திங்கள், ஜூன் 09, 2014

இப்படிப்பட்ட ஆண்களை என்ன செய்யுறது!? - ஐஞ்சுவை அவியல்

முதல் கருத்து:

நேத்து நானும் என் வீட்டுக்காரரும்  காது குத்து விழாவுக்கு போய்க்கிட்டு இருந்தோம். அந்த ஊருக்கு பஸ் வசதி இல்லாததால, டூ வீலர்ல போனோம்.  ரொம்ப தூரம் வண்டி ஓட்டி வந்ததால, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு அங்கிருந்த மர நிழலில் ஒதுங்கி நிண்ணோம். அங்க ஒரு திருநங்கை கூழ் கடையோடு சின்னதா ஒரு பெட்டிக்கடை வச்சிருந்தாங்க. அப்போ, ஒரு ஆணும், அவன் பின்னாடி ஒரு பெண்ணும் வந்தாங்க. அந்த பெண்ணுக்கு அதிகப்பட்சம் 22 வயசு இருக்கும். அதற்குள் ஈரேழு ஜென்மம் வாழ்ந்த  சோர்வு அவள் முகத்தில்.

ஏய்! அம்மா வூட்டுக்கு போனதும் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிட்டு கதைப் பேசிக்கிட்டு கைக்கு கிடைச்சதுலாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காத. இன்னிக்கு சாயந்தரமே ஹாஸ்பிட்டலுக்குப் போறே, வயத்துல இருக்குறதை கலைச்சுட்டு தீட்டு நின்னதும் வந்து சேரனும். மூத்ததுங்க ரெண்டுத்தையும் பார்த்துக்க என் அக்காவை வரச்சொல்லி இருக்கேன். முடிஞ்சா அந்த நாத்தம் புடிச்ச பையை வெட்டி கடாசிட்டு வா! எப்பப் பாரு வெள்ளைப்படுதுன்னு. உன்கிட்ட இருந்து எனக்கும் தொத்திக்கும்ன்னு கூட்டாளிங்க சொல்றாங்கன்னு அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லிட்டு இருந்தான். அடுத்த விசயத்துல காதை நுழைச்சது தப்புதான். ஆனா, அவன் அடுத்தவங்களுக்கு கேக்காத மாதிரி பேசல. இதெல்லாம் கேட்டு எனக்கு கோவம் வந்துட்டுது. என் வீட்டுக்காரர் கூட இருந்ததால அமைதியா இருந்தேன். இல்லாட்டி அந்த ஆளை வெளுத்து வாங்கி இருப்பேன்.

அந்தப் பொண்ணுக்கு உதவ முடியலியேன்னு இயலாமையோடு நான் நிண்ணுட்டிருந்தேன். உங்கப்பனை கறி, மீனுன்னு வாங்கி போட்டு உடம்பை தேத்தி அனுப்பச் சொல்லுன்னு மீண்டும் வாயைத் திறந்தான். பக்கத்துல இருந்த அந்த திருநங்கை அம்மா எழுந்து வந்து ஓங்கி ஒரு அப்பு அவனை. ஒரு நிமிசம் எல்லோருமே அசந்து நின்னுட்டோம். ஏண்டா! பத்து மாசம் உன் அம்மா கர்ப்பப்பையில இருந்தியே அப்போ அது நாத்தம் அடிக்கலியா!? இல்ல, ரெண்டு பெத்தியே அப்போ நாத்தம்ன்னு தெரியலியா!? சின்னப் புள்ளையை கல்யாணம் கட்டி, ரெண்டு புள்ளை பெத்து அது உடம்பைக் கெடுத்ததுமில்லாம அதை குறைச் சொல்லி வைத்தியம் பார்க்க துப்பில்லாம மாமனார் வீட்டுக்கு அனுப்புற பன்னாடை பரதேசி நாயி நீ, நீ இருந்த இடம்ன்னு கூட நினைக்காம நாத்தம் புடிச்ச பைன்னு கர்ப்பப்பையை சொல்லுவியா!? உன்னைப் போல கழிசடைங்களும் பொறக்குறதால அது நாத்தம் புடிச்ச பைன்னு சொல்லலாம். தப்பே இல்லன்னு அவனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாங்க.

அந்தப் பொண்ணு, அம்மா அவரை விட்டுடுங்க. இதுக்கும் சேர்த்து எனக்கு திட்டு விழும்ன்னு அழுது கேட்டதால அவனை அமைதியா விட்டுடுட்டாங்க. பொண்டாட்டி வேதனையை புரிஞ்சுக்காமயும், ஆறுதலா இல்லாதவனோடு வாழுறதைவிட அவனை விட்டுட்டு வா. என் பக்கத்துல இன்னொரு கடைப் போட்டு நீயும், உன் பசங்களும் நிம்மதியா இருங்கன்னு சொன்னாங்க. இதெல்லாம் பார்த்த எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல. அந்தாள் அந்தப் பொண்ணை பஸ் ஸ்டேண்ட்லயே விட்டுட்டுப் போய்ட்டான். அப்புறம் அந்தப் பொண்ணு ஊர் போய் சேர என் வீட்டுக்காரர் காசுக் கொடுக்க, அந்த திருநங்கை, வேணாங்கண்ணா!  இன்னொரு ஆம்பிளைக்கிட்ட எப்படி காசு வாங்கலாம்ன்னு அதுக்கும் சேர்த்துஅந்த பொண்ணுக்கு இம்சை தொடரும் அதனால நானே தரேன்னு சொல்லி காசுக் கொடுத்து விட்டாங்க.

இப்படிப்பட்ட ஆண்களை என்ன செய்யுறது!?  திருநங்கைகள் பற்றி இதுவரை எந்த கருத்துமில்லாம இருந்த என் மனசில் நல்லவிதமா பதிஞ்சிருக்க உதவி பண்ணினாங்க அந்தம்மா!

அறிந்துக் கொண்டது: 

வாங்கிக் கட்டிக்கொண்டது: 
ரொம்ப எதிர்பார்ப்புக்கப்புறம் எங்க வீட்டில் எங்க அப்பாக்கு அப்புறம் ஆண் வாரிசாய் என் பிள்ளை  அப்பு பொறந்தான். அதுவும் ரெண்டு பெண் பிள்ளைகளுக்கப்புறம். என் அப்பா வேலை செய்திட்டு இருந்த ஹாஸ்பிட்டலிலேயே பொறந்தான். அவன் பொறந்த உடன் ஹாஸ்பிட்டல் வாசலில் நின்னுட்டு இருந்த இளநீர்காரரைக் கூப்பிட்டு கூட வேலை செய்தவங்க, உறவுக்காரங்க, பிரசவ வார்டுல இருந்தவங்க அத்தனைப் பேருக்கும் இளநீர் தரச்சொல்லி இருக்கார். மொத்தம் 64 இளநீர்கள் வாங்கித் தந்தாராம்.

சின்ன வயசில எப்பாவவது அப்பு அடம் பண்ணலோ சொல்பேச்சு கேக்காம இருந்தாலோ, உடனே அப்பா சொல்வார். நீ பொறந்ததுக்கு 64 இளநீர் வெட்டித் தந்தேன். நீ என் சொல்பேச்சு கேக்க மாட்டேங்குறேன்னு சொல்வார். உடனே, அப்புவும், எவ்வளவு செலவு ஆச்சுன்னு சொல்லுங்க நான் சம்பாதிரிச்சு வட்டியோடு கொடுத்துடுறேன்.. இல்லாட்டி ரொம்ப அவசரம்ன்னா சொல்லுங்க என் அப்பாக்கிட்ட வாங்கிக் கொடுத்துறேன்னு சொல்வான். கொஞ்சம் வளர்ந்ததுக்கப்புறம், ஒரு நாள் அவன் சண்டைப் போடும்போது என் அப்பா 64 இளநீர் கதையை ஆரம்பிச்சார். உடனே, அப்பு, நிறுத்துங்க, என்னமோ 64 இளநீர் வாங்கி கொடுத்தேன்னு பெருமை அடிக்குறீங்களே! ஒரு சொட்டாவது நான் குடிச்சேனா!? நான் குடிக்காத இளநீருக்கு நான் எதுக்கு உங்க சொல்பேச்சு கேக்கனும், நன்றி நினைக்கனும்ன்னு கேட்டான். அப்பா கப்சிப்!!!

அப்படியா!!??
எல்லா கோவில்களிலும் ஸ்தல விருட்சம்ன்னு ஒரு மரம் இருக்கும். அது, புளிய மரம், வேப்ப மரம், சரக்கொன்றை, நெல்லின்னு எதாவது ஒரு வகை மரம் அந்த கோவிலுக்குரியதா இருக்கும்.  அந்த மரத்துக்கு பூஜைலாம் நடக்கும். அதுமட்டுமில்லாம, அந்த ஊர் எல்லை முழுக்க ஸ்தல விருட்ச மர வகையை சார்ந்த எந்த ஒரு மரத்தையும் வெட்ட மாட்டாங்களாம். ஆனா, காய், கனிகள் இதெல்லாம் மட்டும் பயன்படுத்திக்குவாங்களாம்.  அந்தக் காலத்துலயே சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆன்மீகத்தோடு சேர்த்து மரங்களையும் சேர்த்து வளர்த்தாங்களாம் நம் முன்னோர்கள்.

யோசிங்க:
பார்க்க முடியும். ஆனா, எடை இல்ல.
பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடும்.
அது என்ன!?

25 கருத்துகள்:

 1. மனதை நெகிழ வைத்தது திருநங்கை நிகழ்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 2. மனம் கணத்து விட்டது.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், முதல் கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 3. சுவை நிறைந்த பதிவு! முதல் சம்பவம் மனதை வேதனைபடுத்தியது. அந்த திருநங்கையின் நல்ல மனதும், துணிவும் போற்றபடவேண்டிய விஷயம்! ஆனால் அந்த பெண்ணுக்கு இதனால் பிரச்சனை பெரிதாகாமல், இருக்க வேண்டும்.இப்படிபட்ட ஆண்கள் இனியாவது திருந்த அந்த ஆண்டவன்தான் அருள் புரிய வேண்டும். மனமாற பிரார்த்திக்கிறேன்.
  பார்க்க முடியும். ஆனா எடை இல்லை
  பாத்திரத்தில் அதன் அளவை குறைத்திடும்.
  இந்த விடுகதைக்கு பதில், காப்பி ,தேனீர போன்ற பானங்களை ஆற்றினால் வரும் நுரைதானே! சரியா?
  ஏதோ, என்னால் இயன்றவரை யோசித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தப்புங்க சகோ. நுரை எவ்வளவு எடையை குறைக்கும்!?

   நீக்கு
 4. இப்படிப்பட்ட ஆண்களை என்ன செய்யுறது!? //

  கட்டி வைச்சி உதைக்கணும். அந்த திருநங்கை செய்தது முற்றிலும் சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உதைச்சா மட்டும் திருந்திடுவாங்களா!?

   நீக்கு
 5. திருநங்கைச் நிகழ்ச்சி மனதை நெகிழச் செய்தது சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்தானுங்க ஐயா! பார்த்த எனக்கு சில நொடிகள் பேச்சு வரல. நான் பயந்துக்கிட்டு நின்னுட்டு இருந்தேன். ஆனா, அவங்க தைரியமாய் இறங்குனாங்க.

   நீக்கு
 6. திருநங்கை பற்றிய நிகழ்வு மனதை உருக்கியது..

  விடுகதைக்கு விடை அப்புறமா வந்து பாக்கறேன்...

  பதிலளிநீக்கு
 7. அந்தம்மாவிற்கு பாராட்டுக்கள்...

  விடை : துவாரம்...

  பதிலளிநீக்கு
 8. இதுபோல் ஆண்கள் நிறைந்து இருப்பதுதான் இன்றைய நம் தமிழ் சமுதாயம்!

  அவனிடம் எந்தக் கூச்சமோ, சங்கடமோ இல்லை! அவள் உணர்வுகளைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை! இவனையும் பெத்து வளர்த்தவள் ஒரு தாய்தான். எப்படி இப்படி ஒரு காட்டுமிராண்டியா வளர்த்து விட்டுருக்காங்க அவங்க அம்மா?

  தமிழ்படத்தில் சொல்றதுமாரி, ஆண் குழந்தைகளை எல்லாம் கள்லிப்பால் ஊத்தி காலிபண்ணிப்புட்டா என்ன? அப்படிபண்ணினால் இப்படி வளர்ந்து முட்டாப்பயலா சண்டியர்த்தனம் பண்ணாது பாருங்க. முளையிலேயே இவனுகளை கிள்ளி எறியணும்!

  ****Oh, Michael. Michael, you are blind. It wasn't a miscarriage. It was an abortion. An abortion, Michael. Just like our marriage is an abortion. Something that's unholy and evil. I didn't want your son, Michael! I wouldn't bring another one of you sons into this world! It was an abortion, Michael! It was a son Michael! A son! And I had it killed because this must all end! ***

  This is from Godfather-2.

  When she realizes that she (Kay) is going to have a son, she will "kill" that child (abortion). IT IS HER RIGHT to KILL! She will kill that baby boy because she was afraid that child will become like "our hero" one day!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பென்கள் மீதான அலட்சியம் ஆண்களின் ஜீன்களிலேயே உள்ளது போல! மெல்ல மாறினால்தான் உண்டு.

   நீக்கு
 9. இப்போதுதான், 08-06-2014 , நீயா நானாவைப் பார்த்துவிட்டு, இந்தச் திருநங்கைபற்றிய சம்பவத்தைப் படித்தேன்.
  திருநங்கைகள் எவ்வளவு தெளிவாக உள்ளார்கள், மனிதத் தன்மையுடன் உள்ளார்கள், அவர்களை நாம் புரியவில்லையே என வெட்கமாக இருக்கிறது. முடிந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவும்.
  அப்பெண்ணின் கணவனெல்லாம் ஆணினத்துக்கு இழிவு.
  தலவிருச்சம் என்றல்ல பல விடயங்களில் நம் முன்னோர் எதிர்காலம் பற்றிய சிந்தனையுடனே வாழ்ந்துள்ளார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம்தான் அவர்க்களை புரிந்துக் கொள்ளாமல் ஒதுக்கி அவர்களை தப்பான வழிக்கு அனுப்புறோம்.

   நீக்கு
 10. நல்ல பதிவு. எழுதிய விதம் அருமை சகோ. பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்த்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 11. முதல் செய்தி - இன்னும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து அடித்திருக்க வேண்டும். ஆனாலும் அவன் திருந்துவானா என்பது சந்தேகம் தான்! பாருங்களேன் நடு ரோட்டில் விட்டுச் சென்று விட்டானே.....

  பதிலளிநீக்கு
 12. வடிவமைப்பு அகலத்தை கொஞ்சம் மாற்றலாமே? குறுகிய இடத்திற்குள் படிப்பது போல உள்ளது ராஜி. நாலைந்து கட்டுரைகள் இன்று படித்தேன்.

  பதிலளிநீக்கு
 13. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (20/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு