Wednesday, August 23, 2017

மெட்ராசை சுத்திக்காட்டப்போறேன்... மெரினாவில் வீடு கட்டப்போறேன்... மௌனச்சாட்சிகள்


நாகர்கோவில்ல நாகர்கோவில்காரங்க இருப்பாங்க. மதுரைல மதுரைக்காரய்ங்க இருப்பாங்க.. தூத்துக்குடில தூத்திக்குடிக்காரங்க மட்டும்தான் இருப்பாங்க. ஆனா, சென்னைல எல்லா ஊர்க்காரங்களும் இருப்பாங்க. சென்னைக்கு பல முகம், பல மொழி, பல கலாச்சாரம்ன்னு ஒரு படத்துல சொல்வாங்க. அது உண்மைதான். பல ஊர்க்காரய்ங்க மட்டுமில்ல பல நாட்டுக்காரங்களும் இருக்காய்ங்க. குடிசைக்கூட இல்லாம பிளாட்பாரத்துல தூங்கும் மக்கள் ஒருபக்கம்.... அரண்மனை போல வீடிருந்தும் பொழுது போகாம அதே பிளாட்ஃபார்ம் பக்கம் உலாவும் மக்கள் மறுபக்கம்.  ஹைடெக் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு பக்கம், கால்வாய், குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கவர்ல செஞ்ச வீடுகள் மறுபக்கம்.. சர்வதேச உணவுகள் விற்கும் உயர்தர ஹோட்டல்கள் ஒருபுறம்,  பாரம்பரிய உணவான களி, கூழை விற்கும் தள்ளுவண்டி கடை மறுபக்கம்....  சாமி, பூதம் இல்லன்னு சொல்லி விஞ்ஞான போக்கில் போகும் மக்கள் ஒருபக்கம், அலகு குத்துறது, குறி பார்க்குறது, சாமியார் ஆசிரமம்ன்னு மூடநம்பிக்கைகள் மறுபக்கம். லிவிங்க் டூ கெதர்ல வாழும் வாழ்க்கை ஒருபக்கம்... கூட்டுகுடும்பம் மறுபக்கம்... ஹோலி பண்டிகை ஒரு பக்கம்... ஓணம் பண்டிகை மறுபக்கம்... நெதர்லாந்துக்காரன் ஒரு பக்கம்ன்னா... ஆப்பிரிக்காக்காரி இன்னொரு பக்கம்... சர்வதேச விமான நிலையம், சர்ச், கோவில், தியேட்டர், மருத்துவமனைகள், கல்வி, கலை,  தொழிற்சாலைகள்ன்னு எல்லா  துறையினருக்கும் சென்னைதான் மையப்புள்ளி...
தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை, தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அரசியல், மருத்துவம், சுற்றுலா பொருளாதாரம்ன்னு பலவிதத்தில் முக்கிய பங்கு வகிக்குது.   ஆங்கிலேயர்கள் காலூன்ற  அடித்தளமிட்டது சென்னைதான். சோழ, பல்லவ, விஜய நகர பேரரசுகளுக்கும் முக்கிய இடமா சென்னை  இருந்திருக்கு.  இத்தனை சிறப்பு வாய்ந்த சென்னை இன்னிக்கு ஆரம்பம் எது முடிவெதுன்னு தெரியாம இருந்தாலும் ஒருகாலத்தில் ஒரு சிறு கிராமமாதான் இருந்திருக்கு. இன்னிக்கு கால்வைக்க இடமில்லாம ஜன நடமாட்டம் மிக்கதா இருக்கும் சென்னை சொற்ப மக்கள் வாழ்ந்த இடமாவும் இருந்திருக்கு. 

