ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

மீண்டும் ஒரு மறு ஒளிபரப்பு - பர்த் டே ஸ்பெஷல்

ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்,ஓராயிரம் முறை மனதிற்குள் ஒளிபரப்பி அதே சிலிர்ப்பை.. அதே சுகத்தை,அனுபவித்திருக்கிறேன் பலமுறை.... இதோ ... மீண்டும் ஒரு மறு ஒளிபரப்பு....,

                                             

                                                 
தூங்கும் முன் கதை கேட்கும் பழக்கம் இனியாக்கு உண்டு...

அம்மா நான் பொறந்த கதையை சொல்லும்மா.

பன்னீர் ரோஜா கலர், கருப்பு கோலிக்குண்டு கண்ணு,தந்தத்தால செஞ்ச மாதிரி கைக்கால், கிண்கிணி நாதம் போல உன் அழுகை.

அம்மா நான் அழுதேனாம்மா? எப்போ அழுகை நிப்பாட்டினேன்?

அம்மா மூஞ்சியப் பார்த்தே. எனக்காக என் அம்மா நீ இருக்க நான் ஏன் அழுகனும்னு நீ அழுகையை நிப்பாட்டிட்டேம்மா.

போம்மா, அப்போ நான் குட்டி பாப்பாதானே எனக்குதான் அப்போ ஒண்ணும் தெரியாதே. நீ குளோசப்ல உன் மூஞ்சியக் காட்டி இருப்பே. நான் பயந்துப் போய் அழுகையை நிப்பாட்டிட்டேன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் டமால்

 
    


இனியாவை எல்.கே.ஜி ல சேர்த்த இரண்டாம் நாள்:

ஸ்கூல் விட்டு ஓடிவந்து, ஒரு நோட்டைக் காட்டி, இது என்னன்னு கேட்டா?
அவள் நீட்டிய பக்கம் பார்த்த போது..,நெடுக்குவாக்குல சின்ன சின்ன கோடுகளை நெருக்கமா வரைந்திருந்தா. நான் அதை மழைன்னு நினைச்சு..,

என்னம்மா! மழை படம் வரைஞ்சிருக்கியா?
ஐயோ! அம்மா! உனக்கு ஒண்ணுமே தெரியலை, இது மழை இல்லம்மா, ONE.
எங்கே சொல்லு பார்க்கலாம்   O,   N,  E  " ONE"

அவ்வ்வ்வ்வ்வ்வ்


குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:

    உயிர் வலி கண்ட அந்த
    பத்து மணி நேரப் போராட்டம்
    நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
    கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை

    செத்துவிடலாம் என்று தோன்றிய
    அவ நம்பிக்கையின் நிழலுக்கு
    உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
    ஒளிக் கீற்று..

    உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
    பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...
    மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ....
    என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்..

    மன்னித்தலையும்,விட்டுக் கொடுத்தலையும்
    எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான் நீ..
    எனக்குள் புதைந்துப் போன என் குழந்தைத்தனத்தை
    மீட்டெடுத்த புதையல் நீ...
    என் வாழ்வின் சூர்யோதயம் நீ..
    மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
    வாழ்வின் எல்லா உயரங்களுக்கும் நீ செல்ல
    நீ ஏறும் படிக்கட்டாய்
    நானிருப்பேன்...,
    வாழ்க நீ பல்லாண்டு...


  Let the God decorate each
golden ray of the sun reaching you
with wishes of success, happiness and prosperity 4 you
wish you a super duper
Happy birthday My Baby..,

                                               

இங்கிட்டு வந்தவங்கலாம் சண்டை போடாம,  கேக் எடுத்து  சாப்பிட்டுக்கிட்டே.., இனியாவை வாழ்த்திட்டு.., தூயா தன் தங்கச்சி இனியாக்கு எழுதிய லெட்டரை படிக்க இங்க போங்க..

24 கருத்துகள்:

 1. என் வாழ்த்தையும், இனியாக்கிட்ட சொல்லிடுங்கம்மா..

  பதிலளிநீக்கு
 2. பெற்றெடுத்துப் பூரித்துப்போன
  அந்த உணர்வை மிக அழகாக
  சொல்லி இருக்கீங்க...
  நாமும் ஒரு பெண்ணாய்ப் பிறந்து
  அந்த சுகத்தை அனுபவிக்க மாட்டோமா
  என்று எண்ணவைக்கும் எழுத்து அது...
  தாய்மையின் பெருமை....

  குழந்தைகளின் சேட்டைகளை
  எண்ணி எண்ணி ரசிக்கலாம்
  கோடியுண்டு நெஞ்சுக்குள்....

  இனிக்கும் தேன்மலரே
  இனியா!!
  வாழ்வில் எல்லா நலனும் பெற்று
  பல்லாண்டு காலம்
  இன்புற்று வாழ்ந்திட
  இந்த மாமனின்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  வாழிய மருமகளே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருமகளை வாழ்த்திய சகோதரருக்கு நன்றி

   நீக்கு
 3. இதயம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  BTW, fantastic poetry!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழ்த்துக்கும், கவிதையை ரசித்தமைக்கும் நன்றி சகோ

   நீக்கு
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சகோ

   நீக்கு
 5. இனியா என்னும் இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாய்மையை பூரிக்கச் செய்யும் தங்கத் தேவதைக்குத் தக்கதொரு கவிதை. பாராட்டுகள் ராஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையை ரசித்து பாப்பாவை பாராட்டியமைக்கு நன்றி

   நீக்கு
 6. இனியாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  என் வாழ்த்தையும் உங்கள் மகளிடம் சொல்லிடுங்க அக்கா

  பதிலளிநீக்கு
 9. இனியாவுக்கு நானும் ஒரு வாழ்த்தை சொல்லிப் போடுறேன்.மறக்காம சொல்லிபோடுங்கோவ்..

  பதிலளிநீக்கு
 10. சகோ அழகான வரிகளால் அருமையான வாழ்த்து என் வாழ்த்தையும் சொல்லிடுங்கோ.

  பதிலளிநீக்கு
 11. இனியாவைப் பெற்றெடுத்து பெண்மையின் சிறப்பை மீண்டும் உணர்ந்த கணத்தையும் மழலையால் அவள் பல்பு கொடுத்த அழகையும் பகிர்ந்த விதம் ரொம்ப ரசிக்க வெச்சதும்மா. செல்லமான குட்டிப் பெண்ணுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த தின நல்வாழ்த்துக்களை மிகமிகமிக மகிழ்வுடன் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. Dear INIYA - Happy Birthday to you,

  Vayale vadai sudarthu thriyum anna neenga cake-iye bake pannirukkeenga

  பதிலளிநீக்கு
 13. இனியாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. என்னது? உங்க வீட்டுல டெயிலி ஒருத்தருக்கு பிறந்த நாள் வந்துடுது ? ரைட்டு வாழ்த்துகள் ..

  பை த பை.. நீங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கீங்களா? அடேங்கப்பா,,

  பதிலளிநீக்கு
 15. எனக்குள் புதைந்துப் போன என் குழந்தைத்தனத்தை
  மீட்டெடுத்த புதையல் நீ...

  //அருமை!
  இனியாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. கொஞ்சம் லேட்டுதான்....இருந்தாலும் ரொம்ப நல்லாருக்கு கவிதை!

  பதிலளிநீக்கு