Wednesday, May 02, 2018

சுவாமி விவேகானந்தரின் ஜீவன் முக்தி சமயத்தில் நடந்தது என்ன ஒரு நேரடி ரிப்போர்ட் -மௌன சாட்சிகள்

பொதுவா சினிமா பார்க்கும்போது இல்லன்னா எதாவது புத்தகம் படிக்கும்போது அதோடு ஒன்றிப்போய் கதாபாத்திரமாய் நம்மை கற்பனை செஞ்சுப்போம்.  அதுமாதிரி தேசத்தலைவர்கள், ஆன்மீக தலைவர்களாய் நம்மை ஏன் கற்பனை செஞ்சு பார்க்குறதில்லை?!ன்னு விவேகானந்தர் கதையை படிக்கும்போது தோணுச்சு. விவேகானந்தர் ஜீவசமாதி ஆகும்போது நாம பக்கத்தில் இருந்தால் எந்த மாதிரி உணர்ந்திருப்போம்ன்னு பார்க்கலாம்...
விவேகானந்தரின் ஆசிரமம்.....  நிறைய துறவிகளும் மக்களும் கூடி இருக்காங்க.  காலண்டரில்  டிசம்பர் 1900 என இருக்கு. இன்று என்ன விசேஷம்ன்னு அருகிலிருக்கும்  பெண் துறவியிடம் கேட்டால்,  சுவாமிஜி இரண்டாவது முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து  இன்று தாயகம் திரும்புகின்றார்.  அவரை வரவேற்கதான் எல்லோரும் கூடி இருக்காங்கன்னு பதில் சொன்னார். எல்லாரும் எதிர்பார்த்தபடி சுவாமிஜியும் வந்து இறங்கினார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆஸ்துமாவினால் கடுமையாக அவதிப்பட்டநிலையில் அவர் கொல்கத்தா வந்து சேர்ந்தார் . நாட்கள் செல்ல செல்ல, சிறுநீரக பிரச்சனை, உடல்வீக்கம், இதயக்கோளாறு என சுவாமிஜி அவதிப்பட்டு கொண்டிருந்த காலக்கட்டம். சிலநேரம் மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்பட்டு கொண்டுருந்தார். தினம் தினம் ஒரு மருத்துவர் வந்து உடல்நிலையை சோதித்து மருந்துகள் கொடுப்பார்கள்.  ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இப்படியே நாட்கள் உருண்டோடியது.   வழக்கம்போல்  காலை தரிசனத்துக்காக  சுவாமிஜியை தரிசிக்க செல்பவர்களோடு நானும் இருக்கேன். 
அப்பொழுது அவரது ஒரு கண்ணிலுள்ள இரத்தநாளம் சீர்கெட்டு, ஒருபக்க பார்வையும் மங்கலாக இருந்தது. இந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் உடல் ஒரு சிறுவனை போல குன்றிவிட்டது. மான், ஆடு, வாத்து, கோழி போன்ற பிராணிகளை வளர்த்து அதனுடனேயே பெரும்பாலான நேரங்களை செலவிட்டார். மடத்திலிருக்கும் சில துறவிகளை கூப்பிட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தயாராக்கினார். காலையில் தினமும் 4 மணிக்கு மடத்தில் இருக்கும் கோவிலில் மணி அடிக்கும். 5 நிமிடங்கள் தாமதமாக சென்றால்கூட அன்று மடத்தில் சாப்பாடு கிடையாது. பிச்சை எடுத்துத்தான் சாப்பிடவேண்டுமென்ற நியதியை கடைபிடித்து வந்தார். ஒரு துறவி காலை முதல் இரவுவரை என்ன செய்யவேண்டுமென்று சீடர்களுக்கு போதித்து அதையே கடைபிடிக்கச்சொன்னார். அப்பொழுது திடீரெனெ சுவாமிஜி கூட்டத்தில் இருந்த சீடர்களை பார்த்து என் சீடர்களே! இனியும் வேலை செய்ய என் உடல் ஒத்துழைக்காது. ஒரு புதிய உடலோடுதான் இனி செய்யவேண்டிய மீதி வேலைகளை செய்யவேண்டும். முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்றார் .


மறுநாள் காலை, அவரை தரிசிக்க எல்லோரும் செல்கின்றனர். அப்பொழுது அவர் சோகமாக காணப்பட்டார் . அவரது முகத்தில் அசாதரண மாற்றம் நிகழத்தொடங்கியது.  நான் மட்டும் முக்தியடைய விரும்பவில்லை எல்லோரும் முக்தியடையவேண்டும். ஆனால், நான் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. ஆகையால் நான் மீண்டும் மீண்டும் வருவேன் என்று சீடர்களிடம் கூறினார். இன்னும்  40 ஆண்டுகளில் இந்தியா சுதந்திர பூமியாகிடும். பொதுவாக அடிமைப்பட்டு கிடக்கும் நாடுகள் சுதந்திரம் பெறுவதுபோல் இந்தியாவின் சுதந்திரம் இருக்காது. இன்றிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து ஒரு பெரிய யுத்தம் நடக்கும்.  அதுவே, சுதந்திரத்திற்கு வித்தாக அமையும். பொதுவாக சுதந்திரம் பெற்றபின் அந்த நாடுகள் பொருள் குவிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல் ,இந்தியாவும் பொருள்குவிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு ,அன்னிய வாணிபங்கள் மூலம் தன்னுடைய புராதான பெருமைகளை இழந்து நிற்கும். அதேசமயம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் நம்மை பார்த்து ஆன்மீகத்தில் அதிகநாட்டம் செலுத்துவார்கள். பொன்னும், பொருளும், சொத்தும், பணமும் இன்பத்தை தராது என்பதை அவர்கள் நம்முடைய இதிகாசங்களை படித்து அதை அனுபவப்பாடமாக உணர்ந்துகொள்வார்கள் என்று உரையாற்றினார். 

 ஒருமுறை ஆசிரமத்திற்குள் செல்லும்போது சுவாமி விவேகானந்தரும்,  அவருடைய சக துறவி சுவாமி சிவானந்தரும் ஒரு கொசுவலையினுள் தூங்கிக்கொண்டு இருந்தனர்.  ஆனாலும், எப்படியோ ஒரு கொசு உள்ளே சென்றுவிட்டது போலும்.. தூக்கத்திலிருந்து உடனே சுவாமி சிவானந்தர் எழுந்துவிட்டார். அவர் சுவாமி விவேகானந்தரை ஆச்சர்யமுடன் பார்த்துக்கொண்டிருந்தார். என்னவென்று கேட்டபோது, சுவாமி விவேகானந்தர் தூங்கிக்கொண்டு இருந்த கொசுவலையின் வெளியே சிவபெருமானை போன்ற தோற்றம் கொண்ட பல சிறிய உருவங்கள் கொசுவலையை சுற்றி தியானத்தில் இருப்பது மாதிரியும், அவர்கள் அனைவரது கைகளிலும் திரிசூலம் இருந்தது எனவும், அந்த திரிசூலங்களில் இருந்தும் அவர்களது உடம்பில் இருந்தும் பிரகாசமான ஒளி வந்துகொண்டிருந்தது. இது ஏதோ பிரமையா இருக்குமென்று நினைத்து கண்களை கசக்கி கொண்டேன். ஆனா அவங்க யாரும் மறையல.  உண்மையாக அங்கு அமர்ந்திருந்தனர் அவர்கள் யார் என்று தெரியவில்லை?! ஏன் இவ்வாறு இங்கே இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.
பயந்துபோன சுவாமி சிவானந்தா, சுவாமிஜியை எழுப்பி, அவர்களை காட்டினார். என்ன நடக்கிறது என்று சுவாமிஜியிடம் கேட்டார். ஆனால் சுவாமிஜி அதுப்பற்றி ஒன்றுமே அலட்டிக்கொள்ளவில்லை. சிவானந்தரையும் படுக்கச்சொல்லி சைகைக் காட்டி திரும்பி படுத்துக்கொண்டார். எனக்கெதும் புரிபடாமல் என் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டேன். மீண்டும் காலையில் வந்து பார்த்தால் சிவானந்தர் தூங்காமல் விழித்து இருந்தார். ஏன் என்றுகேட்டபோது, இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அதை யோசித்து யோசித்து தூக்கம் வரவில்லை என்றார். காலையில் சஸ்பென்ஸ் தாங்காம, சிவானந்தர் சுவாமிஜியிடம் இரவு நடந்தவற்றை கேட்டே விட்டார். அப்பொழுதும் சுவாமிஜி அதைப்பற்றி ஒன்றும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிவனந்தரின் முகத்தில் ஏற்பட்ட சோகத்தைக்கண்டு, மெதுவாக வாயை திறந்து, அவர்கள் பைரவர்கள். சிறுவயதில் இருந்தே என்னை காத்துவருகின்றனர் என்று அமைதியாக கூறினார் .
ஒருமுறை எல்லோருடனும் மடத்தில் நான் இருந்தபொழுது மனமாதநாத் கங்குலி என்னும் சுவாமிஜியின் பரமபக்தர் ஒருவர் ஒரு குறிப்பு எழுதிக்கொண்டு இருந்தார். அவர் சென்றதும் என்னதான் அவர் எழுதி இருக்கிறார் என்று படித்து பார்த்தால்,  அதில், சுவாமிஜி ஒருமுறை ராமக்கிருஷ்னர் ஆலயத்துக்கு அருகில் நடந்துகொண்டு இருந்தார்.  அப்பொழுது ,சுவாமி விவேகானந்தர்  மெதுவாக, 
“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”  