1639 ம் ஆண்டு ஆக 22ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோதன் ஆகியோர் இணைந்து ஐய்யப்பன், வேங்கடப்பன்ன்றவங்கக்கிட்ட இப்பத்திய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கினாங்க. அந்த இடத்துக்கு  தங்களோட அப்பா பேரான  சென்னப்பநாயக்கன் பேருல இருக்கனும்ன்னு கேட்டதால சென்னை பட்டனம்ன்னு பேர் உண்டாச்சு. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய பிறகுதான் சென்னை பிரம்மாண்டமாய் வளர ஆரம்பிச்சது. அப்படி வளர்ந்த நகரம் திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், திருவொற்றியூர்,  திருவான்மியூர் மாதிரியான நூற்றாண்டு புகழ்வாய்ந்த ஊர்களையும் இணைச்சுக்கிட்டது.  1688ல இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால்  நகராட்சியாய் அறிவிக்கப்பட்டது., இந்தியாவின் முதல் நகராட்சி அப்போதைய சென்னை பட்டனம். அதேப்போல, இந்தியாவின் முதல் மாநகராட்சி இப்போதைய சென்னை. லண்டன் மாநகராட்சிக்கு அடுத்து இப்போதைய சென்னை அந்த இடத்தை தட்டிக்கிட்டு போச்சு. 


சென்னை பட்டினம்  பின்னாளில் ஆங்கிலேயர்களால் மதராசப்பட்டினமானது. சென்னை மட்டுமல்ல அப்போதைய மதராசப்பட்டினத்தில் தமிழ்நாட்டோடு இன்னும் பல மாநிலத்தின் இடங்கள் சேர்ந்திருந்தது. 1969ல மொழிவாரியாக எல்லை பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனியாய் பிரிந்து வந்தது.   இந்திய சுதந்திரத்திற்குபின் சென்னை மாகாணமானது. அதன்பின் 1956ல    மதராஸ்ன்னு பேர் வைக்கப்பட்டு இப்ப சென்னையா விஸ்வரூபமெடுத்து நிக்குது.  இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த சென்னைக்கு இந்த வாரம் பொறந்த வாரமாம். அதனால, சென்னை தினம்ன்னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நம்ம பங்குக்கு சின்னதா ஒரு பங்களிப்பு. 
அன்றைய பாரீஸ் கார்னர்



சென்னைன்னா நமக்கு நினைவுக்கு வர்றதுல மெரினா பீச்சும் ஒன்னு. உலகத்துல நீளமான பீச்சுல இதும் ஒண்ணுன்னாலும் உலகின் நீளமான பீச்சுல மெரினாக்கு இரண்டாவது இடம்.  கிட்டத்தட்ட 13கிமீ தூரம் நீண்டுக்கிட்டிருக்கும். பேரும் புகழோடும் இருக்கும் இந்த மெரினா பீச் அன்னிக்கு களிமண் பகுதியா இருந்துச்சுன்னா ஆச்சர்யமா இருக்கும். ஆனா பாருங்க. அதான் உண்மை. 1880ல ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப்தான் முதன்முதலில் அழகாக வடிவமைத்தார் `1881 ம் ஆண்டு சென்னை துறைமுகம் உருவாச்சு.  1884ல மெரினான்னு பேர் வச்சாங்க.  மேல படத்துல இருக்கும் மெரினா பீச் லைட் அவுஸ் பத்தி ஒரு பதிவு ஏற்கனவே போட்டிருக்கு. கொஞ்சம் சிரமம் பார்க்காம போய்ட்டு வந்திருங்க.  

அடையாறுங்குற ஆறு கடலில் கலக்கும் பகுதியின் வடக்கு பகுதியும், சாந்தோம் சர்ச்சுக்கும் இடைப்பட்ட பகுதியே சாந்தோம் பீச்.  சாந்தோம் சர்ச் என்னும் புனித தோமையார் தேவாலயம் இங்கதான் இருக்கு. இந்த இடம் மீனவமக்கள் நிறைந்த பகுதியாகும். இங்க மீன் விற்பனை களைக்கட்டும்.
 பெசண்ட் நகர்  பீச்ன்னு சொல்லப்படும் எட்வர்ட் எலியட் பீச்தான் மெரினாவின் கடைசி முனை.  காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த எட்வர்ட் எலியட்ன்ற  ஆங்கில அதிகாரியின் நினைவாக இந்த பீச் அழைக்கப்படுது. மெரினா பீசுலயே இந்த பீச் ரொம்ப சுத்தமா இருக்குமாம்!  நீரில் மூழ்க ஒருவரை காப்பாறறி தன் உயிரை இழந்த  டச்சு மாலுமியான கார்ல் இசுபிட்   நினைவாக  இங்க ஒரு நினைவு சின்னம் இருக்கு. இங்கதான் அஷ்டலட்சுமி கோவில், ஆரோக்கியமாதா கோவில், அறுபடைவீடு கோவிலும் இருக்கு.  அஷ்டலட்சுமி கோவில் நம்ம பிளாக்குல வந்திருக்கு. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திருங்க. 

இன்னிக்கு சென்னைல புதுசு புதுசா கட்டிங்கள் பல வந்தாலும் 200, 300 வருட கட்டிடங்களும் சென்னைல இன்னும் இருக்கு. அதுல ஒரு சிலது பார்ப்போம்..   1892 ல ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி   இண்போ- சர்ச்சியனிக் கட்டடக்கலையின்படி கட்டப்பட்டது இன்றைய உயர்நீதிமன்ற வளாகம். இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம்ன்ற பெருமை கொண்டது இக்கட்டிடம்.  மிக உயரமான கூம்புகளால் நிற்கும் அழகிய கட்டிடம் இது.  முழுக்க முழுக்க  சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்டது.  ஆரம்ப காலங்களில் இந்த கட்டிடம் கலங்கரை விளக்கமாவும் இருந்திருக்கு.  சென்னைமீது எம்டன் கப்பல் வீசியதில் அந்த லைட் அவுஸ்  சேதமாகிட்டதால இன்றைய லைட் அவுஸ் கட்டப்பட்டது. இதற்கான நினைவுக்கல் ஒன்னு வச்சிருந்தாங்க. இப்ப இருக்கா?! இல்லியான்னு தெரில.
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் இடமான தலைமைச்செயலகம்  இருக்கும் கட்டிடத்தோட பேரு புனித ஜார்ஜ் கோட்டை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். 1644  ஏப்ரல் 23ம் நாளில்தான் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.  சுத்திலும் அகழி சூழ்ந்த இக்கட்டிடத்தின் சுவர்களும், கதவுகளும் இதன் பழமையை பறைச்சாற்றுது. காலமாற்றத்தில் எத்தனை மாற்றம் இக்கட்டிடத்தில் செய்தாலும்  பழமை மாறாம இருப்பது ஆச்சர்யமே!
எனக்கு சென்னைன்னா ரொம்ப பிடிக்கும். அங்க படிக்கனும்ன்னு நினைச்சேன்.  அங்கதான் வாக்கப்படனும்ன்னு  நினைச்சேன்..  அங்கதான் செட்டில் ஆகனும்ன்னு நினைச்சேன். ஆனா எதும் நடக்கல. பார்க்கலாம் எதிர்காலத்துலயாவது செட்டில் ஆகுறேனான்னு. சென்னைமேல் இருந்த மோகத்தால் சென்னை பத்தி எழுதிய பதிவு இன்னிக்கு உதவுது. வரிசையா பார்த்துட்டு வந்திருங்க /.... சென்னை தின கொண்டாட்டம் ஆக 20 முதல் 27 வரை கொண்டாடப்படுது. அதுக்காக தமிழக அரசு சார்பா பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், மாரத்தான் ஓட்டம், விளையாட்டு போட்டி, பேச்சு போட்டின்னு நிறைய போட்டிகள் களைக்கட்டுது. 






அண்ணா சமாதி

தி மெயில் கட்டிடம்...

ஹாப்பி பொறந்த டே டூ சென்னை

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470106
நன்றியுடன்,
ராஜி

23 comments:

  1. வாவ் சூப்பர்

    ReplyDelete
  2. சென்னை வளர்ச்சி ,என்னை பிரமிக்க வைக்குது :)

    ReplyDelete
    Replies
    1. மத்த ஊர்லாம் நாளுக்கு நாள் வளர்ந்தா, சென்னை மட்டும் நிமிசத்துக்கு நிமிசம் வளருது

      Delete
  3. நல்ல தகவல்களும்....

    அழகான படங்களும் ...ராஜிக்கா ..

    நானும் இரு நாள் முன்தான் இந்த தகவல்களை வாசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்பதான் வாசிச்சு இந்த விவரங்களை தெரிஞ்சுக்கிட்டேன்.

      Delete
  4. உங்களின் ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. இப்ப ஆசை மாறிட்டுதுண்ணே. எதாவது நீர்நிலை பக்கத்துல ஒரு வீடு, வீடு முழுக்க புத்தகம், மெல்லிசை பாடல்கள் நிரம்பிய பெண்ட்ரைவ், தனிமை, பிளாக், இணையம்... போதும்...

      Delete
  5. முதல் பாரா பற்றி: நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடியில் நாடார், மீனவர், பிள்ளைமார், தேவர்,
    பிராமணர்,தலித், ஆசாரி போன்றோர் தான் இருப்பார்கள். சென்னையில்தான் நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடிக் காரர்கள் இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஜாதிகளை பத்தி சொல்லலீங்கோ. ஊர்க்காரங்களைதான் சொன்னேன். அதுமில்லாம இது எங்கேயும் எப்போதும் பட வசனம்

      Delete
  6. சென்னைப் பட்டணம்...........அழகான விளக்கங்களும்,புகைப் படங்களும்........அருமை..அறிந்திராத தகவல்கள் நன்றி!

    ReplyDelete
  7. 19644 ஏப்ரல் 23ம் நாளில்தான் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது//

    சரி செய்யவும்

    சென்னையில் படிக்க முடியல, வாக்கப்பட முடியல இனிமேல் வீடு கட்டி வாழலாமே....

    மவுண்டே ரோட்டில் சென்ட் வெறும் 20,000 ரூபாய்தான் டிவியில சொன்னாய்ங்கே....

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் எங்க ஊர்லயே செண்ட் அம்பதாயிரம் ரூபாண்ணே. அங்க எப்படி 20,000?!

      சாரி டைப்பும்போது ஆர்வக்கோளாறுல டைப்.. திருத்திடுறேன்

      Delete
    2. ஒருவேளை இருபது லட்சமாக இருக்குமோ..... நான்தேன் அவசரத்துல கேட்டுட்டேன்.

      Delete
    3. அப்பிடிதான் இருக்கும்ண்ணே

      Delete
    4. 2010-ல் நண்பரிடம் சென்னையில் இடம் வாங்க கேட்டேன் கோடிகள் இருந்தால் பேசுங்கள் என்றார் அத்தோடு வாயை மூடி விட்டேன்.

      Delete
    5. அவ்வ்வ்வ். புறநகர்ல லட்சத்துலயே வீடு கிடைக்கும். இப்ப ரிஅல் எஸ்டேட் பிசினஸ் வீழ்ச்சிதான்ண்ணே

      Delete
  8. படங்களும் சென்னை விவரங்களும் அருமை பாராட்டுகள்

    ReplyDelete
  9. சென்னைப் பட்டணம் பற்றி அழகான தகவல்கள். படங்கள் உட்பட...அருமை

    கீதா: சென்னையின் பழைய மேப் அதாவது முன்பு எப்படி நீர்நிலைகள் பலவற்றுடன் இருந்தது என்பதற்கான ஆதாரம் எக்மோர் ம்யூசியத்தில் இருக்கிறது...

    மதராஸ் படம் பார்த்தது போன்று இருக்கிறது உங்கள் பதிவு!! நல்ல தகவல்கள். ஆனா இப்போ சென்னையில இருக்கறது ரொம்ப கடுப்பு. பாருங்க நீங்க சென்னையில் இருக்க ஆசைப்பட்டீங்க ஆனால் வாய்க்கலை. நான் சென்னையே ககூடாதுனு இருந்தேன்! என்னவோ எனக்குச் சின்ன வயசுலருந்தே பிடிக்கலை...ஆனால் விசிட் மட்டும் அடிக்கணும்....அவ்வளவுதான்...ஆனா பருங்க எனக்கு சென்னைலதான் வாழ்க்கைனு ஆகிப் போச்சு. நான் ஆறு, மலைகள் சுற்றி என்று வாழ ஆசைப்பட்டேன் அதாவது கேரளத்து வாழ்க்கை. எனக்கு மிகவும் பிடிக்கும்....

    டிடிக்குக் கொடுத்திருக்கற உங்கள் பதில் நிறைவேறட்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. இளமையில் வாழ சென்னை பிடிக்கும். ஆனா கடைசி காலத்தில் வாழ கேரளா மாதிரியான இடத்தில் வாழனும்ன்னு ஆசை. அதாவது வீட்டினுள்ளிருந்து பார்க்கும்போது ஆறு,குளம், கடல், வாய்க்கா, வரப்பு, அருவின்னு எதாவது ஒரு நீர்நிலை தெரியனும். அதான் என் கனவு வீடு.

      Delete