Wednesday, September 28, 2016

வாட்ஸ் அப்பில் கலக்கிய இன்டர்நெட் பொய்கள் -தெரிந்த கதை தெரியாத உண்மை

நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில், எப்பொழுதும் ஆன்மீகம் பற்றியே பதிவிட்டு கொண்டு இருந்தால்,சிலருக்கு அது போரடிக்க கூடும் அதனால் சிறிது மாறுதலுக்காக,பொது வாழ்வு சார்ந்த,சமுதாயத்தையே பொய் உலகில் கட்டிப்போட்ட சில செய்திகளை இங்கு பார்க்கலாம்.பலரும் படித்து பயன்பெறும் வண்ணம் இங்கு கொடுக்கும் தகவல்களை,சிலர் கல்வெட்டில் கூட பதித்து ,தங்கள் வீட்டில் வைத்து கொள்ளலாம். அதற்கு கம்பெனி அனுமதி தேவை இல்லைசரி இனி விஷயத்திற்கு வருவோம்,இந்த நவீன காலத்தில் மக்களிடையே முக்கியமான தகவல்களை கொண்டுசெல்வதில் முக்கிய பங்கு வகிப்பது,இன்டர்நெட் மற்றும்,ஊடகம், இவற்றில் உண்மை 10% என்றால் பொய்கள் 90% மக்களிடையே பரப்பப்படும்.அதற்கு நிறைய உதாரணம் ,சமீபத்திய நடந்த சில விஷயங்களும் அதை மறைத்து,சில ஊடகங்கள் வேறுவிதமாக பரவச்செய்ததும்.அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இன்டர்நெட் மூலம் பரப்பப்பட்ட சில பொய்கள்,உண்மை போலவே திரிக்கப்பட்டு உலாவந்தன,அந்த, பொய்களை இங்கு ஆதாரத்துடன் நம்முடைய தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம்.
இதுபோன்ற விழிப்புணர்வு இருக்கவேண்டும்,என்பதற்காக மத்திய அரசு கூட NATIONAL  DIGITAL LITERACY MISSION  என்ற அமைப்பை தொடஙகி ,மாணவர்கள்,கிராமங்களில் இருக்கும் நடுத்தர மற்றும் கல்வி அறிவு பெற்றவர்களுக்கும்,இலவசமாக  இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி, ஆன்லைன் மூலம் அரசுசார்ந்த துறைகள் அவர்களது திட்டங்கள் ,மற்றும்  புகார்களை பதிவு செய்யவும் ,ஆன்லைன் வர்த்தகம் ,செய்திகள் போன்றவை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் ,என்ற எண்ணத்தோடு ,நமது மத்திய அரசு, இந்ததிட்டத்தை செயல்படுத்தி அதில் சிறிய தேர்வும் வைத்து சான்றிதழ் கொடுக்கிறது.எதிர்காலத்தில் மத்திய அரசே,டேப்,ஸ்மார்ட் போன் போன்றவற்றை ,இந்த சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மானியமாக கொடுக்கவும் திட்டம் வகுத்துள்ளது .அப்படி ஒரு விழிப்புணர்வு இருந்தால்தான்,மக்களிடையே ,பரப்பப்படும் பொய்கள் புரளிகள்,வதந்திகள் தடுக்கப்படும் .
முதல் பொய்,காந்தியை கோட்சே சுட்ட புகைப்படம்.சுடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், என்று ,நெட்டில் உலாவந்து.உண்மையில் அது ஒரு ஜெர்மன் நடிகர் நடித்து ,மார்க் ராபின்சன்,டைரக்ட் செய்து ,கதைவசனம் Nelson Gidding, Stanley Wolpert  எழுதி ,நடிகர்களாக, Horst Buchholz, José Ferrer, Valerie Gearon |See full cast & crew ஆகியோர் நடித்து 1963-ம் ஆண்டில் வெளிவந்த 'Nine hours to Rama' என்ற படத்தில் உள்ள காட்சியே அது.
 அதன் சாராம்சம் என்னனா,காந்தியின் கடிகாரத்தை,மையமாக கொண்டு அமைக்கப்படுகிறது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காந்திஜியின் கால்படாத இடமே இல்லை,அனைத்து இடங்களுக்கும்,நேரம் தவறாமல் செல்வார்,அவருடைய கடிகாரத்தின் துணையோடு.ஆனால், அன்று அவர் இறப்பதற்கு சிலமணிநேரம் முன்பு மட்டும்,தாமதமாக நடந்து காந்தி தன் சாவை நோக்கி நடக்க துவங்குகிறார்.வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி பசுந்தரை வழியாக வேகமாக அந்த கால்கள் சாவை நோக்கி முன்னேறுகின்றன.அதே நேரம் நேரு தன் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார். பட்டேல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். மவுண்ட்பேட்டன்  தன் வசிப்பிடத்தில் உரையாடிக்கொண்டிருக்கிறார். மீராபென் இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் இருக்கிறார்.லைப் இதழின் புகைப்பட நிபுணர் மார்க்ரெட் புருக் சில தெருக்கள் தள்ளியிருந்த விடுதியில் காத்திருக்கிறார்.வின்சென்ட் சீன் என்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் காந்தியின் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கபட்டு பிரார்த்தனை முடிந்து காந்தி வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
கோட்சே தனது இத்தாலிய பெர்தா துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக் கொள்கிறான்.காந்தியின் முன்னால் போய் நிற்கிறான். அவனது உதடுகள் நமஸ்தே காந்திஜி என்று சொல்கின்றன..காந்தியின் கைகள் கூப்புகின்றன, வணக்கம் சொல்கிறார்.காந்தியின் கண்களை கோட்சே எதிர்கொள்கிறான். கோட்சேயின் வலது கை துப்பாக்கியை எடுக்கிறது.இடது கையால் மனுவை தள்ளிவிடுகிறான் கோட்சே. மூன்று முறை துப்பாக்கியை இயக்குகிறான், வெடிக்கிறது. அடிவயிறு இதயம் என தோட்டா பாய்கிறது. காந்தி தான் சுடப்பட்டோம் என்பதை உணர்ந்தபடியே நிற்கிறார்.அந்த கண்கள் உலகை கடைசி முறையாக காண்கின்றன.அவரது உடல் சரிகிறது.கால்கள் நடக்க மறுத்து ஒடுங்குகின்றன.புகையின் நடுவில் கூக்குரல் எழுகிறது.காந்தி மண்ணில் சரிகிறார்.அவரது உதடு ராம்,ராம் என முணுமுணுக்கிறது.ஆஸ்திரேலிய கம்பளியால் தயாரிக்கபட்டிருந்த அவரது வெண்ணிற சால்வை இரத்தகறை படிகிறது.கூச்சலும் சப்தமும் அதிகமாகிறது.காந்தியின் கடிகாரம் தரையில் விழுந்து அப்படியே நிற்கிறது.அப்போது மணி 5.17. அதன் பிறகு அந்த கடிகாரம் ஒடவேயில்லைஇதுதான் கதையின் சாராம்சம் ,அந்த படத்தில் உள்ள காட்சியானது,அந்த சினிமாவிற்க்காக எடுக்கப்பட்டது.இந்த புகைப்படம் காந்திஜி சுடப்பட்ட கடைசி நிமிடத்தில்,எடுக்கப்பட்ட புகைப்படம் என நெட்டில் வந்தது .இது ஒரு முழுப்பொய்.
இதேபோல்,காந்தியை பற்றி அவதூறு சொல்லும் வகையில்,காந்திஜி ஒரு ஆங்கில பெண்ணுடன் நடனம்ஆடுவது போன்ற போட்டோ நெட்டிலும், வாட்ஸ் அப்பிலும் பரப்பப்பட்டது.உண்மையில் அது ஆஸ்திரேலியா நடிகர் ஒருவர் காந்தியை போல வேடமிட்டு ஒரு பார்ட்டியில் நடனமாடும் போது எடுத்த புகைப்படம்.அதை எப்படியெல்லாம் திரித்து,இவர்களது கற்பனையில்  என்னவெல்லாம் எழுதவேண்டுமோ,அதையெல்லாம் எழுதிவிட்டார்கள், .இப்பொழுது இருக்கிற எழுத்து போராளிகள். தங்களை எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்பவர்களுக்கு, ஒரு உண்மையை சொல்லிக்கொள்கிறேன்.எது எழுதினாலும் .ஒன்றுக்கு 10 முறை யோசித்து எழுதுங்கள். ஏனெனில் உங்கள் கற்பனையும் ,காப்பி அடித்து எழுதும் பொய்த்திறனும்,சிலவருடங்கள் கழித்து ,உண்மைபோல் வலம் வரும்,ஒரு சமுதாயத்தில் விஷத்தை பரப்பிய பாவமும் அவர்களையே சாரும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
அடுத்த பொய் என்னவென்றால்,மூன்றுதலை நாகம் ,இதுவும் இந்தியாவில் ஒவ்வெருநாளும்,ஒவ்வெரு இடத்தில பிடித்ததாக சொல்லப்பட்டு,நெட்டில் ஜோராக வலம்வந்தது.ஒருவர் இது ஊட்டியில் பிடிக்கப்பட்டது எனவும்,மூன்று தலையுடன் காணப்பட்டது எனவும்,மக்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்,என்று செய்தி வெளியிட்டனர்.போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இதில் உள்ள அனைத்துமே போலியானவை,ஒற்றைதலை கொண்ட பாம்பின் படத்தைக்கொண்டு போட்டோஷாப் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டு இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் புகைப்படங்களில் இதுவும் ஒன்று என.