என முணுமுணுத்துக் கொண்டே வந்தார். தன்னை ஆஞ்சேநேயராக உருவகப்படுத்தி தன்னை மறந்திருந்தார். கைகளை மெதுவாக மேலே உயர்த்தினார். அவரது நடையில் வேகம் கூடியது. மூச்சை நன்கு எழுத்து இழுத்து விட்டார். பின் கைகளை கட்டியபடியே அதேவேகத்தில் நடந்துக்கொண்டு இருந்தார். தீடிரென கைகளை உயர்த்தி என்னால் சூரிய சந்திரர்களின் இயக்கத்தை நிறுத்தமுடியும் என ஆவேசமாக கத்தினார். அவரது செயலைப்பார்த்த நான் சுவாமிஜி நினைத்தால் அவரால் எதையும் சாதிக்கமுடியும் என்ற நிலையில் இருந்தார் என அந்த குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.
ஒருநாள் ஒரு காலைப்பொழுது,  வழக்கமாக காலையிலையே சபைக்கு வரும் சுவாமிஜி, அன்றையதினம் வரவில்லை. நாங்கள் எல்லோரும் சுவாமிஜி எங்கே எனக் கேட்டபோது,  அவரது சீடர் சரத் சந்திரர் அங்கே வந்தார். என்ன ஆச்சு என எங்களிடம் கேட்டுவிட்டு சுவாமிஜியை பார்க்க சென்றார். நாங்களும் உடன் சென்றோம். அப்பொழுது சுவாமிஜி மிக ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். எங்களையெல்லாம் பார்த்தவுடன் சைகையால் அமரச்சொல்லிவிட்டு சரத் சந்திரரிடம், நாட்டின் எதிர்காலம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன் என்றுக்கூறி அவர்கள் இருவரும் ஏதோ முக்கியமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.  நாங்கள் கீழே உட்கார்ந்துகொண்டு எங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தோம். தீடிரென சுவாமிஜி எழுந்து எங்களை நோக்கி, இதோ கடவுள் வந்திருக்கிறார். உங்களுக்கு தெரிகிறதா என்கிறார். அவருடைய பேச்சிலும், தோற்றத்திலும் ஒரு தேஜஸ் மின்னியது எங்களுக்கு முக்கியமாக எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் நாங்கள் ஒரு உன்னத அனுபத்தில் இருப்பதை  உணரமுடிந்தது. நடப்பதெல்லாம் கனவா? நனவா எனத் தெரியாமல் நாங்களும் சிலைப்போல பிரமிப்புடன் உட்கார்ந்திருந்தோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வருவிதமான அனுபவமாக இருந்தது. நாங்கள் தியானத்தின் உச்சநிலைக்கு சென்றோம். ஒரு 15 நிமிடம் கழித்து சுவாமிஜி அங்கிருந்து அகன்றபிறகே நாங்கள் இயல்பு நிலைக்கு வந்தோம். எங்களுக்குள் ஏற்பட்ட அனுபவங்களை ஓவருக்கொருவர் சொல்லி சொல்லி ஆனந்தப்பட்டோம் .
அந்த சமயத்தில் ஆங்கிலப்பெண்மணியான ஹேன்ஸ்ப்ரோ அங்கே வந்தார். சுவாமிஜியிடம், நீங்கள் செய்யும் இந்த ஆன்மீகப்பணியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் . உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா எனக்கேட்டார் அதற்கு சிறிதுநேரம் அமைதியாக இருந்த சுவாமிஜி, மெதுவாக பேச ஆரம்பித்தார் நான் இன்னும் சிறிது காலத்தில் இந்த உடலை விட்டு போய்விடுவேன். நான் இறந்து 10 வருடங்கள் கழித்து என்னை எல்லோரும் வழிக்காட்டியாக நினைத்து வணங்குவார்கள் என்றார். வழக்கமான பணிகள் மடத்தில் நடைபெற்று கொண்டிருந்தன. அப்பொழுது நாள்காட்டி 1901 டிசம்பர்  28ம் தேதி எனக்காட்டியது. அப்பொழுது கல்கத்தாவே களைக்கட்டி இருந்தது. என்னவென்று என்னருகில் இருந்த துறவியிடம் கேட்டால், . அவர் இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திரக்கூட்டம் வரும் 31 ம் தேதிவரை நடக்கிறது அதற்கான கோலாகலம்தான் இது என்றார். ஆனால் இந்த அரசியல் மற்றும் அதுசார்ந்த இயக்கங்களில் இருந்து விலகியே இருந்தார் வீர துறவியான சுவாமி விவேகானந்தர். எங்கள் நாட்டை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சிக்கேட்கும் பாவனையை அவர் சற்றும் விரும்பவில்லை என்பது அவரது நடவடிக்கைகளில் இருந்து தெரிந்துகொண்டோம் .
இந்த கோரமான பஞ்சம், வியாதி, தொற்றுநோய்கள் பரவிவரும் காலத்தில் இந்த காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள்?!ஏழைகளுக்கு என்ன உதவி செய்தார்கள்?! அரசை என்னிடம் கொடுத்துவிடு... கொடுத்துவிடு... எனச் சொல்கிறார்களே! இவர்கள் அதை நிர்வகிக்க தயாராகிவிட்டனரா என தன்னுடைய சீடர்களிடம் விவாதித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காங்கிரஸ் மாநாடும் முடிந்தது. காந்தியடிகள் சுவாமிஜியை சந்திக்க விரும்பினார். துரதிஷ்டவசமாக காந்தியடிகள் மடத்திற்கு சென்றபோது சுவாமிஜி அங்கில்லை.  அதன்பிறகு கடைசிவரை காந்தியடிகள் சுவாமிஜியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவுமில்லை.  ஒருநாள் காலை எல்லோரும் மடத்தில் கூடியிருக்கும்போது, சுவாமி விவேகானந்தர் அங்கிருந்த துறவிகளில் ஒருவரை அழைத்தார்.  இதோபார் நிச்சயஞ்! ஒருதுறவி ஒருபோதும் பிறருக்கு பாரமாக இருக்ககூடாது. நீ ஒருவரிடத்தில் உணவை யாசகம் பெற்றுக்கொண்டால் அதற்கான பிரதிபலனை ஏதாவது ஒருவகையில் திருப்பி கொடுக்கவேண்டும். அடுத்தவர் தரும் உணவை சாப்பிட்டு, சாப்பிட்டு துறவியர்களெல்லாம் சோம்பேறிகளாகிவிட்டனர். அடுத்தவர்களை சார்ந்து வாழ்வதால் ஒருவன் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு பதிலாக கீழ்நிலைக்கு சென்றுவிடுவார்கள். ஆகையால் நம்மால் பெரியதாக ஏதாவது செய்யமுடியாவிட்டாலும் நம்மால் இயன்ற ஏதாவது ஒன்றை திருப்பி செய்யவேண்டுமென கூறினார். 
