Wednesday, November 01, 2017

மூக்கன் சாமி கட்டிய அணை - மௌனச்சாட்சிகள்

என்னதான் வீரம், காதல், சூது, பண்பாடு, நாகரீகம்லாம் சுமந்து மௌனமா நிற்கும் இடிந்த கோட்டைகள் மட்டுமே பார்க்குறது!? அதையெல்லாம் பார்த்து, படிச்சு, டைப்படிச்சு படுத்தா நைட்ல நெஞ்சம் மறப்பதில்லை, அது தன் நினைவை இழப்பதில்லை...,ன்னு ஒரு ஆவி வந்து பாடுற மாதிரி இருக்கு. இது கோவை ஆவியா இருந்தா பரவாயில்ல. நம்ம தம்பிதானேன்னு தாஜா பண்ணிடலாம். ஆனா, இது ஏதோ மன்னர், ராணி, தளபதியோட ஆவி போல. அதான் பயம் வந்திட்டு. அதனால, இந்த வாரம் நம்ம லொக்கேஷனை மாத்தியாச்சு.

கண்ணுக்கும், கருத்துக்கும் குளிர்ச்சியா இருக்கும் இடமான பேச்சிபாறை அணை பத்திதான் இன்னிக்கு மௌனசாட்சிகள்ல பார்க்க போறோம். போலாமா!? 

இந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கு. இது கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கு. இது, மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாகும்.

நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் இருக்கு   இந்த அணை.  இங்கப் போறதுக்கு நாகர்கோவில்ல இருந்து நிறைய பஸ் வசதிகள் இருக்கு.  பேச்சிபாறை போற வழிலாம் மரங்களும், மலைகளும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.இங்க இருக்கும் மக்கள் கூட கேரள கலாச்சாரங்களையே பிரதிபலிக்குறாங்க. பேச்சிபாறையிலும்  சிறிய பஸ் ஸ்டான்ட் இருக்கு. இந்த அணை மாணவ மாணவியருக்கும் கல்வி சுற்றுலாகவும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இது தொழிநுட்ப சுற்றுலாகவும் போறதுக்கு தகுந்த இடம்.


இந்த அணைக்கட்டு திருவிதாங்கூர் மகாராஜா  மூலம் திருநாள் காலத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் அவர்களால் 1897-1906 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கட்ட செலவழிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாகதான் இருந்ததாம். . பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டி முடிக்கப்பட்டதாம்.

இந்த அணையை  கட்டிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவுச் சின்னமும், கல்லறையும் இங்க காணப்படுது. இவரது காலம் (பிறப்பு) 08.10.1868 -(இறப்பு)  25-09-1913 அவர் முதலில் சென்னை  பிரிட்டிஷ் மாகாணத்தில் மதுரை நகராட்சியில் நகராட்சி பொறியாளராக பணியாற்றினாராம். பின்னர், திருவிதாங்கூர் அரசாட்சியில் அணைகட்டுவதற்காக பணியில் அமர்த்தபட்டதாக கூறப்படுது. ஹம்ப்ரி மிஞ்சின் தனது 45 வயதில் 1913 ல் காலமானார். 

இந்த அணையின் கொள்ளளவு 207.19 சதுர கிலோமீட்டர்கள். ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள். இந்த பகுதியில் காணப்படும் நீர்நிலைக்கு பின்புறம் இருக்கும் மலையில்  மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் படகுமூலம் தான் போக்குவரத்து செய்கின்றனர். 

இந்தமலையில் எல்லாவிதமான காட்டுமிருகங்களும் இருக்குறதா சொல்றாங்க இங்க வாழும்  மலைவாழ் மக்கள்.  இந்த இடம் முழுதும் பாரஸ்ட் துரையின் கட்டுபாட்டில்இருக்கு. இந்த பரந்த நீர்நிலையால் கல்குளம்அகத்தீசுவரம்தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றதாம்.


இங்கே இருக்கும் முக்கியமான இடம் பேச்சியம்மன் கோவில். அதனாலதான் இந்த இடத்துக்கு பேச்சிபாறை ன்னு பேர் வந்ததாம். நாங்கள் அணையை பார்த்துக்கிட்டு கொண்டு இருந்தப்போ, அங்க இருந்த ஒரு பெரியவர்,  இப்ப நீங்க கரையில் பார்க்கும் இந்த பேச்சியம்மன் கோவில் இந்த தண்ணீர் பரப்பின் நடுவில் இருந்தது. அணை கட்டுவதற்கு இந்த கோவில் இடைஞ்சலா இருந்ததால ஹம்ப்ரி மிஞ்சின் இந்த கோவிலை இப்ப இருக்கும் இடத்திற்கு மாற்றினாராம். கோவிலை இடம் மாத்துறதுக்கு மலைவாழ் மக்கள் அதை எதிர்த்து இருக்காங்க. ஆனா, பெரும்பரப்பளவு கொண்ட அணையா இதை இடத்தை மாற்ற வேறு வழியில்லாமல மிஞ்சின் இந்த கோவிலை கரைக்கு மாறினாராம்.   அவர் மரணம், கொடிய விஷப்பாம்பு கடித்து, அதனால் வந்த விஷ காய்ச்சல்ன்னு சொல்றாங்க.  அவர் மரணத்துக்கு காரணமானது இங்குள்ள அம்மனின் பாம்பு ன்னு இங்குள்ள மக்கள் இன்று வரை நம்புறாங்க. இதுல எது நிஜம்? எது கதை? என்பதைச் சொல்ல மிஞ்சின்னும் இப்ப இல்லை. அவர்காலத்தில் வாழ்ந்த மலைவாழ்மக்களும் இல்லை. இதுலாம் நூற்றாண்டுகள் கடந்த வரலாறு.

