Wednesday, June 25, 2014

மதுரை திருமலை நாயக்கர் மஹால் - மௌனச் சாட்சிகள்

திருமலைநாயக்கர் மஹால் பத்தி இன்றைய மௌனச்சாட்சிகளில் பார்க்கலாம்.  மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரால் கி.பி.1636 ல் கட்டப்பட்டது இந்த மகால். ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. 
இந்துமுஸ்லீம் கட்டிட நுட்பங்கள் சேர்த்து அமைக்கப்பட்ட (இந்தோ-சாரசீனிக் முறைப்படி) அரண்மனை இது. அன்றைய அரண்மனையில் சொர்க்க விலாசம்ரங்க விலாசம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடம்ரங்க விலாசம் மன்னரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடம். 

இந்த அரண்மனைத் தொகுதியில்இசை மண்டபம்நாடக சாலைபல்லக்குச் சாலைஆயுதசாலை,   வழிபாட்டிடம்வேறு அரச குடும்பத்தினர்க்கும்பணியாளர்களுக்குமானவசிப்பிடங்கள்அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

முற்றத்தின் வழியாக உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும், சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு கட்டப் பகுதி இருக்கு. முற்றத்தின் வடக்கிலும், தெற்கிலும், நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன. தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல். இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியேமேற்கில் எழில் வாய்ந்த பகுதியின் வழியாகக் காண்பது சொர்க்க விலாசம். மிகவும் நெடிய தூண்களும்எழிலார்ந்த சுதை வடிவங்களையும் கொண்டிருக்கு.  


இங்கு காணப்படும் சிற்ப, கட்டிட வேலைப்பாடுகளும்குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத் திறனின் மேதைமைகள். இப்பகுதியின் நடுவில் மிகவும் விசாலமான இடமும்அதன் மேல் கவிழ்ந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிப்பதால் சொர்க்க விலாசம் என்று இதற்குப் பெயராம். இவ்விடத்தில் கல்பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு மண்டபம் வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.

இன்று நாம் காணும் மஹாலில் ரங்கவிலாசம் இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இருந்தது இப்பகுதி. பத்து எழிலான தூண்கள் முகப்பிலும், தூண்களில் நுண்ணிய வேலைப்பாடுகளும் அமைந்து  கம்பீரமாகத் திகழ்ந்த இடம். ஆயுதங்களும், பல்வகை இசைக்கருவிகளும் பாதுகாக்கப்பட இப்பகுதியில்தான் பாதுக்காக்கப்பட்டது. 1853 ல் பழுதுபார்த்தும் காப்பாற்ற இயலாமல் போனது நமக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பே! 

மண்டபத்தைச் சுற்றி 900 அடி நீளமும், 600 அடி அகலமும், 40அடி உயரமும் கொண்டு விளங்கிய சுற்று மதில் சுவரும் இப்போது இல்லை. மிகப் பலவீனமாக இருந்ததால் 1837 ல் இடிக்கப்பட்டது. மதிலுக்கு வெளியில் இருந்த நந்தவனமும், அதன் மையத்தில் இருந்த கட்டிடமும் நாம் இழந்துவிட்ட செல்வங்கள்.

இந்த அரண்மனையையும், மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்kகாலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.1822-ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் நேப்பியர் மன்னர், மஹாலை புணரமைத்து, அதன் ஒரு பகுதியில் மாவட்ட நீதி மற்றும் நிர்வாக அலுவலகங்களை ஏற்படுத்தினார் திருமலை மன்னன்.  திருமலை மன்னன் கட்டிய மஹாலின் ஐந்தில் ஒரு பகுதிதான் தற்போது  இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மஹாலின் பெருமைகளைp பார்த்துக்கொண்டே உள்ளே செல்லும் போது மிக பிரம்மாண்டமான தூண்கள் நம்மை வரவேற்கின்றன. கூடவே ஒரு அறிவிப்பும் நம் கண்களில் படும். ஆனால், அதற்கு கீழே கண்ட காட்சிக்கும், அந்த அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு புரிந்தது.

58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் இந்த அரண்மனையில் அமைந்துள்ளது. மாளிகையின் கூரையில் விஷ்ணு மற்றும் சிவனைப்பற்றிய ஐதீக புராணக்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த அரண்மனையில் ஸ்டுக்கோ பாணி அலங்கார அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மரச்சாமான்களையும் இந்த அரண்மனையில் காணலாம். அரண்மனை முகப்பு, நாட்டிய அரங்கம் மற்றும் பிரதான மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. 1860-70ம் ஆண்டுகளில் இந்த அரண்மனை மாளிகை ஆங்கிலேயரால் புதுப்பிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மஹாலில் நுழைந்ததும் தென்படுவது, அரண்மனை தர்பார் மண்டபம். இங்கிருந்துதான் திருமலை மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். தினசரி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைப்பெறும். நவராத்திரி விழா, சித்திரைத் திருவிழா, மாசி விழா, தெப்பத் திருவிழா ஆகியவற்றை திருமலை நாயக்கர் நடத்தி வந்தார்.

இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் இந்த அரண்மனையை கட்டிய திருமலை மன்னன். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர்தம் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும்  முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். திருமலை நாயக்கர் கட்டிடக்கலை மட்டுமல்லாது சிற்பக்கலையிலும் கவனம் செலுத்தி அதை வளர்த்துள்ளார் ! 

இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர்   சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்

திருமலைநாயக்கர் கி.பி.1623ல் திருச்சியை தலைநகராய் கொண்டு அரியணையில் ஏறினார். திருச்சியின் சூழல் இவருக்கு ஒத்துவரவில்லை. மண்டைச்சளி பாதிக்கப்பட்டார்.  மதுரைக்கு வரும்போதெல்லாம் மீனாட்சி அம்மனை தொழுது செல்வார். திண்டுக்கல்லில் திருமலைநாயக்கர் இருந்தபோது ஒருநாள் கனவில் மீனாட்சி சுந்தரர் ‘இனி திருச்சிக்குப் போக வேண்டாம். மதுரைக்கு நிலையாக வந்துவிட்டால் நோய் தீரும்’ எனச் சொன்னார். காலையில் முகங்கழுவி மூக்கைச் சிந்திய போது அவரது நோய்  போய்விட்டதாகவும் செவிவழி கதை சொல்கிறார்கள். திருச்சியிலிருந்த தலைநகரத்தை மதுரைக்கு மாற்றி கி.பி1659 வரை மதுரையை ஆட்சி செய்தார்.

விஜயநகர பேரரசுக் காலத்தில் கிருஷ்ண தேவராயர் மதுரையை நிர்வகிக்க நாகம நாயக்கரை அனுப்பினார். அவர், மதுரைக்கு தன்னையே ராஜாவாய் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர்தம் போக்கை மற்ற மந்திரிகள் போட்டுக் கொடுக்க, கிருஷ்ணதேவராயரிடம் போட்டுக் கொடுக்க, கிருஷ்ண தேவராயர் ஆணையின்படி மதுரை வந்து நாகம நாயக்கரைப் பிடித்து மன்னனிடம் ஒப்படைக்கிறார் நாகம நாயக்கரின் மகனான விஸ்வதநாத நாயக்கர். 

அவர்தம் வீரத்திற்கும், விசுவாசத்திற்கும்  பரிசாய் நாகம நாயக்கரை விடுவித்து ,  மதுரையை நிர்வகிக்கும் பொறுப்பை விஸ்வநாத நாயக்கருக்கு கிருஷ்ண தேவராயர் அளிக்கிறார். கி.பி. 1530லிருந்து, கி.பி 1736 வரை மதுரையை நாயக்கர் வம்சம் ஆட்சிப் புரிந்தது. அதில் ஏழாவது தலைமுறையைச் சார்ந்தவர்தான் இந்த திருமலை நாயக்கர்.திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாளின் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார். பூசை முடிந்ததும் கோவில் மணி ஓசை கேட்டு முதல் மணிக்கூண்டு மணியை பணியாள் ஒலிக்க விட, அதைக்கேட்டு இரண்டாம் மணிக்கூண்டு பணியாள் மணியை ஒலிக்க விட..., இப்படியே தொடர்ந்து மனிகள் ஒலிக்க அது மன்னரின் காதுகளை வந்தடையுமாறு ஏற்பாடு செய்திருந்தாராம். 

என்னதான் அறிவிப்பு பலகை இருந்தப்போதிலும் எங்கெங்கு காணினும் இவங்க சேட்டைதான். இதேப்போல் ஒரு அரண்மனையை ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் திருமலை நாயக்க மன்னர் கட்டி இருக்கார். ஆனால், இதுப்போன்று பிரம்மாண்டமாய் அந்த அரன்மனை இல்லை.


மதுரை மாநகரின் நடுவில் திருமலைநாயக்கர் அரண்மணை உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு தினமும்  காலை 9 மணி மதல் 1 மணி வரையிலும், மாலை 2மணி முதல் 5மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.மாலை நேரங்களில் திருமலைநாய்க்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் சிலப்பதிகார கதைகளை நாடகங்களாக நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள வண்ண ஒளி கொண்ட மேடையில் அரங்கேற்றுவது மற்றொரு சிறபம்சம்.

ஸ்ஸ்ஸ்ஸ் அபா! நடந்து நடந்து கால்லாம் வலிக்குது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அடுத்த வாரம் இங்குள்ள அருங்காட்சியகத்தையும், சொர்க்க விலாசத்தையும் பார்க்கலாம்....,

24 comments:

 1. நல்ல விரிவான வர்ணனையும் தகவலும் ராஜி...
  தூணுக்கு அடியில் மாறவில்லை எனினும் (நான் கேட்டுக் கொண்டதினால ;-) http://thaenmaduratamil.blogspot.com/2013/01/thirumalai-nayakkar-mahal.html) ஒரு அறிவிப்புப் பலகையாவது வச்சுருக்காங்களே..
  இப்போ உங்க பதிவப் பாத்துட்டு கீழயும் காட்சி மாறினா சரிதான்..

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லித்தான் அறிவிப்பு பலகை வச்சாங்களா!? தெரிஞ்சிருந்தா நன்றி சொல்லிட்டு வந்திருப்பேனே!!

   Delete
 2. திருமலை நாயக்கர் காலத்துல வாழ்ந்திருந்தா இந்த மொத்த அரண்மணையையும் சுத்திப் பார்த்திருக்கலாமேன்னு ஒரு ஏக்கம் மனசுல வந்து போகுது. படங்கள் அத்தனையும அழகு.

  ReplyDelete
  Replies
  1. அப்படி வாழ்ந்திருந்தா எங்களைலாம் மிஸ் பண்ணி இருப்பீங்கண்ணா!

   Delete
 3. விளக்கமான தகவல்களுடன் அழகான படங்களுடன் அருமையாக சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 4. ராஜின்னா ராஜி தான் அது சரி இப்படியே கோயில் குளம் என்று திரிந்து கொண்டே இருந்தால் சந்நியாசம் வந்து பற்றிக் கொள்ளப் போகிறதே சுவாமிஜி அப்புறம் எப்படிப் பதிவு எழுதுவீக ?...முதல்ல இயல்பு நிலைக்குக் கொண்டு வரணும் எங்கள் சுவாமிஜி ராசியை அதுக்கு இப்போ நாங்கள் எல்லாம் என்ன செய்யணும் ஐ திங்கிங் :)))) நீங்க இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுத்திற்கு வாங்க செல்லமே வரும் போது ஒரு கல கல பகிர்வு (தொடர் )எழுத ஏற்பாடு செய்யிறோம் :))

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு தொடர்பதிவா!? அப்போ நான் எழுதி வைத்திருக்கும் தொடர் பதிவை என்ன செய்வது!?

   Delete
 5. மகாலை உங்கள் தளத்தில் ஏற்கனவே சுற்றிப் பார்த்த ஞாபகம் வருதே !

  ஒப்படைக்கப்படும் காதலர்களுக்கு போலீசே கல்யாணம் செய்து வைத்தால் நல்லது !

  ReplyDelete
  Replies
  1. நாயக்கர் மகால் பதிவாப் போடலை சகோ! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பத்திதான் ரெண்டு பதிவு போச்சு!

   Delete
 6. இரண்டு மாதங்களுக்கு முன் தான் மதுரை சென்று திருமலை நாயக்கர் மகாலை பார்த்து வந்தேன்... நான் பார்த்து ரசித்ததை, மீண்டும் உங்கள் வர்ணனையுடன் படிக்கும் போது நன்றாக இருக்கிறது..ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் வர்ணனையை தொடரவும்...

  ReplyDelete
  Replies
  1. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இடம்.

   Delete
 7. இதுவரைக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கோ திருமலை நாயக்கர் மஹாலுக்கோ போனதில்லை... அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது போகணும்....

  ReplyDelete
  Replies
  1. அக்டோபர் மாசம்தான் பதிவர் சந்திப்பு வருதே! மதுரையை ஒரு சுற்றுக்குக்கு இரு சுற்றாய் வந்துடலாம்!

   Delete
 8. படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் அருமை...

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்குன் நன்றிண்ணா!

   Delete
 9. திருமலை நாயக்கர் மகால் குறித்து ஒரு விரிவான பார்வை... படங்களுடன்...

  அருமையான பகிர்வு...

  ReplyDelete
 10. தங்கள் முழுப்பதிவையும் படித்துவிட்டு
  இன்னொருமுறை மஹாலைப் பார்க்கணும் போல உள்ளது
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. சிறப்பான படங்கள், நல்ல தகவல்கள் என மௌனசாட்சி பதிவு முழுவதும் அருமை. பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 12. அன்பின் ராஜி -- வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - அருமையான பதிவு - எத்தனை தகவல்கள் - அத்த்னையும் திருமலை நாயக்கர் மகாலைப் பற்றிய தகவல்கள் - பொறுமையாகப் படித்து மகிழ்ந்தேன் - பகிர்வினிற்கு நண்ரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete