ஒருவேளை சாப்பாடு போட்டாலே அதுல எதும் ஆதாயம் கிடைக்குமான்னு பார்க்கும் இந்த மானிடருக்கு, புழு, பூச்சி முதற்கொண்டு செடி கொடி என அனைத்துக்கும் உணவிடும் பரம்பொருளை கொண்டாடும் விதமா இன்னிக்கு படியளக்கும் திருவிழா கொண்டாடப்படுது.
பௌர்ணமி போல ஒவ்வொரு தமிழ்மாத தேய்பிறை அஷ்டமியும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுது. அதன்படி மார்கழி மாச தேய்பிறை அஷ்டமிக்கு சங்கராஸ்ஷ்டமின்னு பேரு. ஒருமுறை, பார்வதிதேவி சிவனிடம், ,“இவ்வுலக மக்கள் பிறப்பு இறப்பின்றி முக்தி பெற என்ன வழி?” எனக் கேட்டார். “மார்கழி மாத அஷ்டமி தினத்தில் சிவாலய பிரதட்சணம் செய்தால் அப்பலன் பெறலாம்” என பதிலளித்ததாக ஸ்கந்தபுராணம் சொல்லுது. பாவங்கள் விலகி முக்தி தரும் பிரதட்சணம் இது. சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள் மார்கழி மாசம் வரு அம்ஷ்டமி தினம். அந்த நாள் இன்னிக்குதான். இந்த மார்கழி அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் அன்னதானம் செய்தால் அதனால் புண்ணியமும், பொருளாதார வளர்ச்சியும் கைவரும்.
நினைத்த காரியம் வெற்றிப்பெற கடவுள் வழிபாடு முக்கியம். அதனால படியளக்கும் பெருமானை இன்றைய நாளில் வழிப்பட்டால் படிப்படியா வாழ்வில் முன்னேற்றம் பெறலாம். இந்த விரதத்தை மேற்கொள்ள பெருசா எதும் செய்ய தேவையில்லை. ஒரு கைப்பிடி அரிசியை கொண்டு போய் இறைவனின் சன்னிதியில் வச்சு எடுத்து வந்து, அன்றைய தினம் சமையலில் சேர்த்துக்கிடுவதும், இன்றைய தினம் முடிஞ்சளவுக்கு அன்னதானம் செஞ்சாலே போதும். இதென்ன படியளிக்கும் திருவிழான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
கயிலாயித்தில் ஒருநாள் அவரவர் கர்ம வினைப்படி அவரவருக்கு கிடைக்க வேண்டிய உணவினை சென்று சேரும் வேலையினை செய்துக்கொண்டிருந்தார் பரமேஸ்வரன். இதைக்கண்ட பார்வதி, மாமோய்! என்ன செய்றீங்கன்னு கேட்க, இந்தமாதிரி எல்லா ஜீவராசிக்கும் அவரவருக்கு சேர வேண்டிய உணவு சேரும்படி ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. இதைக்கேட்ட, நம்ம பாரு, அவருடன் விளையாட எண்ணி, அவரோட டேட்டா பேசில், உணவு கொடுத்தாக வேண்டிய லிஸ்ட்ல இருந்த சிறு எறும்பினை பிடித்து சின்ன டப்பாவுல போட்டு மறைச்சு வச்சுட்டாங்க. பரமேஸ்வரன் எல்லா வேலையும் முடிச்சுட்டு வரும்போது, இந்தாங்க மாமா! எல்லாத்துக்கும் சாப்பாடு கொடுத்திட்டீங்களா?!ன்னு கேட்டிருக்கீங்க. ம்ம்ம் என் டேட்டா பேசுல இருந்தபடி கொடுத்தாச்சுன்னு பரமேஸ்வரன் பதில் சொல்லி இருக்கார்.
வீட்டுக்காரர் மூக்குடைக்கனும்ன்னா பொண்ணுங்களுக்கு அத்தனை விருப்பம். அதுக்கு பார்வதி விதிவிலக்கா என்ன?! யோவ்! நீ வேலை பார்த்த லட்சணத்தை பாருன்னு சொல்லி, தான் மறைச்சு வச்சிருந்த டப்பாவை காட்டி, இதுக்குள் இருக்கும் உயிருக்கு சென்று சேரவேண்டிய உயிருக்கு நீ இன்னும் சாப்பாடு கொடுக்கலைன்னு சொல்லி சிரிச்சிருக்காங்க. பொண்டாட்டி பெருமைப்பட்டுக்கிட்டா புர்ர்ர்ர்ருசன்மாருங்களுக்கு பிடிக்காது. அதுமாதிரி பரமேஸ்வரன், அந்த டப்பாவை திறந்துக்காட்டி, இதப்பாருன்னு சொன்னாரு. அங்க, பார்வதி தேவியால் சிறைவைக்கப்பட்ட எறும்பு, டப்பாவுல இருந்த சிறுதுளி உணவை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு. உடனே, பார்வதிதேவி, சுவாமி! உங்க மகிமை தெரியாம விளையாடிட்டேன், மன்னிச்சுடுங்கன்னு சொல்லி, மன்னிப்பு கேட்டாங்க. இன்றைய தினத்தில் உங்களை வழிபடுவோருக்கும், அன்னதானம் செய்வோருக்கும் தன் வாழ்நாள் முழுக்க உணவு பஞ்சமே வரக்கூடாதுன்னு சொல்லி வேண்டிக்கிட்டாங்க. அந்த திருவிளையாடல் நடந்ததினம்தான் படியளக்கும் திருவிழா.
சின்ன வயசுல என் அப்பா சொன்ன கதைகளில் ஒன்னு, சகல ஜீவராசிக்கும் இறைவன் படியளப்பான்னு சொன்னதை எகனை மொகனையா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தன், கொஞ்சம் புளிசாதம் கட்டிக்கிட்டு ஆள் அரவமில்லாத பாலைவனத்துல உக்காந்துக்கிட்டானாம். எனக்கு எப்படி சாமி சாப்பாடு ஊட்டுதுன்னு பார்க்கலாம்ன்னு சோத்துமூட்டையை பிரிச்சு வச்சிட்டு கையை கட்டிக்கிட்டு உக்காந்திட்டான்... பொழுது போய் ராத்திரியும் வந்தது. இவன் பிடிவாதமா உக்காந்திருந்தான். நட்டநடு ராத்திரியாச்சு. தனக்கு முன்னாடி விரிச்சி வச்சிருந்த புளிசோத்தை பார்த்துக்கிட்டே இருந்தான். எங்கயோ திருடிட்டு அந்த வழியா ரெண்டு திருடனுங்க வந்தானுங்க. அவனுங்க கடுமையான பசில இருந்தாங்க. இவனையும், இவன் முன்னாடி இருந்த சோறையும் பார்த்துட்டு வாடா சாப்பிடலாம் ஒருத்தன் கூப்பிட்டான், மச்சான்! சோத்தை திறந்து வச்சிட்டு ஒருத்தன் சாப்பிடாம இருக்கான்னா அதுல ஏதோ சூது இருக்கு, எதுக்கும் அவனை சாப்பிட சொல்லி டெஸ்ட் பண்ணிட்டு நாம சாப்பிடலாம்ன்னு இன்னொருத்தன் சொன்னானாம்.
டேய்! சோறு எடுத்து சாப்பிடுடான்னு முதல்ல அன்பா! சொல்லி இருக்காங்க. இவந்தான் சாமி வந்து ஊட்டனும்ன்னு வெயிட்டிங்க்ல இருக்கானே! ம்ஹும் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிக்க, திரும்பவும் சொல்லி பார்க்க, அவன் அப்பயும் மறுக்க, திருடனுங்க ரெண்டு பேரும் அவனை அடிச்சு உதைச்சு, கைய காலை பிடிச்சுக்கிட்டு அந்த சோறை அவன் வாயில் திணிச்சு சாப்பிட சொல்லி இருக்காங்க. அவனுக்கு எதும் ஆகாததால, திருடனுங்க சாப்பிட்டாங்க. அதனால, கடவுள் கொடுக்க நினைச்சா, எப்படியும், எந்த ரூபத்திலயும் கொடுப்பார். அதுக்காக கடவுளே நேரில் வரனும்ன்னு அவசியமில்ல. அதேமாதிரி, கடவுள் கொடுக்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டா என்னதான் நீ முட்டி மோதினாலும் கிடைக்காதுன்னு அப்பா சொல்வார்.
கடவுள் நம்ப மூலமா யாருக்காவது கொடுக்க நினைக்கலாம். அதனால, இதுமாதிரியான நாட்களில் நம்மால ஆன தானம் தர்மம் செய்யலாம். சும்மா நாட்களில் கொடுக்க மனசு வராது. இப்பதானே ஒருத்தருக்கு சாப்பாடு போட்டோம்ன்னு மனசு மறுக்கும். அதனால, சாமி இருக்கோ இல்லையோ! இதுமாதிரி நாளில் இல்லாதவங்களுக்கு நாம சாமியாவோம்...
நன்றியுடன்,
ராஜி.
தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteநிறைய தகவல்கள்.
ReplyDeleteபடியளக்கும் திருவிழா இப்போதுதான் அறிந்தேன். நன்றி.
ReplyDeleteஎனக்கும் இந்த வருசம்தான் தெரியும்ப்பா.
Deleteஇப்பதிவினைக் கண்டதும் படியளக்கும் விழா என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியாவில் ஒரு புதிய பதிவினைத் தொடங்கியுள்ளேன். தொடர்ந்து அதனை மேம்படுத்துவேன்.
ReplyDeleteஅப்படியா?! எனக்கு லிங்க் அனுப்புங்கப்பா.. பார்க்குறேன்
Deleteமகிழ்ச்சி. விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த, படியளக்கும் விழா கட்டுரைக்கான இணைப்பினைத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE
Deleteநன்றிப்பா. இந்தா வரேன்.
Deleteஇத்தகவல்கள்! எங்கிருந்து கிடைக்கின்றன!மகளே!
ReplyDeleteவீட்டுக்கு பின்னாடி ஒரு சிவன் கோவில் இருக்குப்பா. அங்க திங்கட்கிழமைதோறும் வார வழிபாடு நடக்கும். மாலை 7 முதல் 9 வரை. அங்க தேவார, திருவாசக பாடல்கள் பாடுவாங்க. ஆன்மீக கதைகள் சொல்வாங்க. அதுமில்லாம, அந்த வாரத்தில் வரும் ஆன்மீக சம்பந்தமான நாட்களை சொல்லி அதுக்குண்டான காரண காரியம், விரதம் அனுஷ்டிக்கும் முறைகளை சொல்வாங்க. அங்க நோட் பண்ணிக்கிட்டு வந்துடுவேன், அதில்லாம, அங்க ஆன்மீகம் சார்ந்த புத்தகங்கள் பரிமாறிப்போம். அதனால தெரிய வரும் விசயங்கள்தான் இதுலாம்
Deleteராஜி புதிய தகவல்கள். பாரு கேள்வி கேட்டு சிவா பதில் சொல்லிட சூப்பர் போங்க்!!
ReplyDeleteகீதா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க்
Delete