Thursday, March 12, 2020

மார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்

கால் உடைஞ்சு அம்மா வீட்டில் இருந்தபோது  பின்னியது. பெட் ரெஸ்ட்ன்னு ஒரு மாசம் செமயா போரடிக்கும். அம்மா பார்க்கும் சீரியல் இன்னும் கடுப்பேத்தும். அப்பாவை வயர் வாங்கி வரச்சொல்லி பின்னியது. அப்பாக்கு நிறங்களுக்கான வேறுபாடு தெரியாது. மொத்தம் நாலு வயர் வாங்கி வா, அதில் ஒரே கலர்ல ரெண்டு பாக்கெட்ன்னு ரெண்டு கலர், அதிலும் லைட் கலர்,  டார்க் கலர்ன்னு பார்த்து வாங்கி வான்னு சொன்னால் இப்படி வாங்கி வந்தார்.

 மகளின் மாமியார் வீட்டிற்கு மார்க்கெட் போக, பூஜைக்கூடை, கடைக்கு போக சின்ன கூடைன்னு மொத்தம் மூணு கூடை போட்டுக்கொடுத்தேன். அதை பார்த்து மகளின் நாத்தனார் கேட்க அவங்களுக்காக பின்னியது இது.. இது கிராஸ் கட் கூடை.. வயர் கொஞ்சம் பத்தாம போக கைப்பிடி சிறுசாகிட்டது.
இது அண்ணன் வீட்டுக்காக பின்னியது.. 

நல்லா இருக்கா மக்களே!?

நன்றியுடன்,
ராஜி

13 comments:

 1. சிறப்பு. இதையே வாரம் ஒன்று என்று பின்னி வியாபாரம் செய்யலாமே!

  ReplyDelete
  Replies
  1. முதல் ஆர்டரா நீங்க எடுத்துக்கோங்களேன். அக்கம் பக்கம் பின்னி தருவேன். இதையெல்லாமா ஆன்லைன்ல விற்பாங்க?!

   Delete
 2. சமீபத்தில் என் பாஸ் இதுபோல இரண்டு bag விலைக்கு வாங்கினார்.   அவர் தோழி  பின்னிக் கொடுத்தார்.

  ReplyDelete
  Replies
  1. முன்னலாம் பள்ளிகளில் கைத்தொழில்ன்னு ஒரு வகுப்பு இருக்கும். அதில் இதுலாம் பின்ன சொல்லித்தருவாங்க. இப்ப இதுலாம் சொல்லி தருவதில்லை.

   Delete
 3. ஒரு காலத்தில் இந்த ஒயர் கூடைகள்தான் ஒவ்வொரு கடைகளிலும் தொங்கும்

  ReplyDelete
  Replies
  1. இதை கைகளில் பிடிச்சுட்டு போறதுக்கு அசிங்கப்பட்டு பிளாஸ்டிக் கவர்களுக்கு அடிமையானப்பின்னர்தான் எல்லா கேடும் ஆரம்பிச்சுது. எங்க வீட்டில் எப்பயும் இந்த கூடை இருந்திக்கிட்டே இருக்கும், மாமாக்கு இதுதான் ஹாண்ட் பாக். இது இல்லாம எங்கயும் போக மாட்டாரு

   Delete
 4. எங்கள் வீட்டில் வயர் கூடை ஒன்று உள்ளது. எவ்வளவு பாரத்தையும் தாங்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ. கட்டப்பைலாம் கால் வாரி விட்டுடும். இந்த பேக் இதுவரை கடைத்தெருவில் அறுந்து, சாமான்கள் கீழ கொட்டிப்போனதாய் சரித்தரமில்லை.

   Delete
 5. தங்கள் பதிவில் Page Break தெரிவை பயன்படுத்தவும்.

  தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது மார்க்கெட் வயர் கூடை – கைவண்ணம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.
   விரைவில் வந்து இணைகிறேன்

   Delete
 6. ரொம்ப நல்ல இருக்கு ராஜி அக்கா ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா அனு.

   Delete
 7. நன்று. முன்பு எல்லோருமே இதை பயன்படுத்திக் கொண்டிருந்தோம். மீண்டும் வர ஆரம்பித்து இருக்கிறது என்பது நல்ல விஷயம்.

  ReplyDelete