Thursday, November 23, 2017

பேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சோஷியல் மீடியா உருவாக இதான் காரணமா?!


நாராயணா! நாராயணா!

இதென்ன அதிசயம்?! மும்மூர்த்திகளும் ஓரிடத்தில் கூடி இருக்குறீர்கள்?! அனைவருக்கும் வணக்கம்!

என் வணக்கத்திற்கு பதில் சொல்லக்கூட முடியாதளவுக்கு மூவரும் சோகமாய் உள்ளீர்களே! எதாவது பிரச்சனையா?! சிவப்பெருமானே! எவனுக்க்காவது ஏடாகூடமாய் வரம் கொடுத்து மாட்டிக்கொண்டீர்களா?! என்ன எதென்று யோசிக்காமயே வரங்களை வாரி வழங்குவதில் நீங்கள்தான் வள்ளலாச்சே!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ம்க்கும். இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நாராயணா! ஸ்ரீதேவி, பூதேவி இருக்க.. நீங்கள் எதாவது?!

என்னை வம்புக்கிழுக்காமல் உனக்கு தூக்கம் வராதே!

அப்பா! பிரம்மதேவரே! நீங்கள்.....

மகனே! தேரை இழுத்து தெருவில் விட்டுவிடாதே! சொல்லி விடுகிறேன்.... இப்போது எங்கிருந்து வருகிறாய்?!

பூலோகத்திலிருந்து... அதான் அடிக்கடி என் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ் அப், ஃபிலிக்கர்ன்னு எல்லா பக்கத்துலயும் ஃபோட்டோவோடு  எல்லாத்தையும் ஷேர் செஞ்சுக்கிட்டிருந்தேனே பார்க்கலியா?! எல்லாரும் என் பக்கத்துல நில்லுங்க ஒரு செல்ஃபி எடுத்து ரீச் ஹோம் வித் சேஃப்ன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடனும்....

ம்க்கும், அந்த கருமம் பிடிச்ச அக்கவுண்ட்லாம் டீ ஆக்டிவேட் செஞ்சும், அந்த ஆப்லாம் அன் இன்ஸ்டால் செஞ்சும் ரொம்ப நாளாச்சு..

ஏன் ?!

ஒருத்தி ஃபேஸ்புக்ல படத்தை அப்லோட் பண்ணுறா, அதை இன்னொருத்தன் இறக்கி அதை கிராஃபிக்ஸ் பண்ணி அந்த பொண்ணை தற்கொலை பண்ணிக்க வைக்குறா. ட்விட்டர்ல பிரண்டாகி கள்ள காதல் பண்ணுதுங்க. ஐஎ.ம்.ஓ ல பழகி ஓடிப்போகுதுங்க. ஃப்ளிக்கர்ல அந்தரங்கத்தை காட்டுறாளுங்க,  ஜாதி சண்டை இன்னொரு பக்கம், என் நடிகர்தான் பெரியாள்ன்னும் இன்னொரு பக்கம் ..  நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லைன்னு வாட்ஸ் அப் வசந்தி புருசங்க ஒரு பக்கம். இதில்லாம இதை  தொட்டு ஷேர் செஞ்சா பத்து நிமிசத்துல நல்ல சேதி வரும்ன்னு எங்களையே வச்சு கும்மியடிக்குறாங்க. நாங்க சொன்னோமா இவனுங்கக்கிட்ட?! இதை நம்பி ஷேர் செஞ்சு நல்லது நடக்கலைன்னா சாமி இல்லன்னு அதே வாட்ஸ் அப், பேஸ்புக்ல பக்கம் பக்கமா எழுதி போட்டு கிழிக்குறான். இந்த ஆப்லாம் கண்டுப்பிடிச்சவன் கைக்கு கிடைச்சான் சிக்குனான்...

மும்மூர்த்திகளே! இந்த ஆப்லாம் உருவாக்குனவனை விடுங்க. இந்த ஆப்லாம் உருவாக காரணமானவங்களை என்ன பண்ணலாம்?!

நரகத்துக்கு அனுப்பி எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கலாம்....

ம்ம்ம்ம் அப்ப வாங்க நரகத்துக்கு...

என்ன உளறுகிறாய் நாரதா?! நாங்க ஏன் வரனும்?!

