Tuesday, November 28, 2017

மாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்

தீபாவளி பலகாரங்களில் முக்கியமானது முறுக்கு.. ம்க்கும் கார்த்திகை தீபமே வரப்போகுதுன்னு சலிச்சுக்குற உங்க மைண்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன். நாந்தான் பலமுறை சொல்லி இருக்கேனே! ஐ ம் பேசிக்கலி சோம்பேறின்னு..  தீபாவாளிக்கு மட்டுமில்ல, மழை நேரத்துக்கு நல்ல நொறுக்கு இந்த முறுக்கு... அட, ரைமிங்க்....  இனி எப்படி முறுக்கு செய்யலாம்ன்னு பார்க்கலாம்.. 

தேவையான பொருட்கள்...
பச்சரிசி  - 8 டம்ப்ளர்
உளுத்தம்பருப்பு - ஒரு டம்ப்ளர்
ஓமம்,
வெள்ளை எள்
பெருங்காய தூள்
உப்பு,
எண்ணெய்

பச்சரிசியை ரெண்டு மணிநேரம் ஊற வெச்சு, வெயிலில் காய வச்சுக்கனும், உளுத்தம்பருப்பை லேசா சிவக்க வெறும் வாணலில வறுத்து ரெண்டுத்தையும் மெஷின்ல கொடுத்து அரைச்சுக்கனும். 


தேவையான அளவு மாவில் வெள்ளை எள், ஓமம் சேர்த்துக்கனும்...

பெருங்காயத்தூள் சேர்த்துக்கனும்...

கொஞ்சமா எண்ணெய் சேர்த்துக்கனும்.. முறுக்கு அச்சுல மாவு ஒட்டாம வரும். அதுக்காகத்தான் எண்ணெய் சேர்த்துக்குறது. சிலர் டால்டா சேர்த்துப்பாங்க. 
தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்...

தண்ணி விட்டு நல்லா பிசைஞ்சுக்கனும்... ரொம்ப கெட்டியாவும் இல்லாம, தண்ணி அதிகமா சேர்க்காம பிசைஞ்சுக்கனும்.. சப்பாத்தி மாவு போல இருக்கலாம். 


ஒரு பக்கம் வாணலில எண்ணெய் காய வச்சு, முறுக்கு அச்சுல மாவை போட்டு, தட்டு, ஜல்லிக்கரண்டின்னு அவங்கவங்க வசதிப்படி, அதுல எண்ணெய் தடவி பிழிஞ்சுக்கனும். 

எண்ணெய் காய்ஞ்சதும் முறுக்கு மாவை பிழிஞ்சு போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க வறுத்தெடுங்க. பார்த்து கவனமா போடுங்க. இல்லாட்டி எண்ணெய் தெறிச்சு கைலாம் புண்ணாகும். 

சுவையான முறுக்கு ரெடி, பிளாஸ்டிக் கவர்ல போட்டு வச்சிக்கிட்டா ஒருவாரம் வரை மொறுமொறுப்பா இருக்கும். இல்ல என்னைப்போல எஃப்.பில கவனமா இருந்து கோட்டை விட்டா அடுத்த நாளே நமத்து போகும்.. பீ கேர்புல்., நான் என்னைய சொன்னேன்..


நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. தொடங்கும்போதே எனது மைண்ட் வாய்சை காட்ச் செய்ததை கண்டு நான் வியக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. கடைசி தட்டுல 2 முருக்கு எடுத்துக்கிட்டேன்.

      Delete
    2. உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கோங்க. முன் ஏர் எப்படி போகுதோ! பின் ஏர் அப்படிதான் போகும்ன்னு எங்க ஊர்ல ஒரு சொலவடை சொல்லுவாங்க. அதுமாதிரி அண்ணன் எவ்வழியோ, தங்கை அவ்வழி. அதான் உங்க மைண்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன்

      Delete
  2. தேன் குழலை, 'முருக்கு'ன்னு சொல்லிட்டீங்களே. கறுப்பு எள்ளும் சேர்க்கலாம். பொதுவா ஜீரகம் சேர்ப்பாங்க இந்தத் தேன் குழலுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நெல்லை நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்க. தேங்குழலைத்தான் என் வீட்டருகில் இருப்பவர்கள் எல்லோருமே முருக்குனு சொல்றாங்க. மற்ற முருக்கை கை முருக்குனு சொல்லுறாங்க....ஆமாம் ஜீரகம்....க எ சேர்க்கலாம்..

      கீதா

      Delete
    2. நாங்க சீரகம் சேர்ப்பதில்லை சகோ. இங்கலாம் முறுக்குதான். தேன்குழல்ன்னு சொன்னா, அது இனிப்பான்னு கேப்பாங்க

      Delete
  3. என் மனைவி ரிப்பன் பகோடா செய்வாள் தின்று கொண்டே இருக்கலாம் ஆனால் என் மைண்ட் வாய்ஸ் தடுக்கும் அந்த நாளும் வந்திடாதோ

    ReplyDelete
    Replies
    1. ஐ லைக் ரிப்பன் பக்கோடா

      Delete
  4. ராஜி இப்படி எல்லாம் போட்டு டெம்ப்ட் பண்ணிட்டீங்களே!!! ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்சல் பண்ணிடவா கீதாக்கா?!

      Delete
  5. எல்லாம் ஓகே ராஜி ..வெயிலில் காயவைக்க சொல்லிருக்கீங்க எனக்கு கொஞ்சம் கடனா அனுப்பி வைங்க :) வெயிலை பார்த்து நாளாகுது :))

    அம்மா 10க்கு 1 கணக்கில் செய்வாங்க ஆனா அது எனக்கு சரி வரல ..இதை செஞ்சி பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் வெயிலை கடன் கொடுக்க ரெடி, ஆனா, உங்க ஊர்லதான் வெயிலே வராதே! அப்புறம் எப்படி திருப்பி தருவீங்க!?

      Delete
  6. முறுக்கு படங்களுடன் அருமையா இருக்கே

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடவும் நல்லா இருக்கு பூ.

      Delete
  7. முறுக்கு சுட்டா போதுமா கொஞ்சம் வலைப் பக்கம் வரது

    ReplyDelete
  8. எப்போ செய்தால் என்ன? தேன்குழல் எப்பவுமே சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
  9. நல்லா இருக்கு....முறுக்கு

    ReplyDelete