நீ தினமும் யாசகம் பெறும்போது சிறிது காசையும் யாசகம் பெறு. கிடைக்கும் பணத்தில் ஒரு சிறு மண்பானை வாங்கு.  அதில் தண்ணீர் நிரப்பி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடு. சோம்பேறியாக உட்கார்ந்து பிறர்கொடுக்கும் உணவை உண்பது கண்டனத்திற்குரியதென சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார்.  இதைக்கேட்டு கொண்டிருந்த ஒரு துறவி, அதற்குபின் தனக்கு தெரிந்த வைத்திய தொழிலை தினமும் 50 கிலோமீட்டருக்கு மேல் நடந்தே சென்று ஏழைகளுக்கு செய்துவந்தார். பசிக்கும்போது பிச்சையெடுத்து உண்டார். ஏழைகளுக்கு உதவுவதை வாழ்வில் ஒரு லட்சியமாகவே தன்னுடைய இறுதி மூச்சுவரை செய்துவந்தார் அவர்தான் சுவாமி நிச்சயானந்தர் .
சுவாமி விவேகானந்தரின் தோற்றம் பற்றி அமெரிக்க செய்தித்தாள்கள் போற்றி எழுதின.  அவரது கண்கள் காண்போரை கட்டி இழுக்கும் விதமாக காந்த சக்தியுடன் இருக்கிறது. அவரது தேகமோ ஒளிவீசிக்கொண்டிருப்பது போல் இருக்கிறது. அழகு, ஆற்றல், அமைதி, ஆன்மீகம் எல்லாம் ஒன்று சேர்ந்த உருவமாக திகழ்கிறார் இந்த இளம் இந்திய துறவி எனப்பாராட்டி எழுதின. அதை ஒருநாள் சக துறவியான சுவாமி விரஜானந்தர் வாசித்துக்கொண்டு இருந்தார். நாங்களும் ஆவலுடன் அதை கேட்டுக்கொண்டு இருந்தோம். உண்மையில் சுவாமிஜியின் கண்களை நேருக்குநேராக பார்க்கமுடியாது. அதில் இருந்துவந்த ஒளிப்பிரவாகம் நம்மை எரித்து விடுமோ என்றுகூட தோன்றும். தினமும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார் சிலசமயம் எழுந்து நடந்துக்கொண்டே சிந்திப்பார். அப்பொழுது ஒரு கம்பீரம் அவரது நடையில் இருக்கும். அதிகாலை குளிரில் கௌபீணம் மட்டும் உடுத்தி காலை பனியில் செல்வது அவருக்கு பிடித்த ஒன்று. அதேப்போல ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர். ஆனால் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் அவர்பெற்ற மதிப்பெண்கள் 100 க்கு 40 மார்க் மட்டுமே.
அன்று 1902ம் ஆண்டு ஸ்ரீராமக்கிருஷ்ணரின் ஜெயந்திவிழா மார்ச் 16 ம் நாள் வந்தது. சுவாமிஜியால் எழுந்து நடக்கல்கூட முடியாமல் உடல் சோர்வுற்று இருந்தார். தன்னைக்காண வந்திருப்பவர்கள் ஏமாற்றத்துடன் செல்லக்கூடாது என்று தன்னால் எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் ஜன்னல் கம்பியை பிடித்து எழுந்து தம்மை பார்க்கவந்தவர்களை நோக்கி கையசைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். கடும் நோய், உணவுக்கட்டுப்பாடு மருத்துவ சிகிச்சை இவையெல்லாவற்றையும் கடந்தவராகவே சுவாமிஜி இருந்தார். அந்தசமயத்தில் வந்த ஆங்கில என்சைக்கிளோபீடியாவின்  10 தொகுதிகளையும் வாங்கி படித்தார். இதைக்கண்ட அவரது சீடர் .இந்த நூல்களை படித்து முடிக்கவே ஒரு ஆயுள் வேண்டும்போல இருக்கிறதே நீங்கள் எப்படி படித்தீர்கள் எனக்கேட்டார். உனக்கு சந்தேகம் இருந்தால் இதிலிருந்து கேள்விகளை கேள்.  நான் பதில்சொல்கிறேன் என்று அமைதியாக கூறினார் சுவாமிஜி. இது எப்படி சாத்தியம் என்று கேட்டபோது பிரம்மச்சரிய விரதம் இருப்பதால் படிப்புஞானம், கேள்விஞானம் எல்லாம் மனதில் அழியாமல் பதிந்திருக்கும் என்றார். சுவாமிஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஆனாலும் தினம் தன்னுடைய சீடர்களுக்கு பயிற்சியளிப்பதை அவர் நிறுத்தவில்லை .
