Thursday, May 24, 2018

பழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்

சீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம். அதேப்போல, நம்மக்கிட்ட இருக்கும் பழசாகிப்போன வளையல்கள், செட் வளையலில் சிலது உடைய மிச்சம் மீதி என மூட்டைல வெயிட் ஏறிக்கிட்டே போகுமே தவிர, தூக்கி போட மனசு வராது. அப்படி தூக்கி போட்டாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புன்னு இப்பலாம் குரல் கேக்குது. அந்த வளையல்களை என்ன செய்யலாம்?!

மாலை செய்யலாம். ஃப்ளவர் வாஸ், பென் ஸ்டேண்ட், ஸ்பூன் கத்தி ஸ்டேண்ட்ன்னு செஞ்சு அசத்தலாம். எங்க வீட்டில் மிச்சம் மீதி வளையலை வச்சு வாசப்படிக்கு தோரணம் செஞ்சு போட்டிருக்கேன். நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. 

தேவையான பொருட்கள்...
மெட்டல் வளையல்
உல்லன் நூல் இல்லன்னா சில்க் த்ரெட் நூல்
விருப்பத்துக்கேற்ப மணிகள்..
க்ளூ.

மெட்டல் வளையலில் க்ளூ தடவி உல்லன் நூலை சுத்திக்கிட்டு வரனும்.
இப்படியே எல்லா வளையல்களிலும் நூல் சுத்திக்கனும்..
ரெண்டு வளையல்களை நூல் கொண்டு கட்டிக்கனும்...
இப்படியே, நிலை வாசப்படி அளவுக்கு வருமாறு எல்லா வளையல்களையும் கட்டிக்கனும்...
நுனியில் சலங்கை கட்டி வீட்டிலிருக்கும் மணிகளை  இஷ்டம்போல கோர்த்துக்கிட்டேன்...’
இரண்டு வளையல்களை சேர்த்து கட்டிய நூலில் மணிகளை சேர்த்து கட்டிடனும்...
இப்படியே எல்லா வளையல்களுக்கிடையேயும் மணிகளை கோர்த்துக்கனும்...
 கடைசி வளையல்களில்  உல்லன் நூலில் மணிகளை கோர்த்து கட்டி ஆணியில் மாட்ட வசதியாய் கொஞ்சம் நூல் விட்டுக்கனும்.


நிலைவாசப்படில மாட்டியாச்சு. அழகா இருக்கா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும்.  பதில் சொல்லுவீங்கதானே?!
நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. ​கைவண்ணம் அருமை.

    ReplyDelete
  2. ஆகா....! திறமைசாலிக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. கிண்டல் பண்ணாதீங்கண்ணே

      Delete
  3. அருமையா இருக்கு க்கா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு

      Delete
  4. செம ராஜி...நல்ல கற்பனை கைத்திறன் உங்களுக்கு..

    நீங்க ஒவ்வொண்ணூம் போடும் போதும் எனக்கு என் கல்லூரி பள்ளி நினைவு அப்புறம் கொஞ்ச நாள் செஞ்சது எல்லாம் நினைவுக்கு வரும். வளையல் டோர் டெக் செஞ்சதுண்டு. அப்புறம் ஜன்னல், தோரணம், இன்னொன்று கொஞ்சம் அகலமா ஒரு வயர் கிடைக்குமே கிளி மீன் எல்லாம் செய்வோமே...அந்த வொயர் வைச்சு வளையலை சுத்தி மல்லி மொக்கு மாதிரி பின்னி செய்வதுண்டு. பெரிய வளையல் மேல வைச்சு அப்புறம் அடுத்த சின்ன சைஸ், அப்புறம் சின்ன சைஸ் அப்படி குட்டி பாப்பாவுக்கு போடற வளையல் சைஸ் வரை வைச்சு ஒவ்வொன்னும் பாசி கோர்த்த நூலால கோர்த்து ஒவ்வொரு வளையலா சேர்த்து செர்த்து...மேலருந்து குறுகி குறுகி கீழ...மேல் வளையல்லருந்து நூல் கட்டி வளையம் அல்லது கொக்கி கோர்த்து மாட்டறது...கடைசி வளையலருந்து குஞ்சலம் தொங்கும்...இப்படி நிறைய செஞ்சதுண்டு....வளையல் வைச்சு ஒலிம்பிக் ரிங்க் வடிவம் போல செய்யறதுண்டு. க்ரீட்டிங்க் கார்ட் கூட...செஞ்சதுண்டு.

    நிறைய செய்ங்க ராஜி இப்படி. இது நமக்கு ரொம்ப நல்லதுனும் சொல்றாங்க. அல்ஜிமர் இதெல்லாம் வராமல் மூளைச் சோர்வு எதுவும் வராம இருக்கும்...வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  5. நான் வயர் கூடை பின்னுவேன். ஆனா, அதுல மீன் போல, யானை போல, ப்ளவர் வாஸ்ன்னு இதுவரை செஞ்சதில்லை. அதேமாதிரி கூடை பின்னுற வயர்ல ஸ்டார் மாதிரி செஞ்சு மாலை செய்வாங்க. இன்னொன்னு ஒருமாதிரி ரவுண்டா பின்னி மாலையாக்கி சாமி படத்துக்கு மாட்டுவாங்க. அதையும் செஞ்சதில்லை. ஒருமாதிரி கண்ணாடி ட்யூப்ல மணி கோர்த்து, நிலைவாசப்படில தொங்க விடுவாங்க. அதையும் நான் செஞ்சதில்லை.

    அதேமாதிரி, இதுலாம் செய்யலைன்னாலும் எனக்க்கு மூளைச்சோர்வு வராது கீதாக்கா. ஏன்னா, எனக்குதான் மூளையே இல்லையே!

    ReplyDelete