நல்லா யோசிங்க.. ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பூ என்கிற பிளாக்(blog) மட்டும் இருந்துச்சு.  எத்தனை சந்தோசமா அண்ணன், தம்பியா, சகோதரியா ஒரு குடும்பமா இருந்தாங்க. சண்டை சச்சரவு, கிசுகிசுன்னு இல்லாம, பாலியல் தொந்தரவு இல்லாம எத்தனை சந்தோசமா இருந்தாங்க?! வருடத்துக்கொருமுறை கூடி விருது கொடுத்து, வீட்டுக்கு அழைச்சு விருந்து வச்சு, கல்யாணம், காது குத்து, ஆப்ரேஷன், சாவுன்னு எத்தனை ஒத்துமையா இருந்தாங்க.   அப்ப நீங்க என்ன சொன்னீங்க?!

சோசியல் மீடியாவுல இத்தனை மகிழ்ச்சியா இருக்காங்க. அவங்களுக்குள்ளயே ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குறாங்க. ஆறுதலா இருக்காங்க. தோள் கொடுக்குறங்க. போற போக்கை பார்த்தா எங்களை மறந்துடுவாங்க போலன்னு சொன்னோம்.

உங்களை மறக்கக்கூடாதுன்னுதான் அந்த ஆப்லாம் கண்டுப்பிடிக்க மார்க் மாதிரியான ஆளுங்களை தூண்டி விட்டேன். இப்ப கள்ளக்காதல், ஜாதி சண்டைன்னு புலம்புனா எப்படி?!

ம்ம்ம்ம்ம்ம், அட ஆண்டவா! நாங்க ஒன்னு நினைச்சா இப்படி ஆகிட்டுதே! இப்ப என்ன செய்யலாம் நாரதா?!

 ஆக்கம் கொண்ட ஒரு பொருள் அழிந்தே தீரும். இது இயற்கை நியதி. அதனால,  இதுக்கும் ஒரு முடிவு வரும். அதுவரை கொஞ்சம் பொறுங்க.... இப்ப வாங்க ஒரு செல்ப்பி எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்ளிக்கர்ல போடலாம்....

# பிளாக் மட்டுமே இருந்த காலம் நினைவுக்கு வந்திட்டுது. பதிவர் சந்திப்பு மாதிரியான அழகிய தருணங்கள்லாம் இனி வருமா?! ஏன் ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு உண்டாச்சோன்னு அடிக்கடி நினைச்சுப்பேன். அதான் சின்னதா ஒரு கற்பனை....


தமிழ்மணம் ஓட்டு போட
க்ளிக் ஹியர்..

நன்றியுடன்,
ராஜி.

26 comments:

 1. Replies
  1. ரசித்தமைக்கு நன்றி சகோ

   Delete
 2. ரசிக்க வைத்தது பதிவு
  காலம் மாறும்போது எழுத்தின் கோலமும் மாறும்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் ஆனா, பிளாக் போல வராதுண்ணே.

   Delete
 3. ஆமாம் பதிவர் சந்திப்புக்கு எப்பவாவதுவந்தீர்களா

  ReplyDelete
  Replies
  1. இருமுறை வந்திருக்கேன்ப்பா... சென்னையில் நடந்த இரு பதிவர் சந்திப்புக்கு, அதில்லாம எப்ப சென்னைக்கு வந்தாலும் கணேஷ் அண்ணா வீட்டில் சின்னதா ஒரு மீட்.

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. கடவுளையே இழுத்தாச்சா கற்பனையில் நல்ல இருக்கு

  ReplyDelete
  Replies
  1. கற்பனையில் எல்லாம் வசப்படும்ப்பா

   Delete
 6. ரசிக்க வைக்கும் பதிவு அக்கா...
  இப்ப வலைப்பூவுக்குள் பங்காளிச் சண்டைகளும், மொய் வைப்பதில் பிரச்சினைகளும் நிரவிக்கிடக்கு.
  என்னதான் இருந்தாலும் எனக்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் எழுதப் பிடிப்பதில்லை... எப்பவும் வலைப்பூதான்.

  ReplyDelete
  Replies
  1. அதேதான் சகோ. வலைப்பூவில் எழுதும்போது கிடைத்த திருப்தி ஃபேஸ்புக்ல வருவதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்லாம் பிட்சா, பர்கர் மாதிரி. எப்பயாவது ஃபேஷனுக்கு சாப்பிடலாம். ஆனா பசித்து சாப்பிடும் அம்மா கைச்சாப்பாடு போல நிறைவை தருவது வலைப்பூதான்

   Delete

  2. வலைத்தளம் வீடு மாதிரி அங்கு வருபவர்களை எல்லாம் குடும்பதினர் மாதிரி கருதி வந்தோம் ஆனால் பேஸ்புக் மற்றது எல்லாம் பஸ்டாண்டு மாதிரி அங்கு பலர் வருவார்கள் போவார்கள் பேசுவார்கள் அவ்வளவுதான்

   Delete
 7. ஐயோ பாவம் மும்மூர்திகள் கற்பனை ஆபாரம்!

