Wednesday, February 08, 2012

எங்க வீட்டு பொங்கல் கொண்டாட்டம்- பாகம்2

      மாட்டு பொங்கல் அன்னிக்கு மூதாதையர்களுக்கு துணி வச்சு படைக்குறது எங்க ஊர் வழக்கம்.  அதனால அன்னிக்குதான் நாங்க  புது துணிகளை   படைச்சு கட்டுவோம் வீடு வாசல்லாம் மொழுகி, செம்மண் கரை இட்டு பச்சரிசி ஊற வச்சு அரைச்சு, தண்ணி கலந்து, வீடு முழுக்க கோலம் போடுவோம்.
                         
(துணில அந்த மாவு தண்ணியை நனைச்சு அதை லேசா பிழிஞ்சுக்கிட்டே ரெண்டு விரலால கோலம் போடுறதே தனி கலை.)
                           
(வீட்டு வாசல்ல நான் போட்ட கோலம்.......)
                               

 (இதும் நானே.....)
                                  

(இது அக்கா போட்ட கோலம்...,)
                                  
     மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு  விளக்கு வச்ச பின் தான் படைக்குறது வழக்கம். துணிகளை படைச்சு, வீட்டிலிருக்கும் பெரியவங்க, தம்பதி சமேதராய்  எடுத்து குடுப்பாங்க. பெரியவங்கலாம்  தன்னால் முடிந்த அளவு  பணம்  மத்தவங்களுக்கு குடுப்பாங்க.அதுக்காகவும் பசங்க காத்துக்கிட்டு இருப்பாங்க.

   சாம்பார், பொறியல், வடை, பாயாசம், இனிப்பு போண்டா, கொழுக்கட்டை இதெல்லாம் கண்டிப்பா செய்யனும், செய்து சாமிக்கு படையல் போட மணி எட்டாகிடும். பெரியவங்கள்லாம் டி.வி பார்த்துக்கிட்டும் கதை பேசிக்கிட்டும் சாப்பிட்டு முடிக்கும்வரை பிள்ளைகள்லாம் தவிப்பா பார்த்துக்கிட்டும் சீக்கிரம் சாப்பிடுங்க, எதிர்வீடு, பக்கத்துவீட்டுல எல்லாம் பசங்க டிரெஸ் போட்டுட்டாங்கன்னும் கூச்சல் போட்டுக்கிட்டும் இருப்பாங்க.

(7 மணிக்கு படைக்க போற துணிகள் மஞ்சள் தடவி மதியம் மூணு மணிக்கே தயார்...,)
                             
 
(ஸ் அப்பாடா..., ஒரு வழியா  எட்டு மணிக்கு படைச்சுட்டோம்...)
                              

   நாந்தான் சின்ன பையன் எனக்குதான் முதல்ல டிரெஸ் தரனும்ன்னு கடைக்குட்டி சொல்ல, நாந்தான் மூத்த பெண் எனக்குதான் முதல்ல டிரெஸ்ன்னு பெரிய பொண்ணு வாதிட, அவங்கவங்க பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்ணி,  செல்ல  சண்டைக்கு அம்மாக்கள் தயாராக.., யாருக்கு முதல்ல ட்ரெஸ் தரதுன்னு குழம்பிய பெரியவங்களை ஒரு தட்டுல எல்லார் ட்ரெஸ்ஸும் வச்சு எல்லா குட்டீசுக்கும் ஒரே நேரத்துல ட்ரெஸ் குடுக்க வச்சுட்டான் அக்கா மகன்..., 
( பிள்ளைகளெல்லாம் தாத்தா, பாட்டி காலில் விழுந்து டிரெஸ்ஸையும்
,அவர்களின் ஆசியையும் வாங்குதுங்க..)
 
                                

(பிள்ளைகளுக்கும் சந்தோஷம், பெரியவங்களுக்கும் சந்தோஷம்...,)
 


     குழந்தைகளை தொடர்ந்து பெரியவங்க நாங்கலாம் ஜோடியாய் பெரியவங்க  காலில் விழுந்து டிரெஸ் வாங்கிக்குவோம். துணியோடு சேர்த்து அவங்களால் முடிந்த அளவு பணம் தருவாங்க. அதை பிரிச்சுக்குறதுல தகராறு பண்ணிக்கிட்டு இருக்கும்போது, குட்டீஸ்கள் அப்பா, அம்மாவுக்கு இடையில்  சமாதான படுத்துற மாதிரி வந்து பணத்தை அதுங்க அடிச்சுக்கிட்டு போய்டும்ங்க. 

    புது துணி உடுத்திக்கிட்டு  அவங்கவங்க நட்பு வட்டத்தோடு கோயிலுக்கு போவோம்.  வத்தலும், தொத்தலுமா  இருக்கும் ரெண்டே ரெண்டு மாட்டை என்னமோ அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுல மாட்டை அடக்குற மாதிரி எங்க ஊரு “பிரசாந்த், சிம்பு, தனுஷ்”லாம் பயங்கரமா  சீன் போடுவாங்க. அந்த வீரத்துல  எங்க ஊர் ”தாப்ஸீ, ஹன்சிகா மோத்வானி, கார்த்திகா”லாம்  மயங்கி புது காதல்லாம் பிக்கப் ஆகும்.
                                     (பெரியவங்ககிட்ட ஆசி வாங்கும் ஜோடிகள்...,)


                                 (பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி பணம் குடுக்குறாங்க....,)

                    (மாடுகள் வந்து சேருமிடம்.. நைட்டுல எடுத்ததால் மாடுங்க தெரியல...,)

   காணும் பொங்கலன்று எல்லாரும் கோவிலுக்கு போவோம். கோவிலுக்கு போகும் முன் சின்ன மாமனர், மாமா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லாரும் எல்லாருக்கும் பைசா குடுப்பாங்க. எப்படியும் பெரியவங்களுக்கு ஆயிரம் ரூபாயும், சின்னவங்களுக்கு 250 ரூபாயும் சேர்ந்துடும் பொங்கல் அன்று. 

    முன்னலாம் 3 கி.மீ நடந்து போவோம். எல்லா உறவுகளும் பேசிக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டும் கரும்பு, பொரி சாப்பிட்டுக்கிட்டும் போவோம். இப்போலாம் டூவீலர்ல போய்ட்டு வந்துடறோம். நடந்து போய்வந்த போது இருந்த உற்சாகம் இப்போ வண்டில போய் வரும்போது இல்லைன்னு எல்லாரும் உணர்கிறோம்.

    அத்தோடு பொங்கல் கொண்டாட்டம் முடிஞ்சுது. அன்னிக்கு பொங்கல் முடிந்தாலும் அதன் நினைவு பல மாதங்கள் நெஞ்சில் நிற்கும். அடுத்த பொங்கல் எப்போ வரும்ன்னு காத்து கிடப்போம்.
   எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள் உண்டு. ஆனால், அதெல்லாம் இந்த பண்டிகையின்போது கொஞ்சம் கொஞ்சமா மாறி உறவுநிலை சகஜமா மாறிடுறதை கண்கூடா பலமுறை பார்த்திருக்கேன். பண்டிகைகள் வருவதன் நோக்கமும் அதுதானே...,
டிஸ்கி: இத்தோடு முடிஞ்சுது. ஸ் அப்பாடான்னு யரோ மூச்சு விடும் சத்தம் கேட்குது. படங்கள்லாம் என் சின்ன பொண்ணு இனியா எடுத்தது..

தமிழ்மணத்துல ஓட்டளிக்க....., 

30 comments:

  1. உறவுகளோட கலகலப்பா பேசிக்கிட்டே காலார நடக்கிறது தனி சுகம்தான். காளைகளை(?) ஹீரோக்கள் பிடிக்கறதையும் ஹீரோயின்கள் பத்தி எழுதியிருந்தது ரசிச்சுப் படிக்க வெச்சது. இனியாப் பொண்ணு படங்களை நல்லாவே எடுத்திருக்குது. என் பாராட்டுக்களைச் சொல்லிடும்மா. (விடாம ப்ராக்டீஸ் பண்ணச் சொல்லும்மா. பெரிய லெவல்ல வந்துடும்) மொத்தத்தில் ரசிக்க வைத்த கலகல பதிவு.

    ReplyDelete
  2. //ஒரு வழியா மணி எட்டு மணிக்கு படைச்சுட்டோம்//

    ஙே......புரியல.

    ReplyDelete
  3. //அக்கா போட்ட கோலம்// நிஜமாலுமே அழகா இருக்குங்க.

    ReplyDelete
  4. மனசாட்சி கூறியது...

    //ஒரு வழியா மணி எட்டு மணிக்கு படைச்சுட்டோம்//

    ஙே......புரியல.
    >>
    இப்படியா காலை வாருவீங்க சகோ. திருத்திட்டேன்.

    ReplyDelete
  5. // (மாடுகள் வந்து சேருமிடம்.. நைட்டுல எடுத்ததால் மாடுங்க தெரியல...,)//

    செம காமடி போங்க

    ReplyDelete
  6. //நடந்து போய்வந்த போது இருந்த உற்சாகம் இப்போ வண்டில போய் வரும்போது இல்லைன்னு///

    நிதர்சனமான உண்மை - எனக்கும் (எங்களுக்கும்) அந்த அனுபவம் உண்டு

    ReplyDelete
  7. இனிய கொண்டாட்டம்.

    ReplyDelete
  8. அண்ணனை கூப்பிடலை அதனால அருவாளோட வெளிநடப்பு செய்யுறேன்...

    ReplyDelete
  9. இருந்தாலும் வாழ்த்துக்கள் தங்கச்சி.....

    ReplyDelete
  10. பொங்கல் கொண்டாட்டம் பற்றி சிறப்பாக பதிவிட்டிருக்கீங்க. படங்கள் நன்றாக இருக்கு. படங்களை எடுத்த இனியாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள் உண்டு. ஆனால், அதெல்லாம் இந்த பண்டிகையின்போது கொஞ்சம் கொஞ்சமா மாறி உறவுநிலை சகஜமா மாறிடுறதை கண்கூடா பலமுறை பார்த்திருக்கேன். பண்டிகைகள் வருவதன் நோக்கமும் அதுதானே...,///excellent...நானும் இதை கவனித்திருக்கிறேன்...அனுபவித்திருக்கிறேன்.பண்டிகைகள் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவுகிறது.பண்டிகைகள் கொண்டாட மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டாலும்...

    ReplyDelete
  12. பொங்கல் கொண்டாட்டம்...படங்கள் ....சிறப்பா இருக்கு...

    வெள்ளந்தியா நிறைய எழுதி இருக்கீங்க...

    சி பி வந்து என்ன சொல்ல போறாருன்னு பார்க்கிறேன்...-:)

    ReplyDelete
  13. /இத்தோடு முடிஞ்சுது. ஸ் அப்பாடான்னு யரோ மூச்சு விடும் சத்தம் கேட்குது.
    //

    அஹா காதுல விழுந்துடா ?

    ReplyDelete
  14. புகைப்படங்கள் அருமை

    ReplyDelete
  15. பழைய நினைவுகளை தூசி தட்டி விட்டீர்கள். எந்த ஊர் இது?

    ReplyDelete
  16. கோலங்களும் கொண்டாட்டங்களும் ரசிக்கும்படி உள்ளன. குழந்தைகள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது ஒரு நல்ல பழக்கவழக்கம். பொறுப்புணர்ச்சி வளரும்.

    ReplyDelete
  17. இனிமையான மலரும் நினைவுகள்!! கோலங்கள் சூப்பர்..இப்படிதான் நாங்களும் செய்வோம்...

    ReplyDelete
  18. வணக்கம் அக்கா உறவுகள் இணைந்து பண்டிகை கொண்டாடுவது ஒரு இனிய அனுபவம் அதை பதிவாக தந்து எங்கள் நினைவுகளை மீட்டைமைக்கு நன்றி கோலங்கள் அருமையாக இருக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  19. ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். http://mahizhampoosaram.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete
  20. உங்ககூட சேர்ந்திருந்து பொங்கல் கொண்டாடியிருந்தா எப்பிடியிருந்திருக்கும்ன்னு
    இருக்கு ராஜி !

    ReplyDelete
  21. >>
    (துணில அந்த மாவு தண்ணியை நனைச்சு அதை லேசா பிழிஞ்சுக்கிட்டே ரெண்டு விரலால கோலம் போடுறதே தனி கலை.)

    அடடா.. எங்க ஊர்ல எல்லாம் 10 விரல்ல கோலம் போடுவாங்க ஹி ஹி

    ReplyDelete
  22. >>MANO நாஞ்சில் மனோ கூறியது...

    அண்ணனை கூப்பிடலை அதனால அருவாளோட வெளிநடப்பு செய்யுறேன்...

    ம்க்கும், இவர் பெரிய எம் எல் ஏ வெளிநடப்பு பண்றாராம் கொய்யால

    ReplyDelete
  23. ரொம்ப சரளமான நடையில் அழகா எழுதியிருக்கீங்க ராஜி. எங்க குடும்பங்களிலும் இது போல மாட்டுப்பொங்கல் அன்று மூதாதையருக்கானப் படையல் உண்டு. ஆனா முற்றிலும் அசைவ சமையல்.

    கோலங்களும், குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் அப்பா அம்மாவிடம் ஆசி வாங்கும் அழகும் பார்க்கவே மனம் மகிழ்ச்சியில் நிறையுது. என்றென்றும் இந்த மகிழ்ச்சியும் நம்முடைய பண்பாட்டு, பாரம்பரியப் பெருமைகளும் தொடரவேண்டும் ராஜி.

    ReplyDelete
  24. அழகான தருணங்களை வடித்து தந்த அற்புத பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  25. மிக அழகான நடையில் அனுபவங்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  26. குழந்தைகள் தாத்தா பாடிகளின் காலில் விழுந்து ஆசி வாங்குவது இன்று குறைந்துவிட்ட ஒன்று! அந்த பழக்கம் நீடிப்பது அருமையான விசயம்!

    ReplyDelete
  27. பொங்கல் கொண்டாட்டம் பற்றி சிறப்பாக பதிவிட்டிருக்கீங்க. ரசிக்க வைத்த கலகல பதிவு.

    ReplyDelete
  28. அருமையான பதிவு
    குடும்பத்தின் குதூகலத்தை படங்களின் மூலமாகவும்
    அருமையான விளக்கத்தின் மூலமாகவும் எங்களையும்
    உணரவைத்தமைக்கு மனமார்ந்த நன்றி
    இந்த சந்தோஷமும் நிறைவும் என்றும்
    உங்கள் இல்லத்தில்நிலைத்திருக்க
    எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்
    மனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  29. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete