பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும்போது வீட்டை சுத்தம் பண்ணுறது, பொண்ணுக்கு மேக்கப், சொந்தம் பந்தம்லாம் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு பஜ்ஜியும் முக்கியம்ன்னு நம்ம தமிழ் சினிமாவுலயும், சீரியல்களிலயும் சொல்றாங்க.
இந்த பஜ்ஜியை வச்சுக்கிட்டு நம்மாளுங்க பண்ணுற அலப்பறை இருக்கே. ஐயோ சாமி! எண்ணெய்ல குளிச்சு வந்த பஜ்ஜி வேணுமாம். ஆனா, அது மேல இருக்கும் எண்ணெய் மட்டும் வேணாமாம். தூசு, தும்பும் இருக்கும் பேப்பர் ரெண்டு எடுத்து அதுக்கு நடுவுல பஜ்ஜியை வச்சு லேசா அழுத்தி எண்ணெய்லாம் பிழிஞ்சு எடுத்திட்டு அப்புறமா சாப்பிடுவாங்க. பேப்பர்ல இருக்கும் அச்சு மை, தூசியை விட எண்ணெய் எவ்வளவோ பரவாயில்லன்னு சொல்லத் தோணும்.
என் வீட்டுக்காரருக்கும், பசங்களுக்கும் பஜ்ஜின்னா கொள்ளைப் பிரியம். ஆனா, எனக்கென்னவோ பிடிக்கறதில்ல. வெங்காயம், உருளை பஜ்ஜின்னா ஒண்ணொன்னு எடுத்துப்பேன்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் (அ) பெரிய வெங்காயம் (அ) உருளை
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - சிறிது
வெறும் மிள்காய் தூள் - சிறிது
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
விருப்பப்பட்டா கலர் பவுடர் சேர்த்துக்கோங்க. நான் சேர்த்துக்கலை.
வாழைக்காய்(அ) வெங்காயம் (அ) உருளைகளை தோல் சீவி, மெல்லிசா சீவி தண்ணில போட்டுக்கோங்க.
அகலமான கிண்ணத்துல மிளகாய் தூள் போட்டுக்கோங்க.
அடுத்து ஆப்ப சோடா சேர்த்துக்கோங்க.
அடுத்து தூள் உப்பு சேர்த்துக்கோங்க.
அடுத்து கடலை மாவு சேர்த்துக்கோங்க.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணி விட்டு கொஞ்சம் கெட்டியா தோசை மாவு பதத்துக்கு மாவு கரைச்சுக்கோங்க.
அடுப்பு பத்த வச்சு வாணலில கொஞ்சம் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், சீவி வச்சிருக்கும் காய்களை பஜ்ஜி மாவில் ரெண்டு பக்கமும் மாவுல முக்கி எண்ணெய்ல போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சூடான பஜ்ஜி ரெடி.
நீங்க செஞ்சா நல்லா இருக்குமான்னு அமெரிக்காவுல இருந்து கலாய்க்க வருபவர்களுக்காகவே “ராஜி அத்தை செஞ்ச பஜ்ஜி நல்லா இருக்கும்ன்னு சொல்றான் கையில் பஜ்ஜியோடு எங்க எதிர்வீட்டு குட்டி.
படமும் செய்முறை விளக்கமும்
ReplyDeleteபஜ்ஜி தின்னும் ஆசையைத் தூண்டிவிட்டது
இன்று மாலை எங்கள் வீட்டிலும் பஜ்ஜி
படத்துடன் சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
Deletetha.ma 2
ReplyDeleteஅட நாங்களும் இனிச் செய்வோமில்ல :)) அழகிய பட விளக்கத்துடன் எதிர்
ReplyDeleteவீட்டுக் குட்டியின் சான்றிதழும் மிகவும் ரசிக்க வைக்கின்றது இனி எங்கள்
வீட்டிலும் பஜ்ஜி ரெடி ! வாழ்த்துக்கள் ராஜி .
அவசியம் செஞ்சு பார்த்து சொல்லுங்கக்கா!