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசிச்சீங்களாப்பா?!

   Delete
 8. பதிவு நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete
 9. அருமையான கற்பனைப் பதிவு........சிரித்தேன்,ஆனால் வலைப்பூ காணாமல் போய்த் தான் நான்கைந்து ஆண்டுகள்.....ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்,இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. இருக்கும்ண்ணா. நான் 2010ல ஆரம்பிச்சேன். அதுக்கு முந்தில இருந்தே இருக்கு... 2003 பதிவுகூட சில நேரம் கூகுள் காட்டும்

   Delete
 10. கற்பனையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது. உண்மை நிலையைக்கூறிய விதம் அருமை.

  ReplyDelete
 11. வலை பதிவு வேறு; மற்றவை வேறு. முன்னது உரைநடை; பின்னவை குறுந்தகவல் பலகைகள் மட்டுமே. படங்களையும் சேர்த்து போடலாம். நூல் படித்து சிந்திப்பதற்கு எல்லாருக்கும் நேரமிருப்பதில்லை. ஒரு குறுந்தகவலைப் படித்துவிட்டு நகர முடிகிறது. அவசர வாழ்க்கைக்கு அவசர கருவிகள் தேவை. தன் சிந்தனைகளை விளக்கமாகவும் ஆழமாகவும் எழுத வலைபதிவு. பளிச்சென்று அவ்வப்போது தோன்றிய எண்ணங்களை பளிச்சென்று போட்டுவிட்டு நகர குறுந்தகவல் சாதனங்கள். அதைவிட இது சிறந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. இச்சாதனங்களால் மட்டுமே கெடுதி என்பதாகாது. வலைபதிவிலும் நச்சுக்கருத்துக்கள் பரப்புகிறார்கள். சாதிவன்மம், தன் சாதிக்காக மல்லுக்கட்டுதல், அரசியல் காழ்ப்புணர்வு, பிரச்சாரம், பெண்ண்டிமைத்தனத்தைப் போற்றுதல், நாத்திக வெறியர்களின் அட்டகாசம், ஆத்திகர்கள் பரப்பும் பயங்கலந்த மூட நம்பிக்கைகள்; இவர்களல்லாதவர்களால் பரப்பப்படும் அல்லது தன்னைப்பற்றி நான்கு பேர் பேசவேண்டுமென்பதற்காக எழுதப்படும் ப்ரபரப்பான பொய்யுரைகள்; மாற்றுக்கருத்திடுவோரை வலைபதிவிலேயே அசிங்கப்படுத்துதல்; - (இவை அனைத்டையுமே தமிழ்மணம் திரட்டியில் நாடோறும் சந்திக்கலாம்) வேண்டத்தகாதவை வலைபதிவுகளிலில் அடுத்து முகநூல்களில் மிகை. கத்தி வைத்திருப்பவரைப்பொறுத்தே செயல்படும். ஒருவன் கத்தியால் குத்துப்பட்டு செத்தானென்றால், கத்தியின் மேலுள்ள குற்றமா? பயன்படுத்துபவரின் குற்றமா?

  வலைபதிவர்கள் பொதுவான கருத்துக்கள் எழுதும்போது அவை எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைத்து எழுதவேண்டா. தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்வதற்கு சமம். பரந்த மனப்பான்மை அவசியம். இல்லாவிட்டால் முதலிலேயே தெரிவித்துவிடுங்கள் - என் வாசகர்கள் என் கருத்துக்களை ஆமோதிப்பவராக இருக்க வேண்டும் என்று. கூடிய வரை சான்றுகளோடு எழுதுங்கள். நான் எதையும் எழுதுவேன்; உனக்கு சான்றுகள் வேண்டுமெனில் கூகுளில் தேடிக்கொள் என்பது திமிர். வலைபதிவு பொது வெளி. (தனிநபராக தஙகளுக்குள் உரையாடுவதைத் தவிர) எனவே பொறுப்புணர்வு அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாதம் சரிதான் சகோ

   Delete
 12. ஹாஹாஹா ரசித்தோம் சகோ/ ராஜி!

  ReplyDelete
  Replies
  1. துளசியண்ணா நீங்களும் என்னை ராஜின்னே சொல்லலாம். நான் உங்க தங்கைதானே?!

   Delete