Friday, September 14, 2012

நினைத்தாலே இனிக்கும்...., 40வது திருமண நாள்

                                                  
 40 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா, நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.

தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!

 கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய்   தேற்றி நடக்க வைத்து திருமப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா...,

எத்தனை ஜென்மம எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்.
                       
                                                     

மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து...,
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க...,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி...,,
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து...,
 
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி...,
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி...,
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி...,
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி...,

வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து....,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து...,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்??!!
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி...,

வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!

இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க...,
வாழ்த்த வேண்டுமென...,

அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே..,
வாழ்க நீவிர் பல்லாண்டு என
வாழ்த்த வாருங்கள் உறவுகளே!!!!!!

32 comments:

  1. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்த மனசுதான் வேணும் சகோ. உங்க வாழ்த்தை அப்பா அம்மாக்கிட்ட சேர்த்துடுறேன்.

      Delete
  2. What else could be the WEDDING GIFT for them than this one from their own daughter - you are blessed with good parents and make them to feel similar. WHAT ELSE THEY NEED ON THIS 40TH WEDDING DAY.

    ReplyDelete
  3. உங்கள் அம்மா,அப்பாவுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  4. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் நமஸ்காரங்களையும். இதயம் நிறைந்த இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்களையும் சேர்ப்பிச்சுடும்மா.

    ReplyDelete
  5. வாழ்த்துகிற அளவுக்கு எனக்கு வயசு இல்லீங்க...

    ReplyDelete
  6. வாழ்வாங்கு வாழ்ந்தோரை வணங்குகிறேன்.
    அவர்களை இன்புற வைக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. உங்கள் அப்பா,அம்மாவுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
    உங்களைப்போல போல ஒரு பிரபல பதிவரை !!!!! எங்களுக்கு தந்தமைக்கு எங்கள் யாவரின் நன்றியையும் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  8. உங்க பேரண்ட்ஸ்க்கு வாழ்த்து


    உங்க ஃபேமிலில இருக்கற 45 பேருக்கும் எப்படியும் பிறந்த நாள், கல்யாண நாள், ஸ்கூல் டே, காலேஜ் டே ஏதாவது வந்துடுது, பதிவு ம் ஹி ஹி

    ReplyDelete
  9. பெற்றோர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. அப்பா மனசு கோணாம நடக்கும் அம்மாவுக்கும், அம்மா விருப்பத்துக்கு மாறாக எதுவும்செய்யாத அப்பாவுக்கும், எத்தனை ஜென்மம எடுத்தாலும் நீங்களே மகளாய் பிறக்க வாழ்த்துக்கள்


    சகாதேவன்

    ReplyDelete
  11. அன்பை அழகிய வரிகளாய் தந்த விதம் அருமை சகோ. இது கண்டிக்கத் தக்கது தங்கைக்கு சொல்லாம விருந்து சாப்டது.

    ReplyDelete
  12. பாசமிகு பெற்றோர்களுக்கு
    நேசமிகு வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. நான் ஏதோ உங்க திருமண நாளா இருக்குமோ அப்ப்டின்னு கொஞ்சம் சந்தேகபட்டுடேன்...

    ReplyDelete
  14. உங்கள் பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள்.இறைவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்

    ReplyDelete
  15. சரி வாழ்த்தை அப்பா அம்மா கிட்ட சேர்ப்பிச்சு விடுங்க..

    ReplyDelete


  16. மேலும் (வாழ்வாங்கு வாழ,) என் உடன் பிறவா சகோதரர் மனைவி
    மக்களோடு பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  17. Pl. convey my wishes to parents.

    ReplyDelete
  18. 40 ஆண்டுகளைத் தாண்டிய நல்ல திருமணத் தம்பதிகளுக்கு என் வாழ்த்து.

    ReplyDelete
  19. எனது இருபத்தைந்தாம் திருமண தினத்தன்று, தங்களின் பாச மிகு பகிர்வைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். தங்களின் பெற்றோரின் ஆசி எங்களுக்கும் கிட்டட்டும்! அவர்களை வாழ்த்தும் வயதில்லை எமக்கு! எம் கண்ணன் அருளால் நலத்துடன் தீர்க்க சுமங்கலியாய் மன பாரமின்றி தங்களின் தாயார் இருக்க, என் கண்ணனிடம் பிராத்தனை செய்கிறேன் அன்புச் சகோதரியே!

    ReplyDelete
  20. இன்றைய நன் நாளில் அவர்களுக்கு மேலும்
    வாழ்வில் எல்லா நலனும் வளமும் சேர
    இறைவன் அருள் கிட்ட வேண்டும் என்று
    இந்த சந்தோசத்தை நானும் பகிர்ந்து கொள்கின்றேன்
    சகோதரி !..மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  21. அக்கா! உங்களுக்குதான் நாற்பதாவது திருமண நாளோன்னு தலைப்பு படிச்சதும் நினைச்சிட்டேன்! உங்க பெற்றோருக்கு எனது வந்தனங்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    சரணடைவோம் சரபரை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





    ReplyDelete
  22. உங்களது பெற்றோர்க்கு இனிய மணநாள் வாழ்த்துகள்...

    எனது வணக்கங்களும்....

    ReplyDelete
  23. உங்க பெற்றோருக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. //எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!
    நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?! //
    கலக்கறீங்க ராஜி.
    உங்கள் தாய், தந்தை பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி உங்களையே மகளாகப் பெற்று மகிழ்ச்சியான கஷ்டம் பெறும்படி வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  25. தங்கள் பெற்றோருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  26. எனது வணக்கங்களையும்... வாழ்த்துக்களையும்.. தங்களது பெற்றோர்களுக்கு உரித்தாக்குகிறேன்!!!

    ReplyDelete
  27. முன்னறி தெய்வங்களுக்கு என்
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
    இன்னும் பல்லாண்டுகள்
    நிறைந்த ஆரோக்கியத்துடன்
    சிறப்பொடு வாழ்ந்திட
    இறைவனிடம் இறைஞ்சுகிறேன்...

    ReplyDelete
  28. உங்கள் அம்மா,அப்பாவுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.....நான் உங்களூடைய திருமணநாள் என்று நினைத்து பயந்துவிட்டேன். இப்படி எல்லாம தலைப்பை போட்டு ஷாக் கொடுக்காதீங்க...அப்பா அம்மா என்றும் வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  29. உங்கள் பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துகள்... ரெகுலரா வர முடியறதில்லை...

    ReplyDelete
  30. சரி காணாமல் போன கனவுகள் கிடைச்சிடுச்சா

    ReplyDelete
  31. அடடே ...இப்பதான் பாக்குறேன்.என்னோட வாழ்த்தையும் சொல்லி அவுங்க ஆசீர்வாதத்தை வாங்கி மறக்காம எனக்கு அனுப்பி வையுங்க..சரியா..

    ReplyDelete