,உண்மை என்னவெனில்,ஜனவரி மாதம் கேரளாவில் பெரிய நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது.இதனை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்தனர்.புகைப்படக்கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் தான் அது.அந்த படத்தை சிலர் போலியாக சித்தரித்து மூன்று தலை நாகப்பாம்பு ஒன்று ஊட்டியில் காணப்பட்டதாக புரளியைக் கிளப்பியுள்ளனர்,என்ற விவரம் கண்டறியப்பட்டுள்ளது.இங்கே எப்படியெல்லாம் கிராபிக்ஸ் மூலம் ஒரு புகைப்படத்தை மாற்றியமைக்கமுடியும் என்பதை அந்த போட்டோஷாப் கலைஞர் நிரூபித்து நெட்டிலும் பறக்கவிட்டு விட்டார். 
இந்திய இரயில்வே துறை தான் உலகிலேயே மிகவும் பெரியது என சிலர் சொல்வதுண்டு ஆனால், இது உண்மையல்ல.இந்திய ரயில்வே துறையில் 16 இலட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.ஆனால் அமெரிக்க ரயில்வே துறை தான் உலகிலேயே மிகவும் பெரியது அதை தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனா உள்ளது..
1950 கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் வெறும் காலுடன் விளையாட முற்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்,என ஓர் செய்தி பரவலாக பேசப்படுகிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால் இந்திய கால்பந்து அணி, அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு 1948-ஆம் ஆண்டிலிருந்து ஃபிஃபாவுடன் இணைந்துள்ளது.ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு ஒரு தொடக்ககால உறுப்பு அமைப்பாக இணைந்தது.இந்திய தேசிய கால்பந்து அணியின் பொற்காலம் 1950-கள் மற்றும் 1960-கள் ஆகும். அக்காலகட்டத்தில் (1950-ல்) கால்பந்து உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.காரணம்,மற்ற ஆசிய நாடுகளான, பர்மா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,போன்ற நாடுகள் கலந்துகொள்ளவில்லை அதனால், இந்தியா தானாகவே,உலக கால்பந்து போட்டியில் தகுதி பெற்றது. ஆனால் அவர்கள் இதற்குமுன் எந்த உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்கவில்லை ஆனாலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்திய அணி பங்கேற்க்காததற்கு வெறும் காலுடன் விளையாடுவதாய் கூறியது மட்டுமல்ல காரணம். உண்மையில் பயணச்செலவுகள்,பொருளாதார நிலை, குறைவான பயிற்சி, அணித்தேர்வுக் குழப்பங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உலகக் கோப்பையை விட முக்கியமானதாகக் கருதியமை,ஆகிய பல காரணங்கள் உலகக் கோப்பையில் பங்கேற்காததற்குக் கூறப்படுகின்றன. ஆனால் இந்தியஅணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், ஒரு ஆசியக் கோப்பையில் வெள்ளி மற்றும் உலகக் கோப்பையில் சிறந்த செயல்திறன் காட்டிய ஆசிய நாடு என்ற சிறப்பு ஆகிய பெருமைகள் கொண்டது.
அடுத்த பொய் ,வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக்கிலும் பெப்சி, மாசா, ப்ரூட்டியில் எச்.ஐ.வி வைரஸ் பரவியதை,பொய்யர்களான இவர்கள் வைரலாக பரவிட்டுட்டார்கள் இது மிகவும் கொடுமையான பொய்.

டெல்லி போலிஸ் தான் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டது என பரப்பப்பட்ட இந்த பொய்  பெப்சி, ப்ரூட்டி, மாசாவில் ஓர் ஊழியரில் இரத்தம் கலந்துவிட்டது. அவர் ஓர் எச்.ஐ.வி நோயாளி. எனவே, அவற்றை பருகுவதை நிறுத்துங்கள் என்று கூறி பரப்பினர்.ஆனால், இது பொய்யான தகவல் என டெல்லி காவல்துறையே கூறிவிட்டது. கடைக்காரர்களிடம் கேட்டால்,அது அவர்களுடைய வியாபாரத்தை நஷ்டமடைய செய்வதற்காக பரப்பபட்ட பொய் என்கின்றனர்.
அடுத்த பொய், சாதனை வீரர்  மில்கா சிங் பற்றியது. 1960-ம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மில்கா சிங், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற போது, முதலாவதாக சென்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் திரும்பி பார்த்ததால்  தோல்வியுற்றார் என பரவலாக கூறப்படுகிறது.ஆனால் ஒலிம்பிக் சார்பிலிருந்த வந்த தகவல்களில் அவர் ஐந்தாவதாக தான் வந்தார், முடிக்கும் போது நான்காம் இடத்தில் முடித்தார். அவர் முதல் நிலைக்கு வரவே இல்லை என கூறப்படுகிறது.ஆனால் உண்மையில்,மில்கா சிங் பற்றிய உண்மையை நாம் ஒவ்வருவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
1956 ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட மில்கா சிங், 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ், என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அடுத்த இரண்டு வருடங்களில் அந்த அமெரிக்கரின் டைமிங்கைத் தாண்டிக் காண்பித்தார். அதன்பிறகு, உலகளவில் முதல் எட்டு சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார் மில்கா சிங்.ஆனால், 1960 ஒலிம்பிக்ஸில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டதுதான் பெரிய சோகம்.காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் எப்போதும் சாம்பியன்தான்.1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங்.ஆனால், அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் வெர்ஸஸ் மில்கா சிங் என்று அப்போட்டி விளம்பரப்படுத்தப்பட்டது. இதைச்சவாலாக ஏற்றுக்கொண்டு,ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், அப்துல் காலிக்கைத் தோற்கடித்தார் மில்கா சிங்.பரிசளிப்பு விழாவில், 'நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்' என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான்.அங்குதான் அவருக்கு 'ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)' என்கிற பட்டமளிக்கப்பட்டது."பாகிஸ்தானில் ஓடும்போது,சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு  வந்தது”  என்கிறார் மில்கா சிங்.ஆனால்,அவர் ஓடத்தொடங்கியது ஒலிம்பிக்சில் மட்டுமல்ல ,சிறிய வயதில்,உயிரை காப்பாற்றவும் தான்.
இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் 1935ல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க நடந்ததுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கான ஆரம்பப் புள்ளி. தினமும் 20 கிமீ நடந்து சென்று கல்வி பயின்றார்.15 வயதில், இந்தியப் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டார்கள்.கூடப் பிறந்த மூன்று பேரையும் கலவரத்தில் இழந்தபோது செய்வதறியாமல் தவித்தார்.'ஓடிவிடு, இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்' என்று இறக்கும் தறுவாயில் தந்தை சொன்னதைக் கேட்டு பதைபதைத்துப் போனார் மில்கா சிங்.அந்தச் சமயம், கலவரக்காரர்கள், கண்ணில் படும் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள்.உயிருக்கு அஞ்சி, காட்டு வழியே ஓடி, ஒரு இரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்து டெல்லியில் உள்ள தன் சகோதரியிடம் அடைக்கலமானார். பிறகு, அவருடைய சகோதரரின் உதவியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் மிக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.அதில் ஒருவராக வந்து, 400 மீ ஓட்டப்பந்தயமொன்றில் ஜெயித்தபோதுதான் தன் திறமையை அறிந்தார் மில்கா சிங்.அவரையும் விட்டுவைக்கவில்லை இந்த பொய்யர்கள்.
குர்குர்ரேவை யாரும் சாப்பிட வேண்டாம்,அதில் பிளாஸ்டிக் கலப்படம் உள்ளது,பாருங்கள் எப்படி உருகுகிறது என்று இந்த படம் பகிரப்பட்டது.ஆனால், குர்குர்ரேவில் சோளம் மற்றும் மசாலாப் பொருட்கள் தான் கலக்கப்படுகிறது இது போலியான புகைப்படம் என குர்குர்ரே நிறுவன மேலாண்மை துறையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் எது உண்மை என உருவாக்கியவர்களுக்கும்,ப்பிட்டவர்களுக்கும் தான் தெரியும்.
அடுத்த பொய் ,குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது ,நமது ,வாட்ஸ் அப் முகவரிக்கோ ,இல்லை ,பேஸ்புக் பக்கத்திற்கோ ,பாராட்டுகளுடன் வந்த பொய் செய்தி இது .உலகின் சிறந்த தேசிய கீதம் ஜன கன மன என்று யுனெஸ்கோ சற்று முன் அறிவித்தது என, இந்தியன் என்பதில் நாம் பெருமை கொள்வோம் என்று,சுற்றறிக்கை போல அடிக்கடி வந்துவிடும்.ஆனால்,இது உண்மை இல்லை ,இது முற்றிலுமான பொய் தகவல் என யுனெஸ்கோவே அறிவித்துவிட்டது..
உண்மையில் ,தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுப்பது என்றால் ,இது போன்ற ,பொய் செய்திகளை ,பரப்பாமல் ,அதன் தமிழ் அர்த்தத்தை புரிந்து கொண்டு ,அதன் பின் படித்தாலோ செய்தி வெளியிட்டாலோ நலம் /

மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...

உனக்கே என்றும் வெற்றி...

ஆனாலும், இது தேசிய கீதமான,வங்க மொழி - ஜன கண மன பாடலுக்கு என்றுமே ஈடாகாது. மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும் இருக்கும் .அவ்வுளவுதான் .
அடுத்து ஒவ்வரு  தீபாவளிக்கும்,வரும் புதுப்பட ரிலீஸ் போல ,தவறாமல் வந்துவிடும்,இந்த படம் ,நாசா நடுவானில் இருந்து ,இந்தியாவை படம்பிடித்தது என்று. இது வெறும் புரளி. இதை புரளி என்று நாசாவும் அறிவித்து விட்டது. 
அடுத்தபடம் ,கேரளாவில் மது அருந்திக்கொண்டு ,தூங்கிக்கொண்டு இருந்த மனிதனை,மலைப்பாம்பு விழுங்கிவிட்டது.என புரளி கிளப்பப்பட்டது.இதே புரளி சீனா,இந்தோனேஷியா,தென்னாப்பிரிக்கா மற்றும் மலேசியாவில் கூட அந்த அந்த அந்த நாட்டிற்கு ஏற்றவாறு புரளியை பரப்பினர். உண்மையில் இந்த படம் மலைப்பாம்பு ஒன்று ,மானை முழுவதுமாக விழுங்கியபோது எடுத்தப்படம். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேடுப்பள்ளியில் கூட ஆட்டை மலைப்பாம்பு ஒன்று ஆட்டையை போட்டது ,நல்லகாலம் அதையும் மனிதர்களை விழுங்கிவிட்டது என பரப்பாமல் விட்டார்களே .. 
ஒரே பிரசவத்தில் 11 குழந்தைளைகளை,பெற்ற பாகிஸ்தான் பெண்மணி ,என்று இணையத்தையே கலக்கியது .அதில் ஒரு பெண்மணியின் படமும் ,கூடவே பதிவேற்றம் செய்தனர் .சிலர் அது இந்திய பெண்மணி செய்த சாதனை என புரளியை கிளப்பினார் இது அப்பட்டமான பொய் ..     
உண்மையில் நடந்தது என்னவென்றால்,கடந்த 11/11/11 அன்று சூரத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளின் புகைப்படம் இது.அன்று சரியாக 11 குழந்தைகளை பிறந்தன,அதை கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. 
அடுத்து வருவது ,மிகவும் அதிர்ச்சிக்குள்ளானது,இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்றால் சிறு குழந்தை கூட ஹாக்கி என கூறும், உண்மையில் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதுவும் இல்லை. ஆனால் கிரிக்கெட் மீது மக்கள் அதிக மோகம்,கொண்டுள்ளனர்.ஒலிம்பிக் பேட்டியில் ஹாக்கியில் 8 முறை தங்கப்பதக்கம் வென்றது  இந்திய ஹாக்கி அணி.இது எப்படி வெளியுலகிற்கு தெரிந்தது என்றால்,நம் நாட்டின் தேசிய சின்னங்களை குறித்து புத்தகத்தில் படித்தார் லக்னேவை சேர்ந்த 10 வயது சிறுமி அய்ஸ் வர்யா பராஷர். இதில் சந்தேகமடைந்த அவர், இது குறித்து அவரது ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். இறுதியில் தேசிய விலங்கு, தேசிய பறவை, தேசிய பூ, தேசிய விளையாட்டு உட்பட தேசிய சின்னங்கள் அறிவிக்கப் பட்டதற்கான உத்தரவின் சான்றிதழ் நகலை தருமாறு, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார்.இந்த விண்ணப்பம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச் சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது,ஹாக்கி நமது தேசிய விளையாட்டு அல்ல? மேலும் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற தகுதி எந்த ஒரு விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை,ஹாக்கி உட்பட எந்த விளையாட்டையும், தேசிய விளையாட்டாக மத்திய அரசு அறிவிக்க வில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது..
12 மீற்றர் நீளமான மிகப்பெரிய மனித எலும்புக்கூடொன்று மேற்கு இந்தியாவின் பாலைவனைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்துக்கு சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது இந்திய புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் காடுகளில் வாழ்ந்த Rakshasas என்ற அரக்கனுடைய எலும்புக்கூடாக இருக்கலாமென நம்பப்படுகிறது என்று இணையத்தையே கலக்கியது இந்த போட்டோ,இந்தியா மற்றும் வங்காள தேசத்திலும் கூட இந்த புகைப்படம் அதிகமாக பரவியது.
ஆனால்,உண்மையில் worth1000.com என்ற இணையத்தில் புகைப்பட எடிட்டிங் போட்டியில் பங்கெடுத்த புகைப்படம்.இதை வைத்துக்கொண்டு நம் மூளையை எடிட் செய்துவிட்டார்கள்கள் .இந்த பொய்யர்கள். 
அடுத்த புரளி, ஹனுமானின் கதாயுதம் ,ஸ்ரீலங்காவில் பூமிக்கு அடியில் தோண்டியபோது,கிடைத்துவிட்டது.இராமாயண போரில் ஹனுமான் உபயோகபடுத்தியது என்றெல்லாம் இன்டர்நெட்டில் பரப்பப்பட்டது.உண்மையில் இது அப்பட்டமான பொய். நிஜத்தில் இது கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 நியதி, ஹனுமான் ஜெயந்தி அன்று,இந்தூர் பகுதியில் உள்ள நந்தா நகரில் 125 உயர ஹனுமானின் சிலைக்கு 45 அடி நீளத்திற்கு 21 டன் எடையில் செய்யப்பட்ட கதாயுதத்தை நிறுவும் பொது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 

சுவிஸ் பேன்க் வெளியிட்ட கருப்பு பண பட்டியல்,இதைவைத்து பெரிய விவாதமே,பேஸ்புக்கிலும்,ட்விட்டரிலும்,விவாத மேடைகள் ஓடின.இது பொய் என தெரிந்து கொள்ளாமலே,காரசாரமாக,கத்தியெடுத்தா நாங்க இரத்தம் பார்க்காம வைக்க மாட்டோம்டான்னு பேசினாங்க.பாவம் அவங்களுக்கு என்ன தெரியபோகிறது,இது ஒரு ஏமாற்று செய்தி என்று ,உண்மையில்.சுவிஸ் கோட் 0041, இந்த புகைப்படத்தில் 0044 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேனேஜர் கையொப்பம் வலதுப்பக்கம் உள்ளது. ஐரோப்பிய வழக்கத்தின் படி அவர்கள் இடதுபக்கம் தான் கையொப்பம் இடுவார்கள்.பொய்களை பரப்புபவர்கள் இதைக்கூட பார்க்காமல் விட்டுவிட்டார்கள்.ஆனால் ,நம்ம கழுகு கண்ணுக்கு அது தப்புமா...நாம யாரு,பிரபல பதிவராச்சே?!ஓகே  ரொம்ப புகழாதீங்கப்பா .சுய விளம்பரம் எனக்கு பிடிக்காது.           
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு,என்று சொல்லப்பட்டாலும்,உண்மையில் 
நாடு சுதந்திரம் பெற்றபோது,இந்தியா இந்து நாடாகதான் இருந்தது. பின்பு, 1976-ம் ஆண்டு தான் இந்திய சட்டப்புத்தகத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மதசார்பற்ற நாடு என்ற சொல் சேர்க்கப்பட்டு,அறிமுக உரையில் சேர்க்கப்பட்டது.அதுபோல்இந்தியாவின் ஆட்சி மொழி,ஹிந்தி இல்லை.பெரும்பான்மையான மக்கள் பேசும்,மொழி ,ஹிந்தியே தவிர இந்தியாவின்,ஆட்சிமொழி,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற 20க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சி மொழிகளில் இந்தியும் ஒன்று என்பது தான் உண்மை.இனியும் நிறைய உண்மை போல் உலாவந்த பொய்களை பார்த்தோமானால் ,இந்த பதிவும் ,தாங்காது ,பக்கமும் போதாது.ஆகவே பதிவின் நீளம் கருதி என்னுடைய சிற்றுரையை இத்துடன் முடித்துக்கொண்டு,அடுத்து வேறு ஒரு செய்தியுடன்,நம்முடைய தெரிந்த கதை தெரியாத உண்மையில் சந்திக்கலாம் நன்றி.    

