Wednesday, July 24, 2013

இது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு!!

  
 நம்ம ஊரு ஆண்களை மன்மோகன் சிங்க் குர்தாவுல எத்தனை  பட்டன் இருக்குனு கேட்டு பாருங்க, படக்கென வந்து விழும் பதில்!! கணக்கு புதிரா?! சட்டென விடை வரும்.., உலக நடப்பு அத்தனையும் விரல் நுனில இருக்கும். ஆனா,    என்ன செய்தா வூட்டுக்காரம்மாவை  நம்ம வழிக்கு கொண்டுவரலாம் ன்ற விஷயத்துல தான் ஆண்களுக்கு பயங்கர குழப்பம்.

சில பொண்ணுங்களுக்கு சாக்லேட் பிடிக்கும், சிலருக்கு ஐஸ்கிரீம் ன்னா கொள்ளை பிரியம்.  சிலருக்கு அம்மா வீடு, சிலருக்கு புடவை.., சிலருக்கு டெட்டி பேர் பொம்மை பிடிக்கும். ஆனா சில பொண்ணுங்க இருக்காங்க பாருங்க. அவங்களை, என்ன வாங்கி குடுத்தாலும் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டாங்க.

செலவே இல்லாத அன்பான கவனிப்பு, அக்கறையான பேச்சு, அப்பப்போ ஆறுதலாய் சில முத்தம் என கொடுத்தால் சொக்கிப்போகும் பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க. உள்ளன்போடு புரிதலும் இருக்கும் துணைதான் என்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருதாம். இதை நான் சொல்லலீங்கோ!! ஒரு ஆய்வோட முடிவு இதெல்லாம்...., உங்க (நல்லா நோட் பண்ணிக்கோங்க சகோ’ஸ் ”உங்க”) காதலியையோ, மனைவியையோ எப்பவும் மகிழ்ச்சியா வச்சுக்கிட்டு, நீங்களும் மகிழ்ச்சியா வாழ, அந்த ஆய்வுல வந்த டிப்ஸ்கள உங்களுக்கு சொல்றேன். கேட்டுக்கோங்க சகோ’ஸ...,

                                         
 பூ கொடுங்கள்:
மல்லியோ, முல்லையோ, கனகாம்பரமோ இல்ல ரோஜாவோ எதாவது ஒரு பூவுக்கு மயங்காத பொண்ணுங்க  யாரும் இருக்கமாட்டாங்க. அதனால,  பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலில் பார்த்த நாள், காதலை உணர்த்திய நாள், லொட்டு, லொசுக்குன்னு எதாவது காரணம் சொல்லி அடிக்கடி பூக்கள் கொடுங்கள். மிகவும் எளிதான, மலிவான பரிசுதான். ஆனா மனதைத் தொடும் பரிசு இது (மனசை இல்லை, கூந்தலை தொடும் பரிசுன்னும், உன் அண்ணிக்கு காலிஃப்ளவர் வாங்கி கொடுத்தேன். பூரிக்கட்டையால மொத்துனா”ன்னு அமெரிக்காவுல இருந்து யாரும் வந்து கமெண்ட் போடக்கூடாது. )

கண் பேசும் வார்த்தைகள்:
கணவனோ, காதலனோ தன்னை மட்டும்தான் பார்க்கனும், கவனிக்கனும்ன்னு 90 வயசு பாட்டி கூட ஆசைப்படும்.  பக்கத்தில் இருக்கும் போது தப்பித்தவறி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்துடாதீங்க .  பக்கத்துல இருக்கும்போது வார்த்தைகளால பேசுறதை விட கண்களால் பேசுறதைதான் பொண்ணுங்க ரொம்ப விரும்புறாங்களாம்(90 வயசு பாட்டிக்கு காதலன் இருப்பானா?! அப்படியே இருந்தாலும் அதுங்களுக்கு கண்ணு தெரியுமான்னும் கமெண்ட கூடாது).

