மகாவீர் ஜெயந்தின்னா என்னன்னு கேட்டா.. லீவ் விடுவாங்க, அன்னிக்கு அசைவக்கடை, சரக்கு கடை இருக்காது. இதுதான் பதிலா இருக்கும். கொஞ்சம் படிச்ச ஆட்கள்கிட்ட கேட்டா, புத்தர் மாதிரி இருப்பார், சைவம், வைணவம்போல இந்துக்களின் ஒரு பிரிவினர். வாய்ல துணி கட்டி இருப்பாங்க. ஒருசிலர் கோவணம் மட்டுமே! ஒருசிலர் அதுகூட இல்லாம இருப்பாங்க. மயிலிறகால் ரோட்டை பெருக்கிக்கிட்டே போவாங்க. மாலை 6 மணிக்கு மேல சாப்பிடமாட்டாங்கன்னு ஆறாப்பு படிச்சதையும் கேள்விப்பட்டதையும் வச்சு பதில் சொல்வாங்க. ரொம்ப சொற்பமானவர்களுக்கே பகவான் மகாவீரை பற்றி தெரியும். எனக்கும் அவ்வளவ்தான் தெரியும்!! இன்னிக்காவது அதிகமா தெரிஞ்சுக்கலாம்ன்ற தேடலின் முடிவுதான் இந்த பதிவு.. அதுக்காக, முழுசா தெரிஞ்சுக்கிட்டியான்னு கேட்டா... இல்லன்னுதான் பதில் வரும்.
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் போர்த்தொடுத்து, புண்ணியபூமியாம் பாரதபூமியில் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவதரித்து அஹிம்சையின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுயவிருப்பு வெறுப்புகள்தான் சமூகத்தில் நடக்கும் மாற்றத்துக்கான காரணம்ன்னு எடுத்துச் சொல்லி, அஹிம்சையை முன்னிறுத்தி சமூக மாற்றத்துக்காக மனிதன் மேற்கொள்ளவேண்டியதென எட்டு கட்டளைகளை வகுத்தார். தானும் அதுப்படியே துறவறம் மேற்கொண்டு வாழ்ந்து காட்டினார். சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.என்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்ற இடத்தில் சித்தார்த்தன் என்ற அரசருக்கும்,. அவரது மனைவி த்ரிஷாலா தேவிக்கும் கி.மூ 599ல் சித்திரை மாதம் வளர்பிறை 13ம்நாளில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. அதுக்கு வர்த்தமானன்ன்னு பேர் வச்சு வளர்த்து வந்தாங்க. வர்த்தமானன்ன்னு சொன்னா, வளம் சேர்ப்பவன்னு பொருள். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே நாட்டில் வளங்களைப் பெருக்கியதாக நம்பப்படுகிறது; அவர் பிறக்கும் தறுவாயில் அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி காணப்பட்டது. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய ‘வர்த்தமானன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அரசி திரிசாலாவுக்கு மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், அவர் கருவுற்றிருக்கையில் 14 சுப கனவுகளைக் கண்டதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன. உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜெயின் – ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர் .
சிறந்ததொரு அரசனா வருவான்னு எல்லாரும் எதிர்பார்த்திருக்க, வர்த்தமானனுக்கு சிறுவயதில் இருந்தே தீர்த்தங்கரர்கள் வகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளிலேயே அதிகமான நாட்டம் இருந்தது. தியானத்திலும்,தன்னை அறிவதிலுமே அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். அவருடைய போக்கை மாற்ற எண்ணிய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண்குழந்தையும் பிறந்தது. ம்பம் சமண மதத்தைப் பின்பற்றிய குடும்பம். வர்த்தமானர், மெதுவாக, உலகச் சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். தமது முப்பதாவது வயதில் அரசாட்சியையும் குடும்பத்தையும் துறந்து, துறவறம் மேற்கொண்டார் வர்த்தமானர். பிறகு துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டார். மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவர் மதிப்பளித்தார்; அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.
இந்தக் காலகட்டத்தில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். புலன்களை வென்ற அவரது பொறுமையும் வீரமுமே அவரை மகாவீர் என அழைக்க காரணமா விளங்குச்சு. தேடலின் விளைவாக ‘கைவல்ய ஞானம்’ கிடைக்கப் பெற்றார். அதன்பிறகு மகாவீரர் நாடு முழுவதும் யாத்திரை செய்து, மக்களிடையே தாமறிந்த ஆன்மிக விடுதலையின் உண்மையை பரப்பத் துவங்கினார் . காலணியில்லா வெறும் கால்களில், துணிகள் ஏதும் அணியாமல், கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரது பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.
தீர்த்தங்கரர்களின் சமணக் கொள்கைகளின் மீதிருந்த அதீத பற்றால் தனது முப்பதாவது வயதில் அரசவாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டார். தமது இடைவிடாத ஆன்மிகத் தேடலில் 12 ஆண்டுகள் கழித்தார், தீர்த்தங்கர்கள் தொகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளை சீர் செய்து சமண மதத்தை தோற்றுவித்தார். ரிஜுபாலிகா நதிக்கரையில் தியானம் செய்து ஞானம் அடைந்தார். மனதை அடக்கி எல்லாவற்றையும் வென்றவர் என்று பொருள்படும் வகையில் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். பிறகு நாடு முழுவதும் சென்று சமண மதக் கருத்துக்களை பரப்பினார்.
தமது 72-வது வயதில், பவபுரி என்னுமிடத்தில், தீபாவளியன்று பரிநிர்வாணம் (நம்ம ஊரில் சித்தி அடைதல், முக்தி அடைதல் போல சமணத்தில் பரிநிர்வாணம்ன்னு சொல்றாங்க) அடைந்தார் மகாவீரர். அவர் இறைப்பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் இல்லங்களில் தீபமேற்றிக் கொண்டாடுகிறார்கள். மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது அணுக்கச் சீடர்களால் ‘அஹம் சூத்திரங்கள்’ என வாய்மொழியாகவே மனனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது. காலப்போக்கில் பல அஹம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும், மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன.
சமணர்களின் ஒரு பிரிவினரான ‘சுவேதம்பரர்கள்’ இவற்றை அப்படியே வரிக்கு வரி உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர்; சமணர்களின் மற்றொரு பிரிவினராகிய ‘திகம்பரர்கள்’ இவற்றை உபதேச ஆதாரமாக மட்டுமே ஏற்கின்றனர். காலப்போக்கில் சமணர்கள் வேத சமயப் பழக்கங்களையும் சடங்குகளையும் கைக்கொண்டனர். மகாவீரரை உருவச்சிலையாக வடித்து வழிபடும் போக்கு பிற்காலத்தில் உருவானது. எனினும், பாரதத்தின் சைவ உணவுப் பழக்கம், கொல்லாமை, துறவுநெறி ஆகியவற்றை வளர்த்தெடுத்ததில் சமணம் பெரும் பங்கு வகித்துள்ளது.
மகாவீரரின் மெய்யியலில் முதன்மையானதாக எட்டு கொள்கைகள் உள்ளன. இவற்றில் மூன்று கொள்கைகள் கருத்துமயமானவை; ஐந்து கொள்கைகள் நெறிவழிப்பட்டவை. இவற்றின் குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவது. வாழ்வின்மூலம் ஆன்மிக வளமை பெறும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் இருக்கு. அவை, அநேகாந்தவடா, சியாத்வடா, கர்மா. ஐந்து நெறிவழிகள்: இருக்கு. அவை, அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரமச்சரியம், அபாரிகிருகம்.
மகாவீரரின் மும்மணிகள்.....
மகாவீரர் ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு; அது தனது செயல்களின் விளைவாக கர்மா (விதிப்பலன்) எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது’ என்று கூறுகிறார். கர்மவினையின் மாயையால் ஒருவர் தற்காலிகமான, மெய்யின்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறார். இவற்றின் தேடலில் அவருக்கு சுயநலத்தால் வன்முறை எண்ணங்களும் செயல்களும், கோபம், வெறுப்பு, பொறாமை உள்ளிட்ட குணங்களும், பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மவினைப் பளு கூடுகிறது.
இவற்றிலிருந்து விடுபட, நன்னம்பிக்கை (சம்யக்-தர்சனம்), நல்லறிவு (சம்யக்-ஞானம்), நன்னடத்தை (சம்யக்-சரித்திரம்) ஆகிய மூன்று மணிகள் தேவை என்று மகாவீரர் வலியுறுத்தினார்.
ஐந்து உறுதிமொழிகள்....
நன்னடத்தைக்கு துணைநிற்க சமண மதத்தில் ஐந்து உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்
1. வன்முறை தவிர்த்தல் (அஹிம்சை) எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல். 2. வாய்மை (சத்தியம்) தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல் 3. திருடாமை (அஸ்தேயம்) தனக்கு உரிமையற்ற எதையும் அபகரிக்காது இருத்தல். 4. பாலுறவு துறவு (பிரமச்சரியம்) – உடலின்பம் துய்க்காதிருத்தல். 5.உரிமை மறுத்தல்/ பற்றற்றிருத்தல் (அபாரிகிருஹம்) – மக்கள், இடங்கள், பொருள்கள் மீது பற்றற்று இருத்தல் என இந்த ஐந்து உறுதிமொழிகளையும் எடுத்துக்கனும்.
சமய சீர்த்திருத்தம்....:
ஆண்களும் பெண்களும் ஆன்மிக நோக்கில் சரிசமமானவர்கள் என்றும், இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியும். அவரை அனைத்துத் தரப்பு மக்களும், சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்களும், விளிம்புநிலை மக்களும் பின்பற்றினர். அன்றைய காலகட்டத்தில் பாரதத்தில் நிலவிய வர்ணாசிரம முறையை விலக்கி, சமயத்தில் நான்கு நிலைகளை உருவாக்கினார்; அவை, ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்), பொதுமகள் (ஷ்ராவிக்). இதனை ‘ சதுர்வித ஜைன சங்கம்’ன்னு பேரு. சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை அடியொற்றியவையே. மகாவீரர் பண்டைய மதத்தின் சீர்திருத்தவாதியே; அவர் புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்ல.
தனது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர் மகாவீரர். எனினும் தமது காலத்திற்கேற்ப சமண மதக் கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். அதன் விளைவாக, பாரத ஞான தரிசனங்களில் ஒன்றான சமணம் தனி மதமாக வளர்ந்து, பாரத வரலாற்றில் பேரிடம் பெற்றது. உண்மையில் மகாவீரர், பாரதத்தின் தொன்மையான சனாதன மதத்தின் சீர்திருத்தவாதியே ஆவார். மகாத்மா காந்தி சமணர்களின் அடிப்படைக் கொள்கையான அஹிம்சையை அரசியல் போராட்ட ஆயுதமாக மாற்றியபோதுதான் அதன் மாபெரும் சக்தி உலகிற்கு தெரிந்தது.
போகும் பாதை எதுவாகினும் சேரும் இடம் ஒன்றே! அது இறைவனின் திருவடி. இன்றைய காலக்கட்டத்திற்கு மகாவீர் போதித்த கொள்கையை உலக நலன் பொருட்டு அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்கலாம். தப்பில்ல!
ராஜி.
விளக்கம் அருமை சகோதரி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.
Deleteசரியான நாளில் சரியான பகிர்வு.
ReplyDeleteநிறைய இடங்களில் பிழைகள் இருக்கின்றன. படித்து, திருத்துங்கள்....
அவசர அவசரமாக தயாரித்த பதிவு. கூடவே, தெரிந்திராத வடமொழி சொற்கள் பல. அதனால்தான் பிழை இருக்கு,. கண்டிப்பா படிச்சு பார்த்து திருத்துறேன் அண்ணே.
Deleteவருகைக்கும் தவறினை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றிண்ணே
மகாவீரரை பற்றி இன்று எழுதியது சிறப்பு .
ReplyDeleteஜைன மதத்தை மகாவீரர் ஆரம்பிக்கவில்லை .இவர் கடைசியாக வந்த
தீர்த்தங்கரர் .
முதல் தீர்த்தங்கரர் பெயர் ரிஷபதேவர் -மொத்தம் 24 பேர் உண்டு.
ஜைனர்கள் வேதத்தை ஒப்புக் கொள்வதில்லை .அதனால் இதை
நாத்திக மதம் என்பார்கள் .
நாத்திகம் என்பது வேத மறுப்பு - கடவுள் மறுப்பு கிடையாது.
வேதத்தை ஒப்புக் கொண்டவர் வைதீகர் - ஆஸ்திகர் !
//ஜைனர்கள் வேதத்தை ஒப்புக் கொள்வதில்லை .அதனால் இதை
Deleteநாத்திக மதம் என்பார்கள் .
நாத்திகம் என்பது வேத மறுப்பு - கடவுள் மறுப்பு கிடையாது.
வேதத்தை ஒப்புக் கொண்டவர் வைதீகர் - ஆஸ்திகர் !//
நான் அறிந்திராதது. பகிர்வுக்கு நன்றி.
தெளிவுப்பெற்றேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ’ஸ்
Deleteநன்னாளில் அருமையான பதிவு. வாழ்த்துகள். சோழ நாட்டில் பௌத்தம் என்ற என் ஆய்விற்காக புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றபோது 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். அக்காலகட்டத்தில் சமணம் தொடர்பான வாசிப்பு ஆரம்பித்தது.
ReplyDeleteஉங்கள் அனுபவத்தினை பகிர்ந்துக்கொள்ளுங்கப்பா. எங்களுக்கும் பல விசயங்கள் தெரிய வரும்.
Deleteமகாவீரரை பற்றிய பல புதிய விடயங்கள் அறிந்து கொண்டேன். ஆராய்ந்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteநல்ல பதிவு ராஜி.
ReplyDeleteகீதா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாக்கா
Deleteகுறைந்த விவரங்களே நானும் அறிந்திருந்தேன்! நல்ல பதிவு.
ReplyDeleteநானும்தான்... இப்பயும் கொஞ்சமாதான் தெரியும். புரியாத பல விசயம் இருக்கு, இன்னும் ஆழமா படிக்க ஆரம்பிக்கனும் சகோ
Deleteநிறைய படித்து உருவாக்கிய பதிவு இது. என்றாலும் வரலாற்றுச் செய்திகளை வெளியிடும்போது சரி பார்த்து வெளியிடுவது நல்லது. பரவாயில்லை திருத்திவிட்டால் சரியாகிவிடும். மகாவீரர் பற்றிய விரிவான பதிவிற்கு நன்றி.
ReplyDeleteஎன்ன பிழைன்னு சொல்லி இருந்தா திருத்திக்க நல்லா இருக்கும்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete