Wednesday, May 15, 2019

தமிழர் வாழ்வில் முக்கிய பங்காற்றிய ரேடியோவின் தந்தையின் கதை - மௌனச்சாட்சிகள்

திரைச்சித்திரம், நாடகம், புதுப்பாடல்கள்லாம் கேட்டு ரசித்தது..., உலக நடப்புகள்,  காந்திஜி, நேரு, காமராஜர்  அண்ணாதுரை, இந்திரா காந்தி...  மரணம் இதெல்லாம் நமக்கு தெரிய வந்தது வானொலி மூலம்தான். அந்த வானொலியைக் கண்டுப்பிடித்தவர் பத்திதான் இன்றைய மௌனச்சாட்சிகளில் பார்க்கப் போறோம்.

கம்பியில்லாத் தந்தி முறையையும், வானொலியையும் நமக்காகக் கண்டுப்பிடிச்ச மார்க்கோனியின் படம்தான் மேல இருக்கும் படத்தில் நீங்க பார்ப்பது. 1874ம் ஆண்டு ஏப்ரல் 25ம் நாள் இத்தாலியில் பொலொனா நகரில் பிறந்தார். இவரோட முழுப்பெயர் குலீல்மோ மார்க்கோனி. இவர் வசதியான வீட்டில் பிறந்தவர். புத்தகம் படிப்பதுதான் இவருக்குப் பொழுதுபோக்கு. இயற்பியல், மின்சக்தி ஆராய்ச்சியில்தான் இவரோட ஆர்வம் இருந்துச்சு. தன் வீட்டிலேயே சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவி மின்சக்தி ஆராய்ச்சி செஞ்சார்.

மார்க்கோனியின் இளவயதில் கம்பியில்லாமல் ஒலி அலைகளை அனுப்புவதுப் பற்றிய ஆராய்ச்சிகளை படிக்க நேர்ந்தது. அதில் அவர் மனது ஒன்றிப்போகவே அதைப்பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராஃப் அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுப்பிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி நாட்டு அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரையின்படி  1896ல் லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி.  இங்கிலாந்தின் பிரிட்டீஷ் அஞ்சல்துறை இவரின் கண்டுப்பிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று உலகத்துக்கு அறிமுகம் செய்தது. அதே ஆண்டு கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி. ஒலி அலைகளை வானில் பறக்கவிடமுடியும் என்பதை உணர்ந்த மார்க்கோனி அதனைச் சோதிக்க பலூன், பட்டம்லாம் பறக்க விட்டு சோதித்தார். பல சோதனைகளுக்குப்பின் பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில்  9 மைல் சுற்றுவட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அவரது சோதனைகளைக் கண்டு நகைத்தவர்கள்தான் அதிகம்.  அத்தனை ஏளனப்பேச்சுக்களையும், அவமானங்களையும் புறம்தள்ளி தனது குறிக்கோள் ஒன்றே நினைவில் கொண்டு தனது சோதனைகளை விடாமல் தொடர்ந்தார். 


தந்தி இல்லாமயே காற்றில் வலம்வந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் தேனென ஒலித்தது. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோமூலம் செய்திகளை அனுப்பமுடியும்ன்னு சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி
மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையில் கம்பியில்லா தந்தி முறையை நிறுவினார், அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம்லாம் மாஸ்கோட் என்னும் குறியீட்டு முறையில் மட்டுமே இருந்தது. அதேமாதிரி மனிதக்குரலையும் அனுப்பமுடியும் என நம்பிய மார்க்கோனி 1915ம் ஆண்டு அதற்கான முயற்சியைத் தொடங்கினார். ஐந்து ஆண்டு முயற்சிக்குப்பின் 1920 ஆண்டில் நண்பர்களை தன் படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பப்பட்டது. வானொலியும் பிறந்தது.


இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த அவரின் ஆய்வின் முடிவில் 1922ம் ஆண்டு பிப் 14ம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்பி, உலகத்தார் அனைவருக்கும் மகத்தான சேவைப் புரிந்த மார்க்கோனிக்கு 1909ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏளனமாய் கைக்கொட்டி சிரித்த அனைத்துப் பல்கலைக் கழகங்களும் நீ, நான் என அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1937 ம் ஆண்டு ஜூலை 20ம் நாள் தனது 63வது வயதில் மார்க்கோனி ரோம் நகரில் காலமானார். வெறும் பொழுதுபோக்கு சாதனாமாக மட்டுமின்றி, தகவல் களஞ்சியமாகவும் வானொலி இருக்கின்றது. அலைப்பேசி,தொலைக்காட்சி, இணையம்ன்னு பல பொழுதுப்போக்கு சாதனங்கள் வந்தாலும், இன்றும் கிராம, நகர்புறத்தாருக்கு வானொலியின் மவுசு குறையவில்லை. அதுக்கு சாட்சி பெரியப்பெரிய நகரங்களில் தினத்துக்கொன்றாய் முளைக்கும் சூரியன் எஃப்.எம், ஹலோ எஃப்.எம், ரேடியோ சிட்டி, ரெயின்போ...க்களே சாட்சி...

நன்றியுடன்,
ராஜி.

5 comments:

  1. வானொலியை மார்க்கோனி கண்டுபிடித்தார் என்பது மட்டுமே நான் அறிந்தது. மற்ற விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்தேன்.

    நன்றி ராஜி.

    ReplyDelete
  2. உண்மையில் இந்தப் பெருமை நிகோலா டெஸ்லாவுக்கு(ம்) (1892) சேர வேண்டியது. நம்மூர் ஜெகதீஷ் சந்திர போஸ் பங்கு பற்றியும் சொல்வார்கள். அவர்கள் தங்கள் ஐடியாக்களை பேடண்ட் செய்யாமல் விட்டார்கள் என்று படித்து, இது பற்றி சில வருடங்களுக்கு முன் எங்கள் பிளாக்கில் ஒரு பதிவும் இட்டிருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சொல்லியிருப்பதை நானும் வாசித்திருக்கிறேன். ஒரு தகவல் அறிய வேண்டி நெட்டில் தேடிய போது வாசித்திருக்கிறேன்.

      ஸ்ரீராமின் பதிவும் வாசித்த நினைவு நன்றாகவே இருக்கிறது. பணம் விளையாடுவது பற்றி நாங்கள் குறிப்பிட்டிருந்த நினைவு.

      கீதா

      Delete
  3. அறியாத பல செய்தகளை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. தகவல்கள் தொகுப்பு அருமை...

    ReplyDelete