Thursday, November 16, 2017

பெண்களுக்கு தொல்லை தரும் க்ருஷ்ணன்

பால்ய கோலத்தில் வணங்கும் வினாயகர், முருகன், ஐயப்பன், க்ருஷ்ணர்ன்னு இருக்கும் தெய்வங்களில் வினாயகரும், ஐயப்பனும் பிரம்மச்சாரிகள் என்பதாலும், முருகன் பொறந்ததிலிருந்து அம்மாக்கள் கண்காணிப்பு, அப்புறம் போர், அதுக்கடுத்து கல்யாணம்ன்னு பிசியா இருக்குறதால அவரையும் யாரும் கண்டுக்குறதில்லை.  ஆனா நம்ம கிருஷ்ணன் அப்படி இல்ல. எப்பயும் சாக்லேட் பாய்,  அதான் எல்லா பொண்ணுங்களும் லவ்வுறாங்க இந்த கருப்பனை....

என் பிள்ளைகளுக்கு சின்ன வயசுல புரட்டாசி மாத 5  சனிக்கிழமைகளில் க்ருஷ்ணர் வேடமிட்டு சாமி கும்பிடுவோம். அதே மாதிரிதான் என்ற  எதிர் வீட்டு  கௌதமுக்கு வேடம் போட்டோம்.   நாமம் போட்டு அசிங்கப்படுத்திட்டேன்னும், துளசி மாலை போட்டதும் அது குச்சி குத்தினதும் கோவம் வந்திட்டு இந்த சின்ன க்ருஷ்ணனுக்கு.... எனக்கு பிடிச்ச போட்டோ இது.
நமக்கு பிடிச்சவங்க அடுத்த பெண்களை பார்த்தா வெட்டி போட்டுடலாம்ன்னு கோவம் வருது. இத்தனை அழிச்சாட்டியம் பண்ணியும் க்ருஷ்ணனை மட்டும் பிடித்து போக என்ன காரணமா இருக்கும்?!
உலகையே கட்டி ஆளும் இறைவனை,  சாதாரண  கயிறு கட்டி வைக்க முடியுமா?! இறைவன் கட்டுண்டது கயிறுக்கல்ல.. அன்புக்கு... இது ஏன் நம்மாளுங்களுக்கு புரிய மாட்டேங்குது!!!!

அவனை சுமந்து செல்ல அடியார்கள் ஆயிரக்கணக்கில் காத்திருக்க, அன்பை சுமந்தபடி க்ருஷ்ணன்...

இறைவனையே காதல் ஆட்டிப்படைக்கும்போது நாம் எம்மாத்திரம்?!

குழந்தை பருவத்தை ரசித்தபடி....
அன்புக்கு கட்டுப்படும் இறைவன் தீயவர்களை அடக்க முற்பட்டபோது...

தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் ஆசைப்பட்டவளுக்கு மரத்திலும் காட்சியளிப்பான்....

படியளிக்கும் எம்பெருமான் ரிலாக்ஸ் பண்ணும் தருணமிது....

ராதை, பாமா, ருக்மணி, பதினோராயிரம் கோபியர், ஆண்டாள், மீராவுக்கு அடுத்து யாரை தன்வசப்படுத்தலாம்ன்னு யோசிக்குறானோ மாயக்கண்ணன்?!
எதை கொண்டு வந்தோம்?! எதை கொண்டு சொல்லப்போகிறோமென  என வாழ்வின் நிதர்சனத்தை போதித்தபடி... 

நிழலும் அவனே! நிஜமும் அவனே! பார்க்கும் இடத்திலெல்லாம் நீக்கமற நிறைந்து என்னை ஆட்கொண்ட ராஜாதி ராஜனும் அவனே!

அவன்.....

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)

விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத)

அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். 
(தீராத)

பாம்பே ஜெயஸ்ரீ குரலில் இப்பாடலை கேட்க இங்க சொடுக்கவும்.... 


 தமிழ்மணம் ஓட்டின் அலைப்பேசி லிங்க்

நன்றியுடன்.,
ராஜி. 

12 comments:

 1. அழகான பதிவு.....///இறைவன் கட்டுண்டது கயிறுக்கல்ல.. அன்புக்கு... இது ஏன் நம்மாளுங்களுக்கு புரிய மாட்டேங்குது!!!!///முக்காலும் உண்மை........./நம்ம கிருஷ்ணன் எப்பயும் சாக்லேட் பாய்,அதான் எல்லா பொண்ணுங்களும் லவ்வுறாங்க இந்த கருப்பனை..../ நமக்கில்ல....... நமக்கில்ல......ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. எல்லாருக்கும் உண்டாம், எனக்கு மட்டும்தான் இல்லியாம்... அதனால, சொக்கா! எனக்கில்ல, எனக்கில்ல.. தருமி மாதிரிதான் புலம்பனும்

   Delete
 2. முதல் படத்தில் இருக்கும் கிருஷ்ணர் ஏன் கோபமா இருக்கார்?

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. என் பையனுக்கு க்ருஷ்ணர் வேஷம் போடாம அவனுக்கு மட்டும் போட்டு நாமம் போட்டுட்டேனாம். துளசி மாலை போட்டதுல துளசி மாலைல இருக்கும் குச்சி அவன் உடம்பில் குத்திட்டுதாம். அதான் கோவம்.

   Delete
 3. நன்றி சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 4. அழகான படங்கள். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. படங்களை ரசித்தமைக்கு நன்றிண்ணே

   Delete
 5. குழலூதும் கண்ணனின் குரல் கேட்டதோ என்னைப்பற்றி எழுதவில்லையா என்று அருமை படங்கள்

  ReplyDelete
  Replies
  1. லட்சுமி பட எஃபக்ட். அதான் பாரதியார் பாடல்களை சுட்டுட்டேன்

   Delete
 6. படங்களும் கமென்டுகளும் சூப்பர்!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete