Monday, February 27, 2012

ஐஞ்சுவை அவியல்

ஒரு நாள் கொண்டாட்டம்:

                         

      மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர்.

      அவர் நினைவாக
, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.
 
   சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு
, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும்.

   கடந்த
, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது.

     இதன் காரணமாக
, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.

    இந்த ஒருநாள்
, கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.

பழமையான
, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும். இதற்கு, முதலில் தமிழ் ஆர்வலர்களும், கண்ணகியை வழிபடுவோரும் மறவாமல் வருடத்திற்கு ஒரு நாள் அனுமதிக்கப்படும் நாளன்று, ஒரு நடை போய் பார்த்துவிட்டு வருவது நல்லது.
                                                 
பையன்கிட்ட பல்ப்:  

    என் பையனுக்கு அப்போ 7 வயசு. அவனை, கூப்பிட்டு.., அப்பு, ரேஷன்  கடைக்கு போய் என்ன போடுறாங்கன்னு பார்த்துட்டு வான்னு சொல்லி அனுப்பினேன். சைக்கிள் எடுத்துட்டு போனவன் வர ரொம்ப நேரம் ஆச்சு. அப்பதான் சைக்கிள் ஓட்ட பழகுறான் அவன், அதனால்,  பயமும் கூடவே  கோவமும் வந்துட்டுது. அவன் உள்ளே வந்ததும் கோவமா......., என்னடா பார்த்துட்டியா? என்ன போடுறாங்க? இப்போ  சண்டை போடுறாங்க. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சர்க்கரை, பச்சரிசி போடுவாங்களாம்மான்னு அவன் சிலேடையா சொன்னதை கேட்டதும் எனக்கு கோவம் போன இடம் தெரியலை.
                             

கண்டுப்பிடிங்க பார்க்கலாம்...,
பதினொன்றோடு  இரண்டை கூட்டினால் 1 வரும்.  எப்படி?
                              
                           
அட சிரிங்கப்பா...,
ஒருவர்: எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?

 இன்னொருவர்: என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.

ஒருவர்: இந்நேரம் விழுந்திருக்குமே சார்?

இன்னொருவர்: இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!
                                
                          
ஆண்களுக்கு மட்டும்: 
ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு. ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.

கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வறட்சி மாறும்.
வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.
                           
டிஸ்கி: போன பதிவுல கேட்ட புதிரான இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல  என்ற புதிருக்கான விடை: சைக்கிள்
ஐஞ்சுவை அவியல் பாகம் 1



21 comments:

  1. அவியல் சுவையா இருக்குங்க,புதிருக்கான விடையை சீக்கிரம் சொல்லிடுங்க.

    ReplyDelete
  2. கண்ணகி கோயில் புதுத் தகவல் .
    புதிர் பதிலை எதிர்பார்த்து .....

    ReplyDelete
  3. சுவையான அவியல் தான்...

    தலைப்பில் பாகத்தை தூக்கிவிடுங்களேன் ராஜி...

    ReplyDelete
  4. என்னது பதினொன்றோடு இரண்டைக்கூட்டினால் ஒன்று வருமா?
    நான் கணக்குன்னாலே காத தூரம் ஓடுவேன் புதிர் வேறயா?விடு ஜூட்

    தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் சாட்டையால் அடிப்பான் அது யார்?

    ReplyDelete
  5. அவியல் அருமை
    பையனின் சிலேடைப் பேச்சு மிக மிக அருமை
    இப்படி இயல்பாக குழந்தைகளிடம் இருந்து
    சிலேடைப் பேச்சு வரும் சமயத்தில்
    நம் கோபம் எல்லாம் தூசு
    சென்ற வார புதிருக்கான விடை
    கண்டுபிடிக்கவே முடியவில்லை
    நீங்க்கள் சொல்லித்தான் தெரிந்து
    கொள்ளவேண்டியதாகிப் போச்சு அருமை
    இந்த வாரமும் அப்படித்தான் படுகிறது
    அவியல் மிகப் பிரமாதம்
    தொடர்ந்து பரிமாற வேண்டுகிறேன்

    ReplyDelete
  6. ஐஞ்சுவை அவியல் செம டேஸ்ட். பெண்கள் மாதிரி ஆண்களையும் முகத்துல சட்னி போடச் சொல்றீங்க. உங்க பயன் காமெடி செம கலாட்டா. அந்த புதிர ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்.கோவில் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. இந்த முறையும் அவியல் சுவை அருமை. கண்ணகி கோவில் இதுவரை கேள்விப்படாத தகவல். பையன் சமர்த்து. உங்கள் கோபத்தை சமாளிக்கும் வழி தெரிந்திருக்கிறான். புதிர்.... ம்ஹூம் பிடிபடவில்லை. பதினொன்றோடு இரண்டைக் கூட்டினால் ஒரு டஜனும் ஒன்றும் வரும். வேறு எதுவும் தோன்றவில்லை. வேறு யாராவது சொல்றாங்களான்னு பார்ப்போம்.

