புதன், செப்டம்பர் 05, 2012

பதில் சொல்வீர்களா சென்னை பதிவர் சந்திப்பு விழாக்குழுவினரே?!

                              
சாமி!  என் பொண்ணு ராஜி ஒரு வாரமா, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கா. சிரிச்சுக்கிட்டேயும் இருக்கா.

ஏம்மா! ஒரு பொண்ணு சந்தோஷமா இருக்குறது தப்பா?

ஐயோ சாமி! சந்தோசமா இருக்குறது தப்பில்ல. சகோன்னு சொல்றா. கமெண்ட்ன்னு சொல்றா. எங்க உறவுகள்ல இல்லாத பேர்களை சொல்லி அண்ணா, அம்மா, தாத்தான்னுலாம் சொல்றா. அதான் பயமா இருக்கு என்னன்னு பார்த்து சொல்லுங்க சாமி.

ம் ம் ம் புது புது பேர் சொல்லி புலம்புறங்களா? இது ஏதோ காத்து கருப்போட வேலைதான். அதை நான் ஓட்டிடுறேன் நீங்க பயப்படாதீங்கம்மா.

காளி,  நீலி, சூலி யாரு நீயி? எந்த ஊரு? ஏன் இந்த பொண்ணை பிடிச்சு இருக்கே?  ஒழுங்கு மரியாதையா சொல்லிடு. இல்லாட்டி உன்னை,,,,,

ம்  சொல்லிடுறேன்.என் பேரு பிளாக். நாந்தான் ராஜி உடம்புல இருக்கேன்.

இன்னாடா இது? ஒரு பொண்ணு உடம்புல செத்துப்போனவங்க ஆவி புகுந்துக்கும் இல்லாட்டி முனீஸ்வரன், காட்டேரி இதெல்லாம் புடிச்சு இருக்கு. நானும் ஓட்டியிருக்கேன். இதென்னது “பிளாக்”ன்னு புதுசா இருக்கே. விவரமா சொல்லு.

நான் கூகுள் வயத்துல பொறந்தவ. என் பேரு “பிளாக்”. 

ஓ அப்படியா!

பிளாக்ன்னா என்ன?

நான் ஒரு நோட்டு புத்தகம் போல, என்ன வேணும்னாலும் எழுதலாம், அரசியல், கதை, கவிதைன்னு எது வேணும்னாலும் எழுதலாம்.

ஓ, நீ வெளிநாட்டு பேயா?

ம்ம் நான் எங்கெங்கோ சுத்திட்டு தமிழ்நாட்டுக்கு வந்து பலப்பேரை பிடிச்சு இருக்கேன்.ராஜியையும் பிடிச்சுக்கிட்டேன். அந்த பலபேருல சென்னையில வசிக்குறவங்கலாம் ஒரு மீட்டிங்க் போட்டு, தமிழ்ல யார்லாம் பிளாக் எழுதுறாங்களோ, அவ்ங்கலாம் சந்திக்கலாம்ன்னு முடிவு பண்ணி போன ஞாயிற்றுக்கிழமை சந்திச்சுக்கிட்டாங்க. அதுல ராஜியும் கலந்துக்கிட்டா. அங்க பார்த்த சில காமெடியான விசயங்களை பார்த்துதான் சிரிச்சுக்கிட்டே இருக்கா.

ஓ அப்பிடியா?! என்ன நடந்துச்சுன்னு சொல்லு இல்லை உன்னை பாட்டில்ல அடைச்சு வச்சு கடல்ல தூக்கி போட்டுடுவேன்.

முதல்ல   ”தூரிகையின் தூறல்” மதுமதியை ஒரு பாடலாசிரியர் போல தமிழ்த்தாய் வாழ்த்து பாட சொன்னா, நடிகர் போல பாட்டுக்கு நடிச்சு காட்டுறார். மோட்டுவளையை நிமிர்ந்து பார்க்குறதையும், கைகட்டி கன்னத்தை தாங்குறதையும் பார்த்து அமைதியா வாழ்த்துப்பா பாட வேண்டிய நேரத்துலயும் ராஜி சிரிச்சதையும்,

