திங்கள், செப்டம்பர் 10, 2012

திரும்பி பார்க்கிறேன்.., நன்றிகளுடன்- 250வது பதிவு ஸ்பெஷல்


ராஜியின் 250வது பதிவுக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நான் சுஜி, ராஜியோட மனசாட்சி. ராஜியோட புது பி.ஏ. இப்போ அவங்க “பிரபல”பதிவராகிட்டாங்களாம். ரொம்ப பிசியாகிட்டாங்களாம். அதனால என்னை வேலைக்கு சேர்த்திருக்காங்க. அவங்க சொல்ல சொல்ல நான் டைப் பண்ணி, பதிவா போடுவேன்.

பிரபலம் ஆகிட்டாலே பேட்டி குடுக்குனும், அப்போதான் பிரபலம்ன்னு ஒத்துக்குவாங்கன்னு ராஜி ஒரே அடம். அதனால, ராஜியோட 250வது பதிவுக்காக ராஜிக்கிட்ட  ஒரு சின்ன  பேட்டி. பேட்டி எடுக்க போறது சுஜியாக நானே, பின்ன இவளை பேட்டி எடுக்க பிபிசில இருந்தா வருவாங்க.

ஓக்கே ரெடி, ஸ்டார்ட்....,

ஏய் சுஜி! மேக்கப்லாம் சரியா இருக்கா? புடவை எனக்கு மேட்சா ஆகுதா? அப்புறம் பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடிச்ச மாதிரி, முகத்துல  பவுடர் இருக்க போகுது.

லூசு! லூசு!  இந்த  பேட்டி  உன் பிளாக்ல எழுத்தால மட்டும்தான் வரப்போகுது. என்னமோ சன் டிவில வர மாதிரி மேக்கப், புடவைன்னு அலப்பறை குடுக்குறியே?!

நீதான்டி லூசு மேக்கப், நகை, புடவை இல்லாம  பேட்டியா?! டிவில வராட்டி என்ன? நீ  டைப் பண்ணும்போது நடுவுல, நடுவுல கம்மல் நல்லா இருந்துச்சு, சேலை சூப்பர்ன்னு போட்டுக்கோ.

சனியனே! உன்னோட பெரிய ரோதனையா போச்சு. கேள்வி கேட்குறேன். பதில் சொல்லித் தொலை.

ராஜி! நீ ஏன் இந்த ”பிளாக்கை” ஆரம்பிச்சே?


குட் கொஸ்டீன்,  இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்பேன்னுதான் நான் உன்னை பி.ஏ வா செலக்ட் செஞ்சேன். ஹி..ஹி..ஹி.

நான் இந்த ”பிளாக்கை” ஏன் ஆரம்பிச்சேன்னா அது என்னோட சின்ன வயசு ஆசை.

ஏய் நிறுத்து, எத்தனை பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க. சின்ன வயசுல குச்சி முட்டாயிக்கும், குருவி ரொட்டிக்கும் ஆசபட்டேன்னு சொல்லு. அத வுட்டுட்டு பிளாக்குக்கு ஆசபட்டேன், பில்கேட்ஸ் ஆகனும்ன்னு ஆசபட்டேன்னு கலர் கலரா ரீல் வுடாதே.
உங்க அப்பா கம்ப்யூட்டர் கிளாசுல சேத்து விட்ட அன்னிக்கு. சார், இந்த கீபோர்டுல ஏ,பி,சி,டி லாம் வரிசையா இல்லாம அங்கங்க இருக்கு. எனக்கு வேற கீபோர்டு தாங்கன்னு சொல்லி, சாரையே ”ஙே”ன்னு முழி பிதுங்க வெச்சதை நீ மறந்திருந்தாலும் நான் இன்னும் மறக்கலடி.

இதுக்குதான் நம்மளை பத்தி நல்லா தெரிஞ்சவங்களை வேலைக்கு சேர்த்துக்கூடாதுன்னு சொல்றது. ம்ம் அடுத்த கேள்வியை  கேளு. 

இந்த பிளாக் ஆரம்பிச்சதன் நோக்கம் என்ன ராஜி?

ஒரு சிந்தனை சிற்பியோட சிந்தனைகளைலாம்  ஒரு சின்ன மூளைக்குள்ள அடைச்சி வச்சு என்னோடவே மக்கி போகாம, மத்தவங்களுக்கெல்லாம் யூஸ் ஆகட்டுமேன்னுதான்.

இன்னாது சிந்தனை சிற்பியா?! யாரு? எங்க? எங்க?

ஏய் ரொம்ப  ஓட்டாதடி, நான் எழுதறதையும் சாரி நான் எழுதுறதை படிக்க 183 ஃபாலோயர்ஸும் அதில்லாம சில பேரும் வந்து போறாங்க  தெரியுமா உனக்கு?

ம் ம்  அவங்கலாம் வழி தவறி வந்து மாட்டிக்கிட்டவங்களா இருப்பாங்க. ஆமா, ஆரம்பிச்சி ஒரு அஞ்சாறு மாசம், யாருமே படிக்காம காத்து வாங்கிச்சாமே?!

                                            

அடி நாயே! நான் எழுதுறது நல்லா இல்லாமயா 250வது  போஸ்ட்  வரை வந்திருக்கேன்.  ஒரு பிளாக்  நடத்தறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?. முதல்ல 4 போஸ்ட் தேத்தி வச்சுக்கனும். அப்புறம் அதுக்கு பொருத்தமான தலைப்பு வைக்கனும். சரியான நேரம் பார்த்து போஸ்ட் பண்ணனும். திரட்டிகளில் இணைக்கனும் அப்புறம் நிறைய பிளாக் போய் படிக்குறமோ இல்லையோ சூப்பர் சகோ. அருமை அக்கான்னு கமெண்ட் போடனும். 

நாயே! நாயே! நான் கேட்டதுக்கு  பதில் சொல்லாம என்னென்னமோ பினாத்துறே. நான் கேட்டதுக்கு மட்டும் பதிலை சொல்லுடி முதல்ல. 

என் ”பிளாக்” அனாதையா கதறுதை பார்த்து அறுவடைங்குற பிளாக் வெச்சிருக்குற ஆதிரைங்கறவங்கதான் முதல்ல கமெண்ட் போட்டு என் பிளாக்க்கு வாழ்வு குடுத்தாங்க. ரொம்ப நாளைக்கு அவங்க மட்டுமே வந்திருந்தாங்க. அப்புறம், தம்பி ”சிரிப்புபோலீஸ்” ரமேஷ் வந்து கமெண்ட் போட்டு ஃபாலோயரும் ஆனார். அவரை தொடர்ந்து டெரர் கும்மில இருக்குறவங்கலாம்  வந்து ஃபாலோயர் ஆகி கமெண்டும் போட்டாங்க. 

அப்போலிருந்து, கமெண்ட்ஸ்லாம், சூடு வெச்ச ஆட்டோ மீட்டர் போல ஓடி, இன்னிக்கு, ”மின்னல்வரிகள்”கணேஷ் அண்ணா,  ”கவிதைவீதி” சௌந்தர், ”வேடந்தாங்கல்”கருண்,  ”வீடு திரும்பல்” மோகன்குமார்.,  ”மயிலிறகு” மயிலன், “ராஜப்பாட்டை” ராஜா, “தமிழ்வாசி”பிரகாஷ்,“ ”தூறிகையின் தூறல்”மதுமதி, “தீதும் நன்றும் பிறர் தர வாரா “ரமணி ஐயா.”னான் பேச நினைப்பதெல்லாம்”சென்னை பித்தன் ஐயா, ”தென்றல்” சசி, “குட்டி சுவர்க்கம்” ஆமினா, “குறை ஒன்றும் இல்லை” லட்சுமி அம்மா, “திண்டுக்கல் தனபாலன் அண்ணா, “கோவை நேரம்”ஜீவான்னு போய் கிட்டே இருக்கு. அவங்களுக்கெல்லாம் இந்த நேரத்துல நான் நன்றியை தெரிவிச்சுக்குறேன். இன்னும் நிறைய பேரு விடுபட்டு போய் இருக்கு. அவங்கலாமும் மன்னிச்சுக்கோங்க. எல்லார் பேரையும், ஒண்ணு விடாம ஞாபகம் வெச்சு சொல்ல நான் ஒண்ணும் ”அட்ரா சக்க” சிபி சார் இல்ல.

ம் ம் ம் கண்டிப்பா நன்றி சொல்லனும்தான். ஏன்னா, உன் எழுத்தையும் படிக்குறாங்களே அதுக்கு. சிபி சார் போல ஞாபகசக்தி இல்லைன்னு சொல்லிட்டு அவர் பேரை லிஸ்ட்ல விட்டுட்டியே?!

ம் ம்  முதல்லலாம் பதிவு மட்டும்தான் போடுவேன். ஆனா, கொஞ்ச நாள் முன்ன அட்ரா சக்க பிளாக்ல இளம்பதிவர்களுக்கு டிப்ஸ்ன்னு ஒரு போஸ்ட் போட்டிருந்தார். . அதை பார்த்துதான் போஸ்ட் எப்போ போடனும்? திரட்டிகளில் இணைக்குறது எப்படி?ன்னு சில டிப்ஸ் பார்த்து கத்துக்கிட்டேன். இப்பவும் போஸ்ட் போட்டு, திரட்டிகளில் இணைக்கும்போது நிறைய சொதப்புவேன். மெயில் அனுப்பி கரெக்ட் பண்ண சொல்வார்.அதனால் அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

ம் ம் ம் உன் பிளாக்கை நீயே டிசைன் பண்ணியா? நல்லா இருக்கே அதான் கேட்டேன். 

ம்ஹூம், முதல்ல ஆதிரைதான் டிசைன் பண்ணி குடுத்தாங்க. அவங்கதான் ஃபீட் ஜிட், ஹிஸ்டாஸ், பிரபல இடுககள்லாம் ஆதிரைதான் பண்ணி குடுத்தாங்க. அவங்க இப்போ வெளிநாட்டுக்கு போய் வேலையிலயும் பிசியாகிட்டதால இப்போ செஞ்சு தரதில்ல. கலைஞ்சு போய் இருந்த ஓட்டு பட்டைலாம் தங்கச்சிக்காக ஒழுங்கா அடுக்கி குடுத்தது மின்னல்வரிகள் கணேஷ் அண்ணா. அவங்களுக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்குறேன்.

எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு கமெண்ட் போடுறாங்களே, காசு கீசு குடுத்து கமெண்ட்  போட சொல்றியா ராஜி?!

நீ ரொம்ப டூ மச்சா பேசுறடி. பாவம், நம்ம  புள்ளையாச்சேன்னு அவங்களா பாத்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்கடி . என்மேல அவங்களுக்கெல்லாம் அவ்வளவு அன்பும்மா அன்பு !!!

எதாவது உருப்படியா எழுதி இருப்பேன்னு உன்னையும், உன் எழுத்தையும் நம்பி வந்து மாட்டிக்கும் சாரி, சாரி படிக்கும்  மக்களுக்கு எதாச்சும் சொல்ல விரும்பறியா?

இந்த வலைப்பதிவை படித்த, படிக்கும், படிக்க போகும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல.
 போட்டியே, செண்டிமெண்டால  ஒரே போடு, இந்த ஒரு வார்த்தைதான் இந்த போஸ்ட் போடப்போற  மொக்கைல இருந்து உன்னை காப்பாத்த போகுது. 

                                                 

 டிஸ்கி: இது எனது 250வது பதிவு. என் பிளாக்குக்கு வந்து, இது வரை என்னை ஆதரித்த 183 ஃபாலோயர்சுக்கும், ஒரே ஒரு 50,485 பேருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இனி தொடர்ந்து என் பிளாக்குக்கு வந்து, கமெண்ட் போட்டு, ஃபாலோயர்ஸ் ஆகாதவங்க ஃபாலோயர்ஸ் ஆனா, அடையாறுல ஒரு ஃபிளாட்டும், டொயோட்டா காரும், லலிதா  ஜுவல்லரில பத்து பவுன் நகைலாம் வாங்கி தர வசதியில்லீங்க. பதிலுக்கு நானும் உங்க பிளாக் வந்து கமெண்ட் போட்டு ஓட்டும் போடுவேன்னு  இந்த நேரத்துல சொல்லிக்குறேனுங்க..

47 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அப்ப்ப்ப்பா இம்புட்டு பெரிய கமெண்ட் போட்டுட்டீங்களே சார். வாழ்த்துக்கு நன்றி

   நீக்கு
 2. 50வது பதிவுக்கு வாழ்த்துகள் .. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. அடப்பாவமே.. லிஸ்ட்ல என் பேறு இல்லையே.. அப்ப நான் பதிவர் இல்லையா? :( :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறந்துட்டேன். சாரிப்பா தம்பி.

   நீக்கு
 4. 250-க்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ!

  250 அப்பிடியே 2000-ம் ஆகட்டும் ஏன்னா தமிழ்நாட்டுல (பதிவை படிக்கும்) தைரியமான மனது கொண்டவர்கள் இன்னும் நிறைய பேறு இருக்காங்க! :) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை பாராட்டுற மாதிரி கலாய்க்குறீங்களே தம்பி

   நீக்கு
 5. பிரபல பதிவர் ராஜி 250வது பதிவு போட்டுட்டாங்க. இனியும் நிறைய மனசாட்சி பேச வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம் ம் ம் படிக்க நீங்கலாம் இருக்கும்போது மனசாட்சியோடு பேசுறது நிறையவே நடக்கும் த்மபி

   நீக்கு
 6. 250 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் நிறைய சாதிப்பதற்கும்!

  ஸ்ரீ....