 மனம் கவரும் மாலைப்பொழுது:
 எப்பவும் தன்னோட ஆண், தன் பக்கத்துலயே இருக்கனும்ன்னு ஆசைப்பட்டாலும்!! அது அவ்வளவா சாத்தியமில்லியே! அதனால, முடிந்தவரை மாலை நேரத்துல தன் ஆண் தன்னோட இருக்கனும்ன்னு ஆசைப்படுவாங்க பெண்கள். கூடவே, மழைக்காலமும், சூடான டீயும், கூடவே நீங்களும் இருந்தாதுட்டா அந்த பொண்ணுக்கு ரொம்ப சந்தோசமாம்!! (ம்க்கும், லேசா தூறல் போட்டாலே, நாங்க பாட்டில் ஓப்பன் பண்ணிடுவோமே!ன்னு சொல்லுற ஆண்களும் இனி தொடர வேணாம்னுங்க)
                            

ஒரு நாள் சமைக்கலாம்:
 தினமும் பொண்டாட்டி கையல் சாப்பிட்டு பழகிய ஆண்கள் ஞாயிறு ஒருநாளாவது தன்னோட  கையால சமைச்சு மனைவிக்கு பரிமாறலாம். நீங்க நல்லா சமைச்சிருந்தா அதோட ரிசல்ட் அன்னிக்கு நைட்டே தெரியும் :-). (டெய்லி நாங்கதான் சமைக்குறோம். இதுல ஞாயிறு வேறயா?!ன்னு பொய் சொல்லி யாராவது கமெண்ட் போட்டா!! அந்த கமெண்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவங்க ஹவுஸ் பாசுக்கு அனுப்ப படும்!!)

 பரிசு கொடுப்பது:
என்னதான் கிரடிட் கார்டை தேச்சு ஸ்டார் ஹோட்டல்களுக்கு கூட்டி போனாலும், கண்ணை  பறிக்குற நெக்லஸை வாங்கித் தந்தாலும் அங்கலாம் நீங்க எப்படி அவங்களை கவனிச்சுக்கிறீங்கன்றதை பொறுத்துதான்  அவங்க திருப்தி அமையும். (இல்லாட்டி வீட்டுக்கு வந்ததும், அது நல்லா இல்ல, அந்த டிசைன் வாங்கித் தந்திருக்கலாம், உங்க அம்மாக்கு மட்டும் கேட்டு கேடு செய்வீங்களே!!ன்னு பாட்டுதான் கிடைக்கும்.)

பாதுகாப்பு உணர்வு:
எல்லா பெண்களும்  எப்பவுமே ஆண்களிடம்  எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வைதானாம். பொது இடத்திலோ, தனிமையிலோ, அல்லது சோகத்துலோ இருக்கும்போது யாரை பற்றியும் கவலைப்படாமல் லேசாய் அணைத்து ஆறுதலாய் தோள் கொடுங்க(அதுக்காக, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துல கம்ல் பண்ணுற மாதிரி கட்டிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடி வைத்தியம்லாம் வேணாம். மிக லேசான அணைப்புன்னுதான் சொல்லி இருக்கேன்.)

சின்னதாய் ஒரு கவிதை:
எப்ப பார்த்தாலும் உர்ர்ருன்னு இல்லாம அப்பப்போ  கவிதையா பேசனுமாம். ஒரே வீட்டில் இருந்தாலும்  மெயில் இல்லாட்டி செல்போன்ல மெசேஜ் பண்ணுங்க. சொந்தமா கவிதை எழுத வரலைன்னாலும்  காப்பியடிச்சாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லையாம். அதுலயும்  ஊடல் கொண்டாடும் நேரத்துல இந்த மாதிரியான கவிதை விடும் தூது நல்ல பலன் கொடுக்குமாம்( அதுக்காக, கண்மணி, மானே! தேனே!ன்னு ஓவரா வழியவும் வேணாம். அப்புறம் உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு பூரிக்கட்டையால வாங்க வாய்ப்புண்டு.)