அவரை எல்லோரும் ஓய்வெடுக்க சொன்னபோதும் அவர் கேட்கவில்லை என்னுடைய குரு ராமக்கிருஷ்ணரை வழிநடத்திய காளிதேவி, இதுவரை என்னையும் வழிநடத்தினார். இப்பொழுது அவரை காணவில்லை. என் பணி முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அந்த தாய் என்னை ஓய்வு எடுக்க அனுமதித்ததே இல்லை. எனக்கு பணிகள் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதைத்தான் நான் இன்றுவரை செய்துகொண்டு  இருக்கிறேன் என்றார்.  நாட்கள் ஓடியது..... ஏப்ரல் மாதமும் பிறந்தது.  அப்பொழுது மடத்தின் பெண் துறவிகளை அழைத்தார். அதில் வெளிநாட்டு சிஷ்யையான மெக்லவுட்டை பார்த்து, மெக்லவுட் இந்த உலகில் எனெக்கென்று எதுவும் இல்லை. அவ்வளவு ஏன் ஒரு தம்பிடிக்காசு கூட  என்னிடமில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட யாவற்றையும் மடத்திற்கே கொடுத்துவிட்டேன் என்றார். 
சுவாமிஜி! நான் உங்களுக்கு மாசாமாசம் 50 டாலர்  தருகிறேன் என்றார் மெக்லவுட்.  இப்பொழுது 200 டாலர்களை எடுத்துக்கொள்ளுங்கள் என கூறினார். அதையும் சுவாமிஜி சிரித்துக்கொண்டே மடத்திற்கு கொடுத்துவிட்டார். மடத்தில் போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுப்பது வழக்கம்.  அப்படி சிஸ்டர் நிவேதிதா வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை கொடுத்துக்கொண்டு இருந்தார். அதை ஜன்னல் வழியாக மெக்லவுட்டுடன் பார்த்துக்கொண்டிருந்த ஸ்வாமிஜி, மெக்லவுட் எனக்கு எதுக்கு பணம் நான் என்னுடைய நாற்பதாவது வயதை பார்க்கப்போவது இல்லை  என்றார். என்ன சுவாமிஜி சொல்கிறீர்கள்?! புத்தர் தன்னுடைய 40வது வயதிலதானே ஆன்மீக பணிகளை தொடங்கினார் 80 வயதுவரை அவர் வாழ்ந்தாரே என்று கேட்டபோது, நான் செய்யவேண்டிய பணிகளையெல்லாம் செய்துவிட்டேன் என்று விவேகானந்தர் பதிலளித்தார். ஆனாலும் உங்கள் வழிகாட்டுதல் எல்லோருக்கும் வேண்டுமே என்று மெக்லவுட் கேட்டபோது, பெரியமரம் இருந்தால், அதன்கீழ் இருக்கும் சின்னமரங்கள் வளராது. சின்னமரங்கள் வளரவேண்டும் என்றால் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தால்தான் அது சாத்தியமென்றார்.  சுவாமிஜி.  விவேகானந்தர் என்ன எண்ணத்தில் சொன்னார்,  மெக்லவுட் என்ன கோணத்தில் எடுத்துக்கொண்டார் என எனக்கு புரியவில்லை ஆனாலும் அவரது நோய் முற்றிலும் குணமாகி அவர் மீண்டும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது ..