                                                  
 வரவேற்புரையை நிகழ்த்த மண்டபத்துல இருக்குற சகோ “வீடு திரும்பல்” மோகன் குமாரை கூப்பிட சொன்னா, சந்திப்புக்கு வரவே வராத  சகோ “வீடு”சுரேஷ்குமாரை  கூப்பிட்டு, தனக்கு தானே பல்ப் கொடுத்துக்கிட்ட சகோ மதுமதியை நினைச்சும்...,

                                        

”சென்னை பித்தன்” ஐயாவை பத்தி பேச, மாங்கு மாங்குன்னு உக்காந்து, இத்தனை நாளா யூஸ் பண்ணாத மூளையை யூஸ் பண்ணி  எழுதி குடுத்தா, என்னமோ ஸ்கூல்ல மனப்பாடப்பகுதி ஒப்புக்கிற மாதிரி, ஏற்ற இறக்கம் இல்லாம, பெரியங்கலாம் இருக்காங்கன்ற  பதட்டத்துல,  ஒப்பிச்சுட்டு வந்த தூயவை நினைச்சும்...,

                                            


புலவர் ராமானுஜம் ஐயாவை பற்றி சௌந்தர்,   குறிப்புரை  வாசிக்கும்போது, ஒரு நந்தவனத்தை அறிமுகப்படுத்த, ஒற்றை ரோஜா வந்திருக்குன்னு சௌந்தர் சொல்ல,  “ஒற்றை ரோஜா, அதுத்வும் கருப்பு ரோஜா”ன்னு சொன்னா இன்னும் நச்சுன்னு இருக்கும் அங்கிள்ன்னு தூயா அடிச்ச கமெண்டை கேட்டு ராஜியால் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சதையும்..

கவிதை வாசிப்புக்குன்னு மதியத்துக்கு மேல நேரம் ஒதுக்கியும், அடமா, கவிதைப்போல ஏதோ ஒண்ணை வாசிச்சு ,  ராஜி போல அறிவிலிகளுக்கு புரியாமலே சுய அறிமுகம் செஞ்சுக்கிட்ட “வசந்த மண்ட்பம்” மகேந்திரனை நினைச்சும் சிரிப்பை அடக்க முடியலை.

என்ன புடவை கட்டுறது? மேட்சிங்கா என்ன ஜுவல்ஸ் போடுறதுன்னும், மேடையில் சுய அறிமுகத்தின் போது எப்படிலாம் பேச போறேன்னு டிரையல் பார்க்குறேன்னு  ஒரு வாரமா பிள்ளைகளை கொலையா கொண்ணும், மேடையில போய் நிண்ணு மைக்கை கையில வாங்கி என் பேர் ராஜி, என் பிளாக் பேரு “காணாமல போன கனவுகள்”ன்னு சொல்லி மேற்கொண்டு என்ன பேசறதுன்னு தெரியாம “ஙே”ன்னு முழிச்சுக்கிட்டு நின்னதையும்,

என்னதான் விழாக்குழுவுல  மெம்பரா இருந்தாலும், ரெண்டு இலையில் சாப்பிட்ட “கவிதைவீதி” சௌந்தரையும் (இல்லைன்னு சகோதரர் மறுக்கலாம். அதுக்கு ஆதாரம் இருக்கு. தூயா தன் மொபைல்ல படம் எடுத்திருக்கா. அவ வீட்டுக்கு வந்ததும் வெளியிடப்படும்),

                                                
                                       
பொதுவா கவியரங்கம்ன்னா சமூக அவலங்களை, வரதட்சனை, காதல், பிரிவு, நட்பை வெச்சு கவிதை எழுதுவாங்க. ஆனா முதல் முறையா, செலவே இல்லாம கல்யாண இன்விடேஷனை ”கவிதை”ன்ற பேருல வாசிச்சு, எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டு போன மயிலனை பற்றியும்தான் நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கா .

ஓ ஓ இவ்வளவு நடந்திருக்கா? அப்ப சிரிக்க வேண்டியதுதான். சரி நீ எப்போ ராஜியை விட்டு போவே? மட்டன் பிரியாணி தரவா? சிக்கன் சுக்கா தரவா?

ம்ஹூம் போக மாட்டேன்?

