Saturday, June 07, 2014

டிடிம்மா! இனி இப்படி உடை உடுத்துறதை குறைச்சுக்கோம்மா! - கேபிள் கலாட்டா

ஆரம்பத்துல ”காஃபி வித் அனு”வைத் தொடர்ந்து பார்த்தேன். கொஞ்ச நாளுக்கப்புறம் அந்த நிகழ்ச்சி சோர்வடைய வச்சுடுச்ச். இப்ப, அனு மேடம்க்கு பதிலா “டிடி”ன்னு செல்லமா சொல்ற திவ்யதர்சினி தொகுத்து வழங்குறாங்க. நான் நிகழ்ச்சியை பார்க்குறதே இல்ல. தற்செயலா சேனலை மாத்திக்கிட்டு வரும்போது  இந்த நிகழ்ச்சி வந்துச்சு. எப்பவுமே சிரிச்சே கொல்லும் டிடி, அன்னிக்கு புடவையில் வந்துச்சு.  ஒரு பக்கம் சேலை முந்தானை நழுவ விட்டப்படி. மாடர்ன் ட்ரெஸ்ல வரும்போது எப்படி இருந்தாலும் கண்டுக்க போறதுல்ல. புடவைன்னு வரும்போது இதுப்போல முந்தானை நழுவுனா கண்டிப்பாய் கண்ணை உறுத்தும். தெரியாமல் நழுவி இருந்தாலாவது ஏத்துக்கலாம். அதுவே தப்பு. ஏன்னா, அது ஒண்ணும் நேரடி ஒலி(ளி)ப்பரப்பு இல்ல. வேணுமின்னே மாடர்ன், ஸ்டைல் என்ற பெயரால் இப்படி ஒரு பக்க முந்தானை இல்லாம வரலாமா!? எப்படி அவங்க குடும்பத்தார் அனுமதிக்குறாங்க!? டிடிம்மா! இனி இப்படி உடை உடுத்துறதை குறைச்சுக்கோம்மா! 

ராஜ் டிவில வெள்ளித்திரைன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்லாம் வரும். சீரியல் நடிகை ஒருத்தங்க தொகுத்து வழங்குறாங்க. அவங்க பேர் தெரியல. சேனல் மாத்திக்கிட்டு வரும்போது இந்த நிகழ்ச்சியை சில சமயம் பார்க்க நேர்ந்துச்சு. கொடுமைடா சாமி! ஓவர் மேக்கப், உச்சரிப்பு சரி இல்ல. மூணாங்கிளாஸ் பசங்க மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்குற மாதிரி இருக்கு.

டிஸ்கவரி சேனலில் தினந்தோறும் இரவு 8  மணிக்கு ஃபுட் ஃபேக்டரின்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்புறாங்க. அதுல, நாம விரும்பி சாப்பிடும் பெப்சி, கோக், லேஸ் போன்ற உணவுகள் முதற்கொண்டு பிராண்டட் ஷூ, கூலிங் கிளாஸ், டிவிலாம் எப்படி தயாராகுதுன்னு காட்டுறாங்க. சலிப்பு தராத நிகழ்ச்சி.
ஜீ தொலைக்காட்சியில்  ”கலாட்டா கிட்ஸ்”ன்னு ஒரு நிகழ்ச்சி நடக்குது. பெற்றோருடன், குழந்தைகளும் கலந்துக்கும் நிகழ்ச்சி. பசங்களுக்கும், பெத்தவங்களுக்கும், எவ்வளவு தூரத்திற்கு புரிந்துணர்வும், குழந்தைகளை பெத்தவங்க எப்படி வழிநடத்துறாங்கன்னு வெளிப்படுத்தும் விதமா இருக்கு. இதுவும் சுவாரசியமான நிகழ்ச்சி.

விஜய் டிவில ஒல்லி பெல்லின்னு ஒரு நிகழ்ச்சி. சராசரி உடல் எடையைவிட அதிகம் இருக்குறவங்க கலந்துக்கிட்டு உடல் எடையை குறைக்கும் நிகழ்ச்சி. இதுல யோகா, டயட்,  ஜிம், டான்ஸ்ன்னு அதற்குறிய ஆட்களைக் கொண்டு கத்துக் கொடுக்குறாங்க. ஏறிய உடல் வெயிட்டை குறைக்க எப்படிலாம் பாடுபடுறாங்கன்னு பார்க்கும்போது கொஞ்சம் கவலையாதான் இருக்கு.

கேபிள் கலாட்டா தொடரும்.....,

19 comments:

  1. என்னது... டிடி உடை உடுத்தறதை குறைச்சுக்கணுமா...? கல்யாணமாகக் போற பொண்ணை வம்புல மாட்டி வுடுறியேம்மா...?

    கூலிங்கிளாஸ், ஷூ சரி... பெப்சி, கோக்லாம தயாராகற விதத்தைப் பாத்தா குடிக்கவே மனசு வராதும்பாங்களே...? ஐயையோ...

    ReplyDelete
    Replies
    1. ஜுர வெகத்துல கண்ணு தெரியாம போச்சாண்ணா உங்களுக்கு!? டிடிம்மா! இ[ப்படி உடை உடுத்துறதை குறைச்சுக்கோன்னுதான் எழுதி இருக்கேன். உடை உடுத்துறதை குறைச்சுக்கன்னு சொல்லல. என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்கண்ணா!

