Sunday, May 26, 2019

கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்

விரும்பியதை வெறுக்க வைக்கவும், வெறுத்ததை விரும்ப வைக்கவும் காலத்தினால் மட்டுமே முடியும். கார்த்திக் ரசிகைதான். ஆனாலும் இந்த பாட்டை மட்டும் பாஸ்ட் பார்வார்ட் பண்ணிடுவேன்.

என் அக்கா கல்யாணத்தப்போ இந்த படம் பார்த்தது. எனக்கு ரயில் பயணம் பிடிக்கும். ஆனா எல்லா உறவுகளும் பக்கத்திலேயே இருப்பதால், ரயில் பயணம்ங்குறது எனக்கு எட்டாக்கனியே!! என் அக்கா ஊரில் சின்னதா ஒரு ரயில்வே ஸ்டேசன் உண்டு. இந்த படம் பார்த்துட்டு தினத்துக்கு நாலு முறை அங்கு போய்டுவேன். 

இந்த படத்தின் எல்லா பாட்டும் அப்ப ஹிட். ஆனா படம் மொக்கை. இது பேய் படம் வேற! நாக்கு வெளித்தள்ளி கோரைப்பற்கள் காட்டி, வெள்ளை உடை உடுத்தி, காத்தில் ஜன்னல் அடிக்க பழிவாங்கும் கதை இல்லை இது. ஷூ, புல் ஹாண்ட் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் போட்ட சாதுவான பேயை இந்த படத்தில் பார்க்கலாம். முரடனை, களவானியை,  பைத்தியத்தை லவ் பண்ண கதையெல்லாம் ஏத்துக்கிட்ட   தமிழ் சினிமா ரசிகர்கள் பேயை ஒரு பொண்ணு லவ் பண்ணுறதை ஏத்துக்கலை. அதனால் படம் பிளாப். 

1988ல சின்ன பிள்ளையாய் இருந்த ராஜிக்கு பிடிக்காத இந்த பாட்டு,  பின்னர் பிடிக்க ஆரம்பிச்சு இன்னிக்கு பேவரிட் கலெக்‌ஷனில் ஒன்னா இருக்கு.


கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச...
கட்டி வச்சுக்க..

இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ 

கட்டி ...


தனியா தவம் இருந்து.. இந்த ராசாத்தி கேட்டதென்ன?!
மனம்போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன?!


கன்னி மலர்களை நான் பறிக்க,,
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக.......
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க...
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க, தேன் கொடுக்க..

மாறாது இது மாறாது!!
தீராது சுவை தீராது!!
ஆயிரம் காலமே!!..

கட்டி ...

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு...
இந்த உறவுக்கு சாட்சி உண்டு..
தொட்டு தொடர்வது சொந்தமம்மா!!
தொட்டில் வரை வரும் பந்தமம்மா!!

அன்புக்கரங்களில் நீ அணைக்க.. நீ அணைக்க..
முத்துச்சரமென நீ சிரிக்க.. நீ சிரிக்க..

மாறாது... இது மாறாது..
தீராது.. சுவை தீராது...
ஆயிரம் காலமே !!

கட்டி...
இந்த பொன்னான நேரம்..
வந்த கல்யாண காலமே!!

படம்: என் ஜீவன் பாடுது..
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், ஜானகி
எழுதியவர்: வாலி

எனக்கு பிடிச்ச  பாட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

நன்றியுடன்,
ராஜி

4 comments:

  1. எனக்கு(ம்) சுமாராதான் பிடிக்கும். இதில்தானே "எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்?" அது ஓகே...

    ReplyDelete
  2. எனக்கும் மிகவும் பிடித்த பாடல்

    ReplyDelete
  3. இந்தப் படமும் கேள்விப்பட்டதில்லையே...பாட்டும் கேட்டதில்லை....

    பாட்டு ம்ம்ம்ம்ம்ம் தான் ஏதோ ஒரு பாட்டை நினைவுபடுத்துது...

    கீதா

    ReplyDelete