என்னாது போக மாட்டியா?! ஏன்?  திரட்டிகள்ல முதல்ல வந்தா போவியா? இல்ல லட்சம் ஹிட்ஸ் குடுத்தா போய்டுவியா?

ம்ஹூம் அப்பவும் போக மாட்டேன். வருசத்தொரு முறை இதுப்போல நடத்துறோன்னு விழாக்குழுவினர்லாம் வந்து கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்ய சொல்லு. அப்போதான் போவேன்.

அவ்வ்வ்வ்வ்வ் ஏன் இப்படி என்னை சதாய்க்குறே?! அது என் கையில இல்லியே , விழா குழுவினர்தான் இதுக்கு பதில் சொல்லனும்...,

62 கருத்துகள்:

 1. இவ்வளவு நாளா யூஸ் பண்ணாத மூளையை யூஸ் பண்ணி... ஆஹா... கன்ஃபர்ம் ஆயிடுச்சு. தங்கச்சிக்கு மூளை இருக்குதுன்னு. (என்கிட்டல்லாம் இல்லப்பா) விழாக்குழுவினர் சார்பா இதோ மதுமதி கையில கற்பூரத்தோட வந்துக்கிட்டே இருக்கார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ மதுமதி வரட்டும். அவராவது எனை பிடிச்ச பேயை ஓட்டுறாரான்னு பார்க்கலாம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. இதுக்கென்ன அர்த்தம்ன்னு சொல்லிடுங்க சார்

   நீக்கு
 3. அடுத்த வருசமும் இன்னும் சிறப்பாக நடக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க ஒருத்தர்தான் வயத்துல பாலை வார்த்த மாதிரி சொன்னீங்க சகோ. கணேஷ் அண்ணாலாம் எஸ்கேப்பிட்டார்

   நீக்கு
 4. பார்ரா....ஏன்னா ஒரு லொள்ளு...ம்ம் அசத்தல்

  பதிலளிநீக்கு
 5. என் போட்டோ போடாததை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் போதும் போதும்ன்ற அளவுக்கு எல்லா டிவிக்கு பேட்டி குடுத்திருக்கீங்களே அப்புறம் ஏன் இங்கயும் போட்டோ போடலைன்னு கரைசல் கொடுக்குறீங்க? இவ்வளவு விளம்பரம் ஆகாது சகோ

   நீக்கு
 6. விழா குழுவினரே சவுந்தர் கிட்டே ரெண்டாயிரம் பணமா தரணும்னு சொல்லிடுங்க. ஆதாரம் தூயா கிட்டே இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை வாங்கி பேங்க்ல டெப்பாசிட் பண்ணிடுங்க அடுத்த பதிவர் சந்திப்புக்கு அச்சாரமாய்...,

   நீக்கு
 7. நல்ல்லா தலைப்பு வைக்க கத்துக்க்குறாங்கையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை போல ஆளுங்ககிட்டதான் கத்துக்கிட்டேன் சகோ

   நீக்கு
 8. ராஜிக்கு பேய் பிடிச்சா ராஜி பாவமில்லை. பேய் தான் பாவம். கொஞ்ச நாள் கழிச்சு ஓடியே போயிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ பேய்க்கு ராஜியை விட்டு ஓட ஒரு வழியை தேடுங்க சகோ. பேய் பாவம்ல்ல.

   நீக்கு
 9. நம்ம பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்குதான் நாங்கலாம் இருக்கோமேன்ற பயமில்லாம இப்படிலாம் சின்னப்புள்ளத்தனமா நடக்க கூடாது சகோ.

   நீக்கு
 10. பதில்கள்
  1. இந்த புள்ள இன்னும் ஸ்கூல் டேஸ்லயே இருக்குது

   நீக்கு
 11. மேடையில அம்மாவும் பிள்ளையையும் ஏத்தியிருக்கணும்..சரி அடுத்த வருஷம் ஏத்திட்டா போச்சு... அடுத்த வருஷம் என்ன அடுத்தடுத்தடுத்த வருஷ்ங்கள்லேயும் சந்திப்பு நடக்கும்.யோசிப்பீங்களோ..யோசிங்க..யோசிங்க..இன்னும் முழுசா வீடியோவ போட்டுக் காட்டினா அவ்வளவுதான் போலிருக்கே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் நேரிலயே பார்த்துட்டோமே! ஆனாலும் எனக்கொரு டிவிடி காப்பி வேணும் சகோ.