      அப்புறம் பெப்சி, கோக்லாம் தயாரிக்குற நிகழ்ச்சியை ஒருமுறை பாருங்க. ச்சே! இப்படிப்பட்டவைகளையா குறை சொல்லுறாங்கன்னு தோணும்ண்ணா!

      Delete
    2. DD ஏதோ காலேஜில இங்கிலீஷ் லெக்சரராமே! அப்படி உடை உடுத்த்தறதை மாத்திகிட்டா காலேஜ் பசங்க அட்டெண்டென்ஸ் குறைஞ்சுடுமாம்.

      Delete
  2. நான் தொல்லைக்(!)காட்சியில் செய்தி பார்ப்பதோடு சரி!

    ReplyDelete
  3. அது சரி, நீங்க சொல்லித்தான் அவுங்க எல்லாம் கேக்கப் போறாங்களா என்ன??

    ReplyDelete
  4. வணிக மயமாகிவிட்ட தொலைக் காட்சியில், இதுவும் ஒரு வணிக நோக்குதான்
    தம 4

    ReplyDelete
  5. dd கிட்ட நான் போன் போட்டுச் சொல்லிவிடுறேன் கவலைய விடுங்க ராஜிம்மா :)))த.ம 7 வது ஓட்டுப் போட்டு இந்த செய்தியை இப்போதைக்கு அரங்கில ஏத்தி விட்டாச்சு போதுமா ?..:))

    ReplyDelete
  6. ஒரு காலத்துல நம்ம ஜோ தான் வாங்கின காசுக்கு அதிகமா நடிக்கும்! இதை நம்ம சூர்யா (அவருக்கு உரிமை இருக்கு!) கூட ஒரு படத்தில ஜாலியா கிண்டல் பண்ணி இருப்பார்.! இப்போ இந்த d d ..வாங்குற பணத்துக்கு பத்து மடங்கு எக்ஸ்ட்ரா நடிக்குது.!! இதுக்கு ஏன் இவ்ளோ பில்ட் அப் கொடுக்கிறாங்க நு தான் புரியல! இதோட முக சேஷ்டைகளும்,கேசுவலா பேசுறதா நினைச்சுட்டு செய்ற ஆக்டிங்கும்..முடியலடா சாமி!

    ReplyDelete
  7. கேபிள் கலாட்டா... - இவ்வளவு நிகழ்ச்சிகளையும் எப்படி தான் பார்க்கறீங்களோ!

    நமக்கு டி.வி.ல கொஞ்ச நேரம் கூட பார்க்க பிடிக்கலை!

    ReplyDelete
  8. சீரியல் அல்லாம இவ்வளவு நிகழ்ச்சிகள் பார்க்கறீங்களா? சூப்பர் அக்கா..

    ReplyDelete
  9. டிஸ்கவரி சேனல் பார்ப்பதுண்டு... சுவாரஸ்யமாக இருக்கும்...

    ReplyDelete
  10. சகோதரி! தாங்கள் நிஜம்மாகவே பன்முகத் திறமை மிக்கவர்தான்! அதுவும் டைம் மானேஜ்மென்ட் தங்களிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.....சகோதரி இது பாராட்டுதான்.....சத்தியமாக....ஏனென்றால் டிவி பார்ப்பதே மிகவும் அரிது.....அப்படிப் பார்த்தாலும் ஆங்கிலத் திரைப்படங்கள்....இல்லை நல்ல தமிழ் திரைப்படங்கள் இருந்தால்......அவ்வளவே!

    ஆனால் தாங்கள் எழுதும் விதத்தை மிகவும் ரசிக்கின்றோம்! சகோதரி!

    ReplyDelete
  11. எப்படி அவங்க குடும்பத்தார் அனுமதிக்குறாங்க!? டிடிம்மா!//

    அதானே :)

    ReplyDelete
  12. நமக்கெல்லாம் செய்தி, இல்லேன்னா காமெடி... அவ்வளவுதேன் டிவியோட சகவாசம்....

    ReplyDelete
  13. காபி வித் டி.டி எப்போதாவது பார்ப்பதுண்டு! ஒல்லி- பெல்லி ஒரு தடவை பார்த்தேன்! டிஸ்கவரி சேனல் இந்த நிகழ்ச்சியை பார்த்தது இல்லை! பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  14. ஆண்களின் மனம் கவரும் வண்ணம் டிடி ஆடை அணிவது சகோக்கு பிடிக்கவில்லையா? டிடிம்மா எங்கள் சகோ சொல்லவதை கேட்காதே... வுட்ட எங்க சகோ ஐயராத்து மாமி மாதிரி பஞ்சகட்சம் மாதிரி அணிய சொல்லுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க அண்ண்ணிக்கு ஒரு பூரிக்கட்டை பார்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல்.

      Delete
  15. ஃபுட் ஃபேக்டரி நேரம் கிடைக்கையில் நானும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி.... :)

    ReplyDelete
  16. உண்மை. நல்லா சொன்னீங்க. டி டி மற்றும் விஜய் டீவீ நிர்வாகத்தினரின் கவனத்திற்கு:நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com

    ReplyDelete