Saturday, January 20, 2018

முகநூலில் கிறுக்கியவை...


தோசைலாம் முக்கோணம், அறுகோணம்
வட்டம், செவ்வகமாவும் வரும்ன்னு சொல்லி 
நம்ப வைக்குறதுக்குள்ள
மதியமே வந்திட்டுது :-(

..............................................................

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் ன்னு கேட்டாலே நாலு நாள் யோசிப்பேன்...
இதுல, புல்லாங்குழல்ல எத்தனை ஓட்டை? யாழ் ல எத்தனை நரம்பு இருக்குன்னா நான் என்ன செய்வேன்?
தெரிஞ்சவங்க சொல்லி என்னைய காப்பாத்துங்க சாமி! புண்ணியமா போகும்.


உன்னிடமிருந்து
உன்னால்
நீ சொல்லக்கேட்டுக்கேட்டு
என்னிடம் தொற்றிக்கொண்ட -
உன் வட்டார மொழிவழக்கில் இருக்கிறது,
நாம் நெருங்கியிருந்த தூரமும்
விரும்பியிருந்த காலமும்!!!!
...................................................

மானம் காக்கும் புடவையாய்...
குளிருக்கு போர்வையாய்....
மகளுக்கு தாவணியாய்...
அரிசி உலர்த்தும் துணியாய்...
தரை விரிப்பாய்...

கைப்பிடி துணியாய்...

விளக்கு திரியாய்....
நீ வாங்கி தரும் புடவையினைப்போல, காலாகாலத்துக்கும் என்னோடவே இருக்கனும் மாம்ஸ்..
............................................................
அன்றைய டேட்டா வாலிடி டைம் வரும்முன் யூட்யூப்ல பைசா பிரயோசனமில்லா விடியோ பார்த்து காலி பண்ணுற மாதிரி....
பிரியப்போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா, வாழ்நாள் மொத்தத்துக்கும் சேர்த்து லவ்வி இருப்பேனே!
சூரிய கிரகணத்தில்
குழம்பும் காகமாய்..
உன் நிலை புரியாமல் 
நான்......

........................................................





விடிகின்ற வேளையில் கழுத்து மணி குலுங்க, 
கன்னுக்குட்டி குடிச்ச மிச்ச பசும்பாலில் காஃபி .....

அப்பதான் பறிச்ச கொத்தமல்லி, கறிவேப்பிலை சட்னியோடு ரெண்டு இட்லி...
பதினோறு மணிக்கு வீட்டில் செஞ்ச மோர் இல்லன்னா தோட்டத்தில் பறிச்ச இளநீர்...
நுனி தலைவாழை இலையில் பச்சரி சாதம், கீரை மசியல், பசுநெய்யோடு பருப்பு சாதம், ரசம்...
மாலையில் அரட்டையோடு கேப்பை அடையும் டீயும்..
இரவு ஒரு சப்பாத்தி, தோட்டத்தில் விளைந்த பழங்கள், பசும்பால்....
நிறைய புத்தகங்கள், கார்த்திக் பாட்டு, புத்தகம், கொஞ்சம் தனிமை, நிறைய அரட்டையுடன் கூடவே மாமன்.......
# அக்கா நொக்கான்னு ஒரு பய வீட்டுக்கு வரக்கூடாது..

............................................................

தனிமைக்கு அஞ்சுகிறவனின் பயத்தை ...
புறக்கணிப்பின் கூர்மை தரும் நடுக்கத்தை... 
பற்றியெழ யாருமற்று மூழ்கும் கணத்தின் பதற்றத்தை... 
உங்களால் உணரவே முடியாது!!!

வாழ்வில் ஒருமுறையாவது நீங்கள்
நம்பியது நொறுங்கி கைவிடப்படும் வரை...

.......................................................

அறைந்து சாத்தப்பட்ட கதவுகளுக்கு முன்
மண்டியிட்டுக் காத்திருக்கும்
ஆயுள்தீர்ந்த பிரியங்கள்
சுமக்க முடியாத 
பெருஞ்சுமை.

பறவையிலிருந்து
பிரிந்த பின்பும்
பல மைல்கள்
பறக்கும் இறகினை 
போன்றதொரு வாழ்வு
உன்னை பிரிந்தபின்
நான் வாழ்வது!!
...............................................

அழுதால் கிடைக்குமென்ற
நம்பிக்கை
குழந்தைக்குண்டு...

அதுகூட இவளுக்கில்லை...

...........................................................

கொண்டாடியவை பறிபோனப்பின்
எல்லாவற்றையுமே தள்ளி வைக்கத்தோணும்..

...............................................


அழைப்பு மணியில்
எல்லாம்..
உன்னோசைத் தேடித்தேடி..
உன்னைக்
காணாது 

உயிரலைந்து...

இன்று..
மரத்துப் போன சடலமாய்
உள்ளம்..

இனி..
உன்னழைப்பு வந்தாலும்
எடுக்க நானிருப்பேனோ
இல்லையோ
தெரியாது.... 
உனக்காக 
ஏங்கும் ஆன்மா
உன்னை எதிர்நோக்கி காத்திருக்கும்!

.............................................................

வரம் கிடைக்காதென தெரிந்தும்
தவமிருந்து என்ன பயன்?
.............................................
மறந்தே போனார்கள்
என்று தெளிவுற்றபின்..

விடைப்பெறுதல் என்பது 
அத்தனை கஷ்டமில்லைதானே?!...

அதனால்...
விடைப்பெறுகிறேன்

.................................................................

நன்றியுடன்,
ராஜி.





7 comments:

  1. பெரும்பாலும் அங்கு படித்து விட்டாலும், சில எனக்கு புதிது! ரசித்தேன் அனைத்தையும்.

    ReplyDelete
  2. முகநூலில் வாசித்திருந்தாலும் தொகுப்பாய் வாசிப்பதில் சுவை அதிகம்.
    அருமை அக்கா..

    ReplyDelete
  3. சற்றே மாறுதலான பதிவு.ரசித்தேன்.

    ReplyDelete
  4. இரசிக்க வைத்தது சகோ

    ReplyDelete
  5. ரசித்தோம்!! அட ஹைக்கூ போன்ற கவிதைகளிலும் கலக்குகின்றீர்களே!!!

    ReplyDelete
  6. அருமை...ராஜிக்கா..

    ReplyDelete