பூமியில் வாழும் கொடிய மிருகம் எதுவென கேட்டால் மலைப்பாம்பு, ராஜநாகம், காண்டாமிருகம், சிங்கம், புலி என அவரவர் மனசுப்படி சொல்வாங்க. ஆனா, மனிதனே அந்த கொடிய மிருகம்ன்னு சொன்னா சண்டைக்கு வருவாங்க. பூமியில் வாழும் மொத்த உயிரினங்களில் 1 சதவிகிதம்கூட இல்லாத மனிதன் மொத்த பூமியையும் அடக்கி ஆண்டு சக உயிரினத்தை வாழ விடாமல் செய்துக்கொண்டிருக்கிறான்.
இந்த பூமி தனக்கானது மட்டுமேன்னு மலை, காடு, மரம், மண், கடல், காற்று என அனைத்தையும் தன் சுயநல லாபத்துக்காக பாழ்படுத்தி மற்ற உயிர்கள் வாழ தகுதியில்லாததாய் பூமியை மாற்றிவிட்டு, மிச்சம் மீதி உயிர்த்திருக்கும் உயிர்களையும் எப்படி வதைக்குறான் பாருங்க. இதனால்தான் சொல்றேன் மனிதன் ஒரு கொடிய மிருகம்ன்னு....
நன்றியுடன்,
ராஜி
சரி... மிகச்சரி...
ReplyDeleteமிக வேதனையான விடயம், மற்றும் படங்களும்...
ReplyDeleteஇம்மாதிரிச் சித்ரவதைகளை வேடிக்கை பார்க்கிற...அனுமதிக்கிற அத்தனை மனிதர்களும் அயோக்கியர்கள்தான்.
ReplyDeleteமறக்கவே இயலாத, மனதைப் பிசைகிற கொடூரக் காட்சிகள்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ராஜி.
ReplyDeleteவேதனையான விஷயம்
மிக மிக வேதனையைத் தருகிற காட்சிகள்.
ReplyDeleteமனிதன் ஒரு கொடிய மிருகம் என்று நாம் மிருகத்தைக் கொச்சைப்படுத்துகிறோமோ? மனிதன் கொடியவன் என்றிருக்கலாம் போலுள்ளது. மிருகத்திடம் அதிக மனிதத்தனத்தைக் காணமுடிகிறதே.
ReplyDeleteமனிதனை மனிதனே அழித்துக் கொள்வது தெரிய வில்லையா
ReplyDeleteஸாரி ராஜி ஏதோ நம்ம செல்லங்கள் படங்களா இருக்கேனு பார்த்தா முதல் படமே மனசை என்னவோ செஞ்சுருச்சு. தொடர்ந்து பார்க்க முடியலை பார்க்கலை ராஜி..என்னால இப்படியான படங்கள் பார்க்கும் மனோ தைரியம் இல்லை...
ReplyDeleteகீதா
அட..கொடுமையே..
ReplyDelete