Sunday, August 13, 2017

காதலின் வாசனை கழுதைதான் அறியுமா?!

நடிகர் திலகத்தையும், நடிகையர் திலகத்தையும், காதல் மன்னன், நடிகவேள்ன்னு எத்தனையோ ஜாம்பவான்களை கண்ட தமிழ் திரை உலகம் கமல், மனோரமா, நாகேஷ். டி.ஆர், பாக்கியராஜ் மாதிரியான பல அஷ்டாவதானிகளை கண்டிருந்தாலும், குரல்லியே வித்தை செய்யும் மாயம் எனக்கு தெரிஞ்சு எஸ்.பி.பிக்கு மட்டும்தான் இருக்குன்னு நினைக்குறேன். எஸ்.பி,பி, இளையராஜா, கார்த்திக்ன்னு தனித்தனியா இருந்தாலே அந்த பாட்டு ஹிட்டடிக்கும், இன்னும் இந்த மூணு பேரும் சேர்ந்தா?! அஜால் குஜாலுக்கு சொல்லவா வேணும்?!
மூச்சு விடாம பாடி, வார்த்தையே இல்லாமன்னு பலவிதமா தன் குரலாலயே குரளி வித்தை காட்டுற பாடல்களிலேயே  இந்தப் பாடல் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. குரல் ஏற்ற இறக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அவர் 'எப்படி எப்படி' என்ற ரெண்டே ரெண்டு வார்த்தையை எத்தனை விதமா சொல்லுறார்ன்னு பார்த்தால் அமேசிங்க்.  ஒவ்வொரு எப்படி எப்படியும் ஒவ்வொரு விதம். அத்தனையும் தனி விதம்.  இசை இசைஞானி. ஆயிரம் நிலவே வா படத்தில் இன்னொரு சூப்பர் (பேய்/ஆவி) பாட்டு இருக்கிறது. அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம். இப்போது பாலு அந்தரங்கக் குரலில் சுகமாகப் பாடும் அந்தரங்கம் யாவுமே! ஆரம்ப கால கார்த்திக் அழகுலயும், நடிப்புலயும் ஜஸ்ட் லைக் தட்தான். ஆனா பாட்டு சூப்பர்.  படம் புட்டுக்கிச்சுன்னு நினைக்குறேன். இந்த பாட்டை ரேடியோவில்கூட கேட்டதா நினைவில்லை.  ஆனா இப்ப கேட்டதும்  பிடிச்சு போச்சுது. நேத்து நைட் முழுக்க இதே பாட்டுதான் ரிபிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.. எத்தனை தரம்ன்னு யாரு கண்டது?! 


ம்ஹம். . ம்ஹம்.. எப்படி எப்படி
ம்ஹம். . ம்ஹம்.. எப்படி எப்படி
ம்ஹம். . ம்ஹம்... ம்ஹம். . ம்ஹம்
அந்தரங்கம் யாவுமே எப்படி எப்படி
சொல்வதென்றால் பாவமே எப்படி எப்படி

அந்தரங்கம் யாவுமே... சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் பாஷையை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா..

அந்தரங்கம் யாவுமே... சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா..
அந்தரங்கம் யாவுமே.. ஏ.. ஏ.. ஏ.. ஏ...

காமனே நாணம் கொள்வான் சொல்லுவது தீராது
எப்படி எப்படி
கம்பனே வந்தால்கூட கட்டுப்படியாகாது
எப்படி எப்படி

கண்டதில் இங்கு நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒருநாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள் ம்ஹ்ம்
காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானது என்னென்று சொல்வேன்
அந்தரங்கம் யாவுமே... சொல்வதென்றால் ஹ பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா.
அந்தரங்கம் யாவுமே
ஹம் எப்படி எப்படி..எப்படி எப்படி..எப்படி எப்படி

காதலை தானம் கேட்டேன் என்னதொரு தாராளம்
எப்படி எப்படி
நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம் 
எப்படி எப்படி


தாவணி பூவினை சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள் கேள் அதை சொல்கிறேன்.
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அதில் ஏன் 
ம்ம்ம்ம்ம்ஹ்ஹா
ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
மீதியை நான் உரைப்பதும்.. நீ அதை ரசிப்பதும் பண்பாடு இல்லை.

அந்தரங்கம் யாவுமே... எப்படி எப்படி 
சொல்வதென்றால் பாவமே
ஹம் எப்படி எப்படி..எப்படி எப்படி..எப்படி எப்படி
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா.?..

ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா?.. 

பாட்டோட லிங்க்
https://www.youtube.com/watch?v=dkTo1aGFNx0

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469281

நன்றியுடன்,
ராஜி.

20 comments:

  1. பார்ரா..... என்னவொரு ரசனை...!

    ReplyDelete
    Replies
    1. ஏன்ண்ணே?! நல்லா இல்லியா

      Delete
  2. எப்படி.... எப்படி எல்லாம் பதிவு எழுதுறீங்க..... இது எப்படினு கொஞ்சம் சொல்லுங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. யோசிச்சுத் தான்......அதாவது.....மூளையை கசக்கிப் பி ழி ய ணு ம்.

      Delete
    2. இருந்தா கசக்கி புழியலாம். மூளை இல்லாத ராஜி எப்படி இப்படின்னு யோசிக்குறாக கில்லர்ஜி அண்ணா

      Delete
  3. அருமையான பாடல்.......... நல்ல ரசனை.......

    ReplyDelete
  4. அருமையான பாடல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. இந்த எப்படி எப்படி பாடல் எனக்கும் பிடிக்கும் ,இன்னொரு எப்படி எப்படி பாடல் கொஞ்சமும் பிடிக்காது :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிக்காதுண்ணே

      Delete
  6. இந்தப் பாடல் நான் நிறைய கேட்டிருக்கிறேன். எஸ் பி பி அவர்களின் வித விதமான எப்புடி க்காக...

    கீதா: நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அதிகம் இல்லாததா உங்கள் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வரலை எப்படி இருக்கும் என்று. யுட்யூப் போய் கேட்டதும் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது. எஸ்பிபி குரல் செம இளமை...

    ReplyDelete
    Replies
    1. பாட்டு பிரியையான நான் இந்த பாட்டை கேட்டதே இல்லப்பா. இப்பதான் கேக்குறேன்.

      Delete
  7. இதுவும், தேவதை இளம் தேவி பாடலும் எனக்கு அப்பவே பிடிக்கும். பி. சுசீலாவின் கங்கை ஆற்றில் பாட்டும் சூப்பரா இருக்கும்.

    ஆறாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. தேவதை இளம்தேவி பாட்டு செம.. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அடிக்கடி கேப்பேன். கங்கை ஆற்றில் பாட்டு எப்படின்னு போய் பார்த்துட்டு வரேன்

      Delete
  8. அருமையான பாடல்
    நன்றி

    ReplyDelete
  9. அருமையான பாடல் பாராட்டுகள்

    ReplyDelete
  10. நல்ல பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete