Tuesday, November 14, 2017

தீபாவளி சீர் செய்ய தட்டடை - கிச்சன் கார்னர்

எங்க ஊர்ல தீபாவளி கழிச்சு, கார்த்திகை தீபத்துக்குள் கல்யாணம் ஆகிப்போன சகோதரி, மகள், அத்தைகளுக்கு தீபாவளி பலகாரம் கொடுப்பது வழக்கம். முன்னலாம், இட்லி, வடை, அதிரசம், முறுக்கு, தட்டை இதுலாம்தான் கொடுப்பாங்க. அப்புறம் கால மாற்றத்துல ஜாங்கிரி, மைசூர்பாக், லட்டுன்னு செஞ்சு 100, 50ன்ற எண்ணிக்கைல பலகாரமும், மஞ்சள், குங்குமம், வெத்தலை, பாக்கு, பூ, பழம், வளையல்ன்னு வாங்கிட்டு தங்கள் வீட்டு பொறந்த பொண்ணுங்களுக்கு கொண்ட்டுட்டு போய் கொடுப்பாங்க. வர்றவங்களுக்கு விருந்து வச்சு, துணிமணி எடுத்து கொடுத்து பதில் சீர் செஞ்சு அனுப்புவாங்க.  அம்மா வீட்டிலிருந்து வரும் பலகாரத்தை தெரு முழுக்கவும், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க, கீரைக்காரம்மா, கோலமாவு விற்பவர்ன்னு எல்லாருக்கும் என் அம்மா வீட்டு பலகாரம்ன்னு கொடுப்போம்.  தீபாவளி கழிச்சு பஸ்ல ஏறினா மஞ்சத்துணி சுத்துன அண்டா, அன்னக்கூடை, பக்கெட்ன்னு இருக்கும். இம்சைகளா! உசுரை வாங்குறீங்கன்னு கண்டக்டர் திட்டுவார்.  

கால மாற்றத்துல  கடைல ஆர்டர் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க.  இப்ப காலம் இன்னும் முன்னேறிட்டுது பலகாரத்துக்கு பதிலா பைசாவா வாங்கிக்குறாங்க. ஆனா, பொண்ணுக்கு பிடிக்கும்ன்னு அம்மா பலகாரம் செய்ய.... என் அண்ணன் வரான் மட்டன் எடுத்து வாங்கன்னு தங்கச்சி சொல்ல....  ராஜி வீட்டுல அவங்க அண்ணன் மகன் கொண்டுட்டு வந்து கொடுத்த பலகாரம்ன்னு தெரு முழுக்க வீசுன பலகார வாசனையோடு கூடிய பேச்சுகள்..... அந்த காலம் திரும்ப வருமா?! அவசர யுகத்தில் அன்பும், பாசமும், காதலுக்கும் வேலை இல்ல போல....

தட்டை, எள்ளடை, தட்டடைன்னு சொல்லப்பட்டாலும் எங்க ஊர்ல இதுக்கு பேரு ஓட்டவடை. ஆனா, இதுல ஓட்டையே போடமாட்டாங்க. ஆனா, இதுக்கு ஏன் அப்படி பேர் வந்துச்சுன்னு தெரியாது. 

தேவையான பொருட்கள்...
 பச்சரிசி
மிளகாய்,
பூண்டு
மிளகு,
பெருங்காயம்,
கடலைப்பருப்பு,
வேர்கடலை,
உப்பு,
எண்ணெய்,
பொட்டுக்கடலை,
எள்
கறிவேப்பிலை

அரிசியை ரெண்டு மணிநேரம் ஊறவச்சுக்கனும். பச்சரிசியா இருந்தா தண்ணி வடிகட்டி  ஈரம் போக காய வச்சு மாவாக்கிக்கனும். அந்த மாவை ஆவில வேக வச்சுக்கனும்.  வேக வச்செடுத்த மாவை ஆற வச்சு கட்டியில்லாம உதிர்த்துக்கனும்.   மிளகாய், பூண்டை விழுதா அரைச்சுக்கனும். 

மாவில், மிளகாய், பூண்டு அரைச்ச விழுதை சேர்த்துக்கனும்...

எள் சேர்த்துக்கனும்...

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்...

 ஊற வச்ச கடலை பருப்பை தண்ணியெல்லாம் வடிச்சு சேர்த்துக்கனும்...

 மிளகை ஒன்னிரண்டா தட்டி சேர்த்துக்கனும்...

 பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக்கனும். வறுத்து தோல் நீக்கி, ஒன்னிரண்டா பொடிச்ச வேர்க்கடலை, பொட்டுக்கடலையை நைசா பொடிச்சு சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கனும்.

சுத்தமான பருத்தி துணியில் வட்டமா  மெல்லிசா தட்டிக்கனும்...


எண்ணெய் நல்லா காய்ஞ்சதும் போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கனும். 


