திங்கள், மே 01, 2017

முதலாளித்துவத்துக்கு சாவு மணி அடித்த மே தினம் - ஐஞ்சுவை அவியல்


இந்தா புள்ள! பேங்குக்கு போகனும். பீரோவிலிருந்து பேங்க் பாஸ் புக் எடுத்து வாயேன்.

மாமா! இன்னிக்கு மே 1. உழைப்பாளர் தினம். அதனால பேங்க் முதற்கொண்டு எல்லா ஆஃபீசும் லீவ்ன்னு மறந்துட்டீகளா?!  

அட ஆமாம்ல்ல. அதான் சனி,ஞாயிறு, பொங்கல், தீபாவளின்னு லீவ் விடுறாங்களே அப்புறம் எதுக்கு மே தினம்ன்னு ஒரு லீவு.. ச்சை.
முன்னலாம் ஜனங்க ஒரு நாளைக்கு  பத்து முதல்  பதினாலு மணிநேரத்திற்கு மேல வேலை செஞ்சாங்க. அவங்களாம் போராடி வேலை நேரத்தை எட்டு மணிநேரமா மாத்த சொல்லி வேலை நிறுத்தம் செஞ்சு வெற்றியடைஞ்சதை குறிப்பிடும் தினம்தான் இந்த மேதினம்.  1837ல அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வான்ப்யூரன் 14 மணி நேரமாய் இருந்த அரசாங்க வேலையை 10மணி நேரமாய் குறைடக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். 10 மணிநேரமும் அதிகம் 8 மணி நேரம்தான் வேலைநேரமாய் நிர்ணயிக்க வேண்டுமென தொழிலாளர்கள் போராட தொடங்கினர். இந்த ஆர்பாட்டத்தை அடக்க முதலாளிகள் எவ்வளவோ முயன்று நடத்திய துப்பாக்கி சூட்டுல ஆறு பேர் செத்து, நிறைய பேர் காயமடைஞ்சாங்க. 
Reich President Paul von Hindenburg Delivers His Very First May Day Address, Berlin (May 1, 1933):
இந்த நிகழ்வை கண்டிக்க ‘ஹேய் மார்க்கட்’ என்ற இடத்தில் 30,000 தொழிலாளர்கள் கூடினர். இவங்க மேலயும் அடக்குமுறையை காட்டினாங்க.  இப்போராட்டத்தில் கலந்துக்கிட்ட பலபேர் தலையை வெட்டினாங்க. அதன்பிறகு 1888ல் அமெரிக்காவில் கூடிய மாநாடு 8 மணிநேர வேலைத்திட்டத்தை  வற்புறுத்தியது. இப்போராட்டங்கள் அனைத்தும் மே மாதத்தில் நடந்ததால ‘மே தினப் போராட்டம்’ ன்னு பேர் வந்துச்சு.  இன்னும் எவ்வளவோ போராடி  இப்போராட்டம் வெற்றியடஞ்சுது.  1904ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த  தொழிலாளர் மாநாட்டில் ஒவ்வொரு மே 1 தேதியன்று உழைப்பாளர் தினமாய் கொண்டாடனும்ன்னு முடிவாச்சு.  இன்று கம்யூனிசத்தை மிகத்தீவிரமாய எதிர்க்கும் அமெர்க்காவில்தான் உழைப்பாளர்தான் ஆரம்பிக்கப்பட்டதுன்னு சொன்னா நம்புவீங்களா?! அந்த  அமெரிக்காவில்தான் உழைப்பாளர் தினத்தை இன்று கொண்டாடுறதில்லை மாமா.

ESKİDEN ESKİLER - Koleksiyonlar - Google+:
இந்தியாவுல நம்ம சென்னை மெரினா பீச்லதான் 1923ம் ஆண்டு தொழிலாளர் தலைவர் சிங்கார வேலர் தலைமையில் முதன்முதலா மேதினம் கொண்டாடப்பட்டது. அதோட நினைவாதான் பீச்ல உழைப்பாளர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை தேவி பிரசாத் ராய் சௌத்ரிங்குற சிற்பிதான் செஞ்சார்.

இதுலாம் வெறும் ஏட்டளவிலும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யுறவங்களுக்கு மட்டும்தான். அடிமட்ட உழைப்பாளிகள் இன்னிக்கும் பத்து மணிநேரத்துக்கும் மேலா உழைச்சுக்கிட்டுதான். இருபது மணிநேரம் உழைக்கும் கொத்தடிமைகளும் உண்டு. 

பார்ரா. இத்தனை விசயம் தெரிஞ்சு வச்சிருக்கியே. சாதம் குழைஞ்சிட்டா என்ன செய்யனும்ன்னு தெரியுமா?!

கண்ணை மூடிக்கிட்டு சாப்பிடனும். மீந்து போச்சுன்னா கழனிப்பானைல கொட்டனும் இல்லன்னா சீரகம் உப்பு போட்டு பிசஞ்சு வத்தல் விடனும்.

சுட சுட ரசம் ஊத்தி பிசைஞ்சு சாப்பிடலாம். உப்பு சேர்த்து பிசைஞ்சு வடைப்போல தட்டி மிளகு, மிளகாய்தூள் மசாலா பொடி தூவி  அரிசி வடை செய்யலாம்.  தயிர்சாதம் செய்யலாம். பிசிபேளா பாத், சாம்பார் சாதம் செய்யலாம். ரைஸ் பக்கோடா செய்யலாம். இட்லிக்கு மாவரைக்கும்போது போட்டுக்கலாம், ஆப்பத்துக்கு மாவரைக்கும்போதும் சேர்த்துக்கலாம்.

ரொம்ப புத்திசாலிதான். நான் கேக்குற  பதில் சொல்லுங்க பார்க்கலாம்..   இதை கண்டுப்பிடித்தவனும் பயன்படுத்தல. காட்டில் பச்சை, கடையில் கறுப்பு, வீட்டில் சிவப்பு. அது என்ன?!

இரு யோசிக்குறேன். அதுக்குள்ள இந்த ஜோக்கை பாரு. 
நம்ம பசங்க எல்.கே.ஜி அட்மிசனுக்கு இப்படி மெனக்கெட்டிருந்தா உனக்கு அறிவாவாது வளர்ந்திருக்கும்.   பகையாளி குடும்பத்தை உறவாடி கெடுன்ற  பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா மாமா?!

பகையாளி வீட்டுல போய் உறவாடி அவனை கெடுக்கனும்ன்னு அர்த்தமில்ல. பகையாளி வீட்டுல உறவாடி அவன் மனசுல இருக்கும் பகை உணர்ச்சியை போக்கி அவனையும் நல்லவனா மாத்தனும். இதான் அர்த்தம். நான் சொன்னது சரியா?!

சரிதான் நான் கேட்ட விடுகதைக்கு அர்த்தம் சொல்லவே இல்லியே.. இரு யோசிக்குறேன். அதுக்குள்ள உன் சகோதரர்கள் யாராவது சொல்றாங்களான்னு பார்க்கலாம்.

நாளைக்கு நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறையை கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்..
நன்றியுடன்,
ராஜி

28 கருத்துகள்:

 1. உழைப்பாளார் தினத்தை முதலாளிகள் விடுமுறை எடுத்து கொண்டாட உழைப்பாளிகளோ அந்த தினமும் உழைத்து கொண்டிருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலாளிகள் என்னிக்கும் கொண்டாட்டத்துலதான் இருக்காக

   நீக்கு

 2. வாழ்க்கையே ஒரு விடுகதையாக இருக்கு இதில் மாமா வேற விடுகதை சொன்ன எப்படி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதில் தெரிலன்னாலும் பேச்சை பாரு லொள்ளைப்பார் எகத்தாளத்தை பாரு.

   நீக்கு
 3. சாதம் குழைந்தால் அதில் சிறிது உப்பும் மிளாகய் தூளும் சேர்த்து சிறிய சிரிய உருண்டைகளாக் செய்து வெயிலில் காயவைத்து அதை எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் அதுதான் சோற்றுவடகம் அருமையாக இருக்கும் உங்கள் வீட்டில் சாதம் மிஞ்சினால் நான் சொன்ன மாதிரி செய்து இங்கே அனுப்பவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உப்பு, மிளகாய் தூள், அரிசி, கொரியர் கட்டணத்துக்குண்டான பணத்தை அனுப்பவும்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே. விடுகதைக்கு பதில் எங்கேண்ணே

   நீக்கு
 5. விடுகதை விடை எனக்கு தெரியும் சொல்லவா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புறம்... சொல்லிடுவேன்...

   நீக்கு
  2. சொல்லுங்கண்ணே சொல்லுங்க

   நீக்கு
 6. அருமையான டகவல் களஞ்சியம்........../// 1904ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் ஒவ்வொரு மே 1 தேதியன்று உழைப்பாளர் தினமாய் கொண்டாடனும்ன்னு முடிவாச்சு.////அந்த நாட்லயே (ஹொல்லாந்து)இன்னிக்கு லீவ் கெடையாது தெரியுமா?::::::::::::::சாதத்த எதுக்கு கொழைய வுடணும்.பேச்சு புக்கு பாக்கிறதால தானே சாதத்த கொழைய வுடுறீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேஸ்புக்ல இருந்தாலும் சாதத்தை குழைய விட்டதில்ல. குழைய விட்டவங்களாம் பேஸ்புக்குலயும் இல்ல.

   நீக்கு
 7. எப்பவும் டிவி ஒரு பக்கம் ஒரு கண் ,fb&வலைப்பக்கம் ஒரு கண்னு நான் சொன்னது சரிதானே ?இப்போ யோகாவுக்கு பதிலைச் சொல்லுங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகா சாருக்கு எஃப்.பிலயே பதில் சொல்லிட்டேண்ணே. சாதம் குழைய விட்டவங்கலாம் எஃப்.பில இருக்காகளா?!

   நீக்கு
 8. மே தினத்தைப்பற்றிய எளிமையான பதிவு/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரத்துல டைப்புனது. இனியொருமுறை விரிவா பதிவுடுறேன் சகோ

   நீக்கு
 9. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 10. மே தினம் உருவான கதை, சமையல் குறிப்பு, விடுகதை, ஜோக், பழமொழி என்றிவற்றால் ஆக்கிய ஐஞ்சுவை அவியலை நகைச்சுவை நெய் கலந்து பரிமாறியிருக்கிறீர்கள். சுவையோ சுவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. விடுகதைக்கு விடை:

   மரம்! [காட்டில் முளைவிட்டு வளரும்போது பச்சை. முற்றிய மரத்தை எரித்துக் கரித்துண்டுகளாக்கிக் கடையில் விற்கும்போது கறுப்பு. வீட்டில் அடுப்பிலிட்டு[பாய்லர்] எரிக்கும்போது சிவப்பு.

   விடை சரியோ தவறோ மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்.

   நீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா. விடுகதைக்கு விடை சரிப்பா

   நீக்கு
 11. சுவையான குறிப்புகள். விடுகதைக்கு விடை நண்பர் பசி பரமசிவம் எழுதியிருப்பதை "காபி" பேஸ்ட் செய்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடை கரெக்ட்தான் சகோ

   நீக்கு
  2. நன்றி ராஜி. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும் என் நன்றி.

   நீக்கு
 12. மே தினம் பற்றிய தகவல்கள் அருமை. இப்ப ஐடி மக்கள் எல்லாம் பல சமயங்கள்ல்ல ஆஃபீஸே கதின்னு கெடக்காங்களே அவங்க ஏன் கொடி பிடிக்க மாட்டேன்றாய்ங்க..ஏசி ரூம்....பணம்??!!! அப்படி இருக்குமோ...

  விடுகதைக்கு விடை சொல்ல வந்தா அதுக்குள்ள "பசி"பரமசிவம் அவர்கள் சொல்லி ஸ்ரீராம் காப்பி பேஸ்ட் செஞ்சு....அதையே நாங்களும் இங்க....

  பொதுவா பின்னூட்டங்கள் படிக்காம கருத்திட்டு விட்டு அப்புறம்தான் பின்னூட்டம் படிக்கும் பழக்கம். ஆனா விடுகதை போட்டு விடை யாராவது சொல்லி நாங்களும் அதே விடையை சொன்னா காப்பினு பேர் ஆகிடுமோன்னு...பின்னூட்டம் பார்த்துட்டு கமென்டினோம்....ஹிஹிஹி

  பதிலளிநீக்கு