அந்த என்னவென்று அடுத்தப்பதிவில் பார்க்கலாம் .
நன்றியுடன்
ராஜி 

23 comments:

  1. உனக்குள் இவ்வளவு திறமையை ஒளித்து வைத்திருக்கிறாயா?
    சூப்பர் ராஜி.

    ReplyDelete
    Replies
    1. இது கிண்டலில்லையே சேக்ஸ் அண்ணா?!

      Delete
    2. //இது கிண்டலில்லையே சேக்ஸ் அண்ணா?//
      கிண்டல் இல்லை.இப்போது வாசிக்க ஆள் இருக்கிறதோ இல்லையோ இது போன்று தினமும் எழுதினால் என்றாவது யாராவது வாசிப்பார்களே. அதை தவிர்த்து பேஸ்புக்கில் கிடந்து உபயோகமற்று எழுதிக் கொண்டிருக்கிறாளே என்ற ஆதங்கமும் வந்தது.

      Delete
    3. பிளாக் எனக்கு உயிர்மூச்சு. பேஸ்புக் எனக்கு பொழுது போக்கு...

      எப்பயுமே சீரியஸ் மூட்லயே இருக்கக்கூடாது சேக்ஸ் அண்ணா. அப்பப்ப எண்டர்டெயின்மெண்டும் வேணும். இல்லன்னா பைத்தியம் பிடிச்சிடும்.

      Delete
  2. அருமையான பதிவு......///பெரியமரம் இருந்தால், அதன்கீழ் இருக்கும் சின்னமரங்கள் வளராது. சின்னமரங்கள் வளரவேண்டும் என்றால் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தால்தான் அது சாத்தியமென்றார்.///எவ்வளவு பெரிய தத்துவம்......எல்லாவற்றுக்கும் பொருந்திப் போகிறதே.........விவேகானந்தர் குறித்த தெரியாத் தகவல்கள்....னன்றி தங்கச்சி......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. அருமையான படைப்பு , தொடர்கிறேன்... ஸ்ரீதர்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோ

      Delete
  4. ஆஹா!அற்புதமான பதிவு.பாராட்டுக்கள். கஞ்சன்காடு பாப்பா ராமதாசரும் ராம் சூரத் குமாரை உபதேசம் அளித்தவுடன் துரத்திவிட்டார். ஏனென்றால் ஒரு பெரிய மரத்தின் நிழலில் மற்றொரு மரம் வளர முடியாது என்று. ராம் சூரத் குமார் திருவண்ணாமலை சென்று யோகி ராம்சுரத் குமார் ஆக இன்று ஒளிவீசிக்கொண்டிருக்கிறார். விவேகானந்தர் வாக்கும் அதே போல் உள்ளது. Great men think alike ! அதுபோல் காங்கிரஸ் கட்சியின் முகமூடியை அன்றே தோலுரித்து காட்டிவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! இது புது தகவல்ப்பா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      Delete
  5. அருமையான பயனுள்ள தகவல்கள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. நல்ல பதிவு சகோதரி. நிறைய தகவல்கள்.

    கீதா: நல்லதொரு பதிவு ராஜி. விவேகானந்தர் பற்றி நிறைய வாசித்ததுண்டு. அவரது இந்திய சுற்றுப்பயணம் சென்னையில் பேசியது. அவரது கடைசி தருணங்கள் அதில் இன்னும் சில புரியப்படாதவை இருப்பதாக எல்லாம். கன்னியாகுமரியி விவேகானந்த கேந்திராவில் புத்தகங்களும். என்று. உங்கள் பதிவிலும் நிறைய தெரிந்து கொண்டேன். அருமை ராஜி.

    அரசியல்/கட்சி பற்றி அவர் சொன்னது எத்தனை உண்மை இல்லையா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதாக்கா. விவேகானந்தர் சாமியார் இல்ல. அறிவாளி. அதான் எல்லா சப்ஜெக்ட்டிலும் புலியாய் இருந்திருக்கார்

      Delete
  7. அருமையான பதிவு சகோதரியாரே
    தொடருங்கள்
    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தொடருங்கள்..
      தொடர்கிறேன்

      Delete
  8. பள்ளிக்காலம் முதல் விவேகானந்தர்மீது தனித்த ஈடுபாடு எனக்கு உண்டு. அபரிதமான அவருடைய குணங்களும், நடத்தைகளும், பேச்சும் எவரையும் அவர்பால் ஈர்க்கும் திறன் கொண்டவை. எங்கள் இல்லத்தில் உள்ள படங்களில் ஒன்று விவேகானந்தரின் படமாகும். அந்தப் படத்தைப் பார்க்கும்போதே மனதுள் நம்மையும் அறியாமல் ஓர் எழுச்சி வெளிப்படுவதைக் காணலாம். அருமையான, ஆழமுள்ள பதிவுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடித்தமானவர் பற்றி பகிர்ந்ததில் ஆனந்தமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  9. விவேகானந்தர் பற்றிய தகவல் நிறைந்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தும் நிறைவை தந்தது சகோ

      Delete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

    ReplyDelete
  11. அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete