ராஜி! வெளில யாரோ சாப்பாடு கேக்குறாங்க. கொஞ்சம் கொடுத்தனுப்பு.
ம்க்கும். இங்கயே கொஞ்சம்தான் இருக்கு. எதுமில்லன்னு சொல்லி அனுப்புங்க.
நாம சமைச்சுக்கலாம். அவங்களுக்கு கொடுத்தனுப்பு.
இதப்பாருங்க. தனக்கு மிஞ்சியதுதான் தானம், தர்மம்லாம்..
அடி லூசே! அது அப்படி இல்ல. தனக்கு மிஞ்சியதுதான் தானம்.. இந்த சொலவடைக்கு அர்த்தம் தான் அனுபவிச்சது போக மிச்சமிருக்குறதுதான் அடுத்தவங்களுக்கு கொடுக்கனும்ன்னு அர்த்தம் சொல்றோம். ஆனா, இந்த சொலவடை தனக்கும் மிஞ்சியதுதான் தானம்ன்றதுதான் அப்படி திரிஞ்சு போய் இருக்கு. அதாவது, தனக்கு இல்லன்னாலும் இல்லாதவங்களுக்கு கொடுக்கனும்ங்குறதுதான் பெரியவங்க சொன்னது. ஒருமுறை ராஜா ஒருத்தர் தன்னோட மந்திரியோடு இரவில் நகர்வலம் போய்க்கிட்டிருந்தாராம். அப்ப எதிரில் ஒரு சாமியார் மேலாடையின்றி அவங்க எதிரில் வந்திட்டு இருந்தாராம். அது குளிர்காலம்ன்றதால தன்மேல போர்த்தியிருந்த விலை உயர்ந்த பட்டு சால்வையை அந்த சாமியாருக்கு கொடுத்தாராம். சாமியார் வேணாம்ன்னு மறுக்க, தன் மரியாதையை ஏத்துக்கும் விதமா வாங்கிக்கங்கன்னு சொல்லி சமாதானப்படுத்தி, கொடுத்துட்டு அரண்மனைக்கு வந்துட்டார். மறுநாள் நகர்வலம் வரும்போது, முதல்நாள் ராஜா கொடுத்த சால்வையை ஒரு பிச்சைக்காரன் போர்த்திக்கிட்டு படுத்திருந்தானாம். இதைப் பார்த்த ராஜா மனசு நொந்துப்போய் அரண்மனைக்கு போய் தூங்கிட்டாராம். கனவுல கடவுள் வந்தாராம். ராஜாக்கிட்ட அவர் நலம், குடும்பம் நலம், நாடு பத்திலாம் விசாரிச்சாராம். பதிலுக்கு என்னை விசாரிச்சியான்னு சாமி கேட்க சாமி நீங்க நல்லா இருக்கீங்களான்னு கேட்க, நலமாய் இருக்கேன் தொல்லை இல்லாம... நீ தந்த சால்வையால்ன்னு சொல்லி மறைந்தாராம். அப்பதான் ராஜாவுக்கு புரிஞ்சதாம். இல்லாதவங்களுக்கு உதவுவது கடவுளுக்கு செய்யும் பூஜைகளுக்கு நிகரானதுன்னு... அதனால்,. யாராவது எதாவது கேட்டா மறுக்காத,. அதுக்காக, ஏமாத்துறவங்களை ஊக்குவிக்காத.. இப்ப போயி அந்த பையனுக்கு சாப்பாடு போட்டு வா.
சாமின்னு சொன்னதுதான் ட்விட்டர்ல படிச்ச பதிவு ரெண்டு நினைவுக்கு வந்தது. அதுல ஒன்னு,
சாமின்னு சொன்னதுதான் ட்விட்டர்ல படிச்ச பதிவு ரெண்டு நினைவுக்கு வந்தது. அதுல ஒன்னு,
குடும்பத்தை காப்பாத்து, எல்லாரையும் நல்லா வச்சிருன்னு வேண்டிக்கிட்டு கோவிலின் பூட்டை ஒருமுறைக்கு இருமுறை இழுத்து பார்த்தார் பூசாரி.. தன்னைத்தானே காப்பாத்திக்காத சாமியா உன்னை காப்பாத்த போகுது?!
இன்னொன்னு, அம்ம்மாம்பெரிய கோவில் கட்டிய ராசராசனையே 45 வயசுக்கு மேல வாழவிடாத சாமி, ரெண்டு கட்டி கற்பூரம் ஏத்துற உனக்கா வரம் கொடுக்க போகுது?! எப்படி இருக்கு நம்ம ஜனங்க சிந்தனை?!
நல்லாதான் இருக்கு மாமா, என் அப்பா அடிக்கடி ஒரு கதை சொல்வார். முஸ்லீம், கிறிஸ்டியன், இந்துன்னு மூணு நண்பர்கள் படகுல போய்க்கிட்டே இருந்தாங்களாம். அப்ப, படகுல ஓட்டை விழுந்து தண்ணி உள்ளாற வர படகு மூழ்க ஆரம்பிச்சுதாம். முஸ்லீம், அல்லா! என்னை காப்பாத்துன்னு வேண்ட, அல்லா வந்து அவனை தன்னோட கூட்டிக்கிட்டு போய்ட்டாராம். க்றிஸ்டியன் , ஏசுவே! காப்பாத்துன்னு கத்த ஏசு வந்து காப்பாத்திட்டு போய்ட்டாராம். இதைலாம் பார்த்த இந்து, முருகா! காப்பாத்துன்னு கத்த, முருகன் மயில்மேல ஏறி உக்காந்து காப்பாத்த வந்தாராம், உடனே இவன் வினாயகா! என்னை காப்பாத்துன்னு சொல்ல, சரி, நம்ப அண்ணன் காப்பாத்தட்டும்ன்னு சொல்லி முருகன் திரும்ப போயிட்டாராம். வினாயகர் புறப்படும்போது ஈசா! என்னை காப்பாத்துன்னு சொல்ல, வினாயகர் திரும்ப போக, ஈசன் வர, இப்படியே இவன் மாத்தி மாத்தி எல்லா சாமியையும் கூப்பிட எல்லா சாமியும் அடுத்தவங்க பார்த்துப்பாங்கன்னு விட அவன் மூழ்கியே செத்து போனான். அதனால, சாமிங்குறது கல்லுலயோ, படத்துலயோ இல்ல, சக மனுசங்ககிட்டதான் இருக்குன்றதை உணரனும். அதான் நல்லது.
சரி, ரொம்பதான் ப்ளேடு போடாதீங்க.. இந்தா இந்த படத்தை பாருங்க. நம்ம கல்வி அமைப்பு பத்தி அருமையான படம்...
மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்கும் தலைமுறை என்ன சாதிக்கும்ன்னு தெரில. நல்லாதான் இருக்கு..
ராஜி செலக்ட் பண்ணா நல்லாதான் இருக்கும். இந்தா இன்னொரு வாட்டி பாருங்க, இந்த பதிவுக்கான தலைப்பின் படமும், அதுக்கு நான் எழுதிய கவிதையும், உங்களோடு நான் குப்பை கொட்டுறதை பத்தியும் இருக்கு. நான் போனப்பொறவு பாருங்க...
நித்தம் ஒரு காயத்தோடு
முரண்பட்டவனின் காதலி...
நன்றியுடன்,
ராஜி.
பதிவை இரசித்தேன் சகோ
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றிண்ணே
Deleteஉணர்வுகளுக்கும் அறிவுக்கும் போராட்டம் நடந்தால் அறிவு தோற்கும் உணர்வு வெல்லும் இது அனுபவப் பாடம்
ReplyDeleteஆமாம்ப்பா, இதை வச்சு கல்லா கட்டுறவங்க அதிகம்
Delete
ReplyDeleteகோயில் கட்டியவனுக்கும் கற்பூரம் காட்டியவனுக்கும் வரம் கிடைக்காது கடவுளை தூய எண்ணத்தோட வணங்குபவர்களுக்கு வரம் கிடைக்கும்
அதே அதே
Deleteசுவையான அவியல் ராஜிக்கா..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு
Deleteசிந்திக்க வைத்துவிட்ட பல செய்திகளைக் கொண்ட பதிவு.
ReplyDeleteஅப்படியா?! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteசுவையான அவியல்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete