ஒன்றல்ல, ரெண்டு காதல் பெண்டிரின் கரத்தை போராடித்தான் பெற்றான் முருகன். முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு! அதனால், அவனின் உள்ளம் கனிந்தது. காதல் கணவனை பெற்றவள் எத்தனை பாக்கியசாலி?! அதனால் மங்கையர் இருவர் உள்ளமும் கனிந்தது. சகல முருகன் கோவில்களிலும் இன்று திருக்கல்யாண வைபோகம் நடைப்பெறும். திருமணக்கோலத்தில் மூவர் உள்ளமும், திருமணத்தை நடத்தி வைக்கும் மும்மூர்த்தி, முப்பெருந்தேவியர் உள்ளிட்ட தேவாதிதேவர்களும் ஆனந்தமாய் இருக்கும் நேரமிது. இந்த நேரத்தில் அவர்களை வணங்கினால் நினைச்சது நடக்கும். வாழ்வும் சிறக்கும்... இன்றைய தினம் திருக்கல்யாணத்தில் கலந்துக்கொள்ளும் சுமங்கலி பெண்களுக்கு, வயது வந்த பெண்களுக்கும் தாலிச்சரடு, மஞ்சள், குங்குமம், வளையல், பூ.... என அவரவர் வசதிக்கேற்ப தானம் செய்தால் மாங்கல்ய பலம் கூடும்,. கணவன், மனைவிக்குள் அன்னியோன்யம் தழைக்கும். திருமணமாகாதவருக்கு திருமணம் ஆகும்.
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப் பரங் கிரி தனில் உறை சரவணப் பெருமாளே!
நின்னை சரணடைந்தேன்...
சஷ்டிப் பதிவுகள் இத்துடன் முடிந்தது! முருகா! சரணம்....
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி
நன்றி சகோதரியாரே
ReplyDeleteதம +1
நன்றிண்ணே
Deleteஅருமை,தங்கச்சி........திருக்கல்யாண வரலாறும்,அறுபடை வீடுகளின் பெருமையும் ........ நன்றி.
ReplyDeleteஎன்னண்ணே கொஞ்ச நாளாய் ஆளைக்காணோம்... மூஞ்சி புக்லயும் காணோம்
Deleteசிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteயாழ்பாவாணன்
http://fliphtml5.com/homepage/mjnyg
வருகிறேன் சகோ
Deleteஅனைத்துக் கோயில்களுக்கும் மனம் நிறைவாக சென்ற உணர்வு இந்தப் பதிவுகள் மூலமாக மனதில் தோன்றியது. பாராட்டுகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteமகளே உனக்கு புராணங்கள் கைகொடுக்க சிலருக்கு மைனஸ் ஓட்டு கை கொடுக்குது!
ReplyDeleteநம்பினோரை இறைவன் கைவிடுவதில்லைப்பா. ஆனா, நம்பினவர் முதுகுல குத்துற ஆளுங்களால மைனஸ் ஓட்டு விழுகுது. எனக்கு தமிழ்மணம் ஓட்டு முக்கியமில்லப்பா. ஆனா திரட்டிகள் இல்லாததால இப்படி ஒரு பதிவு வருதுன்னு தெரிஞ்சுக்க தமிழ்மணம் உதவுச்சு. அதுக்கும் அந்த மெண்டல் கேசு வேட்டு வச்சிட்டுது. என் பதிவுகள் எதும் முகப்பு பக்கத்துல வருவதில்லை என்னை பத்தி என்ன சொல்லி வேட்டு வச்சதுன்னு தெரில.
Deleteநடப்பவை யாவும் நன்மைக்கே. நல்லா இருக்கட்டும் அந்த மனுசன்.
வருந்தாதீங்க இந்த ஓட்டு வந்து என்ன ஆகப்போகுது இதோ நான் தமிழ் மணத்தில் நுழைத்து விட்டேன் சகோ. ஏழாவது ஓட்டு.
Deleteஎப்படின்னு எனக்கும் சொன்னால் நானும் இணைச்சுக்குவேனே
Deleteசகோ எனது ஓட்டு சேர்ந்து விட்டதாக சொல்கிறதே... ஆனால் நம்பர் மாறவில்லையே.....
ReplyDeleteஎன்ன செய்வது ? பிறகு வருகிறேன்.
செல்வழி ஓட்டு போட்டோம்ல... எப்பூடி ?
Deleteநன்றி. அப்படியே அந்த மைனஸ் ஓட்டுக்கும் வழி சொல்லுங்க
Deleteநாங்கள் எல்லாம் சீதா கல்யாணம் மீனாட்சிகல்யாணம் பெருமாள் கல்யாணம் நடத்தி இருக்கிறோமாக்கும்
ReplyDeleteமுருகனுக்கும் கல்யாணம் பண்ணலாம். பார்க்கலாம்... தப்பில்ல
Deleteமுருகன் தான் ஞானம் கொடுப்பானாக்கும். அதனால, அவனுக்கும் கல்யாணம் செய்ங்கப்பா
Deleteவேல் உண்டு வினையில்லை
ReplyDeleteஅடுத்த பதிவின் தலைப்பே இதான் புள்ள
Deleteமுருகா சரணம்!
ReplyDeleteவேல் கொண்டு விளையாடும் முருகா
ReplyDeleteவேதாந்த கரைஞான தலைவா
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா
உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்.....
முருகா சரணம்...!
சஷ்டி பதிவுகள் ஒவ்வொன்றும் மிக மிக சிறப்பு ...ராஜிக்கா...வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி
ReplyDelete