எது நடந்தாலும் பொறுத்து போகும்
“பொறுமை” வேணாம்!!
பாத்திரம் அறியாமல் கொடுத்து.., எல்லாம் இழந்து நிக்கும்
“அறியாமை” வேணாம்!!
கண்ணே! மணியே!ன்னு கொஞ்சி கவிதை எழுதும்
”அறிவு” வேணாம்!!
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில்ன்னு சொல்லி ஏமாற்றும்
”வில்லத்தனம்” வேணாம்!!
மைக்கேல் ஜாக்சன் போல், வியக்க வைக்கும்
“நடனம்” வேணாம்!!
எஸ்.பி.பி போல சோகம் கரைக்கும்
“குரல்” வேணாம்!!
பாசமலர் போல ”தங்கைப்பாசம்” வேணாம்!!
வானத்தைப் போல “சகோதர பாசம்” வேணாம்!!
அரண்மனைக்கிளி போல “அம்மா செண்டிமெண்ட்” வேணாம்!!
நாங்க ஃப்ரெண்டாக்கும்ன்னு சொல்லும் அப்பா "இம்சை” வேணாம்!!
சிகரெட், சரக்குன்னு பர்சை காலி பண்ணும் “ஃப்ரெண்ட்ஷிப்” வேணாம்!!
வாடி, போடின்னு சொல்லி அழைக்கும் “கேர்ள் ஃப்ரெண்ட்” வேணாம்!!
ஊர் பேச்சை கேட்டு தீக்குளிக்க சொல்லும் “சந்தேகம்” வேணாம்!!
தவறு செய்து விட்டு, சப்பைக்கட்டும் “பொய்” வேணாம்!!
ஆண் என்ற “ஆணவம்” வேணாம்!!
எல்லாம் என்னால்தான்ன்னு எண்ணும் “ஆணாதிக்கம்” வேணாம்!!
என் மீதான.., நீ கொண்ட காதல் என்றென்றும், ”மாற” வேணாம்!!
என்னை விட்டு நொடிப்பொழுதும் “பிரிய” வேணாம்!!
செல்லக் கோபம் கொண்டு பிடிக்கும் “சண்டை” வேணும்!!
சமாதானப்படுத்த ராசாத்தி, ரோசாப்பூன்னு “கொஞ்ச” வேணும்!!
இழுத்தி மடியில் கிடத்தி “கதை” சொல்ல வேணும்..,
தினமும் என்னை மட்டுமே “நினைக்க” வேணும்!!
நான் சொல்வதெல்லாம் தட்டாம ”கேக்க” வேணும்!!
கையோடு கைக்கோர்த்து ”ஊர் சுற்றி காட்ட” வேணும்!!
அதிகாலை காஃபி, சூடான தோசை சுடும் அளவு “சமையல்” தெரிய வேணும்!!
வீட்டு வேலைகளும் செய்ய “கத்துக்க” வேணும்!!
பொய்க்கோபம் கொண்டு என்னை “திட்ட” வேணும்!!
உண்மையாய் அன்பு கொண்டு “கொண்டாட” வேணும்!!
சீண்டிப் பார்த்து என்னை அழை வைத்து பார்க்க வேணும்!!
எனக்காக நீயும்.., உனக்காக நானுமென “வாழ” வேணும்!!
// அதிகாலை காஃபி, சூடான தோசை சுடும் அளவு “சமையல்” தெரிய வேணும்!! //
ReplyDeleteமதியம் சாப்பாடு செய்து கொடுத்தால் வேண்டாம்ன்னு சொல்லிடுவீங்களோ??? டவுட்டு
அழகான கவிதை... எனக்கும் எல்லாம் வேண்டும்....
ReplyDelete"நியுயார்க் நகரம் உறங்கும் நேரம்" பிறந்த கவிதையோ? இனிமையான வேணும் களும், வேணாம் களும்!!!
ReplyDeleteநல்ல கவிதை.....
ReplyDeleteஉங்களை நல்லவங்கன்னு நினைக்கிற எங்க கவிதை வேண்டாமா?
ReplyDeleteவேணும்...
ReplyDeleteada..
ReplyDeleteNice..
ReplyDeleteஇந்த வேணும் வேண்டாம் என்பதை படிக்கும் போது இளம் கல்லூரிப் பெண் ஆசைபப்டுவதை போல இருக்கிறது. சகோ கல்யாணம் ஆன பிறகு இந்த வேணும்வேண்டாம் என்ற ஆசை கூடாது... வயசு ஆயிருச்சுல....
ReplyDeleteஇந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் வேணும் வேண்டாமுனு சொல்லி இருக்கலாம் அல்லவா இப்ப போடலாம இல்லையா என்ற குழப்பத்தில் போட்டு இருக்குறேண்
ReplyDeleteஉண்மையாய் அன்பு கொண்டு கொண்டாட வேண்டும்.எனக்காக நீயும், உனக்காக நானும் வாழ வேண்டும் அருமையான வரிகள்.
கவிதை நன்றாக இருக்கிறது.
வேண்டாம்களை எதிர்த்துப் போராடும் மனப்பக்குவமும் வேண்டும்கள் இல்லாவிடினும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பெற வேண்டும்....
ReplyDeleteஅருமை..
ReplyDeleteகவிதை வரிகள் அருமை
வேணும் -வேணாம் கவிதை அருமை! நன்றி!
ReplyDelete