Monday, March 12, 2018

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தேவையா?! - ஐஞ்சுவை அவியல்

என்ன மாமா போனையே பார்த்துட்டு இருக்கீங்க...

அவனவன் கல்யாணம் கட்டி, கொஞ்ச நாள் கழிச்சுதான் மூஞ்சை சுளிப்பான். இவனை பாரு கல்யாணத்தன்னிக்கே மூஞ்சை சுளிக்குறான். 
அவன் எதுக்கு முகம் சுளிச்சானோ தெரில. நீங்க ஆளுக்காள் கதை கட்டுங்க. கலர்ஸ் டிவின்னு ஒரு தொலைக்காட்சி சேனல் இருக்கு. அதுல எங்க வீட்டு மாப்ளைன்னு ஒரு புரோகிராம். அதுல நடிகர் ஆர்யா, அந்த காலத்து இளவரசிங்க மாதிரி சுயவரம் வைக்குறார். லட்சக்கணக்குல பொண்ணுங்க விண்ணப்பிச்சு இப்ப 15 பேரை ஃபைனல் பண்ணி ஜெய்ப்பூருக்கு கூட்டி போய், அங்க வச்சு அந்த பொண்ணுங்களுக்கு சமைக்க தெரியுமா?! ட்ரெஸ், மேக்கப், பார்ட்டில கலந்துக்குறது... இப்படி என்னெலாம் தெரியும்ன்னு அலசி ஆராயுற மாதிரி ஒரு புரோகிராம் எடுத்து ஒளிப்பரப்புறாங்க.

சரி அதுக்கென்ன?! தனக்கு வரப்போற பொண்ணு எல்லாத்துலயும் பெஸ்டா இருக்கனும்ன்னு நினைக்குற ஆம்பிளை இப்படிதான் அலசி ஆராய்வான்?! என்னை மாதிரியா?! பொசுக்குன்னு ஓகே சொல்லி, அப்புறம் ஒன்னும் தெரியாதவளை கட்டிக்கிட்டு அவஸ்தை பட!!அதுக்கென்னவா?! பொண்ணு தேடுறது தனிப்பட்ட விசயம். அதுக்கு ஒன்னுமில்ல. ஆனா, அந்த பொண்ணுங்க ஆர்யாவை இம்ப்ரெஸ் பண்ணுறதுக்காக போட்டி போட்டுக்கிட்டு,  ட்ரெஸ் பண்ணுறதும், வழியுறதும்...... முடிலடா சாமி. அதுகூட போட்டில வெற்றி பெறன்னு ஒத்துக்கலாம். ஆனா, இந்த நிகழ்ச்சி முடிஞ்சு போட்டில தோத்த பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகுமான்னு எனக்கு டவுட்டா இருக்கு. அதுமட்டுமில்லாம, நாளைக்கு அந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனப்பின் நீ ஆர்யாவை கட்டிக்க இப்படி செஞ்சவதானே!? அங்க போயி இருபது நாள் இருந்துட்டு வந்தவதானேன்னு அந்த பொண்ணுங்களை கட்டிக்கப்போறவன் கேக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?! 

ம்ம் நீ சொல்றதும் சரிதான் புள்ள.... திருச்சிக்கு பக்கத்துல முத்தரசநல்லூர்  ரயில் நிலையத்தில் 28 வருசத்துக்கு முந்தி காது கேட்காத, வாய் பேசமுடியாத பையன் ஒன்னை பார்த்து கூட்டி வந்து வளர்த்து வந்திருக்கார் கிருஷ்ணன்பிள்ளை.  வீட்டுக்கு கூட்டி வந்து தன் மனைவிக்கிட்ட ஒப்படைச்சிருக்கார்.  வாட்ச், மோதிரம், செயின்னு பார்க்க பெரிய இடத்து பையன் போல இருக்குறதை பார்த்து எங்கிருந்து வர்றேன்னு விசாரிச்சா, மேல கைகாட்டி ஃப்ளைட் ஓட்டி காட்டி இருக்கான் குழந்தை. அப்ப, இலங்கைல இருந்து அகதிகள் வந்த  நேரம்ங்குறதால அங்கிருந்து வந்திருக்கானோன்னு தினமும் ரயில்வே ஸ்டேஷனுக்கு கூட்டி போய் யாராவது அவனை தேடி வர்றாங்களான்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பார்த்திருக்காங்க. கொஞ்ச நாள் பார்த்துட்டு, 3 மகன், 3 மகள்களோடு சேர்த்து 4வது மகனா வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க.


