- கைகளில் சுண்டு விரலுக்கு கீழ் இருக்கும் கோடுகளை எண்ணி எத்தனை குழந்தை பிறக்கும்ன்னு கணக்கு பண்ணி சந்தோசப்பட்டுப்போம்...
ஹமாம் அல்லது மெடிமிக்ஸ் சோப்பு, சிகப்பு கலர் சாந்துப்பொட்டு, கருப்பு மை, பவுடர் இதான் அன்றைய பெண்களின் காஸ்மெட்டிக் பொருட்கள். கொஞ்சம் வசதியான வீட்டு பொண்ணுன்னா ஸ்னோ பூசிப்பாங்க. வெள்ளை, கறுப்பு, பச்சை, நீலம், மஞ்சள்ன்னு கலர் கலர் சாந்து மார்க்கெட்டில் வர ஆரம்பிச்சது. விசேச நாட்களில் பெரிய சைஸ் சிவப்பு பொட்டுக்கு கீழ் ட்ரெஸ்க்கு மேட்சா வெள்ளை, பச்சை, மஞ்சளில் மூணு புள்ளிகள் வச்சுப்போம். சின்ன குழந்தைகளுக்கு புருவத்தின்மீது வெள்ளை, சிவப்பு நிறப் புள்ளிகள் வைப்பது வழக்கம்...
பிள்ளைப்பூச்சியை கொன்னுட்டா குழந்தை பிறக்காதுன்னு பெரியவங்க பயமுறுத்துவாங்க.
உருளைக்கிழங்கிற்கும், சப்போட்டாவுக்கும் வித்தியாசம் தெரியாம, காய் கனியும்ன்னு காத்திருந்து பல்ப் வாங்குனதுலாம் சொன்னா என் பிள்ளைக மதிக்காது.
பல் விழுந்துட்டா அதை சாணிக்குள் வச்சு மண்ணில் புதைச்சு, அதை யானை மிதிச்சா அந்த பல் தங்கப்பல்லா மாறிடும்ன்னு சொன்னதை நம்பி அப்படி புதைச்சு வச்சிருக்கோம்.
தோள் மேல் கைப்போட்டால் வளரவே மாட்டோம். கடைசி வரைக்கும் குள்ளமாவே இருப்போம்ன்னு பயந்து பிரண்டு கைப்போடும்போதெல்லாம் தள்ளித்தள்ளி போவோம்.
ரெட்டை வாழைப்பழம் ஜோடியா இருக்கவுங்கதான் சாப்பிடனும்ன்னு சொல்வாங்க. இப்படி ரெட்டை வாழைப்பழத்தை தம்பதியர் சாப்பிட்டா ஒத்துமையா இருப்பாங்கன்னு சொல்வாங்க. சின்ன பிள்ளைங்க சாப்பிட்டா ரெட்டை குழந்தை பிறக்கும்ன்னு சொல்வாங்க.
எறும்பு விழுந்த காபி, சாப்பாட்டை சாப்பிட்டா கண்பார்வை தெளிவா இருக்கும்ன்னு சொன்னதை நம்பி, எறும்பை எடுத்து போட்டுட்டு காஃபிலாம் குடிச்சிருக்கேன். ஆனாலும் கண்ணாடி போட்டாச்சுது..
கருடன் வானத்துல பறக்குறதை பார்த்ததும் விரலை மேல உயர்த்தி கருடா கருடா பூ போடு ன்னு சொன்னால் கருடன் வெள்ளையாக விரல் நகத்தில் புள்ளி(பூ) போடும். நகத்தில் எத்தனை புள்ளி இருக்கோ, அத்தனை ட்ரெஸ் கிடைக்கும்ன்னு நம்பினோம்.
கிராமத்து வாழ்க்கை தொடரும்....
நன்றியுடன்,
ராஜி
ஹாஹாஹா! அருமையான நினைவுகள்! அருமையான வாழ்க்கை! இந்த இன்பம் இக்காலத்து பிள்ளைகளுக்கு இல்லை! செல்போனிலும் டீவியிலும் கழிந்து போகிறது!
ReplyDelete//சுண்டு விரலுக்கு கீழ் இருக்கும் கோடுகளை // - அது மனைவி, காதல் போன்றவைகளைக் குறிக்கும் ரேகை அல்லவோ!
ReplyDeleteஇதே தான் நானும் நினைத்தேன்...
Delete//கலர் கலர் சாந்து மார்க்கெட்டில் வர ஆரம்பிச்சது.// - நான் இதைத்தான் இந்தியாவிலிருந்து வாங்கிச் செல்வேன். என் பெண்ணுக்கு நெத்தியில் டிசைன் டிசைனா பொட்டு இட்டுவிட... சிங்கார்...ஹாஹா
ReplyDeleteம்... இனிமையான நாட்கள்...
ReplyDeleteபிள்ளைப்பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து உயிரோடு விழுங்க வேண்டும் என்றும் பயமுறுத்துவார்கள்!
ReplyDeleteசுண்டு விரல் கீழ் வரிகள் அளவு குழந்தைகள் பிறந்ததா என்று யாரும் சோதித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!
ReplyDeleteரெட்டை வாழைப்பழத்தை பிரிக்கக் கூடாது சாப்பிடக்கூடாது என்று இன்றளவும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். உதாரணம் என் பாஸ்!
ReplyDeleteநாங்கள் எங்கள் ஊரில் ''கிருஷ்ண கிருஷ்ண பூப்போடு' என்று நகங்களை உரசிக்கொள்வோம்!
ReplyDeleteஎளிய மனிதர்களின் பெரிய நம்பிக்கைகள்
ReplyDeleteஹா....ஹா. இளமை நாட்கள்.
ReplyDeleteஇனிமையான காலங்கள்.
ReplyDelete