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள் ! Continue ur good work of spreading the humour

  பதிலளிநீக்கு
 8. நகைச்சுவை இழையோட
  250 வது பதிவைத் தந்தமைக்கும்
  பதிவு ஆயிரமாயிரமாய் பல்கிப்பெருகவும்
  எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

   நீக்கு
 9. என்ன தன்னடக்கம் ராஜி வாழ்க வளர்க

  பதிலளிநீக்கு
 10. ம்ம்ம..எல்லாம் நேரம்....சரி...வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 11. 250 பதிவு போட்டு பிரபல பதிவாளர் ஆன பிறகு இந்த சின்ன பதிவாளரை மறந்து போயிட்டீங்க....நீங்க மறந்துட்டீங்களா இல்லை உங்க பிஏ என் பெயரை இருட்டடிப்பு செய்து விட்டார்களா? இது யார் செய்த சதி?  திரும்பி பார்க்கிறேன் என்று சொன்ன நீங்கள் எப்போ நீங்கள் என்னை பார்ப்பிர்கள் என்று சொல்லாமல் போய்விட்டீர்களே

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் ராஜிம்மா!

  பதிலளிநீக்கு
 13. 250 ல ஜோரா கலக்கிட்டீங்க ராஜி மேடம் மனசாட்சி கிட்ட பெட்டி கொடுத்தது புது டெக்னிக்
  தொடர்ந்து அசத்துங்க.

  பதிலளிநீக்கு
 14. 250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராஜி!!

  பதிலளிநீக்கு
 15. 250வது பதிவுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 16. 184 அதாங்க Follower

  இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டனே.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. நன்றிக்கு நன்றி .வாழ்த்துகள்...250 விரைவில் 2250 ஆகட்டும்.

  பதிலளிநீக்கு
 18. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...

  பதிலளிநீக்கு
 19. ஒன்னையே தாங்க முடில... இதுல மனசாட்சி வேறயா?

  அப்புறம் நன்றிலாம் சொல்லி அப்டியே விட்றபடாது... அந்த இனாம் இனாம்....:)

  பதிலளிநீக்கு
 20. நானும் உங்க பிளாக் வந்து கமெண்ட் போட்டு ஓட்டும் போடுவேன்னு இந்த நேரத்துல சொல்லிக்குறேனுங்க..//

  நீங்க பிரபலபதிவர் தானுங்க :-)

  பதிலளிநீக்கு
 21. //எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு கமெண்ட் போடுறாங்களே, காசு கீசு குடுத்து கமெண்ட் போட சொல்றியா ராஜி?!//

  எங்க கஷ்ட்டத்தை உலகறீய செய்த சுஜீக்கு மனமார்ந்த நன்றிகள்!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..

  பதிலளிநீக்கு
 22. //நான் எழுதுறது நல்லா இல்லாமயா //

  ஆமி இது உனக்கு தேவையா? ராஜி ப்ளாக்கிற்கு வராதேன்னு படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டீயா? செவத்துல ரத்தம் வர்ர அளவுக்கு முட்டிக்கோ!

  பதிலளிநீக்கு
 23. >>அப்புறம் நிறைய பிளாக் போய் படிக்குறமோ இல்லையோ சூப்பர் சகோ. அருமை அக்கான்னு கமெண்ட் போடனும்.

  உண்மை விளம்பி! வாழ்த்துகள்


  >>ஆமினா9/11/2012 7:06 am

  //எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு கமெண்ட் போடுறாங்களே, காசு கீசு குடுத்து கமெண்ட் போட சொல்றியா ராஜி?!//

  எங்க கஷ்ட்டத்தை உலகறீய செய்த சுஜீக்கு மனமார்ந்த நன்றிகள்!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..


  இத்தனை நடந்திருக்கா? மைண்ட்ல வெச்சுக்கறேன்

  பதிலளிநீக்கு
 24. 250 என்ன... இன்னும் 2500ம் எழுதிக் குவிக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். சுஜி நிறைய உண்மையே பேசும் போலத் தெரியுதே... அடிக்கடி வரச் சொல்லும்மா.

  பதிலளிநீக்கு
 25. மிகவும் சந்தோசம் சகோதரி... மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 26. வாழ்த்துக்கள் சகோதரி!

  இன்று என் தளத்தில்!
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
  http://thalirssb.blogspot.in/2012/09/8.html


  பதிலளிநீக்கு
 27. ..”அருமை அக்கா”.. :)

  வாழ்த்துக்கள் அக்கா.. இனி நானும் உங்க பாலிசி யை பாலோ பண்ண ஆரம்பிச்சுடேன்..

  //அப்புறம் நிறைய பிளாக் போய் படிக்குறமோ இல்லையோ சூப்பர் சகோ. அருமை அக்கான்னு கமெண்ட் போடனும்.

  பதிலளிநீக்கு
 28. 250-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்... நம்ம பக்கத்தில நேத்து தான் 300! :))

  தொடர்ந்து அசத்த வாழ்த்துகள்.


  பதிலளிநீக்கு
 29. சுஜி உங்கள விட பெஸ்ட் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு