Thursday, January 03, 2013

அவன்..., அவள்..., அது...,


அவன்:
சிணுங்கும் தொலைப்பேசியை
செல்லமாய் எடுத்தணைக்க.,
யாரோ எதற்கோ பேச
தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக .....,
அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்...,
அமிர்த சுவை தேடி, அள்ளி
காதுமடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தைகள்..,
"அடடே உனக்கு வந்திடுச்சா? மாத்தி பண்ணிட்டேனா"? னு
துடிதுடிக்க துண்டிக்கிறாய் இணைப்பை...,
கூடவே நம்பிக்கை நரம்பையும்.

அவள்:
சிணுங்கும் இதயத்தை
செல்லமாய் தட்டி, அமைதிப் படுத்தி,
நின்று, நிதானமிழந்து,
உன் எண் ஒத்தி
வேறு ஏதோ இணைப்பில் இருக்கும்
உன்னை தொட முடியாமல்துவண்டு,
இன்னொரு முயற்சியில், இணைப்பில்.....,
ஏங்கித்தவிக்கும் , காதுமடலோடு
இனிக்கும் உன் குரல் தேட

பதட்டததில்
உதடு உதறி பொய்
உதிர்கிறது...,
"அடடே உனக்கு வந்திடுச்சா? மாத்தி பண்ணிட்டேனா"? னு
துவண்டு துண்டிக்கிறேன் இணைப்பை???!!!
தோல்வி வலையில்
இறுக பிணைந்தபடி.

6 comments:

  1. ஊடலை சிறப்பிக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மிக மிக அருமை
    காதலின் ஆசையும் எதிர்பார்ப்பும்
    தயக்கமும் படுத்தும்பாட்டைச் சொல்லிச் சென்ற விதம் அருமை
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நான் இப்போதெல்லாம் சைவமா மாறிட்டேன்?

    ReplyDelete
  4. நிதர்சனம் ஒளிர்கிறது கவிதையில் உணர்வுகளின கடத்தலை சிறப்பாய்ச் செய்கிறது கவிதை, பாராட்டுகளும். வாழ்த்துகளும்.

    ReplyDelete
  5. அடடே....
    செல்லச் சிணுங்கல்களால்
    சற்றே தனித்திருக்கும்
    தன்மையான இணைகளின்
    உண்மையான உணர்வுகளை
    மிக அழகாக சொல்லி இருக்கீங்க சகோதரி...

    ReplyDelete