Deleteஅடடா, பஜ்ஜியை பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறதே. ஏங்க இந்த மாதிரி படம் எல்லாம் போட்டு, எங்கள் வயித்தெரிச்சலை கிளப்புறீங்க???
ReplyDeleteஏன் உங்க ஊருல வாழைக்காயும், கடலை மாவும் கிடைக்காதா சகோ!?
Deleteநன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசொல்லும்போது வாய் ஊறுகிறது.. நல்ல செய்முறை விளக்கம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனக்கு பிடித்த பஜ்ஜியை விலாவாரியா படம் எடுத்து போட்டு ஆசையை கிளப்பிட்டீங்களே சகோ! ஹாஹாஹா!
ReplyDeleteமாலை டிஃபனுக்கு செஞ்சு கொடுக்க சொல்லுங்க.
Deleteபஜ்ஜி னல்லாருக்கு...பஜ்ஜி தின்னும் குழந்தை சூப்பர்... ஆமாம்...அமெரிக்காவிலிருந்து கலாய்பவரைக் காணவில்லையே! வருவாரு பாருங்க! செம கமென்டோட!!!!.....
ReplyDeleteவரட்டும். வந்து கருத்து சொல்லி பதிலடியும் வாங்கிட்டு போகட்டும்.
Deleteஇந்த மாதிரி பஜ்ஜி எல்லாம் போட்டா ஓட்டு போடாம இருக்க் அமுடியுமா சொல்லுங்க!
ReplyDeleteஅப்போ பஜ்ஜிக்குதான் ஓட்டு. பதிவுக்கில்ல.
Deleteநீங்கள் சொன்னபடியே உங்கள் பதிவின் படங்களைத் தொடர்ந்து வந்தால் பஜ்ஜி சுடுவது ரொம்பவும் சுலபம் போல் தெரிகிறது. இப்போதெல்லாம் பெண்வீட்டில் பெண்பார்க்க வருபவர்களுக்கு ஸ்வீட் ஸ்டால் தயாரிப்புகளையே தருகின்றனர். மாப்பிள்ளை பிடித்து இரண்டாம் தடவை வரும்போதுதான் சூடாக பஜ்ஜி சுடுகிறனர்.
ReplyDeleteத.ம.88
நிஜம்தான் ஐயா. இப்போதெல்லாம் உணவுக்காக யாரும் மெனக்கெடுவதில்ல. கையில் காசு வாயில் தோசைன்னு மாறிட்டாங்க.
Deleteஅடடா....! சூப்பர் செய்முறை சகோ...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!
Delete
ReplyDeleteநல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது
ராஜிம்மா வீட்டுல விஷேசம் ஒன்னு நடக்கப் போகுது
அதுனாலதான் ராஜிம்மா பஜ்ஜி சுட கத்துக்கிட்டு பதிவு எல்லாம் போட்டு கலக்குறாங்க
நிஜம்தான். அமெரிக்காவுல இருக்கும் என் அண்ணனுக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா. அதுக்குதான் பஜ்ஜி சுட கத்துக்கிட்டேன்.
Deleteபஜ்ஜி செய்யிறது எப்படின்னு சொல்லிட்டீங்க. நன்றி. ஆனா சொஜ்ஜின்னு கூட எதையோ சேத்து சொல்வாங்களே அத எப்படி செய்யிறது :)
ReplyDelete”ப”க்கு பதில் “சொ” சேர்த்தால் சொஜ்ஜி. இதுக்கூட தெரியலிஎயே! சோ சேட்!
Deleteசட்டுன்னு நினைச்ச நேரம் செய்து சாப்பிடும் ஸ்நாக்ஸ் இதுஒன்று தான், விருந்தினர்கள் வந்தாலும், நோன்பு நேரம் வடை சுட சோம்பலாக இருந்தாலும் இதான், ராஜி இப்ப படத்த பார்த்ததும் உடனே சாப்பிடனும் போல இருக்கு
ReplyDeleteபஜ்ஜி...... இப்போதெல்லாம் சாப்பிட பிடிப்பதில்லை!
ReplyDeleteசெய்முறை விளக்கம் கொடுத்து பலரின் வாயில் உமிழ் நீர் சுரக்க வைத்து வீட்டீர்களே!