சரி, இங்க கரையில் அமர்ந்து அருள்புரியும் பேச்சியம்மன் கோவிலுக்கு போலாம் வாங்க. இந்தக் கோவில் கேரளபாணி கட்டிடகலை அமைப்பில் இருக்கு. பூஜை செய்பவர்கள் கூட நம்பூதிரி வகையினர் போலதான் இருக்காங்க. பசுமையான மரங்களுக்கு இடையில் கோவில் பார்க்க  ரொம்ப அழகா இருக்கு. சிலர் குழந்தைக்கு மொட்டை அடிக்கவும் வந்திருந்தனர். சிலர் பாயாசம் செய்து அம்மனுக்கு படைக்கவும்செய்தனர்.பார்பதற்கு பரவசமூட்டும் அம்மனின் சிலை கருணை வடிவாக அலங்காரத்துடன் இருந்தது. வாங்க அம்மனை கும்பிடலாம்... 
பேச்சிப்பாறை அணையை உருவாக்கிய இஞ்ஜினியர் ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 1913-ம் ஆண்டு  செப்டம்பர் 25-ம் தேதி இறந்தார். அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த திருவிதாங்கூர்  மன்னர், இஞ்ஜினியர் அலெக்சஸ்சாண்டர் மிஞ்சின் உடலை பேச்சிப்பாறை அணை பகுதியிலேயே அரச மரியாதையுடன் அடக்கம் செய்து, அந்த பகுதியில் கல்லறை கட்டவும் உத்தரவிட்டார். அதன் பேரில் அங்கு கல்லறை கட்டப்பட்டு இன்றும் நினைவு சின்னமாக காட்சியளிக்குது.


அணைக்கட்டுக்கு வேலை செய்ய    பணக்குடி, வள்ளியூர்காரர்களும், கடுக்கரை மலை தாண்டிப்போய் வேலையில் சேர்ந்தார்கள். மிஞ்சினை’ மக்கள் ”மூக்கன் துரை”ன்னு செல்லமா கூப்பிட்டாங்க. அணை கட்டப்போன தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோயில் சின்ன பெருமாளும் மற்றும் அவரது  உறவினர்களும் ஊருக்கு திரும்பி வந்து, ஏற்கனவே தாங்கள் வணங்கி வந்த பேச்சியம்மன், சுடலை மாடசாமி கோவிலில் கூடுதல் பீடம் ஓன்று போட்டு  மூக்கன் துரை மிஞ்சினையும் வழிபட தொடங்கினர். கொடை விழா எடுத்தனர். வெள்ளக்கார சாமி, மூக்கன்துரை சாமி ன்னு இன்னிக்கும் அங்கிருக்கும் மக்களால் வழிபடுகின்றார். இஞ்ஜினியர் ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சினின் 150 -வது பிறந்த நாள் விழா கடந்த 8/10/2017 அன்று குமரியில் விவசாயிகளால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.


இந்த அணைக்கு போகும் வழியெல்லாம் பச்சை பசேல்ன்னு மரங்களும்,  போகும் வழிலாம் பச்சைபசேல்ன்னு மரங்களும், செடி கொடிகளும், மலை சூழ்ந்த இடங்களும் விடுமுறையில்  சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம். இந்த அணை, தென்மாவட்டங்களுக்கு நீர்வளத்தையும் மின்சாரத்தையும் அளிக்கும் முக்கியமான அமைப்பாக இருக்கு. மேட்டூர் அணைக்கு அடுத்தபடியான பெரிய அணை இதுவே ஆகும். குடும்பத்தோடு படகு பயணம் வரலாம். குழந்தைகள் பொழுது போக்குறதுக்கு வசதியா பார்க், விளையாட்டு திடல்ன்னு இன்னும் கொஞ்சம் உருவாக்கலாம். அணைக்கட்டை சுத்தி பார்த்து கால் வலிக்குது. கொஞ்சம் ஓய்வெடுத்துக்குறேன். மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு இடத்தைப் பத்தி மௌனச்சாட்சிகள்ல பார்க்கலாம். 

# இது ஒரு மீள்பதிவு. வி.எஃப்.எக்ஸ்....,  எப்.டி.எஃப்.எஸ்....,ன்னு மாத்தி   டிஜிட்டல் மயமாக்கி ரீ ரிலீஸ். கடைசிக்கு முன் மூணு படம் நெட்ல சுட்டது.. நவம்பர் 1 ஆம் நாளான இன்றுதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து, தாய் தமிழகத்தோடு இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள்.. அதனாலதான் இந்த ரீ ரிலீஸ்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1476554

நன்றியுடன்,
ராஜி

18 comments:

 1. அருமை,தங்கச்சி....இப்படியான பகிர்வுகள்/பதிவுகள் தான் எதிர்கால சந்ததிக்கும் நம் வரலாற்றை எடுத்துச் செல்லும் காவி யாக இருக்கும். நன்றி,பதிவுக்கு.

  ReplyDelete
 2. நவம்பர் 1 பொருத்தமான நாளில் உரிய பதிவு. பேச்சிப்பாறையைப் பற்றி அதிக செய்திகளை அருமையான புகைப்படங்களுடன் கண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. இன்றைய நாட்கள் பத்திய விவரத்தை டிவில சொல்ல கேட்டேன். அதான் பதிவை தூசு தட்டியாச்சு

   Delete
 3. பேச்சி பாறையும்....

  மூக்கன் துரையும் ..காலத்தின் வரலாறுகள்...

  படங்களோடு ....அருமையான பதிவு ராஜிக்கா...

  அதெல்லாம் சரி ..இந்த வாரம் மூக்கன் சாமி ஆவி உங்க கனவுல வருதான்னு பாருங்க....வந்தா உங்க டவுட்யையும் கேட்டுருங்க..!

  ReplyDelete
  Replies
  1. சரிப்பா. கேட்டு சொல்றேன்

   Delete
 4. ​நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்.​

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 5. எங்க ஊர் அணை பத்திய பதிவு. சூப்பர் ராஜி. இதே தினம் 1956ல் தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணையும் முன்புவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்துல கன்னியாகுமரி இருந்ததாலதான் எங்க ஊர் முழுசுமே கேரள கலாச்சாரம்தான். நான் வளர்ந்ததும் அப்படியே. நான் எம் ஏ படித்த கல்லூரி கூட தென் திருவிதாங்கூர் ஹிந்துக் கல்லூரின்ற பேருதான். பேச்சிப்பாறை போற வழில, பத்மநாபபுரம் பேலஸ், கொஞ்சம் டிவியேட் ஆனா திற்பரப்பு அருவி, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டிப்பாலம், திருவட்டார் கோயில், எல்லாம் பார்த்திருப்பீங்கனு நினைக்கறேன். அருமையான இடங்கள். நிறைய ரப்பர் தோட்டங்கள் இருக்கும். உங்க பதிவு மீண்டும் எங்க ஊரூக்குப்போய் எல்லாம் திரும்ப பாக்கணும்னு தோன்றுகிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பார்த்திருக்கேன் கீதாக்கா. பத்மனாபபுரம் அரண்மனை, வல்லக்கோட்டை, மருந்துமலைன்னு பதிவு போட்டிருந்தேனே!

   Delete
 6. பேச்சிப்பாறை ஆணை பற்றிய வரலாறு படங்களுடன் மிக அருமை ராஜி இந்த மாதிரி விளக்கத்துடன் இடங்களை பார்த்தால் மிக வசதியாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் சுற்றுலா போகும்போது அந்த இடம் பத்திய தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டு போனா கூடுதலா ர்சிக்கலாம்

   Delete
 7. பொருத்தமான நாளில் ஒரு உன்னதப் பதிவு
  அவசியம் ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்
  நன்றி சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. போகும்போது சொல்லுங்க. நானும் வரேன். மனோ அண்ணா வீட்டுக்கு எதிர்க்கதான் ஏர்போர்ட் வரப்போகுதாம்... அவர் அம்மா வாழ்ந்த வீடு சும்மாதான் இருக்குன்னு சொல்லிக்கிட்டிருக்கார்.

   Delete
 8. பேச்சிப்பாறை ஆணை நீர்தான் எங்கள் மாவட்டத்தில் உயிர்மூச்சு !

  ஆனால் நான் இதுவரை பார்த்ததில்லை, அடுத்தமுறை லீவுக்கு கண்டிப்பாக பார்க்கவேண்டும்....

  இந்த சுற்று வட்டாரத்தில் நிறைய விஷம் பூச்சிகள் நிறைய உண்டு, அதுபோல விஷம் முறிக்கும் நாட்டு மருத்துவர்களும் நிறைய இருக்காங்க.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் அதானாலதான் மிஞ்சினும் பாம்பு கடிச்சு செத்துட்டார் போல. என்ன்னாது பேச்சிப்பாறைக்கு போனதில்லையா?! அப்ப சீவலப்பேரிக்காரியை லவ்ஸ் விடும்போது எங்க கூட்டிக்கிட்டு சுத்துனியாம்?!

   Delete
 9. Minchin uravinargal inrum vandhu pogiraangala? Some info here: https://www.wikitree.com/wiki/Minchin-294

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வந்து பார்க்கிறேன் சகோ

   Delete