அடிக்கடி பேசுங்க:
மனைவியை விட்டு வெளியூர் போய் இருக்கும்போது  செல்போனில் அடிக்கடி பேசுங்க.  அப்படி முடியாத நேரத்துல  ஐ லவ் யூ , ஐ மிஸ் யூ”  ஐ ம் பிசி.  கால் யூ லேட்டர்”ன்னு மெசேஜ் அனுப்புங்க. வேலை நேரத்துல கூட நம்ம நினைப்பு அவருக்கு வருது!!னு சந்தோசப்பட்டுக்குவாங்க. (மெனக்கெட்டு டெமேஜர்கிட்ட ஃபீல்டு வொர்க் வாங்கி வெளியூர் போறதே அவங்க நினைப்பு இல்லாம இருக்கத்தான். இது பொறுக்காம பேசனும், மெசேஜ் அனுப்பனும்”ன்னு மெசேஜ் சொல்றீங்களே ராஜி அக்கா! இது நியாயமா?!ன்னு  பிரகாஷ் முணு முணுக்குறது இங்க கேக்குது!!)

கை பிடித்துச் செல்லுங்களேன்:
  எங்காவது வெளியூர்களுக்கு போகும்போதுலாம் , கல்யாணம் ஆன புதுசுல எப்படி அவஙக் கையை பிடிச்சுட்டு ஊரை சுத்துனீங்களோ?! அதுப்போல உங்க வூட்டம்மா  கையை பிடித்துச் போங்க. அது மாதிரி கூட்டி போகும் போது  பாதுகாப்பு உணர்வை உணர்வதோடு, எத்தனை பெண்கள் இந்த உலகத்துல இருந்தாலும் அவர் என்னை மட்டுமே விரும்புறார்ன்னு பெண்களுக்கு தோணுமாம் (வெளியூருக்கு கூட்டி போறதே கூட்டத்துல தொலைச்சுட்டு வரத் தான். இதுல கையை வேற பிடிச்சுக்கனுமா?!ன்னு ரூபக் குமார் சண்டைக்கு வரப்போறார்.)

கட்டிப்பிடி வைத்தியம்:
காலையில  எழுந்ததும் காஃபி எங்கே?! என் சாக்ஸ் துவைச்சியா?! லேப்டாப் சார்ஜ் போட்டியா?! செல்போன்ல பேலன்ஸ் பார்க்க கூடாதா?! என் பிரஷை காணோம்ன்னு ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி கத்திக்கிட்டே படுக்கையை விட்டு எழுந்துக்காம, மனைவியை அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்தம், லைட்டா ஒரு புன்னகையோட குட் மார்னிங் சொல்லி பாருங்க. அப்புறம் அந்த நாள் முழுக்க இனிய நாள்தான்(அதுக்காக, ராஜி அக்கா! சொல்லிட்டாங்கன்னு காலைல அரிபுரின்னு வேலையா இருக்கும்போதோ இல்ல குட்டீஸ் இருக்கும்போதோ கட்டிப்பிடிச்சு உங்க மேல விழ வேண்டிய பூரிக்கட்டை என்மேல ரீடைரக்ட் பண்ணி விட்டுடுடாதீங்க சகோ’ஸ்.)

டிஸ்கி: முன்னலாம், மனசுக்கு தோணுறதை டைப் பண்ணி பதிவா போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன். ஆனா, இப்போ பாருங்க, எனக்கு, சகோன்ற பேருல எதிரிங்கலாம் அதிகமாயிட்டதால அவங்க என்ன கமெண்ட் போடுவாங்கன்னும் ஒரு மாதிரி ஜிந்திச்சு பதிவு போட வேண்டியதா இருக்கு :-(

37 comments:

  1. யக்கோவ்... அப்ப நாங்க எல்லாம் எதிரிங்க... தம்பிங்க இல்ல அப்படித்தானே...

    சரி சரி அத விடுங்க... இந்த பதிவு அனுபவ பதிவு தானே....???

    ReplyDelete
    Replies
    1. சகோ சங்கவி, இதை நம்ம ராஜி சகோ நேரடியாக வூட்டுகாரர்கிட்ட சொல்ல வெட்கப்பட்டு இப்படி எழுதி இருக்காங்க. நீங்க இதை பெரிண்ட் செய்து எடுத்து ஒரு பொடி நடையாக நடந்து ஆரணி பக்கம் போய்யிட்டு வாங்கள்

      Delete
  2. ஆணாதிக்க பதிவெழுதிய ராஜி அவர்களுக்கு கனவர்கள் சார்பாக பெரிய கண்டனங்கள்......

    ReplyDelete
  3. சில பொண்ணுங்க இருக்காங்க பாருங்க. அவங்களை, என்ன வாங்கி குடுத்தாலும் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டாங்க.////

    இதான் உண்மை..

    ReplyDelete
  4. (மெனக்கெட்டு டெமேஜர்கிட்ட ஃபீல்டு வொர்க் வாங்கி வெளியூர் போறதே அவங்க நினைப்பு இல்லாம இருக்கத்தான். இது பொறுக்காம பேசனும், மெசேஜ் அனுப்பனும்”ன்னு மெசேஜ் சொல்றீங்களே ராஜி அக்கா! இது நியாயமா?!ன்னு பிரகாஷ் முணு முணுக்குறது இங்க கேக்குது!!)///

    haa.. haa... அங்க மாமா முனுமுனுத்து இருப்பார்... என் பேரை போட்டு அவரை சொல்றிங்களா???? ரைட்டு..

    ReplyDelete
  5. டிப்ஸ்களை விட () சூப்பர்...!

    ReplyDelete
  6. இதையெல்லாம் நா செஞ்சதே இல்லீங்க. ஏன்னா அப்போ உங்கள மாதிரி டிப்ஸ் குடுக்க ஆள் இருக்கலையே? அதனால என் வீட்டம்மாவுக்கும் இதப் பத்தியெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க முடியாம போயிருச்சி. சரி, இவரப் போலத்தான் எல்லா ஆம்பிளைங்களும் இருப்பாங்க போலருக்குன்னு நினைச்சிக்கிட்டு சகிச்சிக்கிட்டு இருக்காங்க, இப்பவும்:))

    ReplyDelete
  7. நாங்களெல்லாலாம்நல்லவங்க

    ReplyDelete
  8. யப்பப்பா !! இதைப்படிக்கவே சுவாரஸ்யமா இருக்கே. இதுமாதிரியெல்லா அம்மிணிகிட்ட பிட்டு பிட்டா போட்ட உறவு நங்கூரம் மாரி நச்சுன்னு இருக்கும் போல

    ReplyDelete
  9. ராஜி அக்கா! சொல்லிட்டாங்கன்னு காலைல அரிபுரின்னு வேலையா இருக்கும்போதோ இல்ல குட்டீஸ் இருக்கும்போதோ கட்டிப்பிடிச்சு உங்க மேல விழ வேண்டிய பூரிக்கட்டை என்மேல ரீடைரக்ட் பண்ணி விட்டுடுடாதீங்க சகோ’ஸ்// ரைட்டு..

    ReplyDelete
  10. யக்கோவ், இந்தப்பதிவ ஒரு பிரின்ட் எடுத்து உங்க வீட்டுக்கார் கிட்ட கொடுங்க... நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கும்....

    ReplyDelete
  11. டிப்சை விட பின்னாடி பிராக்கெட்டில் சொன்னது அருமை...

    ReplyDelete
  12. டிப்ஸ் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  13. டிப்ஸ் எல்லாம் நல்லா இருக்கிறது ராஜி.
    பாதுகாப்பு உணர்வு மிக அருமை.
    நான் இருக்கிறேன் என்ற பார்வை ஒன்றே போதுமே!
    ஆயிரம் யானை பலம் வந்துவிடும் பெண்களுக்கு.
    மனநிம்மதி, அன்பு, காதல், பாசம் எல்லாம் பலமடங்காய் பெருகி விடுமே!

    ReplyDelete
    Replies
    1. என்னங்க கோமதி அரசு இந்த சகோ ராஜி காமடி பதிவு போட்டு இருக்காங்க நீங்க அதை படிச்சிட்டு உணர்ச்சி வசப்பட்டு போய்யீட்டீங்க போல இருக்கே

      Delete
    2. //ஆயிரம் யானை பலம் வந்துவிடும் பெண்களுக்கு//
      என்னாது?

      Delete
  14. என்னவோ போங்க....
    எவ்வளவு தான் சொல்லிக்கொடுத்தாலும் இதுகள் திருந்தாது.
    வுட்டுடுங்க.

    ReplyDelete
    Replies
    1. //எவ்வளவு தான் சொல்லிக்கொடுத்தாலும் இதுகள் திருந்தாது.//


      அப்ப அட்லீஸ்ட் அப்படி சொல்லி தருவதை நிறுத்தி நீங்களாவது திருந்துவீங்க என்ற பார்த்தால் நீங்களும் திருந்த மாட்டீங்க போல இருக்கே சகோ

      Delete
  15. ம்ம்ம்ம்.... நிறைய நல்ல டிப்ஸ் !! இனிமேலாவது நல்ல பேரு வாங்கணும் ! :-)

    ReplyDelete
  16. டிப்ஸும் கொடுத்து அடைப்புக்குறிக்குளதுக்கான கமெண்டும்! ஜூப்பர்!

    ReplyDelete
  17. நல்ல டிப்ஸ்.... அதைவிட உங்க முன் ஜாக்கிரதை ரொம்ப பிடிச்சுது! :)

    ReplyDelete
  18. கிழவி காதல் பண்றது, பொது இடத்துல லேசா மனைவியை அனைச்சுக்கிறது............ இதெல்லாம் நீங்க வெள்ளைக்காரன் எழுதியதை தமிழாக்கம் செய்தற்கான அடையாளங்களில் சில!! .......... அவன் ஊரில் கிழவிக்கும் பாய் பிரண்டு இருப்பான், மனைவியில் பப்ளிக்காக அணைப்பான். இங்கே பிகரை கரெக்ட் பண்ணும் வரை அணைப்பான், அப்புறம் வெளியில் வந்தால் சில மீட்டர் இடைவெளி விட்டுத்தான் இருப்பான் [உண்மை ரூபம் தெரிஞ்சு போச்சுல்ல...........] . எனவே, நம்மூருக்கு ஒத்து வருமான்னு டவுட்டா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. //கிழவி காதல் பண்றது, பொது இடத்துல லேசா மனைவியை அனைச்சுக்கிறது............ இதெல்லாம் நீங்க வெள்ளைக்காரன் //

      அப்ப கமல் போன்ற ஆட்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களா என்ன காலம் மாறி போச்சு மேலை நாட்டை பாத்து காப்பி அடிச்சு அடிச்சு இந்திய கலாச்சாரமும் மாறிப் போச்சு

      Delete
  19. //உன் அண்ணிக்கு காலிஃப்ளவர் வாங்கி கொடுத்தேன். பூரிக்கட்டையால மொத்துனா//

    //டெய்லி நாங்கதான் சமைக்குறோம். இதுல ஞாயிறு வேறயா?!ன்னு பொய் சொல்லி யாராவது கமெண்ட் போட்டா!! அந்த கமெண்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவங்க ஹவுஸ் பாசுக்கு அனுப்ப படும்!!// சூப்பர் சகோ ரசித்து சிரித்தேன் ...

    //கவிதை எழுத வரலைன்னாலும் காப்பியடிச்சாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லையாம்.// அப்ப எனக்கு கவிதை எழுதி தர ராஜி அக்கா கிட்ட தான் வரணும் :)

    ReplyDelete
  20. ///சில பொண்ணுங்களுக்கு சாக்லேட் பிடிக்கும், சிலருக்கு ஐஸ்கிரீம் ன்னா கொள்ளை பிரியம். சிலருக்கு அம்மா வீடு, சிலருக்கு புடவை.., சிலருக்கு டெட்டி பேர் பொம்மை பிடிக்கும். ஆனா சில பொண்ணுங்க இருக்காங்க பாருங்க///

    சில பொண்ணுங்க இருக்காங்க பாருங்க அவங்களுக்கு ஹஸ்பண்ட் உசிரை வாங்குறதுதான் பிடிக்கும் அதற்காக நாங்க எங்க உசிரை கொடுக்க முடியுமா என்ன


    //உங்க (நல்லா நோட் பண்ணிக்கோங்க சகோ’ஸ் ”உங்க”) காதலியையோ, மனைவியையோ எப்பவும் மகிழ்ச்சியா வச்சுக்கிட்டு, நீங்களும் மகிழ்ச்சியா வாழ, ///

    அப்படி நாம் அவங்கள மகிழ்ச்சியா வைச்சா என்னங்க என்னங்க என்று நிமிஷத்திற்கு நிமிஷம் உசிரை எடுப்பாங்க ஆனா வள்லுன்னு ஒருதர கத்திட்ட நம்மை விட்டு நாலுஅடி தூரம் ஒதுங்கி இருப்பாங்க. அவங்க அப்படி ஒதுங்கி இருந்தாதான் நாங்க எல்லாம் தினசரி ஒரு பதிவு போட மூடியும்

    சகோ ஒருத்தன் தினசரி பதிவு போட்டா உங்களுக்கு பொருக்காதே.. இப்படி எல்லாம் எங்களுக்கு ஐடியா கொடுத்து கவுக்க வேண்டாம்




    ///அடிக்கடி பூக்கள் கொடுங்கள்.//

    இது இந்தியாவில் உள்ள கணவர்களுக்கு வேண்டுமானால் ஒத்து வரும். இங்க அமெரிக்காவில் பூவை வாங்கி கொடுத்தால் தலையில வைக்கமாட்டாங்க அதை ஒரு கண்ணாடி ஜார்ல போட்டு டேபிளில் வைப்பாங்க.. நீங்க சொன்னபடி தினசரி வாங்கி கொடுத்தா வீணாப் போனவனே காசை ஏண்டா இப்படி கரியாக்குற என்று நிஜமாகவே பூரிக்கட்டையால் மொத்து மொத்து என்று மொத்துவார்கள் இப்படி எல்லாமா ஐடியா தருவது


    //கணவனோ, காதலனோ தன்னை மட்டும்தான் பார்க்கனும், கவனிக்கனும்ன்னு 90 வயசு பாட்டி கூட ஆசைப்படும்//
    அவங்க ஆசைப்படட்டும் அத்றகாக காலையில் எழுந்தது முதல் நைட் தூங்கும் வரை அந்த மூஞ்சியையே பார்த்து கொண்டிருந்தா மனுசன் தற்கொலைதான் பண்ணிக்கணும் இதெல்லாம் தேவையா என்ன?

    //மழைக்காலமும், சூடான டீயும், கூடவே நீங்களும் இருந்தாதுட்டா அந்த பொண்ணுக்கு ரொம்ப சந்தோசமாம்!!//

    அப்படி இருந்தா அவங்களுக்கு சந்தோஷம் ஆனா அப்படி இருந்து எங்க சந்தோஷ்த்தை நாங்க கெடுத்துகிணுமா என்ன. என்ன சகோ நாங்க என்ன பலிகடா ஆடா தானே வந்து மாட்டிகிட


    //பொது இடத்திலோ, தனிமையிலோ, அல்லது சோகத்துலோ இருக்கும்போது யாரை பற்றியும் கவலைப்படாமல் லேசாய் அணைத்து ஆறுதலாய் தோள் கொடுங்க//

    என்னது பொது இடத்திலா அப்படி செய்தா நாலு பொண்னுங்க சண்டைக்கு வந்திட மாட்டாங்க? எதுக்கு நாலு பொண்ணுக சண்டைக்கு வாராங்கன்னு கேட்கீறீங்கள்லா? நாங்கதான் ரோட்டுல பார்க்கிற பொண்ணுங்க கிட்ட எல்லாம் ஐ லவ் யூ சொல்லி காதலிப்போம்ல இப்படி பொது இடத்தில் மனைவியை அணைச்சுகிட்ட டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்னை லவ் பண்ணிட்டு எவளையோ கட்டி அணைக்கிற என்று நாலுப் பெண்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள் சகோ