23 comments:

  1. வாட்சப் வதந்திகளை பட்டியலிட்டு உண்மையை விளக்கிய பதிவு. அருமை. நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. உண்மையை போல் வலம்வந்த , நிறைய பொய்களின் பட்டியல் இங்கே சொல்ல ஆரம்பித்தால்,நமது பதிவின் நீளம் ,அனுமார் வால்போல நீண்டுகொண்டே செல்லும் ,அதனை கருத்தில் கொண்டு ,சுருக்கமாக ,பதிவு செய்துள்ளேன் .நன்றி சகோ ..

      Delete
  2. Amused,while reading about Football and Hockey since I was also having the same belief about them and laughed continuously.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comment and visiting my page, I also thinking the same ,when I come to know and learn this thinks, simply i shared to my brothers, sisters all of my web friends that’s all. Thank you bro …

      Delete
  3. அப்பப்பா. பட்டியலிட்ட விதம், அல்சிய விதம் அனைத்துமே ஆசசர்யத்தை உண்டாக்கிவிட்டன. பாராட்டுகள்.இனி எச்சரிக்கையுடன் இருபபோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.,சகோ,நாம் எல்லோரும், இப்படித்தான் நினைத்து இருப்போம். நாம் படித்தது தெரிந்து கொண்டது எல்லாம் தவறு என்று ,தெரிந்து கொண்டவுடன் ,என்னுடைய இணையதள சகோதர ,சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளவிரும்பினேன் ,அவ்வுளவுதான் .நன்றி ...

      Delete
  4. அருமையான தகவல்
    பயனுள்ள பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..உங்கள் வருகைக்கும் ..கருத்துக்களுக்கும்…

      Delete
  5. அருமையான பதிவு நண்பரே, பொய்யர்களின் மொட்டை தலையில் நறுக்கென்று கொட்டு வைத்தார் போல் இருந்தது.
    ஒரு சந்தேகம்: தேசிய கீதம் இங்கிலாந்து ராணியை புகழ்ந்து பாடப்பட்டதாக ஒரு கருத்து உள்ளதே அதை பற்றி தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது முற்றிலும் ,தவறு ,சில பொய்யர்கள் ,எதையெல்லாம் விமர்சிக்க கூடாதோ ,இல்லை விமர்சனத்திற்கு ,அப்பாற்பட்டதோ ,அவற்றையெல்லாம் தங்கள் தவறான புரிந்தால் மூலம் அடுத்தவர்களிடமும் ,அடுத்த தலைமுறையினரிடமும் ,நஞ்சை விதைத்தது விடுவார்கள் ,அதனால்தான் ,இந்த பதிவின் முதல் பத்தியிலேயே குறிப்பிட்டுள்ளேன்
      "இப்பொழுது இருக்கிற எழுத்து போராளிகள். தங்களை எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்பவர்களுக்கு, ஒரு உண்மையை சொல்லிக்கொள்கிறேன்.எது எழுதினாலும் .ஒன்றுக்கு 10 முறை யோசித்து எழுதுங்கள். ஏனெனில் உங்கள் கற்பனையும் ,காப்பி அடித்து எழுதும் பொய்த்திறனும்,சிலவருடங்கள் கழித்து ,உண்மைபோல் வலம் வரும்,ஒரு சமுதாயத்தில் விஷத்தை பரப்பிய பாவமும் அவர்களையே சாரும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்."

