வியாழன், செப்டம்பர் 13, 2012

அத்திரி பாச்சா கொழுக்கட்டை- பாட்டி சொன்ன கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர். வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை.

பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் செய்ய சென்ற ஊரிலிருந்து மிக பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததால் மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போயிருந்தான்.வெகுநாள் கழித்து விருந்துக்கு வந்த மருமகனை மாமியாரும் நன்கு உபசரித்தாள்.வேளைக்கு ஒரு பலகாரம் செய்து அசத்தினாள்.

அதில் மருமகனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டையே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே மனனம் செய்து உச்சரித்தபடியே நடந்தான்.

வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்தது.அதைத் தாண்டிச் செல்லும் நோக்கில் குதித்தவன் சட்டென்று 'அத்திரி பாச்சா' என்றான்.

மிகப் பிரயத்தனப் பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்பவர்கள் இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது 'அத்திரி பாச்சா'எனக் கூற பிறகு கொழுக்கட்டைப் பேரை மறந்து அத்திரி பாச்சா எனக் கூறிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

மனைவியிடம் மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்துக் கூறியவன் எனக்கு அதே போல அத்திரி பாச்சா செய்து கொடு என்றான்.மனைவி குழம்பிப் போனாள்.இதென்ன புதுப் பேராக உள்ளது.இப்படியொரு பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்.

கணவன் திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல மனைவி தெரியாது என்றே கூற கோபமான அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கன்னம் வீங்கிப் போனது.

இதைப் பார்த்த அவன் அம்மா அடப்பாவி இப்படி அடித்து கன்னம் கொழுக்கட்டை போல் வீங்கி விட்டதே எனஅவன் சந்தோஷத்தில் குதித்தபடி அதேதான்....அந்தப் பேர்தான் கொழுக்கட்டை ...கொழுக்கட்டை என்று குதித்தான்.

இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் பேரை மறந்து அத்திரி பாச்சா என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறையச் செய்து கொடுத்தாள்...

குட்டீஸ் உங்களுக்கும் [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை பிடிக்கும் தானே?


20 கருத்துகள்:

 1. [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை- அருமை !

  பதிலளிநீக்கு
 2. இது நான் சிறுவயதில்படித்த மற்றும் என் குழந்தைக்கு சொல்லி தந்த கதை அதை ஒழிந்து இருந்து கேட்டு பதிவாக இட்டுள்ளீர்கள் சகோ

  பதிலளிநீக்கு
 3. இந்த "அத்திரிபாச்சா" கதை வார்த்தை மாறாமல் அப்படியே 1947 ல் என்னுடைய 8 வயதில் கேட்டதுண்டு.

  65 வருடம் கழித்து இன்னும் அது இணையத்தில் "ராஜி" வாயிலாக படித்த பொழுது "அத்திரிபாச்சா" என்று என் உள்ளம் கூவியது.

  இப்பதிவு சில நிமிடங்கள் நான் 8 வயது சிறுவனாக இருந்த பொழுது நடந்தவைகள் மனத்திரையில் ஓடவைத்தது.

  நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 4. எல்லாம் ரைட்டு அடிச்சது மனைவியாமே? வீங்கியது கணவன் கன்னமாமே

  பதிலளிநீக்கு
 5. சிறுவயதுக் கதையைப் பகிர்ந்து எங்களையும் மாணவப்பருவத்துக்கு அழைத்துச் சென்று விட்டாயம்மா. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. எல்லாருமே சொல்லி இருப்பதுபோல சிறு வயதுக்கதையை நினைவு படுத்தி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு

 7. எப்போதோ கோட்டது! நினைவு படுத்தனீர் நன்றி

  பதிலளிநீக்கு
 8. நான் ஏற்கனவே சிறு குழந்தைதான் இந்த கதையை மீண்டும்கேட்டதில் நான் இன்னும் பிறக்காதது போல் உணர்கிறேன் :D

  பதிலளிநீக்கு
 9. ஏற்கனவே அறிந்ததாக இருந்தாலும் உங்கள் எழுத்தில் படிக்க புதிதாக இருக்கு .. ( கடவுளே பொய் சொன்னா சாப்பாடு கிடைக்காது சொல்வாங்களே .. இன்னைக்கு நான் பட்டினியா ?)

  பதிலளிநீக்கு
 10. விநாயக சதுர்த்திக்குக் கொழுக்கட்டை உண்டா?

  பதிலளிநீக்கு
 11. கதை அருமை!
  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 12. அக்கா புதுக் கதை சொல்லுங்கக்கா! நல்ல நகைச்சுவை கதை பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ஓல்டு ஜோக்ஸ் 2
  http://thalirssb.blogspot.in/2012/09/2.html


  பதிலளிநீக்கு
 13. அப்ப அண்ணன் இப்படி சொன்னதுக்கபுறம்தான் நீங்க கொழுக்கட்டை செஞ்சு கொடுத்திங்களா? சாப்பிட்டவுடனே அண்ணன் கைவலி எல்லாம் போயிருக்கும்.

  பதிலளிநீக்கு
 14. அத்திரி பாச்சா[கொழுகட்டையை] நினைவு படுத்தியமைக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 15. அடி கிடைக்கும்னு பயந்து ப்ளேட்-ல வைச்ச 10 கொழுக்கட்டையும் அப்படியே இருக்கே! :))

  நல்ல கதை...

  பதிலளிநீக்கு
 16. அக்கா இது கேட்ட கதை புதுசா சொல்லுங்க.

  பதிலளிநீக்கு