 சரோஜா, கிருஷணன் பிள்ளை ஹோட்டல் தொழில் செய்றவங்க. அந்த பையனுக்கு கார்த்திக்ன்னு பேர் வச்சு ஸ்கூல்ல சேர்த்திருக்காங்க. அங்க நிக்காம ஹோட்டலுக்கு வந்திடுவானாம். ஹோட்டல் வேலைலாம் பார்க்க ஆரம்பிச்சிருக்கான். கிருஷ்ணன்பிள்ளை 1994ல இறந்தபின் ஹோட்டலை அவர் மூத்த மகன் சீனிவாசன் நடத்தி வந்திருக்கார். அவரும் சில மாசத்துக்கு முந்தி இறந்துட, பெருசா சொத்து பத்து  இல்லாததால் சாப்பாட்டுக்கு வழி இல்லாம திக்கு தெரியாம தவிச்சிருக்காங்க.  அந்த நேரத்தில் கார்த்திக் கடையை நான் பார்த்துக்குறேன்னு சொல்லி, அக்கா வீட்டுக்காரர் துணையோடு கடையை பொறுப்பா பார்த்துக்குறார். காலையில் டிபனும், டீயும், மாலையில் பரோட்டா, தோசை, இட்லின்னு ஹோட்டலையும் நல்லா பார்த்துக்கிட்டு வரும் வருமானத்தில் அம்மாவையும்,அண்ணன் குடும்பத்தையும் பொறுப்பா பார்த்துக்குறாராம். இப்ப அவருக்கு வயசு 31 ஆகுது. கல்யாணம் கட்டிக்க சொன்னால், இல்லம்மா, நீங்க போதும், நான் கடைசிவரை உங்களோடவே இருந்துக்கிட்டு அண்ணன்ங்க குடும்பம், அக்காக்கள் குடும்பம்ன்னு இருந்துடுறேன்னு சொல்லி பாசமழை பொழியுறாராம். 

பெத்த புள்ளைங்களே விட்டுட்டு ஓடிப்போகும் இந்த காலத்தில் தன்னை காப்பாத்தி வளர்த்தி எடுத்த அம்மாக்கு இப்படி நன்றிக்கடன் செலுத்தும் பிள்ளைகள் இருக்கவேதான் அப்பப்ப மழை கொஞ்சம் பெய்யுது.

ஆமா மாமா. சரி, வாங்க சாப்பிடலாம். பிடிக்கருணைக்கிழங்கு குழம்பு வச்சிருக்கேன்... 
அடியேய் இம்சை! இப்பலாம் மனுஷங்க மனசுலயே கருணை இல்லியாம். இதுல சாப்பிடுற காய்ல கருணையை எதிர்ப்பார்க்குதுங்க. அது கருணை இல்ல கரணை. கரணைக்கிழங்குன்னுதான் சொல்லனு, கரணைன்னா சதுப்பு நிலம். சதுப்பு நிலம்ன்னா என்னன்னு தெரியுமா?! களிமண் மாதிரி இளக்கமான மண் இருக்கும் பகுதி.  இதுல விளைஞ்சு வரும்  கிழங்குறதால இதுக்கு கரணைக்கிழங்கு. இதை விளைவிக்க அதிகம் நீர் தேவைப்படாது.  கரணைக்க்கிழங்குல இரு வகை உண்டு. உருண்டையா, பெருசா இருக்குறது ஒருவகை. இதுக்கு சேணைக்கிழங்குன்னும் பேரு. சேணைன்னா பெரியன்னு அர்த்தம். அந்தகிழங்கு சேனைக்கிழங்குன்னு எழுதி தொலைக்காத. போர்ப்படைக்கு சேனைன்னு அர்த்தம்.   கொழுக்கட்டை மாதிரி கைப்பிடி அளவில் இருக்கும் இன்னொரு வகை உண்டு. இதுக்கு பிடிகரணை கிழங்குன்னு பேரு. சேப்பங்கிழங்கு கரணை வகையை சார்ந்தது இல்ல. சேப்பங்கிழங்குக்கும் பிடிகரணைக்கும் வித்தியாசம் என்னன்னா சேப்பாங்கிழங்குல வரிவரியா இருக்கும். சமைக்க தெரிஞ்சா மட்டும் போதாது. பேர், அதுக்குண்டான காரணத்தையும் தெரிஞ்சுக்கனும்.


ம்க்கும் அதுவரைக்கும் எனக்கு சமைக்கவும் வரும்ன்னு ஒத்துக்குறீங்களே! அதுவரைக்கும் சந்தோசம். நீங்க வடத்தமிழகத்து ஆளு அதனால தெரியுது. நான் தெற்கத்தி ஆளு. எங்க ஊர்லலாம் இப்படிதான் சொல்வாங்க. அதனால நான் சொல்றேன். சரி, நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
உடல் முழுக்க துவாரம். ஆனாலும், தண்ணீரை சேமித்து வைப்பேன். நான் யார்?! யோசிச்சுக்கிட்டே வந்து சாப்பிடுங்க.
நன்றியுடன்,
ராஜி.

18 comments:

 1. விவசாய ஆராய்ச்சில இறங்கிட்டிங்க போல....

  ReplyDelete
  Replies
  1. ஆராய்ச்சிலாம் இல்ல சகோ. வடக்கத்தி தெற்கத்தி பாஷைல நிறைய வித்தியாசம் உண்டு. அங்கத்திய ஆளுங்க இங்க வந்து இதுலாம் சொன்னா நமக்கு சிரிப்பு வரும்.

   நாம அங்க போய் இங்க கேக்குற மாதிரி கேட்டா நமுட்டு சிரிப்பு சிரிப்பாங்க. ட்விட்டர்ல வந்துச்சு. இங்க பகிர்ந்துக்கிட்டேன்

   Delete
  2. இதுமட்டுமில்ல எல்லா பேச்சு வழக்கும் மாறுப்படும் புரிந்துக்கொள்ள சிலவைகள் கடினமாகவே இருக்கும்

   Delete
 2. உடல் முழுதும் ஓட்டையா யாருங்க அது

  ReplyDelete
  Replies
  1. அதை தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

   Delete
 3. கிழங்கு விளக்கம் அருமை...

  விடை : பஞ்சு

  ReplyDelete
  Replies
  1. டிடி அண்ணா சொன்னது சரிதான் சகோ

   Delete
 4. மானங்கெட்ட சினிமாக்காரன் சொன்னால் நம்பி விடுவதா ?
  இந்த மாதிரி வெட்கங்கெட்ட சிறுக்கிகளால்தான் சமூகம் சீரழிகிறது.

  பெற்ற பிள்ளைகளைவிட வளர்த்த பிள்ளைகளுக்கு பாசம் அதிகமே...

  கரணைகிழங்கு விளக்கம் ஸூப்பர்.

  விடை பஞ்சு அருணாசலம்.

  ReplyDelete
  Replies
  1. விடை சரிதான்ண்ணே

   Delete
 5. இந்தக் காலத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி.. அது நிஜம் இல்லை என்று நினைத்தேன். பெண் உரிமைச் சடங்கங்கள் ஆட்சேபிக்கவில்லையா?

  வாய் பேச முடியாத காது கேட்காத பையன் செய்தி நானும் படித்து நெகிழ்ந்தேன்.

  கருணைக்கிழங்கா? அது ரெண்டாவது படம் ஓகே! முதல் படம் சேனைக்கிழங்கு! சேணையோ, சேனையோ... ஏதோ ஒன்று. ஆனால் இரண்டுதான் சொல்லி இருக்கீங்க..? சேனை, கருணை, சேப்பங்கிழங்கு! இரண்டாவதாய் இருப்பது மூல வியாதிக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருக்கேன். அப்படிச் சொல்லித்தான் எங்க அம்மா என்னைச் சாப்பிட வச்சாங்க!

  ReplyDelete
  Replies
  1. பெண் உரிமை சங்கங்களுக்கு இதைவிட வேற வேலை இருக்கு. கருணைக்கிழங்கில்லை. கரணைக்கிழங்கு. உங்க அம்மா சொல்றது சரிதான் சகோ. பிடிகரணைக்கிழங்கு மூல நோய்க்கு நல்லது

   Delete
 6. உடல் முழுக்க துவாரம். எதுவாக இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. டிடி அண்ணா, கில்லர்ஜி அண்ணா சொன்ன பதில்கள்தான் உண்மை

   Delete
 7. ரொம்ப நாளாக தொலைக்காட்சி பார்ப்பதை விட்டுவிட்டேன்! அதனால் இந்த நிகழ்ச்சி வருவது தெரியவில்லை! இதை தடை செய்ய வேண்டும்! கரணைக்கிழங்கு விளக்கம் அருமை! வளர்த்த பெற்றோருக்கு உதவும் கார்த்திக் வணக்கத்திற்குரியவர்! நன்றி!

  ReplyDelete
 8. அருமையான பதிவு......இந்தக் காலத்தில் யார் இப்படி இருக்கிறார்கள்,இருக்கிறதை எப்ப சுருட்டிக்கிட்டு ஓடலாம்னு தான் பாப்பாங்க.///கருணைக் கிழங்கு எனக்கு ரொம்பப் புடிக்கும்.....பொரிச்சு கொழம்பு வைப்பேன்.

  ReplyDelete
 9. கிழங்கு நாங்க முதல்ல இருக்கறத சேனைக் கிழங்கு ...அடுத்து பிடிகரணை....அப்புறம் சேம்பு அல்லது சேப்பங்கிழங்கு...பிடிகரணை நல்லதும்பாங்க..

  சுயம்வரமா/...இப்ப்டி எல்லாம் கூட நிகழ்ச்கியா...

  கார்த்தி மனம் நெகிழ வைத்துவிட்டார்...பெத்தாதான் பிள்ளையா என்ன பாருங்க வளர்த்ததும் எப்படி...பாசத்தோடு...செமை..அவங்க ஒரிஜினல் அம்மா அப்பா தேடிருக்க மாட்டாங்களா?

  கீதா

  ReplyDelete