வசந்த் தொலைக்காட்சியில் சனிகிழமை இரவு 9 மணிக்கு “மண் பேசும் சரித்திரம்”ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதில் அழிந்து வரும் கோட்டைகள், வரலாற்று நாயகர்களின் கல்லறைகள், கடலுக்குள் புதைந்து போன நகரங்கள் போன்றவற்றை உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட இடங்களுக்கே நேரடியாக சென்று ஒளிபரப்பவுது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. கூடவே ஆராய்ச்சியாளர்களின் வாயிலாகவே இந்நிகழ்ச்சியை தொடர்வது இன்னும் சிறப்பு. குடும்பத்தோடு விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.
ஞாயிறுதோறும் காலைல ஒளிப்பரப்பாகும் ”சொல்லுங்கண்ணே! சொல்லுங்க!” நிகழ்ச்சி ஆரம்பத்துல நல்லாதான் இருந்துச்சு. இப்ப இதுவும் சொல்லிக் கொடுத்து பேசுறாங்களோன்னு சந்தேகப்படுற மாதிரி இருக்கு நிகழ்ச்சிகள். ”நவரசம்”ன்னா என்னன்னு ஒரு 12வது படிக்கும் பெண்ணை கேட்டால் எலுமிச்சை, உப்பு, புளி, தக்காளி, சீரகம், மிளகு போன்ற 9 பொருட்களை போட்டு செய்யுறதால அதுக்கு நவரசம்ன்னு பேர் வந்துச்சுன்னு சொல்லுது அந்த பக்கி. அந்த நிகழ்ச்சி ஷூட் பண்ணும்போது நானிருந்தால் ஓங்கி ஒரு அப்பு அப்பி இருப்பேன்.
அது ஒரு முகப்பூச்சு விளம்பரம். ஒரு பொண்ணு தனியாய் கூடை பந்து விளையாடிக்கிட்டு இருக்கும். அந்த வழியா போகும் ஒரு ஆண் பிள்ளை வந்து நான் சொல்லித்தரவான்னு கேட்பான். உடனே அந்தப் பொண்ணு ஓக்கே சொல்லும். அந்தப் பொண்ணை தொட்டு, தடவி விளையாடச் சொல்லிக் கொடுப்பான். அந்தப் பொண்ணும் அதை ரசிக்கும். சில நிமிடங்களில் அந்தப் பொண்ணோட தோழிகள் வந்து கூடப்பந்து விளையாட்டில் பதக்கம் வாங்கினதை சொல்லி வாழ்த்துவாங்க. அந்த பையன் அசடு வழிஞ்சி நிப்பான். சில நிமிட தொடுதல் சுகத்துக்காக யாரா இருந்தாலும் பெண்கள் ஓக்கே சொல்லிடுவாங்கன்ற ரீதியில் இந்த விளம்பரம் வருது. இதை ஏன் யாரும் கண்டிக்கலை!!??
பெண்கள்ன்னாலே புரணி பேசுறதும், சீரியல் பார்த்து பொழுது போக்குறது மட்டும்தான்ற மாயை எல்லோர் மனசுலயும் இருக்கு. ஆனா, மக்கள் டிவில நாட்டுப்புற பாடலோடு அன்றாட நிகழ்ச்சிகளை அலசுறாங்க ராம.கவுசல்யா, மதுவந்தி, ஐஸ்வர்யா. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30க்கு மக்கள் டிவில் ஒளிப்பரப்பாகுது. சமையல், அரசியல் தொடங்கி இலக்கியம் வரை எல்லா தலைப்புலயும் பேசுறாங்க.
தந்தி டிவியில் திங்கள் முதல் வெள்லி வரை காலை 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிதான் “‘மெய்ப்பொருள் காண்பது அறிவு.’. தினமும் நியூஸ் பேப்பர்ல வரும் செய்திகளை சமூக சிந்தனையோடு அலசும் இந்த நிகழ்ச்சியில், அரசியல் முதல் ஆர்ப்பாட்டங்கள் வரை அனைத்தும் பேசறாங்க. நடுநிலையோடு செய்தித் தாள்களில் இடம் பிடித்துள்ள செய்திகளை பட்டியலிடும் இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கு. சமூக சீர்கேடுகளை அரங்கத்தில் விவாதிப்பதோடு அதற்கான தீர்வுகள் பிறக்கவும் வழி செய்றாங்க.. மொத்தத்தில் ஆராய்ந்து தருவதில் இந்த விவாதம் ஆரோக்கியமானதாகவே இருக்கு.
கேபிள் கலாட்டா தொடரும்....,
சிறப்பான கேபிள் கலாட்டாக்களுக்கு நடுவிலும் ஒரு சிந்திக்க வேண்டிய
ReplyDeleteகலாட்டாவும் இருக்கு சொல்லப் போனால் உதை கொடுக்கணும் என்று
சொல்லும் அளவிற்கு இருந்த விளம்பரம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றேயாகும் இது அவர்களே உணர மறந்து நிகழ்த்தும் தவறாகவே எனக்குத் தோன்றுகிறது .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் ராஜி .
உண்மை ராஜி..சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியில் சொல்ற பதில் எல்லாம் கேட்டா கோவம் தான் வருது. குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியிலும் குழந்தைகள் பேசுவது சில சமயம் சகிக்கல, அதுக்கு சிரிப்பும் கைதட்டலும் வேற.
ReplyDeleteஇந்த மாதிரி விளம்பரங்களை எதிர்க்கணும், என்ன நினைப்புல எடுக்குறாங்களோ.
தெரியாத நல்ல நிகழ்ச்சிகளை அறியத் தந்ததற்கு நன்றி ராஜி. தொடரட்டும் உங்கள் கேபிள் கலாட்டா.
த.ம.3
Deleteஉண்மையில் பெண்கள் கண்டிக்க வேண்டிய விளம்பரம்
ReplyDeleteஇதுமட்டுமா இனஊம் எத்தனயோ ???? இதில் கண்டிப்பவர்களை விட நடிப்பவர்கள் தான் அதிகம்
Deleteஅக்கா இதை விடவும் இன்னும் கேவலமான விளம்பரங்கள் வருது .. எல்லாத்துக்கும் ஒரு சென்சார் தேவைப்படுது ... இம்புட்டு இணையப் பிசியிலையும் டிவி பாக்குறீங்களே ஆமா கரண்ட் இருக்குங்களா ?
ReplyDeleteT.V. பார்க்க நேரம் கிடைப்பதில்லை - [இப்போதெல்லாம்...]
ReplyDeleteகுட்டி சுட்டீஸ் சொல்லிவைத்து பேசுகிறார்கள் என்பது நிதர்சனம்! செண்ட், பர்ப்பியும் விளம்பரங்கள் பெண்களை இழிவு படுத்தியே வருகின்றன! யாரும் கண்டுகொள்வது இல்லை! ஒருவாரமாய் எங்கள் பகுதியில் மின்சாரம் வருவதும் போவதுமாய் இருப்பதால் நோ டீவி!
ReplyDeleteதலைப்புக்கான விளம்பரம்
ReplyDeleteஒருபெண்ணின் தன்னம்பிக்கை கலந்த ஆளுமையை காட்டுவதாகத்தான் நான் உணர்ந்தேன் சகோதரி..
ஆக்ஸ் விளம்பரம்
போன்றவை ரொம்ப மோசம்
இந்த விளம்பரம் லெட்சம் முறை நல்லது
த.ம ஏழு
விளம்பரங்களே மக்களின் ஆசையை தூண்டுகிறது. . .
ReplyDeleteஅதில் பெண்களை போகப் பொருளாக சித்தரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். . .
திரைப் பட விளம்பரங்களும் இதே ரீதியில் தான் இருக்கு சமீபத்திய உ.ம் மஞ்சப்பை
ReplyDeleteபல விளம்பரங்கள் இதே பாணியில்தான் வருகின்றன
ReplyDeleteதம 9
ReplyDeleteசொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி வெறும் காமடி நிகழ்ச்சிதான், பொது அறிவு நிகழ்ச்சி இல்லீங்க. சும்மா சிரிச்சிட்டு போயிறனும். இந்த காலத்து பிள்ளைங்களுக்கு இவ்வளவு நகைச்சுணர்வு இருக்கேன்னு சந்தோஷப்படுங்க :)
ReplyDeleteபெண்கள் இப்போதெல்லாம் கேலிச் சித்திரங்கள் ஆகிவிட்டார்கள்.
ReplyDeleteஇமான் அண்ணாச்சியின் நிகழ்ச்சி போரடிக்க ஆரம்பித்துவிட்டது.
ReplyDeleteஅதிகம் பார்க்கப் படாத தொ.கா நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்லி இருகிறீர்கள். பார்க்கவேண்டும்.
கேபிள் கலாட்டா தொடரும்.....
ReplyDeleteகடைசியா சொன்னது தான் பிடிச்சுருக்கு.... டி.வி. பார்த்து அப்பப்ப அதைப் ப்த்தி எழுதறது தொடருங்க! டி.வி. பார்க்காதவங்களுக்கு உதவும்! :)
உண்மைதான் அக்கா வர வர அண்ணாச்சி நிகழ்ச்சி பக்கா செட்டப் செய்து எடுப்பது அப்பட்டமாக தெரிகிறது ... பழம் புளித்துவிட்டது .. நகைச்சுவை குறைந்துவிட்டது
ReplyDelete