Tuesday, May 12, 2020

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தய காரக்குழம்பு- கிச்சன் கார்னர்

எங்க வீட்டில் சாம்பார், குழம்பு, குருமான்னு எதுவுமே கலக்கி பெரிய குண்டான்ல வச்சிடனும்.  லேசா தொட்டுக்கிட்டு சாப்பிடுற பழக்கமெல்லாம் எங்க வீட்டில் கிடையாது. காரக்குழம்பைக்கூட ரசம் மாதிரி தளர தளர ஊத்திதான் குடிப்பாங்க.  எந்த காரக்குழம்பா இருந்தாலும் பூண்டு நிறைய போட்டு வைக்கனும். காய் எதுவும் போடாத இந்த வெந்தய காரக்குழம்புக்கு கூடுதலா நாலு பூண்டு போடனும்.


பருப்பு போடாத குழம்பைத்தான்  காரக்குழம்புன்னு எங்க ஊரு பக்கம் சொல்வாங்க.  ஆனா, ஏன் இதையே புளிக்குழம்புன்னு சிலர் சொல்றாங்கன்னு தெரில. சாம்பாருக்கும் புளி ஊத்துறோம்தானே?!


உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தய காரக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்...
வெந்தயம்- 2 டீஸ்பூன்
வெங்காயம்- 1
தக்காளி-2
பூண்டு 
குழம்பு மிளகாய் தூள்
உப்பு
எண்ணெய்
புளி
கடுகு
அரிசி-1டீஸ்பூன்
வெறும் வாணலியில் அரிசியை போட்டு லேசா வறுத்தப்பிறகு, அதோடு வெந்தயம் போட்டு இரண்டையும் சிவக்க வறுத்து ஆற வச்சு பொடி செய்து வச்சுக்கனும்.

பாத்திரத்தை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நாலு வெந்தயம் போட்டு பொரிய விடனும். பிறகு பூண்டு போடனும்..

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கனும். கருவேப்பிலையை சேர்த்துக்கனும்,. கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரம் வெந்துடும். 
பொடியா நறுக்கிய தக்காளியை சேர்த்து  வதக்கனும்..

தக்காளி நல்லா வெந்ததும் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கனும்...
மிளகாய் தூள் லேசா வதங்கினதும் தேவையான தண்ணி, உப்பு சேர்த்து கொதிக்கவிடனும்..
மிளகாய் தூள் வாசனை போனதும் கரைச்சு வச்சிருக்கும் புளி தண்ணியை ஊற்றவும்..
புளியின் பச்சை வாசனை போனதும் வறுத்து அரைச்சு வச்சிருக்கும் அரிசி வெந்தயப்பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு அவரவருக்கு தேவையான பதம் வந்ததும் நிறுத்திடனும். வெந்தய காரக்குழம்பு எங்க வீட்டில் கொஞ்சம் கெட்டியா இருந்தால்தான் பிடிக்கும்.   

அப்பளம், வத்தல் , மிக்சரோடு சாப்பிட சூப்பரா இருக்கும். வெந்தயத்தினை வறுக்கும்போது கருகிடாமல் பார்த்துக்கனும். இல்லன்னா குழம்பு கசக்கும். மொத்தமா பொடியை அரைச்சு வச்சுக்கிட்டால் தேவையானபோது போட்டுக்கலாம்.

செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க!

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. படங்கள் அழகாக எடுத்து இருப்பது சிறப்பு.

    ஆஹா வாசம் தேவகோட்டை வந்துருச்சே...

    ReplyDelete
    Replies
    1. அடடா! குழம்பு தீய்ஞ்சு போய்ட்டுதோ!

      Delete
  2. மஞ்சள் தூள் இரண்டு முறை போட்ட மாதிரி படம் சொல்லுது...!

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறைதான் போட்டேன்.. அப்படியே ரெண்டு முறை போட்டிருந்தால் அதுவும் நல்லதுக்கே. கொரோனா மஞ்சளை கண்டால் ஓடிடுமாம். தெரியாதோ நோக்கு...

      Delete
  3. இந்த குழம்பு எனக்கும் என் மகளுக்கும் மிகவும் பிடித்தது இந்த குழம்பு உளுந்து சாததிற்கு மிகவும் சுவை கொடுக்க கூடியது,

    ReplyDelete
    Replies
    1. உளுந்து சாதத்திற்கா?! ஐ வில் ட்ரை

      Delete
  4. இந்த அள்விற்கு நன்றாக படம் எடுத்து போட முடியமானால் யூடியூப் சேனல் ஓன்றை ஆரம்பித்து அதில் வீடியோவாக தொடர்ந்து இட்டு வந்தால் நிறைய பார்வையாளர்கள் வருவது மட்டுமல்ல காலப் போக்கில் கொஞ்சம் பணமும் சம்பாதிக்கலாம் சகோ

    ReplyDelete
    Replies
    1. படமெடுத்தால் மட்டும் போதுமா?! மியூசிக் சேர்க்கனும், சவுண்ட் சரி பார்க்கனும், வெட்டனும், ஒட்டனும். இப்படி பல வேலைகள் இருக்கே!

      Delete
  5. சுவையான குழம்பு. தக்காளி சேர்க்காமலும் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. தக்காளி கிடைக்காதபோது செய்து பார்க்கிறேன் சகோ

      Delete
  6. அரிசி அரைத்து செய்ததில்லை. செய்து பார்கிறேன்.

    ReplyDelete