* பத்து கடை ஏறி இறங்கி, கடைசி கடையில.., ராத்திரி கதவு மூடனும் கிளம்புங்கன்னு மேனேஜர் கெஞ்சல் பார்வைக்காக ஒரு வழியா முதல்ல பார்த்த சேலையையே வாங்கி வீட்டுக்கு வந்து கட்டி பார்க்கும்போது, அந்த மயில் கழுத்து கலர் சேலையையே எடுத்திருக்கலாமோ?!ன்னு தோணுறது எனக்கு மட்டும்தானா?!
* ஒரே ஒரு அறை, கொஞ்சம் திட்டு, இதுக்கு பயந்துக்கிட்டு ஏன் நம்ம பசங்க, பொண்ணுங்க கிட்ட லவ்வ சொல்ல பயப்படுறானுங்க?!
* சிகரெட் பெட்டில, ”புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு”, சரக்கு பாட்டில்ல ”குடி குடியை கெடுக்கும்”ன்னு அச்சடிச்சிருக்குற மாதிரி, கல்யாண பத்திரிகைல, ”திருமணம் செய்வது நிம்மதிக்கு கேடு”ன்னு ஏன் போட மாட்டேங்குறாங்க?!
* பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, ஏன் பாஸ்ப்போர்ட்டை விட சின்னதா இருக்கு?!
* சினிமால வர்ற அடியாளுக்குலாம் ராமசாமி, முனியாண்டின்னே இன்னும் பழைய பேருங்களையே வைக்குறாங்களே! ஹரீஷ், நித்தீஷ்ன்னு மாடர்னா வைக்கலாமில்ல?!
*பதமா, இதமா சொன்னாலும் கேக்குறதில்லை, அடிச்சு சொன்னாலும் கேக்குறதில்லை. அப்பா, அம்மா, அண்ணன், மாமன்,மச்சான்,டீச்சர்ன்னு யார் அட்வைஸ் பண்ணாலும் கேக்க மாட்டோம்ன்னு ஊருக்கே தெரியும். அப்புற்ம் என்னத்துக்கோசரம் காலண்டர்ல தத்துவம், யோசனை, டிப்ஸ்ன்னு போட்டு கொல்லுறாய்ங்க?!
* நம்ம நாட்டுக்கு வந்து பகலெல்லாம் பீச், கோவில், மசூதி, சர்ச், ஷாபிங்க்ன்னு சுத்துற வெள்ளைக்காரங்க தன்னோட ஊருக்கு போகும்போது கருப்பாவா போறாங்க இல்லியே! ஆனா, நாம் வெளில கிளம்பினால வெயில்ல சுத்துனே கருத்துடுவே. அதனால் சீக்கிரம் வந்துடுன்னு அம்மாலாம் சொல்றாய்ங்களே ஏன்?!
* வேலை மெனக்கெட்டு சின்ன, சின்ன பூரி சுட்டு அதை உடைச்சு போட்டு பானி பூரி தர்றாங்களே ரோட்டோர பானிப்பூரி கடைல!? அதை பெருசா செஞ்சு உடைச்சு போட்டாதான் என்ன?! சீக்கிரம் வேலை ஆகும்ல!!
* ஜாமெண்ட்ரி பாக்ஸ்ல ரெண்டு பக்கமும் கூர்மையா இருக்குற காம்பஸ், அடுத்தவன குத்துறதத் தவிர வேறெதுக்கும் பயன்பட்டதா எனக்கு தெரியல! தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்...
* எல்லா பெரிய ஆளுங்க பொறந்த நாள் அதுவுமா அவங்க மாமா, பக்கத்துவீட்டுக்காரன், பாட்டி ஸ்கூல் டீச்சர், ரிக்ஷாகாரர்லாம் சொல்லி வச்ச மாதிரி இவங்க இப்படி வருவாங்கன்னு எனக்கு அப்பவே தெரியும்ன்னு சொல்றது எப்படி?!
* செல்போன்ல சிக்னல் சரியில்லை போல, விட்டு விட்டு வருது, கொஞ்சம் சத்தமா பேசுன்னு சொல்ற அறிவாளி?! ஃப்ரெண்ட்ஸ் எனக்கு மட்டும்தானா?!*ராத்திரி, பகல்ன்னு எப்போ பார்த்தாலும் வரிசைக் கட்டி போய்கிட்டே இருக்கும் எறும்புக்கு கால் வலிக்காதா?! அது எப்போ ரெஸ்ட் எடுக்கும்ன்னு யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.
* “சால்ட்”(Salt)ன்னா உப்புதானே!? அப்புறம் ஏன், கல் உப்பை “உப்பு”ன்னும், தூள் உப்பை, “சால்ட்”ன்னும் சிலர் சொல்றாங்க?!
கடைசி வரைக்கும் உண்மை தெரிஞ்சுதா இல்லீங்களா ??? டவுட்டு
ReplyDeleteஅது தெரிஞ்சிருந்தா நான் ஏன் பதிவு போடப் போறேன்?!
Deleteஅது சரி...
Deleteவேலை மெனக்கெட்டு சின்ன, சின்ன பூரி சுட்டு அதை உடைச்சு போட்டு பானி பூரி தர்றாங்களே ரோட்டோர பானிப்பூரி கடைல!? அதை பெருசா செஞ்சு உடைச்சு போட்டாதான் என்ன?! சீக்கிரம் வேலை ஆகும்ல!!
ReplyDeleteஇது கேள்வி
ராத்திரி, பகல்ன்னு எப்போ பார்த்தாலும் வரிசைக் கட்டி போய்கிட்டே இருக்கும் எறும்புக்கு கால் வலிக்காதா?! அது எப்போ ரெஸ்ட் எடுக்கும்ன்னு யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.
ReplyDeleteகேட்டு சொல்றேன் எறும்பு கிட்டே
//ஒரே ஒரு அறை, கொஞ்சம் திட்டு, இதுக்கு பயந்துக்கிட்டு ஏன் நம்ம பசங்க, பொண்ணுங்க கிட்ட லவ்வ சொல்ல பயப்படுறானுங்க//
ReplyDeleteலவ்வை சொல்ல பயமில்லைங்க எங்களுக்கு ஆனா அதை பிடிச்சுகிட்டு கல்யாணம் வரை போய்விடுவோமோ என்ற பயம்தானுங்க காரணம்
யக்கோவ் உங்க மூளை ரொம்ப நல்லா வேலை செய்யுறப்பல இருக்கே பாத்துக்கா ரொம்ப யோசிச்சா மூளை தேஞ்ச்சு போக போது
ReplyDeleteஹ்ம்ம்ம்ம்.
ReplyDeleteநியாயமான கேள்விகள் தான் சகோதரி.
ஆனா எங்களுக்கு இருக்கிற மூளையையும் குழப்பிவிடுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?
செங்கோடா???????????
ReplyDeleteappaa saami aalai vitunka!
ReplyDeleteரைட்டு..
ReplyDeleteஉண்மையைத் தேடி ஒரு பயணம்..!
ReplyDeleteஇருங்க உங்க கேள்வி அனைத்திற்கும் ரூம் போட்டு யோசிச்சு பதில் சொல்லுறேன்.
ReplyDelete-இம்புட்டு கேள்வி கேட்டா எப்படிங்க...
ReplyDeleteஇந்த விளையாட்டுக்கு நான் வரல
ஹலோ வாத்தியார் தம்பி! பதில் சொல்லிட்டு போங்க.
Deleteஇவன் வாத்தியாரா இல்லை சிரிப்பு போலீசான்னு இன்னும் எனக்கு கண்பியூசாவே இருக்கு ஹி ஹி...
DeleteOne more truth I want to know : Till the date of retirement, the employee was scolded and criticized for not doing any work perfectly and properly; but on the day of his retirement, everybody right from the manager to the tea-boy, appreciate him like anything and his contribution to the institution. Why this so?