    கவிதைகள் எல்லாம் காதலிக்குதான் கொடுக்கனும் மனைவிக்கு கொடுப்பது என்பது கழுதைக்கு கற்பூரம் கொடுப்பது போலதான் அதுக்கு என்ன வாசனையா தெரியப் போவுது


    நாங்க கட்டிப்பிடி வைத்தியம் பண்ணூவோம்ல எப்பண்ணு கேட்கீறீங்களா? அவங்க எங்களை நோக்கி பூரிகட்டை எடுத்து வரும் போதுதானுங்க.. அப்பதான வாங்குற அடியிலே இருந்து கொஞ்சமாவது தப்பிக்க முடியும்


    உஷ் அப்பாடா ஒரு வழியா பதில் சொல்லி முடிச்சாச்சு

    ReplyDelete
    Replies
    1. யப்பா.......சிருச்சு சிருச்சு குடல் வெளியே வந்துரும் போல இருக்கு, சத்தம் போட்டு சிரிச்சதுல என் அசிஸ்டென்ட் ஒருத்தி அலறி வெளியே ஓடியே போயிட்டாள் ஹா ஹா ஹா ஹா....

      Delete
  21. ஹா ஹா ஹா ஹா மனைவியை கட்டுப்படுத்தும் மற்றும் நேசிக்கும் வரிகள் யாவும் அருமை...!

    ReplyDelete
  22. என் வீட்டம்மா நாங்க எங்கே தனியா போனாலும் என் கையை அவள்தான் பிடிச்சுட்டு வருவாள், மும்பை ரோடுகளை கிராஸ் செய்யும்போது மட்டும் என்னை அறியாமலையே அவள் கையை நான் பிடிப்பது உண்டு, உங்க அண்ணியே இதை சொல்லி ஆச்சர்யப்படுவாள்.

    ReplyDelete
    Replies


    1. ரோடில் எமன் பஸ் ரூபத்தில் வருவதால் உங்களுக்கு மனசுல ஒரு பயம் வந்து இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல மனோ நானும் அப்படிதான் காரணம் எமனுக்கு என் மனைவியை கண்டா பயம்

      Delete
  23. எதோ கல்யாணமான புதுசுன்னா நீங்க சொல்றதை கேட்டு செய்வாங்க... அதுக்கப்புறம் இதெல்லாம் நம்மள விட்டு எங்க போயிடப்போகுதுன்னு ஒரு தெனாவெட்டு வந்திடுது ராஜி....ஏதோ உங்க ஆசையைக் கெடுப்பானேன்னு படிச்சவங்கதான் அதிகமா இருப்பாங்க...செயல்படுத்தனும்னு நினைச்சவங்க இல்லை...ஸாரி நட்புக்களே....

    ReplyDelete
    Replies
    1. enma en... intha kolaveri...nallathane poittuirukku...



      sivaparkavi

      Delete
  24. hahahaha sirichu sirichu vayatha valikkuthungo..!! athum intha AVARGAL UNMAIGAL badhila kettu innumam sirichikittu irukken..vootla pasangalaam bayapaduthunga..hahaha

    ReplyDelete
  25. உங்க டிப்ஸ்’ச விட ,அடைப்புக்குறிக்குள்ள போட்ட கமெண்ட்ஸ் ரொம்ப நல்லாருக்கு...ரொம்ப நேரம் சிரிப்ப அடக்க முடியல...வாழ்த்துகள்..உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  26. முற்றுமுழுதாக நாகரீகத் தாக்கம் மிக்க நகர்புற மனைவிகளை மனதில் வைத்து எழுதியவை இவை. ஆனால் உலகம் ஊராகவும் கிராமப்புறத்தில் வாழும் மக்களே அதிகம்; அவர்களுக்கு ஆலோசனையில்லையா?
    கொடுக்கத்தான் முடியுமா?

    ReplyDelete
  27. எக்கோவ்!
    பால் காரன் வெளிய கதவ தட்டுறான்.இன்னும் என்ன தூக்கம்?

    ReplyDelete