Tuesday, June 06, 2017

கசப்பான சுண்டைக்காயில் இனிப்பான நன்மைகள் - கிச்சன் கார்னர்

சுண்டைக்காய்ன்னும் பேயத்தின்னும் சொல்லப்படும் இந்த காய் மூலிகை வகையை சார்ந்தது. ஆறடிக்கு மேலாய் சமயத்துல வளரும் இந்த செடி கொடி வகையை சார்ந்தது. முட்களும் கொண்ட இது கத்தரி இனமாகும். இந்த சுண்டைக்காய் நாட்டு சுண்டைக்காய், காட்டு சுண்டைக்காய்ன்னு ரெண்டு விதமா கிடைக்குது. காட்டு சுண்டைக்காய் கசப்பு தன்மை கொண்டது. நாட்டு சுண்டைக்காய் கசப்பில்லாதது. அதனால இதை பால் சுண்டைக்காய்ன்னும் சொல்வாங்க. இந்த வகை செடிதான் நம்ம வீட்டுல வளர்வது.  இதன் இலைகள் முதற்கொண்டு காய்கள், பூக்கள்ன்னு எல்லாமே மூலிகையாய் பயன்படுது.  

சுண்டைக்காயில் உள்ள சத்துகள்..

இதுல ஆண்ட்டி ஆக்சிடண்ட்ஸ், வைட்டமின் ஏ, சி,ஈ இருக்கு.  ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கு இன்ஃபளமேட்டரி குணம் இதில் இருக்கு. வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும். இரும்பு சத்து அதிகமா இருக்கு.  தையாமின், ரிபோஃப்ளேவின் இருக்குறதால வாய்ப்புண், சொத்தைப்பல் ஏற்படுவதை தடுக்குது. நரம்பு மண்டலத்துக்கு சக்தியை கொடுக்குது. டார்வோனின் ஏ, டார்வோனின் பி,பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன. சுண்டைக்காயில் புரதம், கால்சியம்,இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன.
சுண்டைக்காயின் மருத்துவ பலன்..
 காட்டு சுண்டைக்காயை மோரில் உப்பு போட்டு ஊற வைத்து வெயிலில் காய வைத்து வறுத்து தினமும் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் சாகும். வாய்த்தொந்தரவும் இருக்காது. வயிற்றுக்கிருமி, மூலக்கிருமி சாகும். வயிற்றின் உட்புற சுவர்கள் பலம்பெறும்.   வாரம் இருமுறை உணவில் சுண்டைக்காயை சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுத்தமாகும். உடல் சோர்வு போகும். சுவாசம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் வாரம் மூணு நாள் சுண்டைக்காயை பச்சையாகவும், பருப்புடனும் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். 

சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடி செய்து தினமும் இரண்டு வேளை அரை டீஸ்பூன் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும். சுண்டைக்காய் வத்தல் பொடியை நுகர்ந்தால் தலைவலி சரியாகும். 5 அல்லது 6 சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் வயிற்று வலி சரியாகும்.  பச்சை சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால் சளிக்கட்டு குறையும். எலும்புகள் உறுதியடையும், குரல்வளமும் குணமாகும்.
இனி சுண்டைக்காய் சாம்பார் செய்முறை...
தேவையான பொருட்கள்...
பச்சை சுண்டைக்காய்..
பாசிப்பருப்பு,
வெங்காயம், 
தக்காளி,
சாம்பார் பொடி,
உப்பு, 
பச்சை மிளகாய்,
காய்ந்த மிளகாய்
பூண்டு,
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை கொத்தமல்லி,
பெருங்காயம்..

பாசிப்பருப்பை கழுவி வேக வச்சுக்கோங்க...

பருப்பு கொஞ்சம் வெந்ததும் காம்பு நீக்கி கழுவிய சுண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளாகாய், பூண்டு போட்டுக்கோங்க.
மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க...
சாம்பார் பொடி சேர்த்துக்கோங்க...
பெருங்காயம் சேர்த்துக்கோங்க...
உப்பு சேர்த்து வேக விடுங்க....
காய்கள், பருப்புலாம் நல்லா வெந்ததும் கல்சட்டில போட்டு நல்லா மசிச்சுக்கோங்க. கல்சட்டி இல்லாதவங்க மிக்சில வைப்பர்ல போட்டு எடுத்துக்கோங்க. மிக்சில அரைக்குறவங்க ரொம்ப நைசா அரைச்சுக்கப்போறீங்க. கவனம். 
இன்னொரு பாத்திரத்தில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும், கடுகு போட்டு வெடிக்க விடுங்க. சாம்பார்ல காரம் பத்தலைன்னா காய்ந்த மிளகாய் போட்டு தாளிச்சுக்கோங்க... 
கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளிச்சு கடைஞ்சு வெச்ச சாம்பாரை ஊத்தி லேசா சூடு பண்ணிக்கோங்க. கொதிக்கனும்ன்னு அவசியமில்ல.  சுவையான சுண்டைக்காய் சாம்பார் ரெடி..
இந்த சாம்பாரை பொங்கல், இட்லி, தோசைக்கு தொட்டுக்கலாம். செமையா இருக்கும்..
நன்றியுடன்,
 ராஜி.

27 comments:

 1. கசக்காமல் இருந்தால் சரி... அதனால் தக்காளி அதிகமோ...?

  சுண்டைக்காய் சாம்பார் செய்முறைக்கு நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிலை உள்ளிடுக...பச்சை சுண்டைக்காய் கசபபடக்காதுண்ணே. இது தக்காளி சீசன் ஆச்சே. அதான் தக்காளி நிறைய போட்டிருக்கேன்

   Delete
 2. சுண்டைங்காயில் இவ்வளவு மகத்துவமா ?
  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிலை உள்ளிடுக...இன்னமும் இருக்குண்ணே. இளம் தாய்மார்களுக்கு பால் சுரக்க செய்யும். காய்ச்சலினால் உணர்விளந்த நாக்குக்கு ருசி கொடுக்கும்....

   Delete
 3. நோய்க் கிருமிகளைச் சுண்டச் செய்து அழிக்கும் காய் சுண்டைக்காய்!

  இந்த மூலிகைக்காய் குறித்த பதிவு, அதன் பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிலை உள்ளிடுக...சுண்டைக்காயின் விளக்கம் அருமைப்பா. நன்றிப்பா

   Delete
 4. சுண்டைக்காயில் வத்தல் குழம்பு செய்வோம் ஆனால் இப்பதான் சாம்பார் செய்யும் முறையை பார்க்கிறேன் TM 5

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிலை உள்ளிடுக...நமக்கள தெரிஞ்சதுலாம் காரக்குழம்பும் வத்தலும் மட்டுமே. சுண்டைக்காயில் விதம் விதமா சமைக்கலாம் சகோ.

   Delete
 5. wow wow wow
  இனி சுண்டைக்காயை தேடித்தேடி வாங்கவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது சகோ. தேடிப்பிடிச்சு வாங்கி சாப்பிடுங்க

   Delete
 6. Sathathodu saapitu irukan. pidithathu.

  ReplyDelete
  Replies
  1. சாதத்தோடு சாப்பிடனும்ன்னா கொஞ்சம் புளி கரைச்சல் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும் சகோ

   Delete
 7. உடம்புக்கு நல்லதான பதிவுகள்

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் இப்பலாம் அதிகமா கிடைக்கமாட்டேங்குது. கிடைச்சாலும் செய்ய சோம்பேறித்தனம்.

   Delete
 8. இந்த சுண்டைக்காய் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது. சுண்டைக்காய் சாம்பார் சூப்பராகத்தான் இருக்கும். சுண்டைக்காய்களை எண்ணெயில் வதக்கி, சுடச்சுட எடுத்து, மோர்/தயிர் சாதங்களுக்கு தொட்டுக்கொண்டால் தேவாமிர்தமாக இருக்கும்.

  சுண்டைக்காய்களை வதக்கிடும்போது அதனை ஓர் வடிகூடையைப்போட்டு மூடி வைத்து வதக்க வேண்டும். இல்லாவிட்டால் டப்-டுப் என்று ஊசிப் பட்டாஸ் வெடிப்பதுபோல வெடித்துச் சிதறிவிடும்.


  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ப்பா. வத்தக்குழம்பு செய்யும்போது கொஞ்சம் கவனமாதான் இருக்கனும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 9. எனக்கு ரொம்பபிடிக்கும் சுண்டங்காய், இது கசக்காதே, ஆனா வாயில் சப்புப்படும்.. சொஃப்ட்டாக இருக்காது. என்னிடம் இப்பவும் நிறைய வத்தல் இருக்கு. பொரித்துச் சாப்பிட சூப்பர் ரெஸ்ட்.

  நல்ல ரெசிப்பி.

  ReplyDelete
  Replies
  1. அப்படியே சாப்பிட நல்லா இருக்காது. ஆனா, பொரியல், சாம்பார், காரக்குழம்புன்னு செஞ்சு சாப்பிட்டா ருசி அள்ளும்..

   Delete
 10. வணக்கம்

  செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் வீட்டிலும் செய்து பார்க்கிறோம் த.ம8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
 11. சுண்டைக்காயில் பயன்கள் அறிந்தவை. சுவையான பதிவு. ஆமாம், மதுரைச் சுண்டைக்காய் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? ஊறுகாய் மட்டுமே போடமுடிந்த கசப்...புக்காய்.

  தம 9

  ReplyDelete
  Replies
  1. மதுரை சுண்டைக்காய்?! கேள்விப்பட்டதில்லை சகோ. புதுசா இருக்கே. கூகுளார்க்கிட்ட கேட்டு பார்க்குறேன்.

   Delete
 12. கசக்காத சுண்டக்காயும் உண்டே

  ReplyDelete
  Replies
  1. அதான்பா இந்த பால் சுண்டைக்காய்

   Delete
 13. சுண்டைக்காய் விசயம் என்று ஒதுக்க முடியாது.அருமை
  சுண்டை வற்றலை வறுத்து சாதத்தில் கலந்து சாப்பிட எனக்கு மிக்ப் பிடிக்கும்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்தான்பா. மொறு மொறுன்னு சாப்பிட நல்லா இருக்கும்...

   Delete