ReplyDeleteஇரண்டு கூர் முனை உடைய காம்பஸ் (உ.ம்) தேங்காய் எண்ணை பாட்டிலில் துளையிடலாம்..செறுப்பு தைப்பதற்கு உதவுது, காலண்டர்((monthly) துளை போடலாம்.. இன்னும் இருக்கு. அநேக பாஸையில் "உப்பு" உப்புதான். சால்ட் ஒரு தமிழ் வார்த்தையா உபயோகிச்சு பழகிட்டோம்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஅப்போ அந்த காம்பஸ் கணக்கு பாடத்தை தவிர எல்லாத்துக்கும் பயன் பட்டிருக்குன்னு சொல்லுங்க :-)
Deleteசெம கொஸ்டின்ஸ்... ஏனுங்க அம்மணி ரூம் போட்டு யோசிச்சீங்களா என்னா?... படிச்சு முடிக்கிறப்போ சிரிப்பு வர்றதவிட இப்படியெல்லாம் எப்படி யோசிச்சிருப்பாங்கன்னு கிர்ருன்னு ஒரு மயக்கம் வருது பாருங்க... யம்மாடியோவ்... உங்க வூட்டுல அல்லாரும் ரொம்ப பாவமுங்கக்கா...
ReplyDeleteயம்மாடி... எப்புடி உங்களுக்கு இந்த மாதிரியெல்லாம்
ReplyDeleteயோசனை வருது...?
சிரித்துக்கொண்டே படித்தாலும் யோசிக்கத் துாண்டிய கேள்விகள்.
\\\\ஒரே ஒரு அறை, கொஞ்சம் திட்டு, இதுக்கு பயந்துக்கிட்டு ஏன் நம்ம பசங்க, பொண்ணுங்க கிட்ட லவ்வ சொல்ல பயப்படுறானுங்க\\\ இப்படித்தான் நெனச்சிகிட்டு நம்ம பையன் ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொல்லிருக்கான்...ஆனா பொண்ணு பொலீஸ் இன்ஸ்பெக்டர் மகள்ங்கிறது பின்னாடிதானே தெரிஞ்சுது....என்னா அடி....
ReplyDelete///ராத்திரி, பகல்ன்னு எப்போ பார்த்தாலும் வரிசைக் கட்டி போய்கிட்டே இருக்கும் எறும்புக்கு கால் வலிக்காதா?! அது எப்போ ரெஸ்ட் எடுக்கும்ன்னு யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்/// இந்த வெளையாட்டுக்கு நான் வரல....எஸ்கேப்ப்ப் ....
ReplyDeleteநல்ல கேள்விகள்....
ReplyDeleteடாடி எனக்கு ஒரு டவுட்டு... ப்ரொக்ராம் பண்ண ஆள் தேடிட்டு இருக்காங்களாம்! :)
ஒரே ஒரு அரை கொஞ்சம் திட்டு//
ReplyDeleteஅய்யய்யோ தங்கச்சி இதை அப்பவே சொல்லி இருக்கப்டாதா, நெஞ்சை நிமித்தி அண்ணிகிட்டே அப்பவே என் காதலை சொல்லி இருப்பேனே அடடா....!
ச்செம.......
என்னா கேள்விகள்...! தனியா ரூம் போட்டு யோசிச்சியாம்மா..? படிச்சதும் என் மனசுல தோணினதை சொல்லலாம்னு வந்தா... மனோ அதைச் சொல்லிட்டார். ஸேம் பிளட்! ஹி... ஹி...!
ReplyDeleteநல்லா கேக்குறாங்கய்யா டீடெய்லு
ReplyDeleteநல்ல கேள்விகள்.
ReplyDeleteஎறும்புக்கு கால்வலிக்காதா ? அருமை.
பதில்கள் இதோ ரெடியாயிட்டு இருக்கு...!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3_25.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன வேணும் கேளுதாயி....
ReplyDelete