      என்று குறிப்பிட்டுள்ளேன் .

      Delete
    2. இனி பதிவில் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை பார்க்கலாம் .

      வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...

      ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
      பாரத பாக்ய விதாதா.
      பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
      திராவிட உத்கல வங்கா.
      விந்திய இமாச்சல யமுனா கங்கா
      உச்சல ஜலதி தரங்கா.
      தவ ஷுப நாமே ஜாகே,
      தவ ஷுப ஆஷிஷ மாகே,
      காஹே தவ ஜெய காதா.
      ஜன கண மங்கள தாயக ஜெயஹே
      பாரத பாக்ய விதாதா.
      ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
      ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

      இதன் நேரடி தமிழாக்கம்...

      மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

      இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..

      பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
      திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..

      விந்திய இமாசல யமுனா கங்கா
      மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..

      உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,

      உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,

      உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..

      இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
      இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..

      வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!

      வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

      இதில் இங்கிலாந்து ராணி எங்கேயாவது வந்தாரா ..என் கண்களுக்கு தெரியவில்லை .உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் சகோ ...உங்கள் கருத்துக்கும்..வருகைக்கும் நன்றி ..

      Delete
  6. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான உண்மைத் தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..உங்கள் பாராட்டுக்கள் ,என்னை மேலும் ,மேலும் எழுத தூண்டும் ...நன்றி ..

      Delete
  7. காந்திஜி, நேருஜி அவர்களை விமர்சனம் செய்பவர்கள் இந்த செய்தியையும் சொல்லி சென்றார்கள். அதனால்தான் தெளிவுப்டுத்திக் கொள்ள இங்கு கேட்டேன். தங்களின் விளக்கதிற்க்கு நன்றிகள் ராஜி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிவு ..பதிவு செய்யும்போது ..அதை தெளிவு படுத்த வேண்டியதும் ..எனது கடமை ..நன்றி சகோ ...

      Delete
  8. மிகவும் ரசித்து படித்த பதிவு...! எளிமையான வார்த்தைகளால் சொல்ல வந்ததை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி...!
    முழு கட்டுரையும் மொத்தமாக தருவதை தவிர்த்து இடையில் SPACE கொடுத்து சின்ன சின்ன பத்திகளாக வெளியிட்டால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்...! நன்றி...!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கூடுதலாகத்தான் ,பத்திகள் சேர்த்துள்ளேன் ,இதில் இன்னமும் ,சுபாஷ் சந்திரபோஸ் ,உலகின் பழமையான நகரம் மற்றும் விண்வெளி பறக்கும் தட்டுகள் ,பேய்களின் படங்கள் போன்றவற்றை பற்றி குறிப்பிடவில்லை .பதிவின் நீளம் கருதி சுருக்கி பதிவிட்டுள்ளேன் ...நீங்கள் கூறியது போலவே அடுத்தப்பதிவில் கவனம் செலுத்துகிறேன் .உங்கள் கருத்துக்கும் ,வருகைக்கும் நன்றி சகோ ...

      Delete
  9. நல்லதொரு பகிர்வு.....

    எத்தனை எத்தனை பொய்கள்....

    ReplyDelete
    Replies
    1. எத்தனை ..எத்தனை பொய்களோ... அத்தனை,அத்தனை விளக்கங்கள் ...அண்ணா ..

      Delete
  10. நிறைய விஷயங்களைப் பட்டியியலிட்டிருக்கிறீர்கள் அக்கா...
    பல விஷயங்கள் பொய் என்றாலும் சில விஷயங்கள் உண்மைதான்... ஆனால் பொய்களையே அதிகம் பகிர்வதுதான் ஏனென்று தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. அந்த சில உண்மையான விஷயங்கள் ,எவை ..எவை ..என கூறினால் ,அதையும் மறைக்கப்பட்ட உண்மைகள் என்று, பட்டியல் இட்டு அவைகளையும் ,இங்கு பதிவு செய்யலாம் ..உங்கள் ஆலோசனைக்கு ,மிக்க நன்றி தம்பி ...

      Delete
  11. watts up damages during chennai floodds too much
    a nice article

    ReplyDelete
    Replies
    1. thanks ..brother ..thanks for your comments

      Delete