Tuesday, February 14, 2012

கிளிக்கு றெக்கை முளைச்சுட்டுது..., அது ஆத்தை விட்டு பறந்து போய்ட்டுது....,

 பாலூட்டி வளர்த்த கிளி 
பழம் கொடுத்து பார்த்த கிளி
 நான் வளர்த்த பச்சை கிளி 
இன்று வந்ததம்மா கச்சேரிக்கு 
செல்லம்மா, என் செல்லம்மா..., 

                                     http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Ara_ararauna_Luc_Viatour.jpg/220px-Ara_ararauna_Luc_Viatour.jpg
      என்னங்க காதலர்தினம் அதுவுமா சோகப்பாட்டு பாடுறேன்னு பார்க்குறீங்களா? இன்னிக்கு எங்க வீட்டுல பாகப்பிரிவினை நடந்து என் பெரிய பொண்ணு தூயா, புது வீடு பார்த்து  தனிக்குடித்தனம் போய்ட்டா. இந்த  வீட்டு வேலைல பாதி வேலை செய்யுறது அவதான்.., இப்போ இந்த வேலைக்குலாம் எனக்கு யார் ஹெல்ப் பண்ணுவா.

     என்ன ஏதுன்னு சொல்லாம இப்படி புலம்புனா எப்படிம்மா? பாப்பாவோட கோவத்துக்கு என்ன காரணம்ன்னு சொன்னால் நாங்க போய் சமாதான படுத்துறோம்ன்னு நீங்க எனக்கு ஆதரவா சொல்றதுனால...., (சொல்வீங்கதானே!?) என் சோக கதையை உங்க கிட்ட சொல்றேன்...,

       நான் பிளாக் எழுத ஆரம்பிச்சு கொஞ்ச நாள் வரை ரேங்க், விசிடர்ஸ் டுடே, ஓட்டு இதை பத்தியெல்லாம் கவலை படலை. திரட்டிகளில் இணைச்சாதான் நம்ம பதிவு அதிக பேர்களை போய் சேரும்ன்னு தம்பி சசியோட வந்தேமாதரம் பிளாக்ல படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அதே போல திரட்டிகளில் சேர்ந்து பதிவுகளை இணைக்க ஆரம்பிச்சேன்.

       ஒருநாள் தற்செயலா தமிழ்மணம் ரேங்க் எம்பளம் என் கண்ணில் பட்டிச்சு. நம்ம பிளாக் எந்த இடத்துல இருக்குன்னு பார்க்கலாம்ன்னு ஆசைப்பட்டு அங்கே கிளிக் பண்ணேன்.   ”ஏழரை” எங்க வீட்டு வாசல்ல நின்னு என்னை உற்று பார்ப்பது தெரியாமல்...,  
 
    638வது இடத்துல என் பிளாக் இருந்துச்சு. அடடா, நாம எழுதுற லட்சணத்துக்கு 638வது இடத்துல இருக்கோமேன்னு பெருமை தாங்லை. எப்பவாவது போய் பார்ப்பேன்.  என் பிளாக் ஆணியடிச்ச மாதிரி அங்கேயே இருந்துச்சு.

   ஒருநாள் போய் பார்க்குறேன் என் பிளாக் 188வது இடத்துல இருக்கு.  ”ஏழரை” சேர் போட்டு என்கூடவே கம்ப்யூட்டர் பக்கத்துல உக்காந்து இருக்குறது தெரியாமல் சந்தோசப்பட்டுக்கிட்டேன். தினமும் போய் ரேங்க் பார்க்க ஆரம்பிச்சேன். காலையில எழுந்ததும் பல்லு கூட வெளக்காமல் தமிழ்மணம் ரேங்க் பார்த்து என் பிள்ளைங்ககிட்ட இன்னிக்கு என் பிளாக் 105, 98 ,78ன்னு கவுண்ட் டவுன் சொல்ல ஆரம்பிச்சேன். என்னால பார்க்க முடியாத நாளில் பாப்பாவை பார்க்க சொல்வேன். 
   
     இதனால செம கடுப்பான என் பொண்ணு பிளாக் ஆரம்பிச்சு ஒன்றரை வருசம் கழிச்சுதான் இந்த 41வது இடத்துக்கு வந்திருக்கே..,இதுவே உன் இடத்தில் நான் இருந்தால் எண்ணி ஆறே மாசத்தில் தமிழ்மணத்துல உன்னிடத்துக்கு வந்திருப்பேன்னு என்கிட்ட சவால்விட்டு இன்னிக்கு தேவதையின் கனவுகள்ன்னு தனியா பிளாக் ஆரம்பிச்சிருக்கா. சமாதானப்படுத்த நினைக்கும் நாட்டாமைக்காரர்லாம் அங்க போய் பேச்சு வார்த்தை நடத்துங்க.
 
                                          
  என் நண்பனோட மகனுக்கு  இன்னிக்கு முதல் பிறந்த நாள்.  

கைகளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி
இசையினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடமையிலே தைலச் சிறந்து
அன்பினாலே சுடர் ஏற்றி
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க 
என அவனை வாழ்த்திக்குறேன்.
                            
                 
டிஸ்கி: இன்னிக்கு காதலர் தினமாம். இன்னிக்கு எதாவது பதிவு போடலைன்னா சாமிக்குத்தம் ஆகிடும்ன்னு  சன் நியூஸ்ல சொன்னதால  எதாவது பதிவு போடலாம்ன்னு பார்த்தால்..., காதல் பண்ணுங்கன்னும், காதல் பண்ணாதீங்கன்னும், காதலின் நன்மை தீமைகள்ன்னும், காதல் கவிதைன்னு பதிவு போட்டு  “காதல்”ன்ற அப்பாவி ஜீவனை இம்சை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துல  நானும் எதாவது சொல்லி இம்சிக்க வேணாம்ன்னு முடிவெடுத்து வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக்குறேன்.



21 comments:

  1. கச்சேரிக்குப் போன கிளியைப் போயிப் பாத்தேன். ஆரம்பமே களை கட்டிருக்கு. குட்டி 16 அடி பாஞ்சிடும் போலருக்கே... உஷாரும்மா தங்கச்சி...

    ReplyDelete
  2. தேவதையின் கனவுகளை கண்டு வந்தாயிற்று.சிறப்பு. தேவதைக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் கொடுத்தாயிற்று.

    ReplyDelete
  3. அக்கா... அசத்துறீங்களே...


    அவ்வளவு இம்சை கொடுத்து இருக்கீங்க...

    அம்மா 8 அடின்னா பிள்ளை 16 அடிதானே...

    கண்டிப்பாக பதிவுலகில் கலக்குவார்கள் என நம்புகிறேன்...

    இங்கேயும் ஒரு வாழ்த்தை சொல்லிக்கிறேன்.....

    ReplyDelete
  4. காதலர் தினத்தில் கண்டிப்பாக பதிவு போடக்கூடதான்னு என்னை மிரட்டினாங்ன அதையும் மீறி பதிவு போட்டு காதலர் தினத்தை தனியா கொண்டாடியாச்சி...

    கவனிக்கவும் தனியாக...

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள், உங்க மகளின் தளத்திற்கு இதோ போகிறேன்

    ReplyDelete
  7. உங்க வீட்ல இன்னும் உங்கப்பா, அம்மா, மகள், மகன் , கணவன் என 5 பேர் இருக்காங்க, அவங்க பேர்லயும் பிளாக் ஆரம்பிக்கவும், தமிழ்மணம் 7 ஓட்டு ரெடி. எந்த போஸ்ட் போட்டாலும் 10 நிமிஷத்துல ஹிட் ஆகிடும் ஹி ஹி

    ReplyDelete
  8. தேவதையின் கனவு தேவதைக்கு வாழ்த்துக்கள்..

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா..?

    வாழ்த்துக்கள் சகோதரி ராஜி...

    ReplyDelete
  9. வாழ்த்துகள்.

    தேவதையின் கனவுகளைப் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்...அனைவருக்கும்...

    ReplyDelete
  11. தூயாவுக்கு வாழ்த்துக்கள், ராஜி.அவங்க பதிவுக்கு போய் பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. ரெண்டு பேரும் கலக்கறீங்க..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. காதலர் தினத்தில பதிவு போடலைன்னா சாமிகுத்தமா....எனக்குத் தெரியாத ஒரு பொன்மொழி.கலக்கிட்டீங்க ராஜி.தேவைதையின் கனவுகள் உங்களை ஜெயிக்க வாழ்த்துகள்.
    காதலுக்கும் வாழ்த்துகள் ராஜி !

    ReplyDelete
  14. தேவதையின் கனவுகளையும் வரவேற்போம் வாழ்த்துக்கள் கூறி.

    ReplyDelete
  15. "காணாமல் போன கனவுகளை" தேடி உங்கள் வலைப்பதிவு பக்கம் வந்தால் அங்கு "தேவதையின் கனவை" கண்டு & படித்து இப்போது கனவு உலகில் இருந்து கொண்டிருக்கிறேன். கனவுகள் இனிமையானவை அதை தந்த உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. சாமிக்குத்தம் தீர்ந்திடுச்சு. தமிழ்மண ரேங்கைப் பத்தி செம கமெடியா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் தேவதையின் கனவுகள் நிஜமாகுக............

    ReplyDelete
  18. தேவதைக்கிளிக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. இருவருக்கும் வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  20. உங்க மகள்வீட்டுக்கு போய்விட்டுத்தான் இங்கே வருகிறேன் .அட்டகாசம் ஆக இருக்கு .எங்க வீட்லயும் குட்டி பொண்ணு ஆரம்பிச்சுட்டா. ஒரு சின்ன அல்ப சந்தோசம் அவளுக்கு தமிழ் எழுத தெரியாது ஒன்லி ஆங்கிலம் அதனால் நம்ம பாடு ஓகே

    ReplyDelete