ஒண்ணாம் வகுப்பு..,
தொல்லை தாங்க முடியலைன்னு அம்மாவின்
தூண்டுதலால், இடது காதை வலது கையால்
தலை மேல் தொட முடிந்த தகுதியோடு
அடிவாங்கி, வீதியெல்லாம் புரண்டு கதற கதற
நல்ல நாள் பார்த்து விஜய தசமியில்
கண்டிப்புடன் உட்காரவைக்கப்பட்ட வகுப்பு....
ஒண்ணாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு:
தூக்கம், கதை, விளையாட்டு என
மகிழ்ச்சியாய் கழிந்த பள்ளி வாழ்க்கையில்
சிலேட்டு குச்சி, பலகை,
அ, ஆ..., 1,2,...வாய்ப்பாடு
அரிச்சுவடி, வீட்டுப்பாடம் என
வில்லன்கள் புகுந்த வகுப்பு
இரண்டாம் வகுப்பு...,
மூன்றாம் வகுப்பு:
இரட்டைக்கோடு நோட்டு, கோணார் கடை தேன்மிட்டாய்
ஜவ்வு மிட்டாயில் செய்த தேள், வாட்ச், பாம்பு..,’
பாண்டி விளையாட்டு, கிச்சு கிச்சு தாம்பூளம்
விளையாட்டுடன், அட்டெண்டன்ஸ், சாக்பீஸ்
கொண்டுவரும் அட்டெண்டர் வேலைகளோடு
பாடங்களை கற்ற வகுப்பு...,
மூன்றாம் வகுப்பு.
நான்காம் வகுப்பு:
ஆங்கிலத்தின் அறிமுகம்...,
நண்பனின் சில்லு மூக்கை பதம் பார்த்து
தோழியின் பென்சிலை உடைத்து..,
வீட்டு பாடம் செய்யாமல் அரட்டை அடித்து
இருக்கும் மூணு பாடத்திலும் ஃபெயிலாகி
இது தேறுமான்னு ஆசிரியரையே
யோசிக்க வைத்த வகுப்பு....
நான்காம் வகுப்பு.
ஐந்தாம் வகுப்பு:
பேனாவின் அறிமுகம்
கிளாஸ் டீச்சரின் செல்லம்
கபடி விளையாட்டில் சுட்டி
பரத நாட்டியம் , நாடகம்..., ஆனால்
படிப்பில் மட்டும் பூஜ்ஜியம், என
ஆரம்ப பள்ளி படிப்பை முடித்த வகுப்பு...,
ஐந்தாம் வகுப்பு.
ஆறாம் வகுப்பு:
புது பள்ளி, புது நட்பு,
புதுசா சீவிய முள் கொம்பு..,
கண்டிப்பான வரலாற்று ஆசிரியர் மற்றும்
கனிவான கணக்கு ஆசிரியரின் தீவிர முயற்சியில்..,
மூளைக்குள் படிப்பு ஏற ஆரம்பித்த வகுப்பு....
ஆறாம் வகுப்பு.
ஏழாம் வகுப்பு:
கபடி, கோ கோ, ஓட்டப்பந்தயம், என
கலக்கி பி.டி சாரின் செல்லம்...,
தமிழாசிரியரின் வற்புறுத்தலால்
பஞ்சதந்திரகதைகளும், அம்புலி மாமா புத்தகமும்
அறிமுகமான வகுப்பு...,
ஏழாம் வகுப்பு.
எட்டாம் வகுப்பு:
கிராஃப் நோட், ஜியாமிண்ட்ரி பாக்ஸ்..,
கட்டுரை போட்டியில் முதல் பரிசு..,
சைக்கிள் பழக, எதிர் பாலினர் மீது
புரியாத ஈர்ப்பு.., அம்மாவுக்கு துணையாய்
வீட்டு காரியங்களிலும், அப்பாவுக்கு
கணக்கு பிள்ளையாய் மாறி உலகத்தை
படிக்க துவங்கிய வகுப்பு...,
எட்டாம் வகுப்பு.
