Thursday, August 24, 2017

பிள்ளையார் குடை - கைவண்ணம்

பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையார் எப்படி முக்கியமோ அதுமாதிரியே பிள்ளையார் குடை முக்கியம். பேப்பர் பிளேட்ல செஞ்ச குடை கடையில் விதம் விதமா கிடைக்குது.  வீட்டுல சும்மாதானே இருக்கேன்னு பிள்ளையார் குடையை நானே எனக்கு பிடிச்ச மாதிரி செஞ்சுப்பேன்.. 

அதுக்கு தேவையான பொருள்ன்னு தனியா எதுமில்ல. பிள்ளையார் போலவே பிள்ளையார் குடையும் எந்த பொருள்ளயும் வந்துடும்.  இங்க நான் செஞ்சிருக்கும் குடை தென்னங்குச்சி, உல்லன் நூல் கொண்டு செஞ்சது. 
 இதுதான் முக்கியமானது. மிச்சம்லாம் நம் விருப்பம்...
 ரெண்டு குச்சியை  ப்ளஸ் குறி போல  வச்சு உல்லன் நூலால இணைச்சுக்கனும். டைட்டா இருக்கனும். இல்லன்னா என்னைப்போல லூசாகிடும். 
 ரெண்டு குச்சிக்கு இடையில் இன்னொரு குச்சி வச்சு இணைச்சுக்கனும்...

 கடைசியா இணைச்ச குச்சிக்கு எதிர்புறத்தில் வச்சு இன்னொரு குச்சியை இணைச்சுக்கனும்..
 நாலு குச்சியை இணைச்சுக்கிட்டா  மேல இருக்கும் படத்துல இருக்குற மாதிரி வரும்.
 வுல்லன் நூலை குச்சில ஒரு  சுத்து சுத்தி சுத்திக்கிட்டே வரனும்.,
அடுத்த கலர் நூலை இணைக்கும்போது முடிச்சு போட்டு இணைச்சு சுத்திக்கிட்டே வரனும்..
 நல்லா டைட்டா சுத்திக்கிட்டே வாங்க..
 விருப்பப்பட்டப்படி கலர் நூலை மாத்தி மாத்தி சுத்திக்கிட்டு வாங்க.
 சுத்தி முடிச்சதும் சைக்கிள் ஃபோக்ஸ் கம்பியை இணைச்சு கம் தடவிக்கோங்க. 

ஃபோக்ஸ் கம்பி தெரியாம இருக்க பேட்ச் வொர்க்கை ஒட்டிக்கிட்டேன்.
  குடையில் தொங்க மணியை கட்டிக்கிட்டேன்.
அங்கங்க சமிக்கி, கண்ணாடின்னு ஒட்டிக்கலாம்... மிச்சமீதி நூலுலாம் பிசிறில்லாம வெட்டி விருப்பப்பட்ட மாதிரி கண்ணாடி, மணி,ன்னு எப்படி வேணும்ன்னாலும் அலங்கரிச்சுக்கலாம்...

கூல்ட்ரிங்க் பாட்டில், பேப்பர் டீ கப், பேப்பர் தட்டு,  காட்போர்ட் அட்டை, தேங்காய் ஓடு, கம்பின்னு எதுல வேணும்ன்னாலும் குடை செய்யலாம்,  அடுத்த வாரம் கூல்ட்ரிங்க் பாட்டில்ல செஞ்ச குடையை பார்க்கலாம்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470197

நன்றியுடன்,
ராஜி.

24 comments:

  1. ரொம்ப நல்லா கலர் கலரா இருக்கு ராஜிக்கா...

    ஆன குச்சிய எப்படி குடை மாதரி வளைப்பீங்க...அங்க தான் புரியல...

    எங்க வீட்டு ohp சீட் விநாயகர் இப்ப தான் ரெடி ஆகுறார்....

    ReplyDelete
    Replies
    1. ஈரமாக்கிட்டா வளையும். நான் ஈரமாக்கிதான் செஞ்சேன். வளையாமௌம் செய்யலாம். அதும் ஒரு அழகு. உங்க குடையை பதிவா போடுங்க பார்க்கலாம். எனக்கு லிங்க் கொடுங்க

      Delete
  2. கலர் குடை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையா செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்.

      Delete
  3. மிக அருமை.. நானும் இப்படி செய்து பிள்ளையாருக்கு வைக்கப்போறேன்.. இப்போ விளக்கம் புரியவில்லை, மீண்டும் வந்து படிச்சால்தான் புரியும்.