   நீக்கு
 12. அடடா பேய் ராஜாவை பிடிக்காதா? ராஜியை மட்டுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜாவுக்கு பேயை பிடித்ததுனாலதானே இன்னும் ராஜி கூட தவறு தவறு டைப்பிங்க் மிஸ்டேக் பேய்கூட வாழ்ந்துகிட்டு இருக்காரு ஒரு அப்பாவி மனுசர்( என்னை போல உள்ள நல்லவங்க எல்லாம் அப்பாவியாதான் இருக்காங்க) ஹீ.ஹீ

   நீக்கு
  2. நீங்க அப்பாவியா? மதனிக்கிட்ட போன் போட்டு கேட்கவா?

   நீக்கு
 13. அப்படியே சீர்வரிசையும் ரெடிபண்ண சொல்லுங்க ராஜி!

  நாமெல்லாம் அம்மா வீட்டுக்கு போனா திரும்ப வரும் போது வெறும் கையோடவா வருவோம்?? இருங்க நான் வேணும்னா என்னன்ன சீர்வரிசை தரணும்னு லிஸ்ட் போட்டு தரேன் (ஒரு வாரம் ஆகும்! எழுதி முடிக்க...அவ்வ்வ்வ்வள்ளவு இருக்கு )

  :-)))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவ்வளவுதான் சகோகளுக்கு சீர் கொடுத்தாலும் மொட்டை அடிக்காமல் விட மாட்டீங்களே

   நீக்கு
  2. ராஜி... இவர விடாதீங்க! அமெரிக்கால இருந்து சீர் அனுப்புவார்! கூடவே தூயாவிற்கு தாய்மாமா சீரும் சேர்த்து வாங்கிடுங்க :-)

   நீக்கு
  3. எனக்கு ரெண்டு பொண்ணுங்க ஆமினா. சின்னது பேரு இனியா. அவளுக்கும் சேர்த்து தாய்மாமன் சீர் அனுப்ப சொல்லுங்கப்பா

   நீக்கு
 14. //நாமெல்லாம் அம்மா வீட்டுக்கு போனா திரும்ப வரும் போது வெறும் கையோடவா வருவோம்?? இருங்க நான் வேணும்னா என்னன்ன சீர்வரிசை தரணும்னு லிஸ்ட் போட்டு தரேன்//

  நான் வரலை இந்த விளையாட்டுக்கு ! சகோ சகோ -ன்னு சொல்றீங்களேன்னு பார்த்தா இப்படி சதி திட்டம் வேற இருக்கா ! ஓடுறா ! ஓடுறா சூனா பானா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் இந்த அண்ணா மட்டும் இப்படி சீர் செய்ய மாட்டேன்னு இருக்கார்? நாம ”பேசாம பாசமலர்” சிவாஜி, கிழக்கு சீமையிலே விஜயக்குமாருக்கு தங்கச்சியா பொறந்திருக்கலாம்.

   நீக்கு
  2. //”பேசாம பாசமலர்” சிவாஜி, கிழக்கு சீமையிலே விஜயக்குமாருக்கு தங்கச்சியா பொறந்திருக்கலாம்.//

   ஹா..ஹா..ஹா... செமையா சிரிச்சுட்டேன் ராஜிக்கா! கலக்குறீங்க :-))

   நீக்கு
  3. என்னா இது. நம்மளை வச்சு ரெண்டு பேர் இங்கே காமெடி பண்ணிக்கிட்டு இருக்கா மாதிரி தெரியுது !

   கிருஷ்ண ஜெயந்தி வருது தீபாவளி வருது. ராஜி நல்ல பிள்ளையா தூயா மூலமா எனக்கு பலகாரம் பண்ணி அனுப்பணும் சொல்லிட்டேன் ! சீரை பத்தி அப்புறம் பேசலாம். முதல்ல சுவீட்டு !

   நீக்கு
 15. மிகவும் வித்தியாசமான நடையில் பதிவர் சந்திப்பு பகிர்வு! வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதிவு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்து சிரித்தமைக்கு நன்றி

   நீக்கு
 16. ஆஹா இப்படில்லாம் கூட யோசிச்சீங்களா சூப்பர்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோசிக்கலாம் இல்லம்மா, அனுபவிச்ச உணர்வுகளை அப்படியே எழுதுனேன்

   நீக்கு
 17. அடுத்த வருடமும் கண்டிப்பாக கூட்டம் என்று அதில் புதுமையாக ஒரு நிகழ்ச்சி அறிமுகம் ஆகப் போகுதான். அதுதாங்க உங்களுடைய பேயாட்டம் அரங்கேற்றம் தானுங்க... "இந்த பதிவுல கலக்கிய" நீங்க மேடையிலும் நிச்சயம் கலக்குவிங்க என எதிர்பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க வருவதாய் இருந்தால் அரங்கேற்றம் உண்டு.

   நீக்கு
  2. நான் தினமும் பேய்யாட்டம் பாத்துகிட்டுதான் இருக்கேங்க இதை வேற இந்தியாவுக்கு வந்துதான் பாக்கணுமா

   நீக்கு
 18. நல்லாப் பேய் விரட்டுரீங்க..எதிர்காலம் நல்லா இருக்கும்..:P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? நீங்க நல்லா ஜோசியம் சொல்றீங்கோ

   நீக்கு
 19. நல்ல நகைச்சுவையுடன் கூடிய பதிவு! இரசித்தேன்!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 20. அடடா... என்னமா கற்பனை பண்றீங்க சகோ...

  நல்லாத்தான் இருக்கு! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனையை பாராட்டியதற்கு நன்றி சகோ

   நீக்கு
 21. உமக்கென்று தனி நடை சகோதரி! இனிமையும், அழகும் இணைந்து வருகின்றன!

  பதிலளிநீக்கு
 22. அடுத்த அடுத்த வருசமும் விழா சிறப்பா நடக்கட்டும் பேயும்
  அமைதியாய் ராஜியுடன் வாழ வாழ்த்துக்கள் தோழி .இந்தப்
  பேய் போனால் நீங்க பிளாக்கை விட்டு போய்விடுவீர்கள்
  அதானால் பேய் + ராஜி வாழ்க வளமுடன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் இந்த “ப்ளாக்” பேய் கூடவே காலம் ஃபுல்லா அல்லாடனுமா?!

   நீக்கு
  2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் முழுவதும் என்று
   சும்மாவா சொன்னாங்க :)

   நீக்கு
 23. ரூம் போட்டு யோசிச்சீங்களா என்ன?.. ஜூப்பர் :-)))

  பதிலளிநீக்கு
 24. இப்படிப்பட்ட திகட்டாடாத தித்திப்பான சந்திப்பு விழாக்கள் வருடத்திற்கு ஒரு முறை தான் நடத்தபட வேண்டுமா?

  பதிலளிநீக்கு
 25. /மனப்பாடப்பகுதி ஒப்புக்கிற மாதிரி, ஏற்ற இறக்கம் இல்லாம, பெரியங்கலாம் இருக்காங்கன்ற பதட்டத்துல, ஒப்பிச்சுட்டு வந்த தூயவை நினைச்சும்..//


  எல்லாம் சரி அப்படியே போற போக்குல தங்கச்சி தூயாவை கிண்டல் அடிச்சிருக்கீங்க. இதெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. எனது வன்மையான கண்டனங்கள்

  தூயா ரசிகர் பேரவை
  கேகே நகர் கிளை (வேறு கிளைகள் கிடையாது )

  பதிலளிநீக்கு
 26. என்ன ராஜி, இப்படியெல்லாமா அப்பா அம்மாவை பயமுறுத்துறது? பாவம்பா அவங்க...

  எப்படியோ பதிவர் திருவிழா நல்லவிதமா முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.

  மிகவும் சுவாரசியமா எழுதியிருக்கீங்க. ரசித்துப் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 27. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எப்போ பேரு கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க.

  பதிலளிநீக்கு
 28. அன்பின் அக்கா

  அருமையான நிகழ்வாக்கம். மிக அருமையானதொரு பதிவைக்கொடுதுருக்கிங்க நன்றி

  பதிலளிநீக்கு