ஒன்பதாம் வகுப்பு:
மகளிர் பள்ளி, தாவணியே சீருடை....,
அக்காவின் சாயம்போன சைக்கிள்
கிடைத்தற்கே ஃபோர்ட் கார் கிடைத்த சந்தோசம்,
”பெண்ணாய்” என்னை உணர்த்தியது...,
ஒன்பதாம் வகுப்பு.
பத்தாம் வகுப்பு....,
டியூஷன், தினமும் டெஸ்ட்,
டி.வி, சினிமா, அரட்டை கச்சேரி,
தூக்கத்துக்குலாம் தடா விதிக்கப் பட்டாலும்
டிமிக்கி குடுத்து அனுபவித்து..., விளையாட்டாய்
மார்க் அள்ளி பெற்றோருக்கும், பள்ளிக்கும்
பெருமை சேர்த்த வகுப்பு...,
பத்தாம் வகுப்பு.
பதினொன்றம் வகுப்பு...,
கணக்கு பாடம் எடுத்தால் எந்த
பட்டப்ப்டிப்புக்கும் போகலாமென நம்பி
சேர்ந்து..., காமர்ஸ் குரூப் மாணவர்களை
ஏளனமாய் பார்த்து, லேப்ல எலி அறுக்கும்போது
மயங்கி விழுந்து..., பொது தேர்வு அடுத்த வருடம்தானே
என அசால்ட்டாய் இருந்த வகுப்பு...,
பதினொன்றம் வகுப்பு.
பனிரெண்டாம் வகுப்பு:
இன்னும் நாள் இருக்கு என
அரை பரிட்சை வரை அலட்சியமாய் கழித்து..,
புத்தனுக்கு போதி மரம் போல், பள்ளி அரசமரம்
எதிர்காலம் பற்றி போதிக்க...,
அக்கறையாய் படித்து
ஆட்டோகிராஃப், கவிதை, திருமணமா? கல்லூரியா? என
பள்ளி வாழ்க்கை முடிந்த வகுப்பு...,
பனிரெண்டாம் வகுப்பு.
டிஸ்கி: போன வாரம் என் பொண்ணுக்கு ஸ்கூல்ல ஃபேர்வெல் பார்ட்டி. தனக்கொரு கவிதை வேணும்ன்னு கேட்டாள். சில கவிதைகள் எழுதி காட்டுனேன். எதுவும் அவளுக்கு பிடிக்கலை. எப்படி வேணும்ன்னு கேட்டேன்.., அவ என் பள்ளி வாழ்க்கை மொத்தமும் ஒரே கவிதையில் வந்துடனும்ன்னு கண்டிசன் போட..., எப்பவோ எங்கேயோ படிச்ச ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. அந்த கவிதையில் இப்படித்தான் வகுப்பு வாரியா பிரிச்சு எழுதியிருப்பார். அந்த சாயல்ல எழுதினதுதான் இந்த கவிதை. அவளுக்கு தகுந்தாற்போல் எழுதி அவக்கிட்ட குடுத்து, எனக்கு தகுந்தாற்போல் எழுதி பதிவாக்கிட்டேன். இந்த கருப்பொருள் எல்லாருக்கும் ஒத்துவருமே அதனால் இதையே ஏன் ஒரு தொடர் பதிவாக்கக்கூடாதுன்னு தோணுச்சு.
அதனால்,
ஆகியோரை இந்த தொடர் பதிவை தொடர அழைக்கின்றேன். இந்த ஐந்து பேரும் தங்களுக்கு பிடித்த ஐந்து பேரை அழைக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொல்கிறேன் சாரி.., கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா என்னை அங்கே பாத்தேன் .உங்க பதிவு ப்ளஸ் கவிதைல .சூஊப்பர்...
ReplyDeleteஆஹா ஆரம்சிட்டாங்கப்பா...
ReplyDeleteஅடுத்த தொடர் பதிவா....
முயற்சிக்கிறேன்....
அதிர்ச்சி 1 - நீங்க 12 ஆம் வகுப்பு வரை படிச்சிருக்கீங்களா?
ReplyDeleteஅதிர்ச்சி 2 - தொடர் பதிவு எழுதறீங்களா?
ஹி ஹி ஹி
@angelin கூறியது...
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா என்னை அங்கே பாத்தேன் .உங்க பதிவு ப்ளஸ் கவிதைல .சூஊப்பர்...
ஹி ஹி டபுள் ஆக்டிங்க் டமாக்கா
வித்தியாசமான சிந்தனை தந்த
ReplyDeleteஅருமையான கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரசித்தேன் மிக அருமையான பதிவு
ReplyDeleteசுருக்கமாக ஆனால் விரிவாக(!) அழகாக சொல்லியிருக்கீங்க.5 பேரை மாட்டி வேற விட்டிருக்கீங்க!
ReplyDeleteநான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்...
ReplyDeleteநான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்...
நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்...
பள்ளி காலத்தை மீண்டும் நினைவுபடுத்தி கவிதையாக வடித்துள்ளீர்கள்.
ReplyDeleteஅருமை அக்கா...
தொடர்பதிவா?ஆஆஆஆ......
அடடே, இது கவிதைன்னு கடைசி வரியைப் பார்த்ததும் தான் தெரிந்தது. நான் கூட ஏதோ அலைன்மென்ட் தவறோ என்று நினைத்தேன். ;-)
ReplyDeleteவகுப்புவாரியாய்
ReplyDeleteவாஞ்சைக்கவிதையுடன்..
அழகிய தொடர் பதிவு...
அந்தக் கால பள்ளி முறையை ,
ReplyDeleteஇப்படி அருமையா ஞாபகம் வச்சு இருக்கீங்க .
அதைக் கவிதையாய் அழகாய் வடிச்சு இருக்கீங்க.
2 - ஸ்லேட்
3 - இரட்டைவரி நோட் ......
லேப் ல மயங்கி விழுந்தது ..... எல்லாம் அற்புத
நினைவுகள்.
அட.... சூப்பர் நினைவுகள் சகோ.....
ReplyDeleteஅடுத்த தொடர் பதிவு - இதுவும் ஒரு ரவுண்ட் வரும்னு நம்புவோம்....
பதிவை ரெண்டு தடவை படிச்சேன்.மீண்டும்
ReplyDeleteபள்ளிக்கே போய்விடலாமான்னு நினைக்க வைச்சுடுச்சு.
எனக்கொரு சந்தேகம் +2 பாஸ் பண்ணிடீங்களா?அதைப்பத்தி சொல்லவே இல்லையே?
ReplyDeleteமீண்டும் பள்ளிக்கு பழைய நினைவுகளை நிதானித்து தீட்டிய ஓவியக்கவிதை அழகு.இதிலையும் தொடர்பதிவா ?? நல்ல எண்ணம்.
ReplyDeleteநான் ஸ்கூல் ட்ரோப்அவுட்...-:)
ReplyDeleteநினைவுகள் நல்லாயிருந்தது...ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
நான்காம் வகுப்பிலே சப்ஜக்ட்டுகளில் ஃபெயிலா?.......
ReplyDeleteஆரம்ப கால பள்ளி கடைசி நாளன்று என்னை மறக்காதன்னு இன்க் அடிப்பார்களே அத மிஸ்பன்யாச்சா?
&சூப்பர் நினைவுகள்
This comment has been removed by the author.
ReplyDeleteஅவ்வ்வ்வவ்வ்வ்வவ் .....டைப் பண்ணும்போது என்னையும் கொஞ்சம் அங்கே பார்த்தேன் அப்படீங்கறதுக்கு பதில் என்னை அங்கே பார்த்தேன்னு டைப்பிட்டேன் ராஜி .நான் எப்பவுமே கிளாஸ் இல் ஃபர்ஸ்ட் .
ReplyDelete(நாலாங்கிளாஸ் /அஞ்சாங்க்லாஸ் விஷயம் அவசரத்தில கவனிக்கல )
என்னங்க இப்படி பண்ணிட்டீங்க. ஸ்கூலில் நான் ஒழுங்காக படித்ததே கிடையாது. ஆனால் நல்ல பையனாக இருந்ததால் தண்டனையில் இருந்து தப்பித்து வந்தேன். அதை எப்படியோ மோப்பம் பிடித்த நீங்க இப்போ பெஞ்சு மேல ஏறி நிக்க வைப்பது போல இந்த தொடரை எழுத சொல்லி என் மானத்தை வாங்குகீறிங்க.
ReplyDeleteஒரு சந்தேகம் ஸ்கூலில் லாஸ்ட் பெஞ்சுக்கு முன்னாள் உள்ள பெஞ்சில் நான் உட்காருவது உங்களூக்கு எப்படி தெரிஞ்சது. அதே இடத்தை இங்கே நீங்கள் எனக்கு ஒதுக்கியது எனக்கு மிக ஆச்சிரியம்.. எனக்கு முன்னாள் உள்ள மாணவர்கள் என்ன எப்படி எழுதுகிறார்கள் என்று பார்த்து காப்பி அடிக்கலாம் என்று ப்ளான் பண்ணியிருக்க்கிறேன் அதன் பின் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
கீதா மேடம் ரொம்ப வாலா கடைசி சீட்டில் உட்கார்ந்து இருக்காங்க....?
நாலாம் வகுப்பை ரெண்டு வாட்டி எழுதியிருக்கீங்க? (ஹிஹி கவனிக்கறீங்களானு பார்த்தேன்:)
ReplyDeleteசுவாரசியமான கவிதை (?).
தொடர்றதுக்கு நானா? ஸ்கூல்ல ரொம்ப சாதுப் பையனா சேட்டை எதுவும் பண்ணாம இருந்ததால என்னை ‘தயிர்சாதம்’னுதான் சொல்வாங்க தங்கச்சி. நான் தொடர்றதா... அவ்வ்வவ்.... இந்த நேரம் பாத்து ஒண்ணும் தோண மாட்டேங்குதே சொக்கா... சரி, தங்கை சொல்லிட்டதால நாளைக்கே முயற்சிக்கிறேன். சரியா...
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு சகோ. நான் பள்ளி இறுதி வகுப்பு வரை எந்த பாடத்திலயும் ஒரு முறை கூட பெயில் ஆனதில்ல. ஹி...ஹி...!
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு சகோ. நான் பள்ளி இறுதி வகுப்பு வரை எந்த பாடத்திலயும் ஒரு முறை கூட பெயில் ஆனதில்ல. ஹி...ஹி...!
ReplyDeletetha ma 12.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ !
ReplyDeleteஉங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்
ReplyDeleteஒரு வகுப்புலகூட படிச்ச மாதிரி தெரியலயே!!!!!!!!!
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
ReplyDeleteநான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்...
நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்...
நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்..
>>
இப்படி அடம்பிடிச்சால் மிஸ் பிரம்பெடுத்துக்கிட்டு வருவாங்க தம்பி
இன்னொரு தொடரா....சத்தியமா நான் எழுதமாட்டேன்.இப்பவே சொல்லி வைக்கிறேன் !
ReplyDeleteராஜி...1-12 வரைக்கும் படிச்சீங்களா.ரொம்பக் கஸ்டம்ல !
தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி ராஜி. விரைவில் தொடர்கிறேன். உங்க அளவுக்கு பள்ளிவாழ்க்கை சுவாரசியம் நிறைந்ததாக இருக்க வாய்ப்பில்லை என்னும்போதும் உங்கள் அழைப்புக்கு மதிப்பளித்து விரைவில் தொடர்கிறேன்.
ReplyDeleteபிடித்த ஐந்து பேரை அழைக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொல்கிறேன் சாரி.., கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete:)))))))))))))))))
இடுகை அருமை. :-)
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)