சுவையான காரசாரமான தட்டை ரெடி.. இதை புழுங்கலரிச்யிலயும் செய்யலாம்... புழுங்கலரிசியா இருந்தா மிளகாய், பூண்டு, உப்பு, பெருங்காயம் போட்டு நைசா அரைச்சுக்கனும். கடலைப்பருப்பை ஊற வச்சுக்கனும், உடைச்ச கடலையை நைசா   கெட்டியா அரைச்சுக்கனும்.  அரைச்செடுத்து மாவில் ஊற வச்ச கடலை பருப்பு,  பொடிச்ச உடைச்ச கடலை, வறுத்து தோல் நீக்கி, ஒன்னிரண்டா பொடிச்ச வேர்கடலை சேர்த்து பிசைஞ்சு தட்டி எண்ணெய்ல போட்டு பொரிச்சு எடுக்கனும்.

மெல்லிசா ஒரு இடம் போல தட்டனும். இல்லன்னா கடக் முடக்குன்னு இருக்கும். 

நன்றியுடன், 
ராஜி.

25 comments:

 1. எல்லோரும் சமையல் பதிவு போடுறாங்க எனக்குத்தான் தெரியலை.

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் சமைச்சா அதை ருசி பார்க்குறது யாராம்?!
   அதுக்குதான் உங்களுக்கு சமைக்க வரலைண்ணே

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. கில்லர்ஜிடீ போடுவது எப்படி என்று ஒரு பதிவு போடுங்க அது கூட தெரியாமல் பலர் இருக்கிறாங்க

   Delete
  4. பாலை கொதிக்க வச்சு மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வச்சு புளி கரைச்சு ஊத்தி தாளிச்சு இறக்கனும். எனக்கும் டீ போட தெரியுமாக்கும்

   Delete
 2. மொறுமொறுன்னு நல்லா இருக்கும் போல இருக்கே....

  ReplyDelete
  Replies
  1. மொபைலில் வாக்களிக்கத் தந்திருக்கும் லிங்க் தனி ஜன்னலில் திறக்கும்படி அமையுங்கள்.

   Delete
  2. அமைச்சாச்சு. இனி அப்படியே செய்றேன்.

   வருகைக்கும், கருத்துக்கும் அட்வைசுக்கும் நன்றி சகோ

   Delete
 3. மொறு மொறுவென்று அருமையாக இருக்கும்
  நன்றி சகோதரியாரே
  தம+2

  ReplyDelete
  Replies
  1. என் அப்பாக்கு ரொம்ப பிடிக்கும்ண்ணே

   Delete
 4. சூப்பர் ரெசிப்பி ராஜி! இப்படியும் செய்யலாம்னு தெரிஞ்சாலும் பூண்டு சேர்த்து செய்ததில்லை. வீட்டில் பூண்டு பெரியவங்க சேர்க்க மாட்டாங்க என்பதால். நோட் செய்து கொண்டேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பூண்டு போட்டா வாசமா இருக்கும். அதான்.

   Delete
  2. எண்ணெய் பலகாரம்ன்ங்குறதால ஜீரணிக்கவும் பூண்டு சேர்ப்பாங்க

   Delete
  3. ம்ம்ம் புரிந்தது. எனக்கும் என் மகனுக்கும் ரொம்பப் பிடிக்கும். சோ சேர்த்துச் செய்து பார்த்துவிடுறேன். வெளியில் இப்படி பூண்டு போட்டது வாங்கிச் சாப்பிட்டதுண்டு...இருந்தாலும் வீட்டுல செய்யறது தனிதானே!!

   கீதா

   Delete
 5. தெளிவா படத்துடன் நல்ல இருக்கு நடுவில் ஓட்டை போடுவார்களாம் முதலில் எல்லாம்எளிதில் வேகுவதற்கு முறுமுறு என்று ஆவதற்கு

  ReplyDelete
  Replies
  1. அப்படியா?! நான் பார்த்ததில்லைப்பா. மெல்லிசாதானே இருக்கு?! சீக்கிரம் வெந்திடுமே

   Delete
 6. நாங்களும் இந்த வடை செய்வோம்.....இது பேரு தட்ட வடை.முந்தா நேத்து கூட ஒய்ஃப் செஞ்சாங்க,பாட்டில்ல போட்டு இறுக மூடி வச்சிருக்கு. நாங்க உழுந்தில செய்வோம்.//அருமை.....

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம் விரலால தட்டி தட்டி செய்யுறதால இந்த பேரு வந்திருக்கு. சில சமயம் அம்மா, அத்தை, பாட்டி விரல் அச்சுகள் பதிந்து அவங்க பாசத்தை சொல்லி செல்லும்.

   Delete
 7. உங்களை மாதிரி பொறுமையாக இருப்பவர்கள் செய்ய வேண்டிய பலகாரம் குட் பார்க்க அழகாக வந்திருக்கு நிச்சயம் டேஸ்ட் சூப்பராக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. பொறுமைக்கும் இந்த எருமைக்கும் ஏழாம் பொருத்தம்

   Delete
  2. அழகா இருக்குறதுலாம் நல்லா இருக்கனும்ன்னு அவசியமில்லியாம். உன்ற மாப்ளை சொல்ல சொன்னாரு.

   Delete
 8. சூப்பரான ரெசிப்பி ராஜிக்கா...

  இதுவரை செஞ்சதும் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் செஞ்சு பாரம்மா

   Delete
 9. தட்டை பிடிக்கும் இதுவரை செய்ததில்லை கடையில் கிடப்பதாலோ என்னவோ

  ReplyDelete