    ReplyDelete
    Replies
    1. இதுவே புரியலியா?! எனக்கே புரிஞ்சிடுச்சே!

      Delete
  4. ஸூப்பராக இருக்கிறது குடை.

    //உல்லன் நூலால இணைச்சுக்கனும். டைட்டா இருக்கனும். இல்லன்னா என்னைப்போல லூசாகிடும்//

    ஹா.. ஹா.. ஹா... இதுவும் ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இதுதான் சூப்பர்ன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுறதை ஐ கேட்சிங்க்ண்ணே

      Delete
  5. நன்றிண்ணே

    ReplyDelete
  6. வாவ்.......சூப்பர்.......ரொம்ப அழகா இருக்கு.....வாழ்த்துக்கள்,தங்கச்சி......

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிண்ணே

      Delete
  7. அருமையான கைவண்ண வழிகாட்டல்

    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பண்டிகைலாம் முடியட்டும்... கண்டிப்பாக பகிர்ந்துக்குறேன் சகோ

      Delete
  8. கூடையை செய்து நடுவில் ஒரு குச்சி வைத்து கமத்தி பிடித்தால் குடை! இந்தக்குடை ஒழுகும்!

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையாருக்கு இந்த குடைதான் பிடிக்குமாம். என்கிட்ட சொல்லிட்டாரு

      Delete
  9. பல க்ரியேடிவ் திறமைகள் பல உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது. சிறு குழந்தை போல உங்கள் மனசு இருப்பதால் இப்படி கலர் கலராக அழகாக உங்கள் மனசை போல இவைகளும் வெளிப்படுகின்றன் குட்

    ReplyDelete
    Replies
    1. குழந்தைப்போல மனசா?! நீங்கதான் உங்க தங்கச்சியை மெச்சிக்கனும்

      Delete
  10. நானும் குடை செய்ய ஆசைப்படுவேன். பிறகு கடையி்ல் வாங்கி விடுவேன். அவர்களும் பிழைக்கணும்தான். நன்று பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. அவங்களும் பிழைக்கனும்தான். ஆனா, நம்ம கையால செஞ்சால் கூடுதல் திருப்தி

      Delete
  11. பர்த்டே பேபிக்கு எல்லாம் ரெடியாகிடுசுசுனு சொல்லுங்க! நல்லா செஞ்சுருக்கீங்க!! விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்!

    கீதா: //உல்லன் நூலால இணைச்சுக்கனும். டைட்டா இருக்கனும். இல்லன்னா என்னைப்போல லூசாகிடும்// ...ஹாஅஹாஅஹாஹா இதுதாங்க எனக்கு ரொம்பப் பிடிச்சுச்சு இதுஇது ராஜி!!ஹிஹிஹிஹி...

    ராஜி செம!! ரொம்ப அழகா செய்யறீங்கப்பா.... க்ரியேட்டிவ் ஹெட் தாம்பா உங்களுக்கு...

    இப்ப புதுசா ஒரு சல்லடை கரண்டி இருக்கு தெரியுமா அதாவது இந்த சிலந்தி வலை மாதிரி ஷேப்ல பொரிச்சு எடுக்கறத அள்ளர கரண்டி....அதுல அந்த பிடி போயிருச்சு.http://www.thekitchn.com/how-to-make-jelly-doughnuts-sufganiyot-238400 இந்த லிங்க்ல அந்தக் கரண்டி இருக்கும் பாருங்க ..அப்ப அந்த கரண்டில பிடி போனதுனால நடுல இருக்கறது இருக்குல அதுல இந்தக் குடை செஞ்சு கொடுத்தேன் போன வருஷம் என் கசினுக்கு.இயற்கை அது இதுனு.என்னெல்லாமோ படம் எடுப்பேன் ஆனா நான் செஞ்சது எதுவுமே .படம் எடுத்ததே இல்லை அதான் தர முடியலை ராஜி...விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாவ்! நல்ல ஐடியா! எப்படி செய்யனும்னு புரிஞ்சு போச்சு. நீங்க கொடுத்த லிங்கை பண்டிகை முடிஞ்சு பார்க்குறேன். நன்றி கீதா

      Delete
  12. கடையில் போய் வாங்க வேண்டிய அவசியமில்லாமல் தன் கையே தனக்குதவி என்று... அருமை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பொழுது போகனும்ல்ல

      Delete
  13. தெளிய வழிமுறைகள், படங்களுடன் விளக்கம் தந்து 'குடை வள்ளல்' ஆனீர் !

    ReplyDelete