Wednesday, October 18, 2017

தேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுடலாமா?!


என்னதான் சுற்றுச்சூழல் மாசு, வடநாட்டு பண்டிகை, அது இதுன்னு சொன்னாலும் ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம்ன்னு அயல்நாட்டு பண்டிகைகளை  கொண்டாடும்போது வடநாட்டு பண்டிகையை கொண்டாடுவதில் தப்பில்ல. தீபாவளின்னாலே மதம், மொழி, இனம் கடந்து மகிழ்ச்சி கொடுக்கும் பண்டிகை எதுமில்ல. தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர்  இல்ல. தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாம சமண, சீக்கிய மதத்தினரும் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுறாங்க. இப்பலாம் மத்த மதத்துக்காரங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்குறாங்க நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்கிறோம்.  தேசிய ஒருமைப்பாடு எதுல இருக்கோ இல்லியோ கிரிக்கெட், தீபாவளில மட்டும்தான் இருக்குன்னு நான் சொல்வேன்., இனி தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான புராண கதைகளை பார்க்கலாம்...



ஒரு பொருள் இருக்கும்வரை அதன் மதிப்பு தெரியாது. அது இல்லாதபோது தவிப்போம். கதறுவோம்.  அதேமாதிரிதான் வெளிச்சத்தோட அருமை இருட்டில்தான் தெரியும். இருட்டில் தவிக்கும்போது, எங்கிருந்தாவது சிறு வெளிச்சம் வராதான்னு ஏங்கி தவிப்போம். இதுமாதிரியான ஒரு சூழல் தீர்க்கதமஸ்ன்ற முனிவருக்கும் வந்துச்சாம்.   இருள் சூழ்ந்த காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்து வந்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.  அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம்  கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத்தான் இருக்கு. இதுலாம் மேலும் அவனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.



இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடி, அடுத்தவர்களையும் மகிழ வைத்தும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்க, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.






மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்கனும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்யனும்.  எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், பூக்களில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புமருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப்பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். தீபாவளி உருவாக இதும் ஒரு காரணம்.... 


நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவதுபோல் கீழே விழுந்தார். மாயக்கண்ணனுக்கு நடிக்க சொல்லியா தரனும்?! இதை பார்த்த சத்தயபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். 
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம்அம்மாநான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,

இனி மற்ற காரணங்களை பார்க்கலாம்....

இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வரும்போது அந்நாட்டு மக்கள் இராமனை வரவேற்பதற்குதங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்ற நாள்ன்னு சொல்லப்படுது...

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும்அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக்கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்த நாள் தீபாவளியாக  கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் சொல்லுது..

சீக்கியர்களின் தீபாவளி...

1577- இல் இத்தினத்தில் தங்கக்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .

சமணர்களின் தீமாவளி
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.

  
திபாவளி கொண்டாடும் முறை...

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து. இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன்ன்னா நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.

சகோதரிகளுக்கு பரிசு:

தமிழகத்தில்நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும்அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் . அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் . பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் . தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் கங்கா ஸ்நானம் என்று சொல்வதற்கு காரணம்  அன்றைய தினம்அதிகாலையில் எல்லா இடங்களிலும்தண்ணீரில் கங்கையும் எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும் சந்தனத்தில் பூமாதேவியும் புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக ஐதீகம்.

அந்த நீராடலைத்தான் ” கங்கா ஸ்நானம் ஆச்சா ” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம் எல்லா  நீர்நிலைகளிலும் கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி  பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகை. காமத்துக்கு சாத்திரம் எழுதிய  வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் 'யட்ஷ ராத்திரி' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை 'சுகராத்திரி' என்றும் சொல்வதுண்டு. விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.



பட்டாசு வெடிக்குறவங்க கவனமா வெடிங்க. கொண்டாடி மகிழத்தான் பண்டிகை.. அதனால, அடுத்த உயிர்களை காயப்படுத்திடாம கொண்டாடுங்க. கழுதை, மாடு, நாய் வால்ல பட்டாசு கட்டுறதுலாம் வேணாம். அக்கம் பக்கம் சிறு குழந்தைங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள்லாம் இருந்தா  பெரிய வெடி வெடிக்குறதா இருந்தா இன்ஃபார்ம் பண்ணுங்க. அதிர்ந்துட போறாங்க... 

பட்டாசாய் கவலைகள் வெடித்து சிதறட்டும், மத்தாப்பாய் வாழ்க்கை ஒளி வீசட்டும், ராக்கெட்டாய் சந்தோஷங்கள் உயரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

17 comments:

  1. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. அடியாத்தீ எம்பூட்டு வெசயம் தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிண்ணே

      Delete
  3. திப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. படங்கள், கதைகள் என்று அசத்தி விட்டீர்கள். நீங்கள் சொல்வது போல தேசிய விழாக்களில் ஒன்றாக தீபாவளியையும் இணைத்து விடலாம். ஏனெனில் இப்போது யாரும் நரகாசுரனை நினைத்து வெடி வைப்பதில்லை. எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நரகாசுரன் யார்ன்னு தெரியாமயே தீபாவளி கழியும் பலருக்கு. வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. படங்களும் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நனறி சகோ

      Delete
  6. எப்பவும் போல் பதிவுக்கான மெனக்கெடல் படங்களிலும் பதிவிலும் தெரிகிறது அக்கா...
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ

      Delete
  7. எல்லாம் கேட்ட கதைகள்தான் தீர்க்க தமஸ் கதை மாத்திரம் கேட்காதது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நானும் தீர்க்க தமஸ் கதையை இப்பதான்பா கேக்குறேன். வாழ்த்துகளுக்கு நன்றிப்பா

      Delete
  8. முதலில் இனித்தது!புராணம்!!!!

    ReplyDelete
    Replies
    1. புராணம் இனிக்கலியோ?!

      Delete
  9. அப்பப்பா..எவ்வளவு தீபாவளி...அதிகமான செய்திகளுடனும், புகைப்படங்களுடனும் மிக அருமை.

    ReplyDelete