    ReplyDelete
  8. இம்முறை அவியல் வெகு பிரமாதம். அழகுக்கு ஆண்கள் முகத்தில பூசிகக இயற்கை க்ரீமா? எங்களை வெச்சு டெஸ்ட் (காமெடி கீமெடி) பண்ணலையே..? கண்ணகி கோவில் தகவல் நன்று. அதுசரி... (சைக்கிளுக்கு ஏதம்மா கால்கள் தங்கச்சி?) அவியலின் பல சுவைகளுக்கு நடுவே மலர்ந்திருக்கும் பூக்கள் வெகு அழகு!

    ReplyDelete
  9. அவியல் மிக்க சுவையாக உள்ளது. ஆண்கள் முகத்தில் சட்னி பூச சொல்வது செம காமெடி.............

    ReplyDelete
  10. அவியல்கள் அருமை !

    பதினொன்றோடு இரண்டை கூட்டினால் 1 வரும். எப்படி?

    இப்போ டைம் 11 மணி ! அதோடு 2 மணி நேரத்தை கூட்டுங்க ! 1 மணி ஆகும் ! சரியா சகோதரி !

    ReplyDelete
  11. ஐஞ்சுவை அவியல்........நல்ல சுவை.

    கணக்கு - வீக்கு.. ஜூட்

    ReplyDelete
  12. //ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள்//

    சகோதரி நாங்கள் அப்படியெல்லாம் நினக்கவில்லை கடவுள் எங்களை படைக்கும் போதே மிக அழகாகவே படைத்து விடுகிறான். அதனால்தான் நாங்கள் அலங்காரங்களை விரும்புவதில்லை ஆனால் பெண்களை கடவுள் படைக்கும் போது அப்படி படைக்கவில்லை அதனால் தான் இவ்வளவு அலங்காரம் தேவைப்படுகிறது. ஹீ.ஹீ.ஹீ.ஹீ.ஹீ.ஹீ.ஹீ.ஹீ.

    அவியலில் பையனின் நகைச்சுவை உணர்வு மிக அருமை......கண்ணகி கோவில் பற்றிய தகவல் மிக பயனுள்ள தகவல்.

    அடுத்தாக உங்கள் கேள்விக்கு பதிலளிக்க என்னால் முடியவில்லை மிக எளிய கேள்வியாக கேட்கவும் உதாரணமாக 1+1=??? என்ன என்று கேளுங்கள் அதையும் மிக யோசித்துதான் பதில் அளிக்க முடியும்


    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  13. ரெவெரி கூறியது...

    சுவையான அவியல் தான்...

    தலைப்பில் பாகத்தை தூக்கிவிடுங்களேன் ராஜி...
    >>>
    எடுத்தாச்சு சகோ

    ReplyDelete
  14. கோகுல் கூறியது...

    என்னது பதினொன்றோடு இரண்டைக்கூட்டினால் ஒன்று வருமா?
    நான் கணக்குன்னாலே காத தூரம் ஓடுவேன் புதிர் வேறயா?விடு ஜூட்

    தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் சாட்டையால் அடிப்பான் அது யார்?
    >>>>
    கல்யாண மேளம்

    ReplyDelete
  15. திண்டுக்கல் தனபாலன் கூறியது...

    அவியல்கள் அருமை !

    பதினொன்றோடு இரண்டை கூட்டினால் 1 வரும். எப்படி?

    இப்போ டைம் 11 மணி ! அதோடு 2 மணி நேரத்தை கூட்டுங்க ! 1 மணி ஆகும் ! சரியா சகோதரி !
    >>>
    சரிதான் சகோ

    ReplyDelete
  16. சுவையான அவியல்.பையன் பெரிய ஆளுதான்!

    ReplyDelete
  17. அவியல் சுவையாக இருக்கு.உங்க பையனோட பேச்சு அருமை. வாழ்த்துக்கள் குழந்தைக்கு.

    ReplyDelete
  18. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. >>ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள்.

    hi hi ஹி ஹி ஹி

    ReplyDelete
  20. அறுசுவை தெரியும். ஐஞ்சுவை இது ராஜி ஸ்பெஷலோ. அருமை சகோதரி. எந்த சுவை சிறந்ததென்று கணிக்கமுடியாத அளவுக்கு ஐந்தும் சுவைதான் போங்க. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete